கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: November 12, 2021

10 கதைகள் கிடைத்துள்ளன.

எல்லைகள்

 

 அந்தக் குருவியின் கத்தலுடன் அவனுக்கு விழிப்புக் கண்டது. அவன் இடப்புறமாகத் திரும்பிப் படுத்தான். பாதங்கள் குளிர்ந்து சில்லிடுவது போலிருந்தது. போர்வையை இழுத்துப் பாதங்களை மூடிக்கொண்டான். அடுத்த அறையில் மெல்லியதாக கொட்டாவி விடும் சத்தம் கேட்டது. ஆள் அசைவதினால் கட்டிலின் சரசரப்புக் கேட்டது. முழுவதாகத் தூக்கம் கலையாத மயக்கத்தில் அவன் கண்களை மூடியிருந்தான். மூடிய கண் இமைகளில் இருள் வட்டங்களும், ஒளி வட்டங்களும் ஒன்றோடு ஒன்று கலந்தும், கூடியும், பிரிந்தும், மாறுபட்டும் அசைவது போலிருந்தது. ஒருவிதமான அமைதி; ஒருவிதமான


புரிதல்

 

 ‘நாளையுடன் 14 நாட்கள் முடியுது, நாங்கள் இங்கேயே வாடகை வாகனம் எடுத்து காலையில ஊருக்கு புறப்பிட்டு வாறம்’ மருமகன் தொலைபேசியில் சொன்னார் முன்பெல்லாம் வெ்ளிநாட்டில் இருந்து நாட்டுக்கு வந்தால் ஊரில் இருந்து விமானநிலையதுக்கு வாகணம் எடுத்துச்சென்று கூட்டிக்கொண்டு வரும் காலம் இந்த கொறோனாவால் தொலைந்து விட்டது ”இதோ நாங்கள் வாகணத்தில் ஏறிவிட்டோம் ஊருநோக்கி வந்துகொண்டிருக்கிறோம்” இது மூத்தபேரனின் கைபேசிஅறிவிப்பு இனியென்ன இப்போ நாங்கள்…கண்டியை கடந்துவந்துவிட்டோம் ..ஹசலக்க…பதியதலாவ…உகன…இப்படி கடந்து செல்லும் ஊராக நேரஞ்சல் செய்துகொண்டே இருப்பான் மருமகன்,மகள்,இரண்டுபேரன் இரண்டு


அவரோட ராத்திரிகள்!

 

 ‘அவரோட ராத்திரிகள்’ – இந்தத் தலைப்பைப் படித்துவிட்டு ஐ.வி.சசியின் அவளோட ராத்திரிகள் மலையாள அடல்ட்ஸ் – ஒன்லியின் சாயலை எதிர்பார்த்து விகல்பமான எண்ணத்தோடு வாசிக்க வருபவர்கள் ஏமாற்றமடைவீர்கள். தலைப்பில் உள்ள அவர் மயிலாப்பூரில் உள்ள எங்களது காலனியில் முன்பு குடியிருந்த திருவாளர் ரங்கபாஷ்யம்தான். நம்முடைய ரங்கபாஷ்யம் ராத்திரி நேரங்களில் உறங்குவது இல்லை. காரணம், கள்வர் பயம். எவருடைய இல்லத்துக்கு அதிக தடவை திருடன் வந்துள்ளான் என்று ஒரு கணக்கு எடுத்துப் பார்த்தால் உலக சாதனைப் புத்தகமான ‘கின்னஸில்’


அப்பா, நான் உள்ளே வரலாமா…

 

 அத்தியாயம்-26 | அத்தியாயம்-27 | அத்தியாயம்-28 ரமேஷ¤க்கு ஜூலி சொன்னதே கேட்டதும்,ஒரு பக்கம் சந்தோஷமாகவும், இன்னொரு பக்கம் ‘இதுக்கு அப்புறமா ஜூலி கிட்டே இருந்து வேறே என்ன ‘ப்ராப்லெம்’எல்லாம் வருமோ’என்கிற பயமும் இருந்து வந்தது.அதனால் அவன் வெறுமனே ”’ஐ ஆம் க்லாட் டு ஹியர் திஸ் ஸ்வீட் நியூஸ்’ ஜூலி” என்று ஜூயைப் பார்த்து சொல்லி விட்டு சும்மா இருந்தான். ஜூலி தன் உடம்பை தவறாமல் டாக்டட் கிட்டே காட்டி ‘செக் அப்’ பண்ணீக் கொண்டு வந்து,


இடப்பெயர்ச்சி

 

 மேற்கு மலை தொடரில் அந்த மலை பிரதேசத்தில் சூரியனின் கதிர் வீச்சு ஓய்ந்து போய் தன் வீச்சை சாய்த்து வீசிக்கொண்டிருந்தான்.அனேகமாக மணி மாலை நான்கு மணிக்கு மேல் இருக்கலாம். வாகன புகைகளோ, அல்லது அவைகளின் ஒலிகளோ எதுவுமே கேட்காத அந்த இடம் பார்ப்பதற்கு ரம்யமாய் இருந்தாலும் புதிதாய் வருபவர்களுக்கு அச்சத்தை தரக்கூடியதாகவே இருந்தது அந்த இடம். அந்த இடத்தில் ஆரம்பித்து அடர்ந்த காடுகளாய் உள்ளே செல்லும் காடு மலை உச்சி வரை பரந்து, உயரமான மரங்களால் நிறைந்து


மனமாற்றம்

 

 ரித்திக்காவிற்கு ஆறு வயது,பார்ப்பதற்கு அழகாகவும்,குண்டாகவும் இருப்பாள்,அம்மா மாதவி,ஏண்டி உனக்கு இப்படி உடம்பு குண்டாகுது என்று செல்லமாக அணைத்துக் கொள்வாள்,அப்பா சந்தனகுமார் நீ குழந்தையை பார்த்து கண்ணு வைக்காதே அவள் என் செல்லக் குட்டி அப்படி தான் இருப்பாள் என்று அவனும் ரித்திக்காவை அணைத்துக் கொள்வான்,ஒரே மகள் கொஞ்சம் செல்லமாக வளர்ந்தாள்,என்னுடன் விளையாட யாரும் இல்லை என்று எந்த நாளும் சண்டை பிடிப்பாள் ரித்திக்கா,மாதவி பாவம் ரித்திக்கா பிறந்தவுடன்,அவளின் கர்ப்பப்பையை எடுத்து விட்டார்கள் மருத்துவ மனையில் சில காரணத்தால்,ரித்திக்காவையே


ரசனைகள்

 

 (1980ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அண்ணாவுக்கு ரசனை அதிகம். அதைப் பலமுறை கண்டு வியந்திருக்கிறேன் நான். ஒன்றுக்குப் பத்துக் கடை. ஏரீத் தான் சட்டைத்துணியோ, பாண்ட் துணியோ எடுப்பான். சட்டையைக் கன கச்சிதமான அளவில் தான் தைத்துக் கொள்வான். மோட்டார் பைக்கை அவன் துடைப்பதும், பாலிஷ் போடுவதும் அந்தக் காலனிக்கே வெளிச்சம்.. அத்தன பயபக்தி! “என் உருவம் அதில் தெரியணும்! போய் ஒரு டப்பா பாலிஷ் வாங்கிட்டு வா


ஆட்டம் – ஒரு பக்க கதை

 

 ஒரு இருபது ரூபாய் என்னைப் பாடாய்ப் படுத்துகிறது. கடையில் கணக்குத் தவறி அதிகமாகக் கொடுத்த போதே அதைத் திருப்பி இருக்க வேண்டும். ‘சரி இருக்கட்டும்!’ என்று கொஞ்சம் சபலப்பட்டு இரண்டடி எடுத்து வைத்தது தவறாகப் போய்விட்டது. “ஏமாந்து கொடுத்தான் என்பதற்காக ஏமாற்றுவது சரியா..?” உடனே உள் மனதிலிருந்து ஒரு குரல் ஓடோடி வெளி வந்துவிட்டது. இன்னொன்று… “நீயா ஏமாந்தாய் , எடுத்தாய், திருடினாய் ???! அவன் எத்தனைப் பேர்களிடம் கொள்ளையோ..? கொள்முதலுக்கு மேல் அதிகம் வைத்து வரி,


இம்புட்டுத்தேன் வாழ்க்கை

 

 சூரிய வெளிச்சம் முற்றிலும் பரவாத சிறிது பகலின் வெளிச்சம் மட்டும் ஊடுருவிய மிதமான இருட்டு அறையில் பகல் நான்கரை மணியளவில், கலைந்த போர்வையின் நடுவே முகம் மற்றும் உடம்பெல்லாம் வியர்வை முத்துக்களாய் வடிய முகத்தில் ஏதோ ஒரு சிறு வலிக்கான மிகச் சுழிப்புடன் நெஞ்சைப் பிடித்தவாறே அமர்ந்திருந்தார் மீசைக்காரர் வேலு. இடுப்பில் தண்ணீர் குடத்துடன் முதல் நடையைக் கட்டிய சிவகாமி ஜன்னலின் வழியே தனது கணவர் அமர்ந்திருப்பதைப் பார்த்துவிட்டு, சரி இப்போ தான் எழுந்திருக்காங்க போல என்ற


களவாடிய பொழுதுகள்

 

 மாயாவுடன் நான் வாழ்வது பணத்திற்காக மட்டுமே என்று என் நண்பர்களும், தெரிந்தவர்களும் நினைக்கிறார்கள். ஆனால் உண்மையாக நான் மாயாவை காதலிக்கிறேன். காதல் என்பது இரு மனிதர்களுக்கு இடையே ஏற்படுவது. இதில் மற்றவர்களின் எண்ணம்தான் என்னை கஷ்டப் படுத்துகிறது. நான் ஒரு திருநங்கையோ திருநம்பியோ அல்ல. ஒரு சாதாரணமான ஆண். ஆனால் என் மனைவி மாயா ஒரு திருநங்கை. திருநங்கைகளிடம் கணிசமாக பணம் இருக்கும் என்றே பலர் நினைக்கிறார்கள். ஆனால் இது முற்றிலும் தவறானது. உண்மை என்ன தெரியுமா?