கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: July 2020

60 கதைகள் கிடைத்துள்ளன.

காய்க்காத பூக்கள்

 

 அத்தியாயம் 7 | அத்தியாயம் 8 | அத்தியாயம் 9 குறிப்பு: இந்த பகுதியில் சில விஷயங்கள் வெளிப்படையாக சொல்ல வேண்டி இருக்கிறது. அதனால் சில தகாத வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டு உள்ளன. 18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் மேற்கொண்டு படிப்பதை தவிர்க்கவும் எனக் கேட்டுக் கொள்ளப்படுகிறது. கதை தொடர்ச்சி: என் அப்பா சாதி பார்க்காம பழகுற நல்ல மனுஷன். ஒடுக்கப்பட்டவங்களுக்கு ஆதரவா நடக்க போய் சொந்த சாதிலயே எங்கள ஒதுக்கி வெச்சிட்டாங்க. ஆனாலும் என் அப்பா தன்னோட


பார்த்திபன்சார் காத்திருக்கிறார்

 

 அனல் உலையாய் கொதிநிலை பெற்றிருந்தது வீதி. மரத்தடி, கூரையடி, வீட்டு மனையின் நிழலவடிவம் எதிரேவந்து விருட்டென கடக்கும் பேருந்தின் புகைமலிந்த காற்று..என பேதமில்லாது எங்கெங்கும் வெப்பம் நிறைந்திருந்தது. சுவாசம் கூட இதமாய் இல்லை. நாசித்துவாரத்துள் சூடு புகுந்து கிடந்தது. கண்களிலும் காந்தல். தலையினில் எரிச்சல். மேனியெங்கும் வெந்நிலை. தலையில் போட்டிருந்தகைக்குட்டையை எடுத்து, நெற்றியில் மேல்புறம் கசிந்த வியர்வையையை ஒற்றி எடுத்தபடி அந்த அலுவலக வாசலில் வந்து நின்றான் அவன். கண்ணாடியால் ஆகியிருந்த அதன்கதவைத் திறக்க ஒருநிமிடம் எடுத்து


மையல்

 

 “மையல் செய்யாது உய்வதெல்லாம் உய்யலோ?…” என் இருதயத்தை தொட்ட தற்கால பாடல் என்றால் இதைத்தான் சுட்டிக்காட்டுவேன். அந்த கவிதை வரிகளில் கமல் ஹாசன் எழுதிய வசனங்கள் செதுக்கினாற் போலிருக்கும், நானும் மையல் செய்யாத வாழ்வு வாழ்வே இல்லை என வாதாடுபவன் தான். நான் கண்மூடி இருந்த கணம் திடீரென வரைப்பட்டிகை பாடுவதை நிறுத்தியது.பாட்டை நிறுத்தியது யாரென நன்கு தெரியும். “ஏன் சந்திரா?” “எழும்புடா, எடுத்து குடி கொஃபியை” சொல்லிவிட்டு தப்பலாம் என எண்ணினால், நானோ அவளின் மிருதுவான


மாயை

 

 ரமா இன்றைக்கு மிக சந்தோஷமாக இருந்தாள்.ஒரு மாதத்திற்குள் 5 கிலோ வெயிட் இறங்கி இருப்பது பெரிய சாதனைதான். கல்யாணத்தின் போது 42 கிலோ வெயிட் இருந்தாள். ஒடிந்து விழக் கூடிய இடுப்பு . பட்டு சேலை இடுப்பில் நிற்கவே இல்லை. எல்லாம் கனவா போயிடுச்சு. கல்யாணமான நாலாவது மாசமே கணவரோட அமெரிக்கா பயணம் . மகிழ்ச்சிக்குக் கேட்கவா வேண்டும். எப்பவும் ஜாலிதான். வெளியில சாப்பாடு. ஊர் சுற்றல். சரண் வேலை நேரம் போக மற்ற நேரமெல்லாம் ரமாவோடு


இயற்கை இரக்கமற்றது

 

 என் கன்னத்தில் காற்றுப் பட்டது. அது உன் மூச்சுக் காற்று என்று நினைத்தேன். கனவில்; உன்னைக் கண்டதும் நீயே இங்கே இருப்பதுபோல் இருக்கின்றது. பிரான்சின் துலுஸ் பகுதியில் குழந்தையோடு சிறு குடும்பமாகி வாழ்கிறாள் வனஜா. பாரிசில் தன் பெற்றோருடன் வாழ்ந்து கல்வியை முடித்துப் பாச முடிச்சுகளோடு சற்றுப் பிரிந்து தன் குடும்ப வாழ்வைப் பின்னுவதும் சகஜம்தானே! தினமும் தொலைபேசி மூலம் வனஜாவுடன் தொடர்பு கொண்டு பாசக் கடலில் மகிழுவார் வனஜாவின்; தந்தை. சுகம் விசாரித்து பேரக்குழந்தையுடன் செல்ல