ஆப்புச் சின்னம்

4
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: August 16, 2018
பார்வையிட்டோர்: 20,732 
 

ஆதம்; “அரசியல் விமர்சனத்துக்கு தன்னை மிஞ்சிட ஊருக்குள் ஒருத்தனுமே இல்லை!” எனும் கர்வத்தோடு அடிக்கடி கண்ணாடியில் தன் முகத்தை பார்த்து பெருமை பட்டுக் கொள்வான்.

‘டொனால்டு ட்ரம்ப் எப்படி ஜெயித்தார், ஒபாமா எப்படிபட்டவர்!? ரஜினி அரசியலில் குதிப்பாரா?’ என்று சர்வதேச அரசியலையும் அவன் விட்டு வைக்கவில்லை… அவிழ்த்து விடும் புளுகு மூட்டைகளை நிஜமென்று நம்பிக்கொண்ட ஒரு ரசிகர் கூட்டமே மன்றமாக மாறி ஆதத்துக்காக கூடியது .

வேலை வெட்டியற்ற அந்த கூட்டம் ஆதமுடைய, வீட்டின் முன்புள்ள ஆலமரத்தின் கீழ், ஆதத்தோடு கூடி ‘சுற்றிவரும் பொல்டிக்ஸ்’ என அவன் பேசுவதை வேடிக்கை பார்ப்பது வாடிக்கையாகி வந்தது.

வழமைபோன்று ஒருநாள் ‘வரும் பாராளுமன்ற தேர்தல்’ எனும் டாப்பிக்கில் “”ஒரே பார்வையில்”” என ஆதம் தொகுத்து வழங்க – பப்பரப்பானு வாயை பிளந்து அவனது ரசிகர் கூட்டம் வேடிக்கை பார்த்து கேட்டுக் கொண்டிருந்தது.

இடை நடுவில் ஆதமுடைய வெறி புடிச்ச ரசிகன் ஒருத்தன் “தலைவரே உங்களுக்கு இருக்கும் அரசியல் ஞானத்துக்கு நீங்க ஏன் சுயேட்சையாக போட்டியிடக்கூடாது!?” என அரசியல் ஆசையை தூண்டிவிட்டான். அவ்வளவுதான். ஆதமும் ‘இதுதான் சந்தர்ப்பம் என்று, “இனி நாமும் அரசியலில் குதிச்சிட வேண்டியதுதான்” என்று முடிவு செய்தான்.

ஊருக்குள் நடக்கும் சடங்கு சம்பிரதாயங்களில் ஆதம், முன்னின்று பஞ்சாயத் பண்ணுவதால் தனக்கும், மக்கள் செல்வாக்கு அதிகமாக இருப்பதாக எண்ணிக்கொண்டான்.

மறுநாள் அவனுடைய, ரசிகர்கள் அனைவரையும் அழைத்து தனது வீட்டிலயே மீட்டிங் ஒன்றையும் போட்டு, தான் தேர்தலில் போட்டியிடப் போவதாக அறிவித்தான் ஆதம்.

“அது சரி தேர்தல் பிரச்சாரச் செலவுக்கு என்ன வழி தல?” என ஒருத்தன் கேள்விதை தொடுத்தான். அதற்கு ஆதம் “காணியொன்று இருக்கு எவனுக்காவது வித்துப்போட்டு கிடைக்கும் பணத்தில் செலவு பண்ணுவோம்… நான்தான் ஜெயிச்சு அமைச்சராகிடுவேன்னே! அப்புறம் பண்ணப் போற செலவெல்லாம் ஒரு மாசத்துக்குள்ளே ஆட்டையை போட்டு சமாளிச்சிடுவேன்” என்று தனனம்பிக்கைக்கே தலை சுத்துமளவுக்கு கூறினான்.

தேர்தலும் நெருங்கி ஊரெல்லாம் கலை கட்டி நொமிநேஷன் தாக்கலும் இடம்பெற்றுக்கொண்டிருந்தது. ஆதமுக்கு சுயேட்சை சின்னமாக ‘ஆப்பு’! சின்னம் கிடைக்க. “ஆரம்பமே ஆப்பு தலைவரே” என்று கூட்டத்தின் மறைவில் ஒருவன் கூவிவிட்டு மெதுவாக குந்திக்கொண்டான்.
“யாருடா அது…? அடேய் சாப்பு எல்லா அரசியல்வாதிகளுக்கும் இந்த ஆதம் வைக்கப்போரான்டா ஆப்பு” என பஞ்ச் டயாலாக் ஒன்றை போட்டு பாஷிட்டிவோடு தன்னுடைய அரசியல் பயணத்தை ஆரம்பித்தான் ஆதம் .

தன் போராளிகளை கூட்டிக்கொண்டு ஊரு ஊராய் பிச்சை எடுக்காத குறையாக தேர்தல் பிரச்சாரம் பண்ணத் தொடங்கினான் ஆதம்.

தேர்தலும் சூடு பிடிக்க!,
மறு பக்கம் காணி விற்ற பணத்தில் பரோட்டா திண்டே காலி பண்ணத் தொடங்கினார்கள் ஆப்பு சின்னத்தின் போராளிகள் .

‘காசெல்லாம் கரையுதே’னு ஒன்றும் புரியாமல் குழப்பத்தில் இருந்த ஆதமுக்கு, தேர்தல் நெருங்கியதும் பிரஷரில் வாய்க்கு வந்ததெல்லாம் வண்ட வண்டயாக தனது வெற்றிக்கு பின் செய்ய இருக்கும் சேவை என்ற கொள்கை விபரத்தை துண்டுப் பிரசுரமாக வெளியிட்டான்.

#வாரம் ஒருமுறை இலவசமாக ஒவ்வொரு குடும்பத்துக்கும் பிரியாணி வழங்கப்படும்.
#போதை வஸ்துக்கு அடிமையானவர்களை ஊர் ஊராய் சென்று கண்டுபிடித்து அடி வழங்கப்படும் .
#வெளிநாட்டு வேலைவாய்ப்பை நிறுத்திவிட்டு எல்லோரையும் வரவழைத்து வேலை கேட்டு ஆர்ப்பாட்டம் பண்ணப்படும்.
#வேலையில்லா பட்டதாரிகளுக்கு ரிட்டயர்மெண்ட் வழங்க்கப்படும். இப்படி கிறுக்குத் தனமான பல கொள்கைகள் அந்த துண்டுப் பிரசுரத்தில் இடம்பெற்றிருந்தன.

தேர்தல் பிரச்சாரம் இறுதி நாளை எட்டியதும் கையில் இருந்த மீதி பணத்தில் இருபது சைக்கிள்களை வாங்கி போராளிகள் இருபது பேரை பிடித்து கொடுத்து ஓட்டுக்கு வீடு வீடாகச் சென்று ‘ஆப்புக்கு ஓட்டுப் போட்டா வீட்டுக்கு தங்க காப்புனு’ புரளி ஒன்றை கிளப்பி விடுமாறு சொல்லி அனுப்பி வைத்தான் ஆதம்.

தேர்தலும் நடந்துமுடிந்தது. முடிவுகளுக்காக போராளிகளோடு காத்துக்கொண்டிருந்த ஆதத்துக்கு அதிர்ச்சிகரமான செய்தி ஒன்று போராளி ஒருத்தனின் அலரல்ளோடு வந்து சேர்ந்தது…

“தலைவரே நாம மோசம் போய்ட்டோம்”னு அவன் கத்தியபடி
ஆதத்தை நோக்கி ஓடி வந்தான். “என்னடா நடந்தது சொல்லுடா கேனப்பயல” என்று அவனுக்கு அரை ஒன்றை விட்டு கேட்டான் ஆதம்.
“ஆப்புனு நினச்சி பக்கத்துலிருந்த ஆனி சின்னத்துக்கு எல்லாப் பையளுங்கம் ஓட்டு போட்டு மொத்தமா ஆப்படிச்சுவுட்டானுங்க தலைவேர” என அழுதுகொண்டே கூறினான் அவன்.

அப்போதுதான் , ஆதம் ஓட்டு பேப்பர் ஒன்றை வாங்கி அவன் கண்ணருகே கொண்டுவந்து நீண்ட நேரமாக உத்துப் பார்த்தான். “அடடா நானும் இந்த ஆனிக்குதானே போட்டுத் தொலைச்சேன்… வெளியே தெரிஞ்சா காரித் துப்பாவாய்களே” என்று மனதுக்குள் புலம்பியபடி எதுவுமே புரியாமல் திகைத்து போய் நின்றான் ஆதம்.

ஒட்டுமொத்த இறுதி முடிவுகளும் வெளியாகியது, ஆதத்துக்கு கிடைத்த மொத்த ஓட்டு எண்ணிக்கை வெரும் ஐந்து மட்டுமே!.

இதை அறிந்த போராளிகள் விழுந்து விழுந்து சிரித்தானர். இதனால் காணியை விற்று நடுத்தெருவில் வந்த ஆதம் கடுப்பாகிபோக, போராளிகளுக்கு கொடுத்த இருபது சைக்கிள்களையும் பிடிங்கிக்கொண்டு எல்லோரையும் அடித்து விரட்டியதோடு அன்றோடு சங்கத்தையும் கலைத்துவிட்டான்.

சில மாதங்களுக்கு பிறகு…

“”இங்கே டூரிஸ்ட்களுக்கு தேவையான சைக்கிள்கள் வாடகைக்கு விடப்படும்”””. அதன் அருகில் “”அரசியல் பேசாக்கூடாது””னு ஒரு போடும் தொங்கியது.
அதன் மேல் ‘”ஆதம் பஞ்சர்க் கடை'” என கொட்டை எழுத்தில் எழுதப்பட்டிருந்தது …!.

Print Friendly, PDF & Email

4 thoughts on “ஆப்புச் சின்னம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *