கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: June 30, 2022
பார்வையிட்டோர்: 5,639 
 

நம்பிநாதன் ஆபிஸ் நாற்காலியில் கம்பிரமாக உட்கார்ந்து இருந்தார்,கம்பனி உரிமையாளருக்கான எல்லா தகுதிகளும் அவரிடம் இருக்கு என்று நினைக்க வைக்கும் தோற்றம் அவருடையது,உயரம்,மாநிறம்,உடல் பயிற்சி செய்யாத உடல் எடை,கண்களின் ஊடுருவும் தன்மை,பார்ப்பதற்கு மற்றவர்கள் பயப்படுத்தும் தோற்றம்,எதிரில் நிற்க கூட சிலர் தயங்குவார்கள்,கரடுமுரடான தொண்டையில் பேசும் ஆங்கிலம் கூட கத்துகின்ற மாதிரியே இருக்கும் மற்றவர்களுக்கு,அந்த பயத்தில் நடுங்கி தான் போவார்கள் அனைவரும்,அவருக்கு கீழ் வேலை செய்பவர்கள் அவரை கண்டால் கப்சுப் என்று அடங்கிவிடுவார்கள்,அவர் ஆபிஸில் வந்து உட்கார்ந்தால்,ஒரு சின்ன சத்தம் கூட இருக்காது,மூச்சி விடுவதற்கே சிரம்மாக இருப்பது போல் இருக்கும் வேலை செய்பவர்களுக்கு,எந்த நேரத்தில் யாரை கூப்பிட்டு எதை கேட்ப்பார் என்ற பயத்தில் அனைவரும் அமைதியாக உட்கார்ந்து வேலைகளைப் பார்ப்பார்கள்

நம்பிநாதன் சாதாரண குடும்பத்தில் பிறந்தவர்,தந்தை மோகனசுந்தரம் தனியார் நிறுவனத்தில் கணக்காளராக வேலை செய்தவர்,தனலட்சுமியை திருமணம் செய்து இரண்டு பிள்ளைகள்,மூத்த மகள் நகுலேஷ்வரி,இரண்டாவது மகன் நம்பிநாதன்,இருவரும் நன்றாகவே படித்தார்கள்,பட்டப்படிப்பை முடித்தவுடன் நகுலேஷ்வரி ஒரு கம்பனியில் வேலைக்கு சேர்ந்து விட்டாள்,நம்பிநாதனுக்கு தனியாக தொழில் தொடங்க வேண்டும் என்று ஆசை,மோகனசுந்தரம் மகனை முதலில் வேலைக்குப் போகச் சொன்னார்,ஓர் இடத்தில் போய் நாங்கள் வேலை செய்யும் போது தான் அங்குள்ள பிரச்சினைகளை எப்படி சமாளிப்பது,எப்படி மற்றவர்களுடன் நடந்துக் கொள்வது இன்னும் பல விடயங்களை தெரிந்துக் கொள்ள உனக்கு சந்தர்ப்பங்கள் அமையும்,உடனே எந்த தொழிலையும் ஆரம்பிக்க முடியாது,அப்படி ஆரம்பிக்கும் போது உனக்கு எதுவும் தெரியாமல் இருக்க கூடாது,அத்தனை விடயங்களும் உனக்கு அத்துப்பொடியாக இருக்க வேண்டும்,தனியாக இறங்கி வேலை செய்யக் கூடியதாக இருக்கனும்,அது மட்டும் வேலைக்கு போ என்று ஆலோசனை வழங்கியவர் அவர்

அதன் படியே நம்பிநாதன் ஒரு கம்பனியில் வேலைக்கு சேர்ந்தார்,ஆடை தொழிற்சாலையில் இயந்திரங்கள் பழுதடைந்து விட்டால்,அதை சரி பார்த்து திருத்தி கொடுக்கவேண்டும்,இன்ஜினியரிங் படிப்பை முடித்திருந்ததால்,நம்பிநாதன் அந்த வேலையை தேர்ந்தெடுத்தார்,மெக்கேனிக் இருந்தார்கள் இயந்திரத்தில் என்ன கோளாறு என்று கண்டுப் பிடித்து மெக்கேனிக்கிடம் சொன்னால்,அவர்கள் கலட்டி செய்து விடுவார்கள் சில நேரம் நம்பிநாதனும் கலட்டி பூட்டுவதற்கும் உதவிகள் செய்வார்,நாங்கள் செய்கின்றோம் என்று அவர்கள் சொன்னாலும்,பரவாயில்லை நானும் செய்கின்றேன் என்று அவரும் சேர்ந்து செய்வது மற்றவர்களுக்கு ஆச்சிரியமாக இருக்கும்,இது நாள் மட்டும் இன்ஜினியர்கள் பல பேர் வந்து போய் இருக்கார்கள்,யாரும் குனிந்து நிமிர்ந்தது கூட இல்லை,நின்றப்படியே மற்றவர்களுக்கு அதிகாரமாக வேலைகளை சொல்வது தான் வழக்கம்,முதல் முதலாக நம்பிநாதன் இறங்கி வேலை செய்வது அனைவருக்கும் வியப்பாக தான் இருந்தது,முதல் தயங்கியவர்கள் பிறகு அவர்களே கொஞ்சம் உதவி செய்யுங்கள் சார் எங்களுக்கு இதை எப்படி பூட்டுவது என்று தெரியவில்லை என்று வந்து நிற்பார்கள் அப்படி வேலைகள் பழகியவர் நம்பிநாதன்

இரண்டு வருடங்களில் அவர் வேலையை விட்டு விட்டார்,அவர்கள் வாழ்ந்த வீட்டில் சிறியதொரு இடத்தில் பழுதடைந்த இயந்திரங்கள் பழுது பார்த்து தரப்படும் என்று பலகையை மாட்டி விட்டு முன் அனுபவமுள்ள இரண்டு ஆட்களை மட்டும் வேலைக்கு வைத்துக் கொண்டு ஆரம்பித்தது தான் சுந்தரம்ஸ் கம்பனி தற்போது வளர்ந்து நிற்கிறது நூறு தொழில்ளாளர்களுக்கு மேல் வேலை செய்யும் இடமாக மாறியுள்ளது,ஆரம்ப காலத்தில் நம்பிநாதனே இயந்திரங்களை கலட்டி பழுதுப் பார்த்து இரண்டு வேலையாட்கள் உதவியுடன் பூட்டிவிடுவார்,அவர் அப்படி ஆரம்பித்த ஆரம்ப காலத்தில் வேலைகள் குறைவாகவே வந்தது,ஆனால் அவரின் வேலைகள் தரமானதாக இருந்ததால் அவரிடம் கொடுத்தால் இயந்திரம் நன்றாக வேலை செய்யும் என்ற நம்பிக்கையில் அவரிடம் கொடுக்க ஆரம்பித்தார்கள்,சிறிது சிறிதாக முன்னேற்றம் அடைந்த நம்பிநாதன் இயந்திர உதிரி பாகங்களை செய்து விற்பனை செய்வதிலும்,புதிய இயந்திரங்களை உற்பத்தி செய்வதிலும் தனது உழைப்பையும் புத்திகூர்மையையும் போட்டதால் தரமான ஒரு கம்பனியாக இந்த இருபத்து ஐந்து ஆண்டில் வளர்ந்து தற்போது கொடிகட்டி பறக்கிறது என்று தான் சொல்ல வேண்டும் சுந்தரம்ஸ் கம்பனி

அக்கா நகுலேஷ்வரி நெசவு தொழிற்சாலையில் இரண்டு வருடமாக வேலை செய்யும் போது அந்த கம்பனி உரிமையாளர் இராதாகிருஷனின் மகன் பிரதீபனுக்கு நகுலேஷ்வரியை பிடித்துப் போக,முறைப்படி பெண் கேட்டு வந்தார்கள்,மோகனசுந்தரத்திற்கு அவர்கள் குடும்பத்தை பிடித்திருந்தது உடனே திருமணத்தை செய்து வைத்து விட்டார்கள்,நம்பிநாதன் முன்னேற முன்னேற பல கம்பனி உரிமையாளர்கள் தங்கள் மகள்களை நம்பிநாதனுக்கு திருமணம் செய்து வைக்க ஆசைப்பட்டு முயற்சியும் செய்துப் பார்த்தார்கள்,ஆனால் நம்பிநாதனோ சாதாரண குடும்பத்தில் இருந்து பெண் பார்த்தால் போதும் என்று கூறிவிட்டார் தனலட்சுமியும் மோகனசுந்தரமும் தேடிப் பிடித்த பெண் தான் வைதேகி ஓரளவிற்கு படித்திருந்தாள் அன்பான அடக்கமான பொண்ணு அதிர்ந்து கூட பேச தெரியாத அப்பாவி பார்க்க அழகாக தான் இருந்தாள் நம்பிநாதனுக்கும் பிடித்திருந்தது திருமணம் செய்து கொண்டார்,அவர் மனைவியுடன் சந்தோஷமாக தான் இது நாள் மட்டும் வாழ்கின்றார் வெளியில் தான் அவர் அப்படி இருப்பார் வீட்டில் எப்போதும் குழந்தை தனமாக தான் இருப்பார் வைதேகியை அதட்டி கூட கூப்பிட மாட்டார் அதனாலையே வைதேகிக்கு நம்பிநாதனை அவ்வளவு பிடிக்கும்

அவர் எது சொன்னாலும் மறுவார்த்தை அவள் பேசமாட்டாள் இரண்டு குழந்தைகள் மூத்தவன் அகிலேஷ் தற்போது இன்ஜினியரிங் கடைசி ஆண்டு படித்துக் கொண்டு இருக்கான் மகள் அபிலாஷா சட்டம் படித்துக் கொண்டு இருக்காள் இரண்டு பேரும் எந்த ஆடம்பரமும் இல்லாமல் வளர்ந்து இருக்கார்கள் அப்பா கம்பனி வைத்திருந்தாலும் பிள்ளைகள் சாதாரண குடும்பத்தில் பிறந்தவர்கள் என்பதுப் போல் தான் எப்போதும் இருப்பார்கள் தாத்தா பாட்டி கண்மூடும் மட்டும் இரண்டு பேரக் குழந்தைகளையும் அப்படித் தான் பார்த்துக் கொண்டார்கள்,இவர்களும் தாத்தா பாட்டியுடன் மரியாதையாக நடந்துக் கொண்டார்கள் வைதேகி அழகாக குடும்பத்தை நடத்திக் கொண்டு இருக்கிறாள் நம்பிநாதனை எதற்கும் தொல்லை படுத்துவது இல்லை அவராக விருப்பபட்டு எங்கும் கூட்டிக் கொண்டுப் போனால் போய் வருவார்கள்,இல்லை என்றால் அமைதியா இருப்பார்கள் எப்போதும் அது வேண்டும் இது வேண்டும் என்று வாய் திறந்து கேட்க்காத மனைவி வைதேகி,நம்பிநாதன் அப்பா அம்மா இல்லாமல் போனப் போது கொஞ்சம் சோர்ந்து தான் போனார் மனைவியின் ஆறுதலான பேச்சி,அன்பான கவனிப்பு அவரால் கூடிய சீக்கிரம் அந்த கவலையில் இருந்து விடுப்பட முடிந்தது,வீட்டில் அன்பாக அமைதியாக இருக்கும் நம்பிநாதன் கம்பனி வந்து உட்கார்ந்தப் பிறகு வைதேகி கூட போன பேச தயங்குவாள் அவசரம் என்றால் மட்டும் விஷயத்தை கூறிவிட்டு அவசரமாக வைத்து விடுவாள் அவள்

கம்பனி வந்து உட்கார்ந்தால் அவர் நினைத்த வேலைகள் சரியாக முடியவில்லை என்றால் அவருக்கு அப்படி தான் கோபம் வரும்,சரியான நேரத்துற்கு வேலைக்கு முடிய வேண்டும் என்று நினைப்பவர் நம்பிநாதன்,வேலையாட்கள் ஒரு ஐந்து நிமிடம் தாமதமாக வந்தால் கூட அவருக்கு பிடிக்காது,அவர் யோசிப்பது எல்லாம் பத்து பேர் ஐந்து நிமிடம் தாமதமாக வந்தால் ஐம்பது நிமிட வேலை தாமதமாகும் நேரம் பொன்னானது அதை வீண்ணடிக்க கூடாது வேர்வை சிந்தி உழைப்வர்களுக்கு மனதார சந்தோஷமாக சம்பளத்தை உயர்த்தி கொடுக்கலாம் கடமைக்காக வேலை செய்பவர்களுக்கு அதை செய்ய முடியாது,காக்கா பிடிப்பது எல்லாம் அவரிடம் செல்லுப்படியாகாது,அங்கு வேலை செய்யும் அத்தனை பேரையும் யார் யார் எப்படி வேலை செய்வார்கள் என்று நன்கு அறிந்து வைத்திருக்கார் அவர்,பழுதடைந்த இயந்திரத்தை பழுது பார்த்து சொன்ன திகதியில் அந்த கம்பனியில் போய் பூட்டி கொடுத்து விட்டும் வந்து விடுவார்கள் அது ஒரு நாள் கூட தாமதம் ஆகாது அதனால் தான் கம்பனி வந்து உட்கார்ந்தால் இவ்வளவு டென்ஷன் நம்பிநாதனுக்கு,மேல் தளத்தில் ஆபிஸ் கீழ் தளத்தில் இயந்திரங்களை செய்யும் இடமாக அமைந்து இருந்தது அவர் கீழே இறங்கி போகும் போதே அவ்வளவையும் கவனித்து விடுவார் யார் எதிலும் பிழை விட்டால் கூட அவருக்கு தெரியும் எப்படி இவருக்கு மட்டும் கடவுள் இப்படி ஒரு கண்ணை கொடுத்தான் என்று மற்றவர்கள் சில நேரம் மனதில் திட்டியும் கொள்வார்கள் நம்பிநாதனுக்கு அவர் அப்பா அடிக்கடி சொல்வார் உன் கண் எல்லா பக்கமும் எந்த நேரமும் வேலை செய்யனும் ஒரு விடயத்தை நன்றாக மனதில் உள் வாங்க வேண்டும் என்றால் உன் கண்கள் எதையாவது தேடிக் கொண்டே இருக்கனும் என்பார் அந்த பழக்கம் நம்பி நாதனுக்கு

ஒரு கம்பனி நடத்துவது என்பது சாதாரண விடயம் இல்லை பணம் சம்பாதிக்கும் நோக்கில் ஒரு கம்பனியை ஆரம்பிப்பதற்கும் என் கம்பனி தரமானதாக இருக்கனும் என்று கம்பனி ஆரம்பிப்பதற்கும் வித்தியாசம் இருக்கு நம்பி நாதன் அவர் கம்பனி தரமானதாகவும் வேலைகள் நேர்த்தியாகவும் இருக்க வேண்டும் என்பதற்காகவே உழைத்தவர் ஒரு சிறு தவறு கூட நடந்து விடக் கூடாது என்பதில் மிகவும் கவனமாக இருப்பார் வேலையாட்கள் வேலை செய்யும் போது என்ன தான் மேற்பார்வையாளர்களை வேலைக்கு நியமித்து இருந்தாலும்,நம்பிநாதன் ஒரு தடவைக்கு இரண்டு தடவைகள் நோட்டம் விட்டு விடுவார் செய்த இயந்திரத்தை வாகனத்தில் ஏற்றி கொண்டு போய் கொடுத்த கம்பனியில் பூட்டி ஒழுங்காக வேலை செய்கின்றதா என்பதை நம்பிநாதனிடம் தெரிவிக்க வேண்டும் அங்கு வேலை செய்யும் ஆட்கள்,அதில் ஏதாவது பிரச்சினை என்றால் மட்டும் உடனே தனது வாகனத்தை எடுத்துக் கொண்டு நம்பிநாதனே அந்த கம்பனிக்கு போய் ஏன் எதனால் என்று கண்டு பிடித்து அதற்கு ஏற்ற மாதிரி செய்து இயந்திரம் வேலை செய்யும் மட்டும் அங்கு இருந்து முடித்துக் கொடுத்து விட்டு வருவார் இரண்டு இன்ஜீனியர்கள் வேலைக்கு இருக்கார்கள் ஆனாலும் நம்பிநாதன் சில வேலைகளுக்கு கட்டாயமாக போக வேண்டி ஏற்படும் அதனால் நம்பிநாதன் மீது அனைவரும் மதிப்பும் மரியாதையும் வைத்து இருந்தார்கள்,நம்பி நாதன் யாரும் ஒழுங்காக வேலை செய்யவில்லை என்றால் மட்டுமே கத்துவார் மற்றப்படி கோபபடுவது குறைவு ஆனாலும் அவரை பார்க்கும் போதே மற்றவர்களுக்கு பயம்,அது நம்பிநாதனுக்கு தேவையாகவும் இருந்தது ஒரு கம்பனி நடத்தும் போது சில குணாதிசியங்கள் இருக்க தான் வேண்டும் ஒரு கம்பனி நடத்துவது என்பது சாதாரண விடயம் இல்லை என்பது தற்போது நம்பிநாதனுக்கு நன்றாகவே தெரியும் அடிக்கடி அப்பா நினைவு தான் வரும் நம்பிநாதனுக்கு,அப்பா சொல் ஒவ்வொன்றும் வேதவாக்கு என்று மனதில் நினைத்துக் கொள்வார்

சாதாரண ஒரு மனிதன் யாருடைய உதவியும் இல்லாமல் முன்னுக்கு வரும் போது கொஞ்சம் கர்வமும்,தற்பெருமையும் வருவது இயல்பு நம்பிநாதனுக்கு இது இரண்டுமே இல்லை வரும் பணத்தில் கொஞ்சம் ஏழைகளுக்கும் உதவிகளை செய்து கொண்டு, குடும்பத்தையும் கவனித்துக் கொண்டு பதவி இருக்கு கம்பனி இருக்கு என்று எந்த விதமான ஆடபரமும் இல்லாமல் சாதாரண ஒரு மனிதனாக நம்பிநாதன் வாழ்ந்து வருவது ஆச்சிரியமே,இந்த காலத்தில் கையில் பதவி இருக்கும் போது அவர்கள் போடும் ஆட்டத்தை நாம் காண்கிறோம்,நிறை குடம் தழும்பாது என்பதற்கு உதாரணம் நம்பிநாதன் என்று தான் கூற வேண்டும்,இன்றும் இது போல் சிலர் வாழதான் செய்கின்றார்கள்

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *