கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: October 2015

80 கதைகள் கிடைத்துள்ளன.

கொட்டாவி,,,

 

 அவனும் என்னதான் செய்வான் பாவம்.தினசரிகளில் இரவு பணிரெண்டுமணி வரைக்கும் படிக்கிறான். பாடங்கள் கொஞ்சம் கூடுதலாக இருந்தால் ஒரு மணியைக்கூட எட்டித்தொட்டு விடுகிறது. கொட்டாவி விடுதலுடனும்,உடல் முறுக்கிய தூக்கக் கலக்கத்துடனுமாய் படிக்கிறான் படிக்கிறான், உடல் அலுக்கும் வரை படிக்கிறான், எழுதுகிறான் கை வலிக்கும் வரை எழுதுகிறான், கேட்டால் எங்களது டீச்சர் கொடுத்த வீட்டுப் பாடம் என்கிறான், வாங்கிப் பார்த்தால் ஒரே கேள்வி பதில்களை இருபது அல்லது அதற்கு மேற்பட்டு எழுதச் சொல்லியிருப்பார்கள். ஏன் அப்படி எனக்கேட்டால் பதில் டீச்சர்


நழுவும் நங்கூரம்

 

 அவள் கண்களின் ஆழத்தில் எதைக்கொண்டும் நிரப்ப முடியாத வெறுமை இருந்தது. அகமே புறமாவதைப் போல அவளின் மனதைக் கண்கள் பிரதிபலித்துக் கொண்டிருந்தன. இன்று காலை வரை தன்னிடமிருந்த சந்தோசம் சர்ப்பமாய் நழுவுவதைப் போலிருந்தது அவளுக்கு. இப்பவும் கூட அவளால் அதை ஏற்க முடியவில்லை. ஆனால் எல்லா நேரங்களிலும் நிஜம் நினைப்பது போல இருப்பதில்லையே! அப்படித்தான் அவள் விசயத்திலும் இருந்தது. பழகிய நாளில் இருந்து இளங்கோவிடம் எந்த தீய பழக்கங்களையும் அவள் கண்டதில்லை. அந்தக் குணமே அவன் மீது


தப்பித்தேன்

 

 தீபாவளிக்கு இன்னும் ஒரு வாரம்தான் இருந்தது. கோலாலம்பூரில் `லிட்டில் இண்டியா’ என்று அழைக்கப்பட்ட பிரிக்ஃபீல்ட்ஸ் பகுதியின் கடைவீதி கலகலப்பாக இருந்தது. கடைகளுக்கு வெளியே மேசைகளின்மேல் கண்கவர் வண்ணங்களில் வாழ்த்து அட்டைகள், (பட்டாசு வெடிக்க அரசாங்க அனுமதி இல்லாததால்) கேப், கம்பி மத்தாப்பு, சட்டி வாணம் போன்றவை. கடைசி நிமிட நெரிசலை வேடிக்கை பார்க்க வந்தவர்களை இரண்டு இனமாகப் பிரிக்கலாம் என்று தோன்றிது சங்கரனுக்கு. ஸாரோங் கெபாயா, குட்டைக் கவுன் அல்லது பாவாடை என்று விதவிதமாக உடுத்தியிருந்த மலாய்,


விக்கிரமாதித்தனின் கிருஷ்ணவேணி

 

 இந்தக் கதைக்கு நான் முக்கியம் என்று இப்போதைக்கு எனக்கு தோன்றவில்லை …. ஆனால்… கிருஷ்ணாவை… பின் தொடரத்தான் வேண்டும்….அவன் இன்று பாபநாசம் செல்கிறான்…. எதற்கு என்று தெரியவில்லை…. தெரிந்து கொள்ள வேண்டுமானால் அவனுக்கும் தெரியாமல் பின் தொடரத்தான் வேண்டும்… தெரிந்தால்… கத்துவான்….. கத்தினால் கதை இல்லை….. கிருஷ்ணா… ஓரளவு படித்து சமுதாயத்துக்கு தேவையான ஒரு வேளையில் இருக்கும் சமுதாயச் சிந்தனை உள்ள ஒரு குடிமகன்….. இங்கு தான் எனக்கு கொஞ்சம் சந்தேகம்….. குடிமகன்….. இந்த வார்த்தையில் கடைசி


அம்மா

 

 அம்மாவிடம் போக வேண்டும். அம்மாவைப் பார்க்க வேண்டும். அந்த அவா ஒயாத அலையாக மனதின் கரையை நோக்கி ஆர்பரிக்கிறது. அது என்பிடரி பிடித்து எப்போதும் முன்னே தள்ளிக்கொண்டு இருக்கிறது. நான் அம்மாவிடம் போகாமலும் விடலாம். நான் அங்கு போனாலும் போகாவிட்டாலும் அம்மாவைப் பொறுத்தவரையில் அது ஒன்றுதான்.போக வேண்டும் என்பது என் அவா மட்டும் அல்ல, அது தர்மீகமும் ஆகும். நான் போகாமல் விடலாம். அதில் என் சுயநலத்தைக் காவாந்து செய்யலாம். அசௌகரியத்தைக் குறைத்துக் கொள்ளலாம். நான் அம்மாவிடம்


இலையுதிர் காலத்தில் ஒருமாலை நேரம்

 

 வடக்கு லண்டன்: அவளுக்கு,தான் இறங்கவேண்டிய ஸ்ரேசனில்,ட்ரெயின் நிற்காமல் ஓடிக்கொண்டிருந்தபோதுதான்,அவள் றெயில்வே அறிவிப்பைச் சரியாகக் கேட்காமல் விட்டதின் தவறை உணர்ந்தாள். இலட்சுமி,மனதுக்குள் தன்னைத் திட்டிக் கொண்டாள். ட்ரெயினில் வரும்போது, அவளுடன் ஒன்றாக வேலை செய்யும் ஜேன் சிம்சனும், லெஸ்லி பிரவுனும் ஒன்றாகக்; கல கலவென்று பேசிக்கொண்டு வந்தார்கள். அவர்கள் இருவரும் அண்மையில் குவாத்தமாலா நாட்டுக்கு விடுமுறைக்குப் போய்வந்திருந்த அனுபவங்களைச் சொல்லிக்கொண்டு வந்தார்கள்.அவள் அதைப்பற்றி நினைத்துக் கொண்டுவந்தவள், அவர்கள் தங்கள் ஸ்ரொப்பில் இறங்கிய பின்னும்;,இலட்சுமி தான் இறங்கவேண்டிய இடம் வந்ததும்


உயிரோடு உறவாடு

 

 மருமகள் தன்னை வசை பாடுவது பருவதம் காதில் விழுகிறது. பல தடவை மகனிடம் சொல்லியும் கேட்கவில்லை என பருவதம் சற்று மனவருத்ததுடன் இருந்தாள். மகன் வீட்டிற்குள் நுழைத்தார். “நான் உன் தங்கையை பார்த்துட்டு வரேன்ப்பா. அவள பார்த்து ரொம்ப நாள் ஆச்சு. கண்ணுக்குள்ளயே இருக்கிறா” என்றாள் பருவதம். “சரி போயிட்டு வாங்கம்மா” என்றான். பருவதம் தன்னிடம் இருக்கும் சில துணிகள் எல்லாம் எடுத்துக்கொண்டு மகள் வீட்டிற்கு சென்றாள். ”வாங்கம்மா எப்படி இருக்கிங்க. அண்ணா, அண்ணி, குழந்தைகள் எல்லாம்


மதிப்பெண்கள்

 

 தன்னுடன் அலுவலகத்தில் பணி புரியும் சுந்தரத்தை வீட்டுக்கு அழைத்து வந்திருந்தார் தீனதயாளன். இருவரும் வரவேற்பறையில் அமர்ந்து அலுவலக விஷயங்களைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தார்கள். சிறிது நேரத்தில் பேச்சு குடும்ப விஷயத்துக்குத் திசை திரும்பியது. எட்டாவது படிக்கும் தன் மகன் சரியாகவே படிக்கமாட்டேன் என்கிறான் என்று குறைபட்டுக் கொண்டிருந்தார் சுந்தரம். உடனே தன் மகளைப் பற்றி பெருமையாகச் சொல்லத் தொடங்கினார் தீனதயாளன். “அஞ்சாவது படிக்கும் என் மக யாமினி படிப்பில் படு சுட்டி… எல்லா சப்ஜெக்ட்டிலும் அவ நூத்துக்கு


உயிர் விட்ட தமிழும் உறங்கும் உண்மைகளும்

 

 துக்க சஞ்சாரமான கருந்தீட்டு வாழ்க்கையின் சுவடுகளையே புறம் தள்ளி மறந்து விட்டு ஆன்மீக விழிப்பு நிலை கைகூடிய உயிர் வியாபகமாய் நிலை வாசல் கதவருகே விசுவரூபமெடுத்து வந்து நிற்கும் சுந்தரியையே வெறித்துப் பார்த்த வண்ணம் செளந்தரம் ஆச்சி , திண்ணையின் மறு கோடியில் ஒன்றும் பேசத் தோன்றாது வாயடைத்துப் போய் மெளனமாக அமர்ந்திருந்தாள் வயது அதிகமாகாவிட்டாலும் ஊரிலே அவளை எல்லோரும் அப்படித்தான் ஆச்சி என்று உரிமையோடு அழைக்கிறார்கள். மடத்தடிக்குப் போய் காய் கறி வியாபாரம் செய்து வந்த


வெஸ்ட் கோஸ்ட் எக்ஸ்பிரஸ்

 

 நானும் சந்திர சேகரும் சேலம் பிளாட்பாரம் முழுவதும் நடந்து, கும்பகோணம் டிகிரி காபி வேண்டாம் என்று முடிவெடுத்து வெளியே வந்து காத்திருந்த காரில் ஏறி அடுத்த ஒரு மணி நேரம் நாமக்கல் அடையும் வரை பேசிக்கொள்ளவே இல்லை வெஸ்ட் கோஸ்ட் எக்ஸ்ப்ரசில் போயிருக்கிறீர்களா? நல்ல நட்ட நடு மத்யானம் சென்னையில் கிளம்பி ஒரு நாள் முழுக்க விரயம் பண்ணிவிடும் வண்டி அது. ஆனால் முதல் நாள் இரவு நைட் ஷோ போயிருந்தீர்களானால் அது நல்ல ஆப்ஷன். செகண்ட்