Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: September 2013

68 கதைகள் கிடைத்துள்ளன.

இடி

 

 கம்ப்யூடரில் மிக ஸ்ரத்தையாகப் பார்த்துக் கொண்டிருந்த சாந்தி அந்த அதிர்வினால் திடுக்கிட்டு நிமிர்ந்தாள். இடுப்பில் ஒரு சின்ன இடி. உதை என்றால் அப்படி ஒரு உதை அவளை அந்ததனியார் வங்கியில் வேலை செய்ய முடியாமல் வயிற்றில் இருந்த குழந்தை உதைத்தது. தலை சுற்றல் வேறு. பக்கத்து கௌண்டரில் இருந்தவரை கொஞ்சம் பார்த்துக்கச் சொல்லி விட்டு உள்ளே போய் ஒரு முறை வாந்தி எடுத்து, ஒரு புளிப்பு மிட்டாய் அடக்கியபின் கொஞ்சம் தெளிவானதஎன்ன இருந்தும் இந்தக் குழந்தை எனக்கு


பெத்தவன்

 

 “இது என் குடி தெய்வத்து மேல ஆண. சொல் மாறாது. நாளக்கி இந்த நேரத்துக்கு ஊருக்கு சேதி தெரிஞ்சிடும். இன்னிக்கி வெள்ளிக்கிழம” “கல்யாணமா நடக்கப்போவுது? நல்ல நாளு பாக்குற.” என்று ஒரு பையன் கேட்டான். சரம்சரமான கேள்விகள். பழனிக்குச் செக்கில் போட்டு ஆட்டுவது மாதிரி இருந்தது. “மூணு தவண தப்பிப்போயிடிச்சி. ஊருக்காரன ஊம்பனாண்டிப் பயன்னு எண்ணக் கூடாது. ஒம் மவ செஞ்சுகிட்டிருக்கிற காரியத்துக்கு மூணு வருசமா ஊருக்காரன் பொறுமயா இருக்கிறதுக்கு நீ நல்ல மனுசன்ங்கிறதுதான். முடியாதுன்னு ஒரு


முடிவு

 

 சுமதி வீட்டுக்குள் நுழைந்து ஒரு நிமிடம்கூட கழிந்திருக்காது. அப்போது வீட்டுக்குள் ஓடிவந்த கமலா “சந்திரன் ஒன்னெ ஒடனே ஐயனாரு கோவுலுக்கு வரச் சொன்னாரு. ரொம்ப அவசரமாம், நா அப்புறமா வரன்” என்று சொல்லிவிட்டு வேகமாக வெளியே ஓடினாள். “நின்னு நெதானமாகூட சொல்லாம ஓடுறாப் பாரு நாதாரி” என்று சுமதி சொன்னாள். சொம்பை எடுத்து அண்டாவுக்குள் விட்டாள். ஒரு சொட்டுத் தண்ணீர்கூட இல்லை என்று தெரிந்ததும் கோபத்தில் சொம்பை விட்டெறிந்தாள். “சனியன் புடிச்ச ஊட்டுல குடிக்கிறதுக்கு ஒரு வாய்த்


ஆசைகள்

 

 “எடுத்த எடுப்பிலேயா மம்பட்டிய எடுத்து வெட்டுவாங்க? காவு வாங்கிப்புடாதா? ரத்தக் காவோட வுடுமா மண்ணு? மொதல்ல கிழக்கப் பாத்து கும்புடு. போன வருசமே ஆன மயமாரி இல்லெ. கொல்ல நல்லாவும் வௌயல. இந்த வருசமாச்சும் நல்ல மய பேஞ்சி நல்லா வௌயனுமின்னு கீய வியிந்து கும்புட்டுட்டு மம்பட்டிய எடு” என்று மாரியம்மா சொன்னதும், ஒரு இலந்தை முள் செடியை வெட்டப்போன துரைசாமி மண்வெட்டியை கீழே வைத்துவிட்டு கிழக்கு முகமாக விழுந்து கும்பிட்டான். அவன் தரையில் விழுந்து கும்பிட்டதைப்


பேராசை

 

 ரயில் ஏற்றிவிடுவதற்கு செல்வமணிக்கென்று யாரும் வரவில்லை. கோகிலாவுக்கு அவளுடைய அப்பா, அம்மா, பாட்டி என்று வந்திருந்தனர். வந்திருந்தாலும் அவர்களுடைய முகத்தில் சிரிப்பில்லை. ஆனால் கோகிலா கலகலப்பாகத்தான் இருந்தாள். புருசனோடு அதுவும் முதன்முதலாக ரயிலில் போகிறாள். அதுவே அவளுக்கு மகிழ்ச்சியாக இருந்தது. அப்பா அம்மாவை பிரிந்துபோகிறோம் என்ற கவலை துளியும் அவளுடைய முகத்தில் இல்லை. செல்வமணி மாதிரியே அவளும் அடிக்கடி ரயில் வரும் திசையில் பார்த்தவாறு இருந்தாள். அவளுடைய பாட்டி முத்தம்மா ஏதோ சொன்னாள். சரி என்பது மாதிரி