கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: September 2015

50 கதைகள் கிடைத்துள்ளன.

ஆறு அது ஆழமில்ல…

 

 “அம்மா- சீனி மாமா ” என்று சாரதி மறுமுனையில் இரைந்தது என் காதில் விழந்தது.ஏனோ தெரியவில்லை,சாரதி என்னை நேரிடையாக “மாமா” என்று அழைத்ததில்லை.இந்த சிறு வயதில் உறவுகள் கசந்திருக்கலாம் அவனுக்கு. “சொல்லுடா” என்றாள் அக்கா.”ஒண்ணுமில்லக்கா , சும்மா தான்” என்றேன். “ம்” என்று சிரித்தாள் அக்கா. லக்ஷ்மி அக்கா எனக்கு பெரியப்பா மகள் தான் என்றாலும் அக்கா தங்கையற்ற எனக்கு அவளிடம் சிறுவயதிலிருந்தே ஒரு ஒட்டுதல்.அக்காவுக்கும் அப்படியே.லக்ஷ்மி அக்காவுக்கு சொந்த தம்பி உண்டு.பெயர் ராஜு.அக்கா வீட்டுத்தெருவுக்கு அடுத்த


செகண்ட்ஸ்

 

 மூச்சிரைக்க காற்றைத் துரத்தினான் முகுந்தன். நின்று விடுவோமோ என்ற பதற்றத்தோடு அதிவேகமாகத் துடித்தது அவனது இதயம். கணுக்கால்களின் நரம்புகளை யாரோ கயிற்றால் கட்டி இழுப்பது போல் வலி. பற்களைக் கடித்துக் கொண்டு கோட்டை நெருங்கி விழுந்தான். பிரபஞ்சத்தின் காற்று முழுக்க அவன் உடலுக்குள் புகுந்து ஒரே நேரத்தில் வெளியேறியது போல வெப்பமாய் மூச்சு விட்டான். உடல் இரும்புப் பட்டறையின் உலை போலக் கொதித்தது. தெப்பலாக நனைந்திருந்தான். சிறிது ஆசுவாசப் படுத்திக் கொண்டு பக்ரூவை உற்றுப் பார்த்தான். பக்ரூ


வெளிச்சம்

 

 வீட்டுக்குள் நுழைந்ததும், என் மனைவி நித்யா என்னிடம் ஒரு கடிதத்தை நீட்டினாள். அது என் சித்தி எழுதியது. ரொம்ப வருடங்களுக்குப் பிறகு, சொந்தங்களிடமிருந்து எனக்கு வரும் முதல் கடிதம். விஷயம் இரத்தினச் சுருக்கமாக எழுதியிருந்தது. பிரியமுள்ள சேதுவிற்கு, நலம். எப்படி இருக்கே? போன மாதம், நான் திரும்பவும் மதுரைக்கே வந்துவிட்டேன். உன்னைய பார்க்கணும் போல இருக்கு. நேரம் கிடைக்கும்போது மருமகளையும், குழந்தைகளையும் கூட்டிக்கிட்டு வா. – சித்தி மாலா. படித்ததும் எனக்குள் ஏற்பட்ட உணர்ச்சிகளுக்கு வார்த்தையில்லை. மொபைல்


நாற்று

 

 நான்கு குறைப் பிரசவங்கள். பின்னர், சோதனைக்குழாய்வழி வயிற்றில் வளர்ந்த கருவும் மூன்றே மாதங்களில் வெளிப்பட்டு விட்டது. `தத்து எடுக்கலாம்,’ என்று அவர் சொன்னதற்கும் அவள் செவி சாய்க்கவில்லை. குழந்தை அவள் உதிரத்தில்தான் உதிக்க வேண்டுமாம். ஒருவரையும் ஏறிட்டுப் பார்க்க விரும்பாது, சுவற்றுப்புறம் திரும்பி விசும்பிக் கொண்டிருந்த ஆசைமனைவியின் முகத்தில் சிரிப்பைக் காண வேண்டுமென்றால், தமிழ்நாட்டுக்கென்ன, உலகின் எந்தக் கோடிக்கானாலும் அழைத்துப் போகலாமே என்ற யோசனை வந்தது அந்தச் செல்வந்தருக்கு. `மனசைத் தளர விடாதேம்மா. இன்னும் ஒரு வழி


மன கண்ணாடி

 

 “என்ன நான் கேட்டது நிஜம்தானா ? …பாட்டீ ! என்று தன் வேலைக்காரி லட்சுமி பாட்டியிடம் விசாரித்தாள் பவானி. “என்ன கேட்டீங்களாக்கும் .? எதையும் கண்டுகொள்ளாமல் பாத்திரத்தைப் சிங்கில் துலக்கியபடி கேட்டாள் லட்சுமிபாட்டி.’’ “உங்கள் கணவர் இறந்துவிட்டாராம், நீங்க ஆஸ்பத்திரிக்கு போய் பிணத்தை கூட பார்க்கமாட்டேன் என்று பிடிவாதமாக சொல்லிட்டீங்ளாம்’’!? “ அதுகடக்கு வுடுமா..!இருக்கும் போதே நிறைய அழுதுட்டேன் ,இனி கண்ணீர் இல்லை .. வேற ஏதாவது சொல்லுங்க………என்று ..சொன்னாள் பாட்டி .”… . பெண்ணிய எழுத்தாளர்கள்,….