சின்னதா இருக்கப்பவே திருத்திக்கனும்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: January 18, 2012
பார்வையிட்டோர்: 7,187 
 

ஒரு ஊர்ல ரொம்ப குறும்பு பண்ணீட்டு இருந்த ஒரு பையனை திருத்த நினைச்ச அவனோட அப்பா, அந்த ஊர்ல இருந்த தாத்தா ஒருவர் கிட்ட சொன்னார். ” இவன ரொம்ப சோம்பேரி. என்ன சொன்னாலும் சில பழக்க வழக்கங்களை மாத்த மாட்டேங்குறான். நீங்க தான் அவன திருத்தனும்” னு சொன்னார்.

தாத்தா அவனை ஒரு காட்டுக்கு கூப்புடுட்டு போனார். அங்க இருந்த ஒரு குட்டி செடிய பிடுங்க சொன்னார். உடனே ரொம்ப ஈசியா பிடிங்கிட்டான்.

அப்புறம் கொஞ்சம் பெரிய செடிய பிடுங்க சொன்னார். கொஞ்ச முயற்சி பண்ணி பிடுங்கினான்.

இன்னும் பெரிய புதர் மாதிரி இருந்ததை பிடுங்க சொன்னப்போ ரொம்ப கஷ்டப்பட்டு பிடுங்கினான். அதுக்குள்ள அவன் ரொம்ப களைப்பா ஆயிட்டான்.

அப்புறம் ஒரு பெரிய மரத்தை காட்டி, அதை பிடுங்க சொன்னார். ஆனா அவனால முடியலை. என்னால முடியாது அப்படீன்னு சொல்லிட்டான்.

தாத்தா சொன்னார், ” இது பாரு, இப்படித்தான் நீ சின்ன பையனா இருக்கப்பவே உன்கிட்ட இருக்குற சோம்பலையும், சில கெட்ட பழக்க வழக்கங்களையும் மாத்திக்கனும். பெரியவனான்னா அது கிட்ட இருந்து விலகறது ரொம்ப கஷ்டம். விலகவும் முடியாது. உங்க அப்பா சொல்ற மாதிரி கேட்டு நடந்தேன்னா, நீ நல்லா இருப்பே” னு சொன்னார்.

பையனும் அவங்க அப்பா சொன்ன மாதிரி நல்லபடியா நடந்து வாழ்கையில பெரிய ஆளா ஆயிட்டான்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *