கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: September 2019

70 கதைகள் கிடைத்துள்ளன.

தலைமுறை நேசம்

 

 அப்பத்தா இறந்து விட்டாள் என ஊரிலிருந்து போன் வரவும் அப்படியே தரையில் அமர்ந்து கதறி அழுதாள் செல்வி. அவளது அழுகுரல் கேட்டு வெளியிலிருந்து வேகமாக அறைக்குள் ஓடி வந்த அவளது தோழி “ஏய்… என்னாச்சுடி..?” என்று பதறினாள். பதில் சொல்லாது அழுதவள் தோழியின் தொடர்ந்த கேள்விக்கு அழுகையினூடே பதில் சொன்னாள். சற்று நேரம் பேசாமலிருந்தவள் “சரி நீ டாக்டருக்கிட்ட சொல்லிட்டுக் கிளம்பு… நான் பாத்துக்கிறேன்” என்று சொல்ல, “இல்ல ராத்திரி நேரத்துல நீ மட்டும் தனியா… அதுவுமில்லாம


பார்க்கவி

 

 இந்தக் கதையைப்பற்றி, வரிக்குவர் ஒரு அலசல் விமர்சனம் சி. சு. செல்லப்பா அவர்கள் தொடராக சுதேசமித்ரன் வாரப்பதிப்பில், மூன்று இதழ்களில் எழுதினார். ஆனால் அதுமட்டும் இந்தக் கதையைப் படிக்க சிபாரிசு ஆகாது என்று அறிவேன். ஆனால், இந்தத் தொகுப்பின் சம்பந்தமாக, முப்பது வருட இடைவெளிக்குப் பின் இந்தக் கதையை மீண்டும் படிக்க நேரிட்ட போது, கலைக்க முடியாத விதியின் கதியே போன்ற, இதன் படிப்படியான முன்னேற்றமும், கதை முடிவில், கதைக்கே முத்தாய்ப்பாக அமையும் இரண்டு வார்த்தைகளும், அவைகளின்


ஒளி நீக்கும் இருள்

 

 எங்கள் தெருவில் தன்னந்தனியாக ஒற்றையாக நின்று கொண்டிருந்த சௌந்திரராஜன் மாமாவின் தனி வீடும் இடிபட்டு விட்டது. ஆமாம்; தனி வீடு என்பதே அருகி விட்ட இந்நாளில் ஒருவரும் இல்லாமல் வெறுமே பூட்டிக் கிடந்த மாமாவின் வீடு இதுநாள் வரை கடப்பாரைக்கு இரையாகாமல் இருந்ததே பெரிய அற்புதம். மாமா இருந்தவரை வீட்டை அடுக்குமாடிக் குடியிருப்பு கட்ட விற்க சம்மதிக்கவில்லை; அதனால், அவருக்கும் அவர் பையன் பெண்களுக்கும் இடையே பெரிய மனத்தாங்கல் கூட ஏற்பட்டது. ‘வெளிநாட்டில் போய் குடியேறி விட்ட


பென்குயின் பயணம்

 

 பென்குயின்( பறக்கமாட்டாது ஆனால் நீந்தும் தன்மை கொண்டது ) ஒரு சிறிய பறவை. அது எப்பொழுதும் பெரிய பொருட்களைப்பற்றியே கேள்விகேட்டுக்கொண்டிருக்கும்! ” கடல் எவ்வளவு ஆழத்திலிருக்கின்றது?” “சூரியன் இரவில் நித்திரை செய்கின்றதா?” என்றெல்லாம் வினாவிக்கொண்டிருக்கும். இப்படித்தான் ஒரு நாள் அது வானத்தின் உயரம் எவ்வளவு? எனக்கேட்டுக்கொண்டிருந்தது….. ” பறந்து சென்று தானாகத்தெரிந்து கொண்டால் என்னவாம்? ” என்று கரகரப்பொலி எழுப்பியது அந்தவழியால் வந்துகொண்டிருந்த அல்பற்றோஷ் ( பசுபிக்கடலில் காணப்படும் வெண்மையான பறவை) என்னும் ஒரு பெரிய பறவை.


கோபத்தை கட்டுப்படுத்து!

 

 பேருந்தின் அந்த மதிய நேரத்து பயணம் சுகமான தூக்கத்தை வரவழைப்பதாக இருந்தது. அதுவும் வளைந்து வளைந்து அந்த மலை மேல் ஏறிக்கொண்டிருந்த பேருந்து அளவான வேகத்தில் சென்று கொண்டிருந்ததில் அப்படியே தூங்கி விட்டேன் போலிருக்கிறது. சட்டென விழிப்பு வந்து பார்த்த பொழுது பக்கத்தில் இருந்தவர் தோளின் மீது சாய்ந்து தூங்கி விட்டேன் போலிருக்கிறது.அது மட்டுமல்லாமல் வாயில் இருந்து எச்சிலும் அவர் சட்டையில் பட்டிருந்த்து. எனக்கு வெட்கமாக போய்விட்டது.சே..அப்படி என்ன தூக்கம் பாவம் எவ்வளவு நேரம் அவர் மேல்


கியான்

 

 கியான் செத்துப் போனாளாம். விழாக் காலங்களில் மைக் செட் போடும் மதியழகன், பார்க்கும் எல்லோரிடமும் சொல்லிக் கொண்டிருந்தான். யாருமே அதை அவ்வளவு பொருட்படுத்தியதாய் தெரியவில்லை. அழகப்பர் தன் பெட்டிக்கடையில் உட்கார்ந்தபடி வருவோர் போவோரிடமெல்லாம் தன் பிள்ளைபற்றிய இழிபுராணத்தைப் பாடிக்கொண்டிருந்தார். டீக்கடை கோவிந்தன் சூடான பாலை டிகாக்சனில் கலப்பதிலேயே மும்முரமாய் இருந்தான். பார்பர் ஷாப் முருகன் வாடிக்கையாளர் முகத்தில் சோப்பை போட்டுக் கொண்டிருந்தான். தெருவோர நாய் ஒன்று யாரையோ பார்த்து ஆக்ரோசமாய் குலைத்துக் கொண்டிருந்தது. மனிதர்கள் முதல் மிருகங்கள்


நியூ அட்மிஷன் ஹெட் மாஸ்டர்

 

 மேசை மீதிருக்கும் சுழலும் பூமியை சுழற்றிக்கொண்டிருந்தார் ஹெட் மாஸ்டர் அருகில் இருந்த அலமாரியில் பதிவேடு எடுத்துக்கொண்டிருந்த உதவி ஆசிரியை “சார் சுத்துது…” “ஆமா நான்தான்…” உதாவி ஆசிரியை ஹெட் மாஸ்டரை பார்த்துவிட்டு “சார் நான் பேன் சுத்துறத சொன்னேன்… பவர் வந்துடுச்சு…” “நான் இந்த பூமி சுத்துறத சொன்னேன்…” சற்று நேரத்தில் ஒரு புதிய நபர் ஹெட் மாஸ்டர் அலுவலகத்தில் நுழைய அனுமதி கேட்கிறார். “சார் மே ஐ கம் இன்?” “ப்ளீஸ் கம் ” எதிர்


முத்து

 

 ” பொண்ணுக்குப் புருசன் அமையறது இறைவன் கொடுத்த வரம் ” – நான் உள்ளே நுழைந்ததுமே ராக ஆலாபனையை ஆரம்பித்தாள் என் மனைவி மகிழினி. ” என்னடி சொல்றே. .? ” புரியாமல் விழித்தேன். ” சொல்றேன் சொரைக்காய்க்கு உப்பில்லேன்னு. தாம்பத்தியம்…. நீங்க நினைக்கிற மாதிரி வெறும் படுக்கை சமாச்சாரம் மட்டுமில்லே. அதுக்கும் மேலே. ஒருத்தருக்கொருத்தர் அன்பு, அனுசரணை, துணை. ” ” புரியும்படி சொல். .? ” எனக்குள் சின்னதாய் கடுப்பு. ” உங்க நண்பர்


தீர்ப்பு உங்கள் கையில்…

 

 அத்தியாயம்-1 வறுமைக் கோட்டிலே வாழ்ந்து வருவதே மிகவும் கஷ்டம்.அந்த வறுமை கோட்டின் கீழே வாழ்ந்து வந்த,வாழ்ந்துக் கொண்டு இருக்கும் குடும்பங்கள் எத்தனையோ உண்டு. அதில் ஒரு குடும்பம் தான் மணி ஐயர் குடும்பம்.அவர் ஒரு ஹோட்டலில் சர்வராக வேலை செய்து வந்தார்.பழைய மாம்பலத்தில் ஒரு சின்ன வீட்டின் பின் பக்கத்தில் இருந்த ஒரே ஒரு சமையல் ரூம்,ஒரு முன் ஹால் பகுதிக்கு ஐனூறு ரூபாய் வாடகை கொடுத்து விட்டு,அவர் தன் குடும்பத்துடன் வசித்து வந்தார்.அவர் சம்பாதித்து கொண்டு


கதைப் புத்தகங்கள்

 

 (இதற்கு முந்தைய ‘பட்டுச்சேலை’ கதையைப் படித்தபின், இதைப் படித்தால் புரிதல் எளிது) ராஜலக்ஷ்மிக்கு ஏற்பட்டுவிட்ட மிகப்பெரிய காயம், அவளுடைய கணவன் என்ற மனிதனுக்கு அவளின் இளமை பெரிய பிரச்னையாகிக் கொண்டிருக்கிறது என்பதுதான். அவளுக்கு அவரின் முதுமை பிரச்னையாக இல்லை. ஆனால் அவரின் முதுமைக்கு, அவளின் இளமை பிரச்சினையாகி விடும்போது, அவளுக்கும் அவருடைய முதுமை பிரச்சனையாகி விடுகிறது. இவருக்கு இளமையான பெண் மனைவியாக வரவேண்டும், ஆனால் அவளுடையை இளமை பிறருடைய கண்களுக்கும் தெரியக்கூடாது! பெருமாளே! ராஜலக்ஷ்மி பொருமினாள். கடந்த