கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: June 2020

137 கதைகள் கிடைத்துள்ளன.

காய்க்காத பூக்கள்

 

 அத்தியாயம் 1 | அத்தியாயம் 2 | அத்தியாயம் 3 ராஜேஷ் வீடு போலீசார் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டது. ஃபாரன்சிக் நிபுணர்கள் ரேவதியின் படுக்கையறையை அணு அணுவாக சோதனை கொண்டு இருந்தனர். இன்ஸ்பெக்டர் கவிதா ஏட்டு கதிரவனிடம் நடந்த சம்பவங்களை பற்றி விசாரித்து கொண்டு இருந்தார். “ரேவதி ரொம்ப நேரமா கதவ திறக்காததால வேற வழியில்லாம தான் மேடம் கதவ உடைச்சு உள்ள வந்தோம்” “கதவோட லேச் உடையாம இருக்கு” “சாவி போட்டு மட்டும் தான் பூட்டி


காணாமல் போன கணவன்

 

 முடி கலைஞ்சு போய் கண்ணு ரெண்டும் கருவளையமிட்டு முகமெல்லாம் சோர்ந்து உதடுகள் வறண்டு ரொம்பவும் சோர்வுடன் குணமாகி வரும் காய்ச்சலில் படுத்திருந்தாள் விந்தியா. ஜாப் டிரெயினிங்க்காக பெங்களூரு சென்று வந்த கல்பனா, தோழி விந்தியாவை பார்க்க வந்தவள், துணுக்குற்று உடம்புக்கு என்ன ஆச்சு.,? என்று விசாரித்தாள். ஏன் உனக்கு ஒன்னும் தெரியாதா.? யாரும் உனக்கு சங்கதி சொல்லலையா.? என்று கேட்டாள். உம் மாமியாரண்ட உன்னை பற்றி கேட்டதற்கு, மூஞ்சியை தூக்கி வைச்சுக் கிட்டு உள்ள இருக்கா போய்


அம்மா காத்திருக்கிறாள்

 

 பாட்னா எக்ஸ்பிரஸ் தனது நீண்ட பயணத்தை முடித்துக்கொண்டு சென்னை சென்ட்ரல் ஸ்டேஷனின் 9வது plotform-ற்குள் நுழைந்தது. அதிலிருந்து வழக்கம்போல் பீகாரிலிருந்து வேலை தேடி சென்னை வரும் இளைஞர் கூட்டம் இறங்கியது. அவர்கள் அனைவரும் எங்கு செல்வது, யாரை கேட்பது என தெரியாமல் ஸ்டேஷன்க்கு வெளியே வந்தனர். அவர்களில் ஒருவன்தான் நம் யாம்பிரசாத். பீகாரின் பின்தங்கிய கிராமம் ஒன்றிலிருந்து வருகிறான். எட்டாம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளதால் வேலை ஒன்றும் கிடைக்கவில்லை. அப்பா பகதூரும் அதிகம் படித்தவர் இல்லை.


அதீத காதல்!!

 

 ஏண்டா நாயே..,என்ன திமிரு இருந்தா பைக்க திருட பார்த்திருப்ப?!. ஏட்டைய்யா யார் இவன் என்ன கேஸ்?.,திருட்டுபய அய்யா பெரிய இடத்திலையே வேலையை காட்ட பார்த்திருக்கான். இவன் மேல வேற எதுவும் கேஸ் இருக்கா?.,இல்ல அய்யா!. டேய் இங்க வா., உன் பேரு என்ன?., தினேசு சார்., எந்த ஏரியா?., அண்ணாநகர்., தெருவின் பெயரை கேட்ட நிமிடத்தில் அவன் கன்னத்தில் விழுந்த அறையின் சத்தத்தில் ஸ்டேசனே அதிர்ந்தது. ஏண்டா உங்க ஏரியாகாரங்க சும்மாவே இருக்க மாட்டிங்களாடா, எங்க தாலிய


இரண்டு இருபது காசு

 

 காலையிலதான் பாத்துட்டு வந்தேன். அதுக்குள்ள இப்படி…… எதிர்பார்க்கல. மனத்துக்குள் திடீரென்று ஒரு கனம் வந்து உட்கார்ந்துகொண்டது. ஹாலில் தெரிந்த மின்னிலக்கக் கடிகாரம் மணி விடியற்காலை நான்கு இருபது என்று காட்டிக்கொண்டிருந்தது. தம்பிதான் தகவலைச் சொன்னான். வழக்கம்போல் தூக்கத்தில் முட்டிக்கொண்டுவரும் மூத்திரத்தை அடக்க முடியாமல், பாத்ரூம் சென்றுவிட்டு வரும்போது இடதுபுற அறையில் இருக்கும் பாட்டியிடமிருந்து ஏதாவது ஒரு புலம்பல் கேட்டுக்கொண்டிருக்கும். தாத்தா பிப்ரவரி மாதம் இறந்ததிலிருந்து அந்தப் புலம்பல் இன்னும் அதிகமாகிப்போனது. வயசானா அப்படித்தான் என விட்டுவிட்டோம். இன்று


உள்ளும் புறமும்

 

 “ஹலோ சார்…” “சூரஜ்?” “எஸ் சார்…” “உட்காருங்க…” “‘இங்க’ல்லாம் வேண்டாம் சார்…” “சரி… டேக் யுவர் சீட்… யூ லைக் திஸ் ஆபீஸ்?’’ “ரொம்ப சார்…” “எஞ்சினீரிங் முடிச்சது இந்தியாலதானே?” “ஆமா சார்…” “வேலைலாம் எப்படிப் போகுது?’’ “டைட்டா போகுது சார்…” “அது ஓகே… பிடிச்சிருக்கா..?” “ரொம்ப…” “படிச்சது மெக்கானிக்கல் இல்ல?” “ஆமா சார்…” “செய்யற வேலைக்கும் படிச்ச படிப்புக்கும் சம்பந்தம் இருக்கற மாதிரி இருக்கா?” “…” “என்னடா ஒரு எலக்ட்ரிக்கல் என்ஜினீயர் நம்ம லைனைப் பத்திப்


எழுத்தின் பிறப்பு

 

 முதலென்றும் நடுவென்றும் முடிவென்றும் அளவின் வரையற்று, முன் பின் இனி எனக் காலத்தின் வரையற்று, அங்கு இங்கு என இடத்தின் எல்லையற்று, அப்படி இப்படி எனும் இயல்பும், உண்டு இல்லை எனும் இயங்குதலுமில்லாது, உருவின்றி, பிரிவின்றி, ஏகமாய், உயிர் என்று பிறக்கு முன்னர், உலகம் உற்பவிக்கு முன்னர்— எங்கும் பிரம்ம மயம். பிறகு வானம், வானத்தின் முழு நீலம், பூமி, புனல், புல், பூண்டு, செடி கொடி – பரம், பல்வேறு விதமாய்ப் பரிணமிக்கும் பல்வேறு உருவங்கள்


சிவப்பு முக்கோணம்..!

 

 தலைவிரிகோலமாய் அழுத்த கண்ணும் சிந்தையுமாய் ஆனந்தி வீடு மூலையில் சிலை மாதிரி அமர்ந்திருந்தாள். அவள் எதிரில் கூட நிற்க பிடிக்காதவனாய் சாரங்கன் இறுகிய முகத்தோடு வீட்டை விட்டு வெளியேறினான். அவனுக்குள் அம்மா சொன்னது காதில் எதிரொலித்தது. “இதோ பார் சாரங்கா! ஆனந்தி செஞ்சது மகா தப்பு. புருஷனை விட்டு இன்னொருத்தனோட ஓடிப்போனது ஆம்பளைக்கு கொலை செய்யக்கூடிய அளவுக்கு குத்தம். ஆனா… செஞ்சது தவறுன்னு தெரிஞ்சி , ….வேற எந்தவித அசம்பாவித முடிவும் எடுக்காம வீடு திரும்பி இருக்காள்ன்னா….


யார் சொல்றது நியாயம்ங்க?

 

 அன்று ஞாயிற்றுக் கிழமை. ஆறு வருடங்களாக வேலைக்குப் போகும் மகனும்,மூனு வருடங்களாக வேலைக்குப் போகும் மகளும் காலை வேளையிலே தான் வீட்டில் ‘ப்ரீ’யாக இருப்பார்கள். நானும்,என் மணைவியும் மற்ற நாட்களில் பேசி வந்த பிள்ளைகளின் ‘கல்யாணப் பேச்சை ஆரம்பித்தோம். “சுந்தர்,உனக்கு இருபத்தி எட்டு வயசாவுது.அம்மா சுதா உனக்கு இருபத்தி நாலு வயசாவுது நானும் அம்மாவும் வார நாட்களிலே உங்க கல்யாணத்தை பத்தித் தான் தினமும் பேசி வரோம். நாங்க ரெண்டு பேரும் நாங்க நிறைய பொண்ணு,பையன் ஜாதகத்தை


சம்ஸய ஆத்மா விநஸ்யதி

 

 அந்தச் சின்னைக் கிராமத்தில் 1970 களில் ஒரு அக்கிரஹாரம் இருந்தது. ஆனால் இப்போது அதில் பல ஜாதியினரும், ஏன் பல மதத்தினரும் கூட குடியேறி விட்டனர். அது அக்கிரஹாரமாக இருந்தபோது, ஒரு வெள்ளிக்கிழமை பகல் நேரத்தில் காவியுடை அணிந்த ஒரு வயதான சாமியார் தன்னுடைய உஞ்சுவர்த்தியை முடித்துக்கொண்டு, ஒரு பெரிய வீட்டின் முன்புறத் திண்ணையில் அமர்ந்தபடி, கிடைத்த அரிசிகளை பிரித்து ஒரு துணிப் பையில் மாற்றிக் கொண்டிருந்தார். அப்போது வீட்டினுள் கணவனும், மனைவியும் வாஞ்சையுடன் ஒருவரையொருவர் கொஞ்சிக்