கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: September 2017

30 கதைகள் கிடைத்துள்ளன.

உயிர்கள்

 

 மெல்ல உடைகள் விலகியது, தன்னுடைய அன்பான கணவனை மார்போடு அணைத்தாள் காவியா,அந்தநேரம் கவின் தன் இமைகளை மூடி மெல்ல தன் கடந்த கால நினைவுக்கு சென்றான்.தன் கல்லூரி நாட்களில் வகுப்புக்கு சென்ற அந்தநாள்களின் ஞாபகம் அவன் முன் காட்சிகளாக ஓடியது. அன்று வகுப்பு அறையில் மாணவர்கள் போராட்டம் பற்றி பேசி முடிவெடுத்தனர்.டெல்லி பல்கலைகழகத்தில் கொலைசெய்யபட்ட பெஞ்சிமின் என்ற இளைஞன் சுற்று சூழல் குறித்தும் வனங்கள் அழிந்துவரும் நிலைமை பற்றி எழுதியதால் ஒரு மாபெரும் கார்பெரேட் நிறுவனமும் அரசின்


பாரம்

 

 வஜ்ரவேலுவுக்கு கொஞ்ச நாளாகவே ஒரு பாரம் மனதில். கரெக்டா சொன்னா அவன் ரெண்டாம் கல்யாணம் பண்ணிகிட்ட நாளில் இருந்து. வஜ்ராவேலுவுக்கு வயசு 50 ஆகிறது. ஒரு விபத்தில் முதல் மனைவியை இரண்டு வருடம் முன்னால் இழந்த அவன், இரண்டாம் கல்யாணம் பண்ணிக் கொண்டது தன் மகனுக்காக. ஆனால் அவன் இரண்டாம் மனைவிக்கும் மகனுக்கும் ஒத்துப் போகவில்லை. தன் தாயிடத்தில் இன்னொருத்தியை வைத்துப் பார்க்க அவன் மகனுக்குப் பிடிக்கவில்லை. மனத்தாங்கல் முற்றி சண்டையில் முடிந்து மகனை வேறு ஸ்கூல்


பெருச்சாளி

 

 அதற்குப் பேர் ‘கட்டிங்கிராஸ்’ மேற்று ஆபிரிக்காவில் பெருகிக்கிடக்கம் ஒரு வகை பெருச்சாளி இனம். ஒரு பெரிய முயல் குட்டி அளவுக்கு வளரும். இதில் விசேஷம் என்னவென்றால் இது ஒரு தோட்டத்தில் வாய் வைத்துவிட்டால் என்றால் தோட்டக்காரன் கதி அதோ கதிதான். மண்ணைப் பிராண்டி உள்ளே போய் கிழங்கு வகை எல்லவற்றையும் நாசமாக்கி விடும். மேலுக்குப் பார்த்தால் பயிர்கள் ‘ஓகோ’ வென்று இருக்கும். ஆனால் உள்ளுக்குள்ளே கிழங்கையும் வேர்களையும் ஒட்டச் சாப்பிட்டிருக்கும். பார்ப்பவர்களக்கு விஷயமே தெரியாது. கண் முன்னே


விடியும் நாள் பார்த்து…

 

 “என்னம்மா யோசனை..? காசு போடுங்கம்மா.. எங்களுக்கு செஞ்சா சாமிக்கு செஞ்ச மாதிரி.. “ என்று நாங்கள் கைத்தட்டி எலக்ட்ரிக் டிரைய்னில் காசு வாங்கிக்கொண்டிருந்தோம். பிச்சைதான். அந்தம்மாவுக்கு மனசு இறங்கியது. ஐந்து ரூபாயைத் தந்தார்கள். சாந்திக்கும் ஐந்து ரூபாய் தந்தார்கள். அந்தம்மாவை நெத்தியில் நெட்டை எடுத்து மனசார வாழ்த்திவிட்டு அந்த இடத்தை விட்டு நகர்ந்தோம். சைதாப்பேட்டை ஸ்டேஷனில் ஏறின சித்ராதான் அதைச் அற்புத செய்தியை எனக்குச் சொல்லிவிட்டுப் போனாள். அவள் அதை சொன்ன போது அது எனக்கு ஒரு


அமெரிக்க நாகரிகம்!

 

 அன்று அதிகாலை. குருமூர்த்தியின் வீட்டுப் போன் அலறியது. “ காந்திமதி உடனே போய் போனை எடு..கண்மணி தான் இந்த நேரத்தில் கூப்பிடுவாள்!….” காந்திமதி ஓடிப் போய் போனை எடுத்தவுடன் “ நல்லா இருக்கிறாயா அம்மா… ஏன் இந்த ஒரு வாரமா போனே பண்ணலே” என்று கேட்டாள். “ காந்திமதி!………… நான் ரத்தினம் பேசுகிறேன்…கண்மணி இல்லே!…கொஞ்சம் குருமூர்த்தி இருந்தா பேசச் சொல்லம்மா…” “என்னங்க நம்ம கண்மணி இல்லே!….உங்க பிரண்ட் ரத்தினம் பேசுகிறார்..உங்களைக் கூப்பிடுகிறார்….” வந்து ரிஸிவரை வாங்கிக் கொண்டு