கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: January 2012

582 கதைகள் கிடைத்துள்ளன.

பாவம் பக்தர்தானே!

 

 கதை ஆசிரியர்: ஜெயகாந்தன். ஊரின் நடுவே அந்தக் கோயில் இருந்தது. இருந்தாலும் சந்தடியின்றி அமைதியாக இருந்தது. கோயிலென்றால் ஒரு மைல் தூரத்துக்கு அப்பாலிருந்தே தரிசித்து ‘உயர்ந்த சிகரக் கும்பம் தெரியுது’ என்று பாடத் தகுந்த பெரிய கோபுரங்கள் ஏதும் கிடையாது. பார்த்துப் பிரமித்து நிற்காமல், சொந்தத்துடன் நம் வீட்டுக்குள் நுழைகிற உணர்வோடு அந்தக் கோயிலில் எவரும் பிரவேசிக்கலாம். பெரிய கதவுகள் அடைத்துத் தடுக்காது. கோயிலைச் சுற்றி நாலு அடி அகலத்துக்குப் பிரகாரமும் மதிலும் உண்டு. கருங்கள் தளவரிசை,


உண்மை சுடும்

 

 கதை ஆசிரியர்: ஜெயகாந்தன். அது சோமநாதனின் கண்களை உறுத்திற்று. பரமஹம்சரும் விவேகானந்தரும் இருபுறமும் இருக்க, அந்த வரிசையில் தனது படத்தையும் வைத்திருக்கும் கோலத்தை முகம் சுளித்து யோசித்தவாறு மூக்குக் கண்ணாடியை நன்றாக உயர்த்திவிட்டுக் கொண்டு எழுந்து, சுவரருகே சென்று கூர்ந்து நோக்கினார் சோமநாதன். அப்போது ஹார்லிக்ஸ் கலக்கிக் கொண்டு வர உள்ளே சென்றிருந்த அவரது மருமகள் கோதை, கையிலேந்திய கப் அண்ட் ஸாஸருடன் ஹாலுக்குள் வந்தாள். சோமநாதன் அவளைத் திரும்பிப் பார்த்தார். “இதெல்லாம் யாருடைய வேலை?” என்று


அந்தக் கோழைகள்!…

 

 கதை ஆசிரியர்: ஜெயகாந்தன். காம்பௌண்ட் கேட்டிற்கு நேரே வராந்தா விளக்கு வெளிச்சத்தில் சாய்வு நாற்காலியில் ஆள் காட்டி விரலைப் பக்க அடையாளத்திற்காக நடுவில் நுழைத்துப் பிடித்த ‘பால்ஸாக்’கின் புத்தகம் ஒரு கையிலும், இன்னொரு கையில் புகைந்து கொண்டிருக்கும் சிகரெட்டுமாய் நிமிர்ந்து உட்கார்ந்திருந்த டாக்டர் ராகவன் சாய்ந்து படுத்தான். அப்போது மணி மாலை ஏழுதான். அவன் தலைக்கு நேரே வராந்தா சுவரில் மாட்டப்பட்டிருக்கும் போர்டில் கண்டுள்ளபடி பார்த்தால் இது நோயாளிகளைச் சந்திக்க வேண்டிய நேரம்தான். நோயாளிகள் வரவில்லையென்றால் ஆஸ்பத்திரி


ஆளுகை

 

 கதை ஆசிரியர்: ஜெயகாந்தன். 1 அவன் அவளுடைய படத்துக்கு நேரே படுக்கையை விரித்து, மல்லாந்து படுத்திருந்தான். படத்துக்கும் அவனுக்கும் நடுவே விளக்கு எரிந்து கொண்டிருந்தது. அமைதியான இரவில், ஓசையிட்டவாறு சுவரிலிருந்த கடிகாரத்தில் மணி அப்போது ஒன்றேகால் . . அவன் விழிகள் அந்தப் படத்தையே வெறித்துக் கொண்டிருக்க, அவன் உதடுகளில் புன்னகையும் அவளோடு பேசுகின்ற தனி மொழிகளும் மௌனமாக நௌ¤ந்துகொண்டிருந்தன. அவனுக்கு அவளே நினைவாகி, அந்தப் படமே அவளாகிப் பதினைந்து நாட்களாகின்றன. அவளது இழப்பின் சோக நினைவுகளுடன்


ஹீரோவுக்கு ஒரு ஹீரோயின்

 

 கதை ஆசிரியர்: ஜெயகாந்தன். கண்ணாடியின் முன்னே நின்று படிய வாரிய கிராப்பின்மேல் சீப்பின் பின்புறத்தை வைத்து அழுத்தி அழுத்தி வளைவுகள் ஏற்படுத்தும் முயற்சியிலேயே கடந்த பதினைந்து நிமிஷமாய் முனைந்திருக்கிறான் சீதாராமன். ஹேர் ஆயில், ஸ்னோ, பவுடர், சென்ட் ஆகியவற்றின் கலவை மணம் ஒரு நெடியாய்க் கமழ்கிறது அந்த அறையில். கண்ணாடிக்குப் பக்கத்தில் அந்த சிறிய மேஜையின்மேல் அவனது அலங்கார சாதனங்கள் நிறைந்து கிடக்கின்றன. அவற்றின் நடுவே அவனது ‘ஷேவிங் ஸெட்’ சுத்தம் செய்யப்படாமல் அப்படியே சோப்பு நுரையுடன்


பிணக்கு

 

 கதை ஆசிரியர்: ஜெயகாந்தன். மெட்டியின் சப்தம் ‘டக் டக்’கென்று ஒலித்தது. வளையொலி கலகலத்தது. கூடத்தில் எட்டு வயதுப் பேரன் முத்து வலது புறமும், நான்கு வயதுப் பேத்தி விஜி இடது புறமும் நித்திரையில் ஆழ்ந்திருக்க நடுவே படுத்திருந்த கைலாசம் பிள்ளை தலையை உயர்த்திப் பார்த்தார். கையில் பால் தம்ளருடன் மருமகள் சரஸா மகனின் படுக்கையறைக்குள் நுழைவது தெரிந்தது. தன்மீது விழுந்த பார்வையால் சரஸாவின் தலை கவிழ்ந்தது! – கிழவருக்குக் கொஞ்சம் குறும்புதான். கைலாசம் பிள்ளையின் பார்வை அவளைப்


நந்தவனத்தில் ஓர் ஆண்டி

 

 தூரத்துப் பார்வைக்கு அது ஒரு நந்தவனம் போல் தோற்றமளிக்கும். உண்மையில் அது ஒரு நந்தவனம் அல்ல; இடுகாடு! பச்சைக் கொடிகள் பற்றிப் படர்ந்த காம்பவுண்ட் சுவரால் நாற்புறமும் சுற்றி வளைக்கப்பட்ட அந்த இடுகாட்டின் மேற்கு மூலையில், பனை ஓலைகளால் வேயப்பட்ட சின்னஞ்சிறு குடிசை ஒன்று இருக்கிறது. அதில் தான் ஆண்டி வசிக்கிறான். குடிசைக்கு முன்னே வேப்ப மரக் கிளையில் கட்டித் தொங்கும் தூளியில் அவன் செல்ல மகன் இருளன் சுக நித்திரை புரிகிறான். அதோ அவன் மனைவி


நீ இன்னா ஸார் சொல்றே?

 

 கதை ஆசிரியர்: ஜெயகாந்தன். நான் ஒண்ணும் ‘லூஸ்’ இல்லே. அதுக்காக என்னெ நான் புத்திசாலின்னு சொல்லிக்கறதா இன்னா… எனக்குக் குடுத்திருக்கிற வேலையை ஒழுங்காகத்தான் செய்யிறேன். அதிலே ஒரு சின்ன மிஷ்டேக் சொல்ல முடியாது. எங்க முதலாளிக்கு மானேஜர் ஸாருக்கு எல்லாருக்கும் என்கிட்டே ரொம்பப் பிரியம். அதான் ஸார்… நவஜோதி ஓட்டல்னு சொன்னா தெரியாதவங்க யாரு? அந்த ஓட்டல்லே மூணாவது மாடியிலே நான் இருக்கேன்… பேரு பாண்டியன். சும்மா ரோட்டுக்கா போய்க்கிட்டிருக்கும் போதே அப்படிப் பார்த்தா நா உங்க


சுயதரிசனம்

 

 அந்த வாரப் பத்திரிகையில் தனக்கு உதவி ஆசிரியர் உத்தியோகம் என்று கௌரவமாகச் சொல்லிக் கொண்டு – ஒவ்வொரு நாளும் வந்து குவியும் கதைகளுக்கெல்லாம் அனுப்பியவர்களின் விலாசங்களைப் பதிவு செய்தும், பிரசுரிக்காமல் தள்ளப்பட்ட கதைகளை ‘வருந்துகிறோம்’ ஸ்டாம்பு குத்தித் திருப்பி அனுப்பியும் – விலாசமெழுதிக் கொண்டிருப்பதையே பணியாகக் கொண்டுள்ள சிவராமனுக்கு, இன்று அவன் பெயருக்கே ஒரு கடிதம் வந்திருக்கிறது. அந்த நீளக் கவரின் மீது ‘சிவராமன், உதவி ஆசிரியர்’ என்று குறிப்பிடப்பட்டிருப்பதைக் கண்டதில் அவனுக்குச் சற்றுப் பெருமிதம்தான்! அந்த


அக்ரஹாரத்துப் பூனை

 

 எங்கள் ஊர் ரொம்ப அழகான ஊர். எங்கள் அக்ரஹாரத் தெரு ரொம்ப அழகானது. எங்கள் அக்ரஹாரத்து மனிதர்களும் ரொம்ப அழகானவர்கள். அழகு என்றால் நீங்கள் என்னவென்று நினைத்துக் கொண்டிருக்கிறீர்களோ எனக்குத் தெரியாது. என்னைப் பொறுத்தவரை ஒன்றின் நினைவே சுகமளிக்கிறது என்றால் அது ரொம்ப அழகாகத்தானிருக்க வேண்டும். முப்பத்தைந்து வருஷங்களுக்கு முன்னால் அங்கே, அந்தத் தெருவில் ஓர் பழங்காலத்து வீட்டின் கர்ப்பக் கிருகம் மாதிரி இருளடைந்த அறையில் பிறந்து, அந்தத் தெருப் புழுதியிலே விளையாடி, அந்த மனிதர்களின் அன்புக்கும்