கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: August 21, 2019

10 கதைகள் கிடைத்துள்ளன.

முத்தங்கள் நூறு!

 

 அந்த தொலைபேசியில் வந்த செய்தி ஜெபநேசனை நிலைகுலையச்செய்தது. அவன் தலையில் இடிவிழுந்து மண்டை பிளந்து விட்டதோ என்று எண்ணும் அளவுக்கு அவர் தலைவலிக்க ஆரம்பித்தது. அப்படியே மனம் தளர்ந்து அருகிலிருந்த நாற்காலியில் பொத்தென சாய்ந்தார். அவரது ஒரே ஒரு மகளான மேரி ரொஸலின் பாடசாலை விட்டு வரும் வழியில் வாகன விபத்துக்குள்ளாகி மருத்துவமனையில் சேர்த்தபின் உயிரை விட்டிருக்கிறாள். ரொஸலினுக்கு அண்மையில்தான் பதினொரு வயது பூர்த்தியாகியிருந்தது. அவள் பிறக்கும்போதே அவளின் அம்மாவை இழந்து விட்டதால் அவள் அம்மாவை விழுங்கிவிட்டுத்தான்


புரியாத புதிர்

 

 அது ஒரு அதிகாலை வேளை, எப்பவும்போலவே ஒலிக்கும் வில்வையடிப்பிள்ளையார் கோயில் மணியோசை அன்று ஒலிக்கவில்லை. இலைகளின் சலசலப்பு கேட்டால் கூட திடுக்கிடும் பயம் உடனே தொற்றிக்கொள்ளும். அந்த அளவுக்கு ஊரே பேரமைதியாய் இருந்தது. அது ஒரு சிறிய நகரம் என்றே சொல்லலாம். ஏனெனில் அந்த ஊரைச்சுற்றி முன்னூறுக்கும் மேற்பட்ட சிறிய கிராமங்கள் இருக்கின்றன. இந்த கிராமங்களுக்குரிய அன்றாட வியாபார தளமாகவும் அரச அலுவலகங்கள் பாடசாலைகள் வைத்தியசாலைகள் போன்ற பல தேவைகளை பூர்த்திசெய்வதற்குரிய மத்திய மையமாகவும் விளங்கியது இந்த


சேற்றில் மலர்ந்த செந்தாமரை

 

 அத்தியாயம்-23 | அத்தியாயம்-24 | அத்தியாயம்-25 முதியோர் இல்லத்திற்கு வந்த கணபதியும்,சாந்தாவும் இரவு சாப்பாட்டை முடித்துக் கொண்டு அவர்கள் இடத்தில் படுக்கப் போனார்கள்.படுத்ததும் கணபதி சந்தோஷத்தில் சாந்தாவைப் பார்த்து “சாந்தா,நாம இன்னைக்கு செந்தாமரையை கோவிலிலே பாப்போம்ன்னு கனவிலே கூட நினைக்கலே. நான் தினமும் வேண்டி வர அந்த முருகப் பெருமான் தான் அவளை நம் கண் முன்னாலே காட்டி, அவ நம்மை சென்னைக்கு அழைச்சுப் போற புத்தியையும் அவளுக்கு குடுத்து இருக்கார். இது அவர் அனுக்கிகம் தான்


கால் மணி நேரம்

 

 “எம் புள்ளையை ஸ்கூல்ல யாரோஅடிச்சிட்டாங்கலாம்… அலுவலகத்திலிருந்து வீட்டுக்குத் திரும்பி அழைப்புமணி அடித்துக் காத்திருந்த குமாரை வரவேற்றது மனைவி விமலாவின் குரல். மணி ஏழைக் கடந்து விட்டிருந்ததைக் காட்டிய கடிகாரத்தின் விநாடி முள் வழக்கத்தை விட அதிகமாகத் துடிப்பது போலிருந்தது அவனுக்கு. நாள் முழுக்க கணினித்திரையை வெறித்தபடி வேலை பார்த்த கண்களில் அயர்ச்சி. இருசக்கர வாகனத்தில் அரைமணி நேரப் பயணம். களைப்பு தீர ஆயாசமாய் சற்று அமரநினைத்தவனை கலவரப்படுத்தியது அவளின் பேச்சு. அறைக்குள் சென்று உடைமாற்றிக் கொண்டு வந்து


சிறு துளி

 

 நல்ல வெயில், லாரிகளும் பேருந்துகளும் சென்றும், வந்தும் கொண்டிருந்த அந்த தார் சாலையில் வயதான் மனிதர் ஒருவர் தள்ளாடி தள்ளாடி நடந்து வந்து கொண்டிருந்தார். தாகம் வாட்டியது, நா வறட்சியால் தண்ணீர் எங்காவது கிடைக்குமா என்று கண்கள் அலை பாய தேடிக்கொண்டிருந்தார். சற்று தூரத்தில் ஒரு பழக்கடை கண்ணில் பட அங்கு சென்றவர் கொஞ்சம் தாகத்திற்கு தண்ணீர் கிடைக்குமா? என்று கேட்டார். தண்ணீர் இல்லை, காசு இருந்தால் ஜூஸ் தருகிறேன் என்று கடைக்காரர் சொன்னார். ஐயா என்னிடம்