கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: February 2014

97 கதைகள் கிடைத்துள்ளன.

ஆசிரியரும் மாணவனும்

 

 யன்னலினூடு தொிந்த அதி காலை வானத்தைப் பார்த்தார் சுப்ரமணியம் மாஸ்ட்டர். மெல்லிய இருட்போர்வையின் அரவணைப்பில் சுகம் கண்டுகொண்டிருந்த பூமிப் பெண்ணிற்கு உறக்கத்தை விட்டெழுவதற்கு இன்னும் மனம் வராமல் அப்படியே படுக்கையில் புரண்டு படுத்துக் கொண்டிருப்பது போல் பட்டது. விடிவெள்ளி பிரகாசத்துடன் விடிவை கட்டியம் கூறி வரவேற்றுக் கொண்டிருந்தது. ஊாில் இருந்த மட்டும் அவாிற்கு மிகவும் பிடித்தமானவை அதிகாலையில் எழுந்து கல்லுண்டாய் வெளியினூடாக நடந்து வருவதும், விடிவெள்ளியின் அழகில் மெய் மறப்பதும் தான். ‘மாஸ்ட்டர், மாஸ்ட்டர் ‘ என்று


ஒரு பிடி சோறு

 

 அவள் ஒரு விசித்திரமான பெண் என்று எனக்குத் தெரிந்திருக்கவில்லை. அவளை ஒரு பிச்சைக்காரி என்றுதான் முதலில் நினைத்தேன். அந்தப் பெண் வீட்டுக் கேற்றைத் திறந்துகொண்டு உள்ளே வந்தாள். கையில் ஒரு குழந்தை. கைப்பிடியில் ஒரு குழந்தை. அது அம்மாவின் நடைக்கு ஈடு செய்யும்படி ஓடியும் நடந்தும் வந்தது. முற்றத்தில் வந்து நின்று குரல் தந்தாள். ‘அம்மா… தாயி!” வந்த கோலத்தையும், நின்ற கோலத்தையும் பார்த்துத்தான் அன்றாடம் பிச்சைக்கு வருபவர்களில் யாராவதாக இருக்கலாமென்று எண்ணினேன். ஆனால் அந்த முகம்


காலத்தின் விளிம்பில்

 

 “பூந்தோட்டம்” என்னும் இணைய வார இதழில் நான் எழுதத் தொடங்கிய கட்டுரைகளுக்கு முதலில் எந்த வரவேற்பும் இல்லை. அத்தொடரை நிறுத்தியிருந்தாலும் எந்தவிதமான பாதகமும் இல்லை என்கிற மாதிரியான மௌனத்தை சகித்துக் கொள்ளவே முடியவில்லை. சிறிய அளவில் உருவான சலிப்பு மெல்லமெல்ல வளர்ந்து பெரிதாகி செயல்பட முடியாத அளவுக்கு நெஞ்சை அடைத்தது. எழுதுவதற்கு எனக்கும் ஓர் இடம் தேவையாக இருந்தது என்பதையும் அந்த இணைய தளத்தை நடத்தி வந்தவர் என் நண்பர் என்பதையும் தவிர அக்கட்டுரைத் தொடரைத் தொடர்ந்து


ஒரு பெண்ணாதிக்கக் கதை

 

 ரயில் புறப்பட இன்னும் ஐந்து நிமிடங்களே இருந்தன. சிக்னல் ஆனதும் பிரயாணிகளை வழிஅனுப்பவந்த உறவினர்களும் நண்பர்களும் பெட்டிகளிலிருந்து ப்ளாட்ஃபாரத்தில் இறங்கினார்கள்.பிரயாணிகள் சன்னலோரமும் கதவோரமும் குவிந்தனர். ரயில் கிளம்பிவிட்டது.கைகள் ‘டாட்டா ‘ காட்டின.ப்ளாட்ஃபாரத்தலைகள் மறையத்தொடங்கின. ரயில் வேகமெடுத்தது. பாலசுப்ரமணியமும் ரேவதியும் குழந்தை மஞ்சுவுடன் இருக்கையில் அமர்ந்தனர்.ரேவதி சன்னல் ஓரம். அவளைஒட்டி குழந்தை.அடுத்து பாலசுப்ரமணியம். அடுத்து நான். ரேவதியும் பாலசுப்ரமணியமும் பேச ஆரம்பித்துவிட்டார்கள்.குழந்தை கீழே இறங்கி இருவருக்கும் இடையில் நின்றது. ரேவதிக்கு சற்று ப் பருமனான சாீரம். குரல் மெல்லியது.


நட்பு

 

 சரஸ்வதி, அவசர அவசரமாக வெளிக்கிட்டு.. அம்மா வைத்த சாப்பாட்டுப் பெட்டியையும் எடுத்துக் கொண்டு வெளியே வந்தாள். வீட்டையும் ஒரு தரம் திரும்பிப் பார்த்தாள். வாசற்கதவின் வலத்தூணின் தலைப் பகுதியில் ‘மருது இல்லம்’ என எழுதப்பட்டிருந்தது. புதிதாய் அந்த வீட்டைக் கட்டிய போது, அம்மா தெரிவு செய்த பெயர். ‘மருது இல்லம்’ என எவர் கேட்டாலும், கூட்டி வந்து அவள் வீட்டருகே விட்டு விடுவார்கள். கிராமத்திலேயே, அந்த வீட்டுக்கு மட்டுமே ‘பெயர்’ இருந்தது. அப்பாவிற்கு மருது, யார் என