Warning: Cannot modify header information - headers already sent by (output started at /home/content/42/10186442/html/index.php:2) in /home/content/42/10186442/html/wp-content/themes/Clipso/functions.php on line 189
Sirukathaigal - Sirukathai - Short Stories in Tamil

கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: October 2015

80 கதைகள் கிடைத்துள்ளன.

மஞ்சுளா

 

 “மத்தளங்கள் கொட்டுங்கள், மந்திரங்கள் சொல்லுங்கள். பெட்டை மாட்டைக் கொண்டுவந்து தாலி ஒன்று கட்டுங்கள்.” அவளின் சிரிப்பு குழந்தைத்தனமாக தெரிந்தாலும், முகத்தில் ஒன்றும் குழந்தைத்தனம் தெரியவில்லை. ஆழம் காணமுடியாத சோகம் நிழலாடியது. மாமியார் தர்ம சங்கடத்துடன் அவளைப் பார்த்தாள். மாமிக்கு வயது எழுபது ஆகப்போகிறது. அவளுக்கு, அதுதான் கிழவியின் மருமகளுக்கு முப்பத்தைந்து வயதிருக்கலாம். மாமிக்குப் பெயர் திருமதி திருச்சிற்றம்பலம். அவளுக்கு என்று ஒரு பெயர் எப்போதோ இருந்திருக்கலாம். ஆனால் ஊருக்கும் உலகத்துக்கும் அந்தக் கிழவி திருமதி திருச்சிற்றம்பலம்தான். மருமகளுக்கும்


வன்மச் சுவடுகள்

 

 வெவ்வேறு சமுகத்தால் ஒதுக்கப்பட்டு, வெவ்வேறு சமுகத்தைச் சேர்ந்த காதல் இணையர் (ஜோடி). காதலை வென்று வாழ்க்கையை வெல்லப் போராடிக் கொண்டிருந்தவர்களுக்கு தடைக்கல்லாய் இருந்தவர்கள் இவ்விருவரின் சாதிச் சமுகத்தைச் சேர்ந்தவர்கள். அவர்கள் பல இன்னல்கள் தரவே, ஊரின் எல்லையில் தங்கி வாழ்வை துவங்கினர். நண்பர்களின் உதவியால் பக்கத்து நகரத்தில் முத்துவிற்கு வேலை கிடைத்தது. மணிமேகலையும் அவருக்கு பல விதத்தில் உதவியாக இருந்தாள். ஊரை விட்டு அவர்களை ஒதுக்கி வைத்ததால் உறவினர்களின் நல்லது கெட்டதுகளில் கூட கலந்து கொள்ள முடியாத


வேள்வி

 

 அம்மன் கோவில் திருவிழாவில் பொலிஸ், பாதுகாப்பிற்கு அழைக்கப்பட்டிருந்தது.விதியின் விளையாட்டு போல..சிங்களவர்கள் இருவரையும் பணிக்கு அமர்த்தியிருந்தார்கள். பெண்கள், அரைச்சாரியில், மல்லிகைப் பூச்சரம் சூடி,அவர்களே தேடித் தேடி அறிந்திருந்தவைகளை பூசியும்,செருகியும் அலங்காரப் படுத்திக் கொண்டு..தேவதைகளாக வந்திருந்தார்கள்.சமவயது ஆண்களை விட, பெண்கள் அழகில் தூக்கலாக இருப்பார்கள். சந்திரன், பாபு,செல்வன்,ராமன்..சிற்பம் செய்வதற்காக வந்திருந்த கற்களில் இருந்து,கடலையை கொறித்தபடி,கிறங்கிப் போய்..ரசித்துக் கொண்டிருந்தார்கள்.சிங்கள பொலிஸ்காரர்கள்,ஒரு பெண்ணை நிறுத்தி..எதையோ கேட்டார்கள்.அவளோட தோழிகள் பயந்தபடி ஒதுங்கி பார்த்துக் கொண்டிருந்தார்கள்.அவ்விருவரையும்,பெடியள் பல இடங்களில் இளம் பெட்டைகளைக் கண்டால்,விசர் விசாரணை நடத்துவதைக்


நஷ்ட ஈடு

 

 ‘வாழாவெட்டி ‘ என்று சமூகத்தால் விழிக்கப்படும் தாயினால் வளர்க்கப்பட்டவன் நான். இரண்டு அறைகளைக் கொண்ட மண்ணாலான கொட்டில் வீட்டின் முன்னே, உச்சி வெய்யில் நேராய் இறங்க, தன்னை ஒடுக்கி கந்தல் சேலையால் தலையை மூடிக் குந்தியிருந்து, கிடுகு பின்னி பாரமாய் சுமந்து சென்று விற்றும், பால் அப்பம், முட்டை அப்பம் என்று வட்ட வட்டமாய் வாயில் நீரூறும் சுவையுடன் அப்பங்களைச் சுட்டு விற்றும், பிள்ளைகளை வளர்த்தவள் என் அம்மா. ‘அம்மா ‘ என்றால் பல காலமாய் என்


கங்கை இன்னும் வற்றி விடவில்லை

 

 இராஜலெட்சுமி தியேட்டர் முன்புறம் உள்ள சாலையில், கூட்டம் கூடியிருந்தது. அங்கு பாம்பாட்டி ஏதும் வித்தை, ஏதும் காட்டிக் கொண்டிருக்கிறானா? என்று விக்னேஷ் அருகில் சென்று கூட்டத்தை விலக்கிக்கொண்டு பார்த்தான். ஒரு நிறைமாத கர்ப்பிணிப் பெண் அங்கு மயங்கிக் கிடந்தாள். கிழிந்த சேலையுடன் எண்ணெய் பசை காணாத தலைமுடி தோற்றம் அவளை ஏழைப்பெண் என காட்டிக் கொண்டிருந்தது.. சுற்றிலும் இருந்தவர்கள் வேடிக்கையில் மூழ்கியிருந்தார்கள். ஒருத்தராவது இடத்தை விட்டு நகரவில்லை. “ ஐயோ பாவம்! யார் பெத்த பெண்ணோ ரோட்டில்


காந்தியும் தாத்தாவும்

 

 “முந்தி நம்ப சாதிக்காரங்களை மத்தவங்க ஒதுக்கி வெச்சிருந்தாங்களாம். எங்கே, ஊரில. அப்போ, காந்திதான், `மனுசங்க யாரும் மட்டமில்ல, எல்லாரும் கடவுளோட குழந்தைங்கதான்’னு சொல்லி, நாம்ப செய்யற வேலையைக்கூட அவரு செஞ்சாராம். அவரு மகாத்மாடா. அதான் அவர் பேரை ஒனக்கு வெச்சேன்!” தொட்டியிலிருந்த தண்ணியை மொண்டு குளித்துவிட்டு, இடுப்பில் துவாலையுடன் கண்ணாடிக்கு முன்னால் நின்று தன் உடல் வனப்பை ரசித்துக்கொண்டிருந்த காந்திக்கு தாத்தாவின் குரல் கேட்டது. தினமும் கேட்டதுதான். முகத்தைச் சுளித்தான். ஐந்து வயதாக இருந்தபோது, சஞ்சிக்கூலியான (JANJI


மேளம்

 

 “நீ அங்கெல்லாம் போகக்கூடாது’’ “அம்மா, ரெண்டு நாள் லீவுதானே, நான் போயிட்டு வந்துர்றேன்’’ “அதெல்லாம் முடியாது நீ போகக்கூடாதுன்னா கூடாதுதான்’’என்று அதட்டினாள் ரவியின் அம்மா. “என்னடா கொழுப்பு ஏறிப்போச்சு, எதிர்த்து பேசற’’ என்று தன் கண்ணாடி வளையல் உடையாமல் இருக்க, அதை முழுங்கை வரை மேலேற்றிக்கொண்டு ஓங்கி ரவியின் கன்னத்தில் அறைந்தாள். உடனே அவன் பீறிட்டு அழ ஆரம்பித்தான். கீழே விழுந்து புரண்டு அழுதுக்கொண்டிருந்தான். அவன் அழுதுக்கொண்டிருந்ததைக் கண்டு அவளும் அழாதே என்ற அடித்தாள். சிறிது நேரம்


கரடி தலையில் தர்பூசணி

 

 “நரியாரே! அந்த தர்பூசணி என்ன விலை? “அதுவா! இருபது ரூபாய். கரடியாரே நீங்கதான் ரொம்ப சிக்கனம் பார்ப்பவராச்சே. தர்பூசணி வாங்க வந்திருக்கீங்க” எனக் கேட்டது நரி. “புதுசா ஒரு சட்டம் வந்திருக்கே, அது உங்களுக்குத் தெரியாதா?” என பதிலுக்கு கேள்விக் கேட்டது கரடி. “ என்ன சட்டம்? தினமும் தர்பூசணி வாங்கணும்னா?” எனக் கேலியாகக் கேட்டது நரி. “அட! இல்லை நரியாரே! வாகனம் ஓட்டுறவங்க கட்டாயமா தலைக்கவசம் போடணுமாம்” என்றது கரடி. “ஓ… அந்தச் சட்டமா? நல்ல


அது அந்தக்காலம்

 

 தேதி:2/01/1971 அன்புடையீர் வணக்கம்! இந்தக்கடிதம் கண்டவுடன் நீங்கள் யார் எழுதியது என குழம்பிக்கொள்ள வேண்டாம். போன வாரம் வெள்ளிக்கிழமை எங்கள் வீட்டிற்கு வந்து பஜ்ஜி, வடை, காப்பி சாப்பிட்டுவிட்டு காரம் கொஞ்சம் தூக்கல் என்று அந்தக் கூட்டத்தில் உமது அம்மையார் ஏதோ பெரிய விஞ்ஞானியைப்போல அறிவித்தார்களே அப்படி சத்தம் போட்டு சொல்லிவிட்டு என் அப்பாவிடம் ஏதோ இரகசியம் போல முணுமுணுத்துவிட்டு, உம்மையும் எழுப்பிவிட்டு கூட்டிசென்றார்களே, நீரும் செம்மறியாடு தலை குனிந்து போவது போல உம் அம்மையாரின் பின்


இவ்வளவுதானா ?

 

 அவன் மிகவும் சந்தோஷத்துடன் குளியலறையில் சீட்டியடித்தவாறு குளித்துக் கொண்டிருந்தான். சந்தோஷத்துக்குக் காரணம் நேற்று ஒரு நிறுவனத்திலிருந்து அவனுக்கு வந்த கெமிஸ்ட் வேலைக்கான அப்பாயிண்ட்மென்ட் ஆர்டர். மறுதினம் தூத்துக்குடி சென்று வேலைய ஒப்புக் கொள்ள முடிவு செய்திருந்தான். குளியறையிலிருந்து வெளிவரும்போது அவனுக்கு காஞ்சனாவின் நினைவு வந்தது. தான் அவளை நாளையிலிருந்து பார்க்க முடியாது, தன்னுடைய எட்டு மாதப் பழக்கம் இன்றுடன் சரி என்கிற நினைப்பு அவனுக்கு மிகவும் கசந்தது. வறுமையான குடும்பத்தில் பிறந்த அவன் பி.எஸ்ஸி. கெமிஸ்ட்ரி முதல்