Warning: Cannot modify header information - headers already sent by (output started at /home/content/42/10186442/html/index.php:2) in /home/content/42/10186442/html/wp-content/themes/Clipso/functions.php on line 189
Sirukathaigal - Sirukathai - Short Stories in Tamil

கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: March 22, 2021

9 கதைகள் கிடைத்துள்ளன.

வடம் பிடிக்க வாங்க ஜப்பானுக்கு!

 

 அத்தியாயம்-4 | அத்தியாயம்-5 “நாலு வீதிக்கும் பேர் வச்சிட்டாப் போதுமா? அங்கெல்லாம் தேர் சுத்தி வரவேணாமா? டர்னிங்ல தேரைத் திருப்பி விடணுமே; அதுக்கெல்லாம் என்ன ஐடியா வச்சிருக்கீங்க?” என்று விழா வேந்தன் முத்து கேட்க, “ஜப்பான்ல புல்லட் ரயில்களையே ரிமோட் கண்ட்ரோல்ல ஓட்றாங்க. தேரைத் திருப்பி விடறதுதானா பிரமாதம்!” என்றார் புள்ளி சுப்புடு. “தேரோட்டத்தை நம் ஊர்ல எப்படி நடத்தறாங்களோ அந்த மாதிரியேதான் இங்கேயும் நடத்தணும். தெரு முனையில் திருப்பறது கூட நம் ஊர் வழக்கப்படிதான் செய்யணும்.


கற்பனைக் காரிகை

 

 தன் முயற்சியில் சற்றும் மனம் ததளராத விக்கிரமன் மீண்டும் மரத்தின் மீதேறி அதில் தொங்கும் உடலைக் கீழே வீழ்த்தினான். பின்னர் கீழே இறங்கி அதனைச் சுமந்து மயானத்தை நோக்கிச் செல்கையில் அதனுள்ளிருந்த வேதாளம் எள்ளி நகைத்து “மன்னனே! இந்த பயங்கர நடுராத்திரியில் நீ இப்படிப் பாடுபடு வதைப் பார்த்தால் நீ இந்த உலகிலேயே காண முடியாத ஏதோ ஒரு பொருளைக் கற்பனை செய்து கொண்டு அதற்காக அலைந்து திரிகிறாயோ என்ற சந்தேகம் ஏற்படுகிறது. இதுபோல சுற்றிய பானுசிம்மன்


கோந்து ஸார்

 

 கோவிந்தசாமி என்ற அவர் பெயர் சிறுகச் சிறுகத் தேய்ந்து, கோய்ந்து, கோந்து என்று மறுவிவிட்டது. பெயர்தான் கோந்தே தவிர, இந்த கோந்து எவருடனும் ஒட்டமாட்டார். அதனால் அவரைக் காக்காய்பிடிப்பது கடினம். இந்தத் தகுதிதான் அவருடைய தொழிலுக்குச் சௌகரியமாக இருந்தது. பாடகிகளோ, நாட்டியமணிகளோ கலை விமர்சகரான அவரைத் தம் இல்லங்களுக்கு விருந்துக்கு அழைத்து, அவர் காலில் சாஷ்டாங்கமாக விழுந்து, ஜரிகை வேஷ்டி, மனைவிக்கு பட்டுப்புடவை என்று தாம்பாளத்தில் வைத்துக் கொடுப்பது என்றெல்லாம் பலவாறாக முயன்றும், அவர்களால் எந்தப் பட்டமும்


ஓடிய காலங்கள்

 

 காலை மணி பத்துக்கு மேல் இருக்கலாம், நரசிம்மன் பென்ஷன் வாங்க கிளம்பி விட்டார். பாக்கியம் வரும்போது ஏதாவது வாங்கி வரணுமா? உள்ளிருந்து அவரை வழி அனுப்ப வந்த மருமகளிடம் கேட்டார். வேணாம், வேணாம், நீங்க வந்தப்புறம் பாத்துக்கலாம், இப்ப வெயிலு அதிகமா இருக்கே, கொஞ்சம் தாழ்ந்தொன்ன போக கூடாதா? வேணாம், வேணாம், மூணு மணிக்குள்ள ட்ரசரி ஆபிசுக்குள்ள இருக்கணும், இல்லையின்னா நாளைக்கு வர சொல்லிடுவான்.இப்பவே நடக்க ஆரம்பிச்சா ஒரு மணி நேரத்துல போய் சேர்ந்திடுவேன், வயசாச்சில்ல, சொல்லியவாறே


மனசுதான் மௌனமாகுமா? கொலுசுதான் பேசுமா?

 

 சுற்றும் முற்றும் பார்த்தாள் தாமரை. யாரும் இல்லை என்று தெரிந்ததும் அலமாரியைத் திறந்து , துணிகளைத் தள்ளி பின்னால் மறைத்து வைத்திருந்த சாயம் போன சாக்லேட் டப்பாவைத்திறந்து , அதிலிருந்த காசைக் கொட்டி எண்ண ஆரம்பித்தாள். கசங்கிய சில அம்பது ரூபாய். பத்து ரூபாய் நோட்டுகள். நிறைய ஐந்து. இரண்டு.. ஒரு ரூபாய் நாணயங்கள். எத்தனை முறை எண்ணினாலும் ஆயிரத்து ஐநூறைத் தாண்டவில்லை. தாமரையின் கண்ணிலிருந்து கண்ணீர்த் துளிகள் விழவா..வேண்டாமா…என்று அவளுடைய பதிலுக்கு காத்திருந்தது.. ‘ச்சே.. இப்படி


இறப்பு

 

 நான்: நான் ஒரு டாக்டரா? – இல்லை நான் ஒரு கெமிகல் என்ஜினீயரா? – இல்லை நான் ஒரு மெகானிகல் என்ஜினீயரா? – இல்லை நான் ஒரு சிவில் என்ஜினீயரா? – இல்லை நான் ஒரு நோயியல் (pathology ) நிபுணனா? – இல்லை நான் கடவுளா – இல்லை பின் நான் யார் ?. நான் மனிதன். இன்று நான் முதியவன். எனது தலை முடி கொட்டி விட்டது. இருக்கும் சில முடியும் வெளுத்து விட்டது.


உள்ளங்கள்..!

 

 வைத்தி சொன்னதைக் கேட்ட சிங்காரவேலுவிற்கு அவமானம் தொற்றி ஆத்திரம் பற்றியது. “அவ்வளவு தூரத்துக்கு வந்துட்டாங்களா…?!….” என்று வெளிப்படையாகவே உறுமி…. எரவானத்தில் இருந்த வீச்சரிவாளை எடுத்து தன் இடுப்பில் சொருகிக் கொண்டு வேகமாக வீட்டை விட்டு வெளியேறினான். அதற்குள் காரியம் மிஞ்சிவிட்டது. சிங்காரவேலு கணிப்பு தவறி விட்டது. இவன், அவர்களை அடையுமுன்னேயே…. அவர்கள் நாட்டாண்மை நடராசன் வீட்டில் படியேறி விட்டார்கள். ‘வரட்டும்!’ கறுவி இடுப்பில் சொருகி இருந்த அரிவாளை தயாராக எடுத்து வைத்துக் கொண்டு அவர் பக்கவாட்டு சுவரோடு


தண்டனை

 

 குறள்: ‘இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண நன்னயஞ் செய்து விடல்‘ பாலாவைச் சிலவேளை உங்களுக்குத் தெரிந்திருக்கலாம் 70-80களில் இலங்கை வானொலியைக் கேட்பவராக நீங்கள் இருந்திருந் தால் பாலாவின் குரலையாவது நீங்கள் கட்டாயம் கேட்டிருப்பீர்கள். தொலைக் காட்சிகள் பரவலாக புழக்கத்துக்கு வருவதற்கு முன்னால், இலங்கை வானொலியும் அதில் ஒலிபரப்பான திரைப்படப் பாடல் களும் நாடகங்களும் தான் பாமர ரசிகர்களின் பிரதான பொழுது போக்குகளாக இருந்தன. அக்கால கட்டத்தில் வானொலியில் கோலோச்சிய ஒருசில நாடக நடிகர்களுள் பாலா பிரபல்யமானவன். பிரபல்யம்


ஏகபத்தினி விரதன்

 

 இலங்கையை ஆண்ட அசுரகுல மன்னன் ராவணன். ராவணனுக்கு தசக்ரீவன், இலங்கேஸ்வரன், ராவணேஸ்வரன், திரிலோக அதிபதி என்று பல பெயர்கள் உண்டு. பத்து முகங்களை உடைமையினால் தசமுகன் என்றும் அறியப்படுகிறார். பத்து பிரஜாதிபதிகளில் ஒருவரான புலஸ்திய முனிவரின் மகனான விஸ்ரவ முனிவருக்கும், அரக்கர் குல தலைவர் சுமாலியின் மகள் கைகேசிக்கும் பிறந்தவர்களே ராவணன், கும்பகர்ணன், வீபீடணன் மற்றும் சகோதரி சூர்ப்பனகை ஆவார்கள். மேலும் ராவணன் சிவனுடைய தீவிர பக்தர். நெற்றியில் எப்போதும் திருநீர் அணிந்து கம்பீரமாக காட்சியளிப்பவர். அவருடைய