கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: November 2015

80 கதைகள் கிடைத்துள்ளன.

எங்கிருந்தோ வந்தாள்!

 

 சுந்தரும் மீனாவும் சாங்கி ஏர் போர்ட்டுக்கு வந்திருந்தார்கள். அமெரிக்காவில் ஒரு மருத்துவக் கருத்தரங்கில் கலந்து கொண்டுவிட்டு, பத்து நாட்களுக்குப் பிறகு இன்றுதான் சிங்கப்பூர் திரும்புகிறேன். மிகவும் களைப்பாக இருந்தது. …. எனது கணவர் மரச்சமான்கள் செய்யும் பிசினசில் மிகவும் பிசியாக இருப்பவர். மகன் சுந்தர் ஒரு மல்டிநேஷனல் கம்பெனியில் டைரக்டராக இருப்பவன்; எப்போதும் கணினியும் கைத் தொலைபேசியுமாக இருப்பவன். மருமகள் மீனா, மனித வள மேம்பாட்டுத் துறையில் முதன்மை அதிகாரி….இப்படிக் குடும்பத்தில் எல்லோருமே, காலில் சக்கரம் கட்டாத


ஆத்மநாதம்

 

 “பின்னிட்டீங்க!” “ஒங்களாலேயே இன்னொரு தடவை இவ்வளவு அருமையா பாட முடியுமாங்கறது சந்தேகம்தான்!” மேடையைவிட்டு இறங்கிய காமவர்த்தனியின் கையை இழுக்காத குறையாகப் பிடித்துக் குலுக்கினார்கள் பலரும். அந்த ரசிகர்களின் முகத்திலிருந்த பரவசம் அவளையும் தொற்றிக்கொண்டது. “போதும். போதை தலைக்கேறிடப்போகுது”. யாரும் கவனிக்காத நிலையில் பக்கத்தில் நின்றிருந்த கணவன் அடிக்குரலில் சீறினான். “வீடுன்னு ஒண்ணு இருக்கிறது நெனப்பிருக்கா, இல்லியா?” அவள் தடுமாறிப்போனாள். அவன் பேசியது யார் காதிலாவது விழுந்திருக்கப்போகிறதே என்ற பதைப்பு உண்டாயிற்று. அங்கிருந்து எங்காவது ஓடிவிட வேண்டும்போல உத்வேகம்


எமிலி மெடில்டா

 

 முதன் முதலாக காதலை காதலிக்கும் பெண்ணிடம் சொல்வதற்கு பதிலாக அவளின் அப்பாவிடம் சொன்னவன் நானாகத்தான் இருப்பேன்…. அது ஒரு சனிக்கிழமை…. கண்டிப்பாக பள்ளி விடுமுறை… அவள் மட்டும்தான் வீட்டில் இருப்பாள்… அவளின் அப்பா அம்மா இருவரும் வேலைக்கு போய் விடுவார்கள்.. என்பது சமீப காலமாக அவளைப் பின் தொடர்ந்ததில் நான் தெரிந்து கொண்டவைகள்…ஏற்கனவே, போட்ட திட்டத்தின்படி.. நேற்றே லவ் கிரீடிங்க்ஸ் வாங்கி “இந்த மாதிரி …..இந்த மாதிரி…….” என்று எல்லாம் (இடது கையால்) எழுதி, பெயர் போடாமல்…


பத்திரம்

 

 செல்லம்மாளுக்கு இரை கிடைத்து விட்ட மாதிரித்தான் தோன்றியது. முகத்தில் ஒரு வார தாடியுடன் தலையைக் குனிந்த படியே அவன் வாசலில் நுழைய முற்பட்டான். கையில் ஒரு பிரபலத் துணிக்டையின் இலவசப் பை இருந்தது. அதில் துருத்திக் கொண்டு சட்டையொன்று தெரிந்தது. “ என்ன பாசஞ்சரா.. டிக்கெட்டைகாம்பிச்சுட்டு இங்க பதிவு பண்ணிக்குங்க “ அவன் முகத்து தாடியை வறக் வறக்கென்று சொறிந்தபடி செல்லம்மாளைப் பார்த்தான். ஒருவகையில் அவளின் இரண்டாம் மகன் பக்தவச்சலம் சாயல் அவனிடம் இருந்தது. குடிகாரப் பயல்.


தமிழருவி

 

 ” தமிழருவி..”.. அம்மா…எனக் கத்தியவாறு தமிழருவி வீட்டுக்குள் ஓடி வந்தாள்.சமையலறையில் கோழிக்கறியை புரட்டிக்கொண்டிருந்த வாசுகி குழந்தைக்கு ஏதோ ஆயிற்று என்று தாய்க்கு உரிய பதட்டத்தில் அரக்கப்பரக்க ஓடி வந்தாள். குட்டி மானைப்போல ஓடி வந்து தாயை கட்டிக்கொண்ட தமிழருவி தனது மருண்ட விழியில் கண்ணீர் வழிய மெல்ல மெல்ல விசும்பினாள்.மனதுக்குள் பதட்டம் தொற்றிக்கொள்ள மூளை எல்லையற்ற கற்பனைகளை சித்தரித்துக் கொண்டிருந்தது.ஓரளவு குழந்தை சமாதானம் அடையும் வரை மூச்சை பிடித்துக்கொண்டு பொறுமையாக குழந்தையின் தலையை தடவிக்கொண்டிருந்தாள் வாசுகி. மெல்ல


முளைவிட்ட விதை

 

 மொத்தமாக இன்றே கருமேகங்களை சுத்தமாக்கிட வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு களமிறங்கியிருந்த வானம். கருமை நிறத்தை குறைத்தே தீருவேன் என்று தீவிரவாதம் செய்து கொண்டிருந்த தெருவிளக்கின் ஒளியால் , மழைநீரில் குளித்த தார்ரோடு பளிங்கு போல் மின்னிக்கொண்டிருந்தது. விடாது பெய்து கொண்டிருக்கும் மழைநீர் தற்காலிக கண்ணாடியாக மாறி பின்னிருக்கும் புகழ்பெற்ற பிரெசிடென்சி கல்லூரியையும், மரங்களையும், மின் கம்பத்தையும், அதன் அருகில் உள்ள ஓய்விருக்கையையும் தரையில் பிரதிபலித்துக் கொண்டிருந்தது. ‘மழையின் வேகத்தில் கலைந்து கலைந்து ஆடிக்கொண்டிருந்த பிம்பங்களின் நடுவில்


சார்பு

 

 அலுவலகம் முடிந்து வீட்டிற்கு திரும்பிய பாஸ்கரை கோமதி உற்சாகத்துடன் எதிர் கொண்டாள். அன்று அவளுக்கு தபாலில் வந்திருந்த இண்டர்வியூவிற்கான கடிதத்தை பாஸ்கரிடம் கண்பிக்க, அவனும் படித்து சந்தோஷமடைந்தான். ஒரு பிரபலமான ஐ.டி.கம்பெனியில் கோமதியை செக்ரட்டரிக்கான நேர்முகத் தேர்விற்கு அழைத்திருந்தார்கள். மூன்று மாதங்களுக்கு முன்புதான் பாஸ்கர்-கோமதி திருமணம் நடந்தது. பதினைந்தாயிரம் ரூபாய் வாடகையில் ஒரு லட்சம் முன் பணத்துடன் வாடகைக்கு ஒரு வீட்டைப் பிடித்து பெங்களூரில் தனிக் குடித்தனம் நடத்திக் கொண்டிருப்பவர்கள். இந்த மூன்று மாத தனிக் குடித்தனத்தில்


நாஸர்

 

 வடக்கு லண்டன்;: 2000 வானத்தைப் பொத்துக் கொண்டு மழை கொட்டிக் கொண்டிருந்தது.காலணிகள் நனைந்து சதக் பொதக் என்று சப்தம் போட்டன. வாயு பகவான் வேறு, தன்பாட்டுக்கு எகிறிக் குதித்து மழைநீரை வீசியெறிந்து உடம்பை நனைத்தான். ‘ஹலோ’ குடையைச சற்று உயர்த்திக் குரல் வந்த திசையை நோக்கினால்.தனது முக்காட்டை உயர்த்தியபடி பக்கத்து வீட்டுப் பரிதா அஹமட் நின்று கொண்டிருந்தாள். உடல் நனைந்த தெப்பம். முக்காடு நனைந்த முகத்தில் பன்னீர் தெளித்தமாதிரி மழைநீர் முத்துக்கள் உருண்டன. “ஹலோ பரீதா”நான் நடந்தேன்,


ஓடிப்போன “ஹஸ்பெண்ட்’

 

 “”டேய்! தம்பு! முழங்கால், முதுகு, விலா இப்படி எல்லா இடத்திலேயும் வலி தாங்க முடியல்லைடா! நடக்கவே முடியலை!…” என்று அழமாட்டாக் குறையாகப் புலம்பினார், சென்னையில் பிரபல “காட்டரிங் ஸர்வீஸ்’ நடத்தி பிரசித்தமான கோதண்டராமன். “”டோண்ட் வொரி! அண்ணா! “சிட்டி’லே, அடையார்லே, தன் சொந்த பங்களாவிலேயே இப்பல்லாம் வைத்தியம் பார்க்கறார், உங்களுக்கு தெரிஞ்ச, அந்த “ஃபேமஸ்’ டாக்டர் நீலமேகம். அவர்ட்ட போகலாம். எல்லாம் சரியாயிடும்” என்றான் அவருடைய “அஸிஸ்டென்ட்’ தம்பு. நேரே, டாக்டர் நீலமேகத்தின் “க்ளினிக்’குக்குச் சென்ற கோதண்டராமனுக்கு,


டொமேட்டோ ஏன் தக்காளி ஆனது?

 

 பழைய சோற்றில் பாக்கெட் தயிரை ஊற்றிப் பிசைந்து சாப்பிட்டவாறு உங்களிடம் இதைப் பகிர்ந்துகொள்ளும் நேரம்… தோழி கலா, ஆகாயத்தில் பயணித்துக்கொண்டிருப்பார்; மிதந்துகொண்டிருப்பார் அல்லது தவழ்ந்துகொண்டிருப்பார். கலா அமெரிக்கா போகிறார் என்பது, மூன்று மாதங்களுக்கு முன்பே முடிவாகியிருந்தது. அவரது கணவரும் எனது நண்பருமான அர்ஜுனன் பணி நிமித்தமாக முன்பே அமெரிக்காவுக்குப் பயணித்திருந்தார். அங்கு சென்று காலூன்றிய பின் மனைவியை அழைத்துக்கொள்ளும் ஏற்பாடு அவரது வேலைத்திட்டத்தில் இருந்தது. நண்பர் அர்ஜுனனை, சில மாதங்களுக்கு முன்பாக கண்ணாடித் தடுப்புகள் மிகுந்த விமான