குட்டி யானை கணேசனுக்கு பிறந்த நாள்

 

அன்று குட்டி யானை கணேசனுக்கு பிறந்த நாள்,அவனோட நண்பர்களுக்கு ஏதாவது கொடுக்க வேண்டும் என்று அப்பா, அம்மாவிடம் கேட்டுக்கொண்டிருந்தான்.

அப்பா யானை இரண்டு வாழைத்தார்களை பறித்து கொடுத்தது. குட்டி யானை கணேசனுக்கு ஒரே சந்தோசம், அவனுடைய நண்பர்களுக்கு வாழைப்பழம் என்றால் உயிர். அதனால் இரண்டு வாழைத்தார்களையும் தன் குட்டித்தும்பிக்கைகளில் கஷ்டப்பட்டு தூக்கிக்கொண்டு சென்றது.

வழியில் நரியார் வழி மறித்து “குண்டு கணேசா” என்ன கொண்டு போகிறாய்? என்று கேட்டது. குட்டி யானை கணேசனும், என்னோட நண்பர்களுக்கு பழம் கொண்டு போகிறேன் என்று சொன்னது. அப்படியா ரொம்ப சந்தோசம் எனக்கும் இரண்டு சீப் பழம் கொடு என்றது. ஹ¥கூம் அதெல்லாம் முடியாது, என்னோட நண்பர்களுக்கு மட்டும்தான் கொடுப்பேன் என்று சொன்னது. நான் உன்னை விட மூணு கிளாஸ் அதிகமா படிக்கிறேன், எனக்கே கொடுக்க மாட்டீங்கறயா? என்று மிரட்டியது., குட்டி கணேசன் பயந்து கொண்டு சரி சரி இந்தா இரண்டு சீப் பழம் மட்டும்தான் என்று சொல்லி நா¢யாரிடம் கொடுத்துவிட்டு வேகமாக நடந்த்து.

கொஞ்ச தூரம் சென்றதும் வழியில் குரங்கு குசலா வந்துகொண்டிருந்தாள். அவள் குட்டி கணேசன் வகுப்பில்தான் படிக்கிறாள். என்ன தும்பி கணேசா வாழைப்பழத்தை எடுத்துட்டு எங்கே போகிறாய்? நான் என் நண்பர்களை பார்க்க போறேன் என்று பதில் சொன்னது குட்டி யானை கணேசன். அப்படீயா ரொம்ப மகிழ்ச்சி, அதுக்கு வாழைப்பழம் எதுக்கு எடுத்துட்டு போறே?அதுவா எனக்கு பிறந்த நாள் அதுக்குத்தான் என்று குட்டியானை கணேசன் சொன்னான். ரொம்ப மகிழ்ச்சி, நான் உன்னுடைய வகுப்பில்தானே படிக்கிறேன். எனக்கும் இரண்டு சீப் பழம் கொடுத்துட்டு போ,என்று கேட்டது.முதலில் மறுத்த குட்டி யானை கணேசன் சரி இந்தா என்று பரிதாபப்பட்டு இரண்டு சீப் பழங்களை கொடுத்தது.

அடுத்ததாக கரடியார் எதிரில் வந்து குட்டி யானை கணேசனிடம் வாழ்த்துச்சொல்லி இரண்டு சீப் பழங்களை கொடுக்கச்சொன்னது.குட்டி யானை கணேசனும் வேறு வழியில்லாமல் இரண்டு சீப் பழங்களை கொடுத்தது.

அதற்குப்பின்னால் வா¢சையாக மான்,ஓநாய்,முயல்,காட்டுப்பன்றி,என்று வாழ்த்துச்சொல்லி,”எனக்கு இரண்டு சீப் பழம் கொடு” என்று வாங்கி சென்றன. இப்படி எல்லாருக்கும் கொடுத்து,கொடுத்து, கொண்டு போன இரண்டு வாழைத்தார் பழங்களும் தீர்ந்து போய்விட்டன. குட்டி கணேசனுக்கு அழுகை தாங்க முடியவில்லை. “கோவென” அழுதுகொண்டே தன் நண்பர்களை பார்க்காமல் மறுபடியும் வீட்டுக்கு ஓடி வந்துவிட்டது.

அப்பா யானையும், அம்மா யானையும், மகன் குட்டி யானை கணேசன் அழுதுகொண்டே ஓடி வருவதை பார்த்து பதட்டத்துடன் என்ன கணேசா எதற்கு அழுதுகொண்டே ஓடி வருகிறாய்? என்று கேட்டன. அதற்கு குட்டி யானை கணேசன் தான் கொண்டு போன பழங்களை, எல்லோரும் வாங்கிக்கொண்டதையும், கடைசியில் ஒரு பழம் கூட இல்லாமல் தீர்ந்துவிட்டதால், நண்பர்களை பார்க்காமல் ஓடி வந்து விட்டதை அழுது கொண்டே சொன்னது.

இவ்வளவுதானா! இதற்கா அழுவுவது, எல்லோருக்கும் கொடுத்து உதவுவது நல்லதுதானே, அதுவும் உன் பிறந்த நாளைக்கு இப்படி எல்லோருக்கும் கொடுத்து உதவினால் புண்ணியம் தான் கிடைக்கும்.கவலைப்படாதே, உனக்கு வேணும் என்கிற அளவுக்கு பழங்கள் தருகிறேன் என்னுடன் வா, என்று அப்பா யானை குட்டியானை கணேசனை அழைத்தது.அப்பொழுது வெளியில் ஒரே சத்தம் என்னவென்று அப்பா, அம்மா, குட்டி யானை கணேசன், ஆகியோர் எட்டிப்பார்த்தனர். வெளியே நா¢,கரடி, மான், குரங்கு, மற்றும் குட்டியானை கணேசனிடம் பழம் வாங்கியவர்களும், கூடவே குட்டி யானை கணேசனின் நண்பர்கள் ஆகியோர் கைகளில் பரிசுப்பொருள்களுடன் நின்று கொண்டு “ஹேப்பி பர்த்டே கணேசா” என்று சொல்லி கொண்டு வந்த பரிசுப்பொருட்களை அதன் கையில் கொடுத்தன.

இதைப்பார்த்த குட்டியானை கணேசனுக்கு மகிழ்ச்சி தாங்கவில்லை, பெருமையாக தன்னுடைய அப்பாவை பார்க்க “பார்த்தாயா கணேசா நாம் ஒருவருக்கு கொடுத்தால் அது பல மடங்கு நமக்கே வரும்” பழம் கொடுத்தற்கு அழுதாயே, உனக்கு இப்பொழுது எத்தனை பரிசுப்பொருட்கள் வந்துள்ளது பார்த்தாயா, நம் வீட்டில் உள்ள எல்லா பழங்களையும் கொண்டு போய் அவர்களுக்கு கொடு என்று அன்புடன் சொல்ல, குட்டியானை கணேசன் அனைவரையும் இருக்கச்சொல்லி ஓடி ஓடி பழங்களை கொடுத்து மகிழ்ந்தது.

(அனைவருக்கும் கொடுத்து உதவினால் உங்களுக்கு இரு மடங்காய் திரும்ப கிடைக்கும் என்பதை தொ¢ந்து கொள்ளுங்கள் குழந்தைகளே) 

தொடர்புடைய சிறுகதைகள்
உக்கடம் பெரிய கடைவீதியில் உள்ள “கணபதி ஆயில் ஸ்டோர்” எண்ணெய் கடையில் எண்ணெய் ஊற்றிக்கொண்டிருந்த சாமியப்பண்ணன் உடல் நிலை சரியில்லாமல் ஒரு மாதம் விடுமுறை எடுத்து விட்டார். கணபதி ஆயில் ஸ்டோரில் மேலும் ஒரு பணியாளர் உண்டு, அவருடன் முதலாளி கணபதியப்பனும் ...
மேலும் கதையை படிக்க...
முதலிலேயே சொல்லி விடுகிறோம், இந்த கதை ஒரு அறுபது எழுபது வருடங்களுக்கு முன்னர் நடந்தது.அது ஒரு அடிப்படை வசதிகள் கூட இல்லாத கிராமம், போக்குவரத்து வசதிகள் கூட அதிகம் காணப்படாத கிராமம். அந்த ஊரின் பெரிய மனிதரான பரமசிவத்திற்கு பாட்டு என்றால் உயிர், ...
மேலும் கதையை படிக்க...
இந்த பேப்பரை யார் இங்கே வச்சிரிக்கறது? கோபமான கேள்வி அந்த வீட்டில் ஒலிக்கவும் வீடே நிசப்தமாகியது. மீண்டும் அந்த கேள்வி ராமச்சந்திரனால் அங்கு நின்று கொண்டிருந்த மகன், மகள் மனைவியை நோக்கி வீசப்பட்டதும், நானில்லை..என்று தயக்கமாய் மகனிடமிருந்தும், மகளிடமிருந்தும் வந்தது. நீங்க ...
மேலும் கதையை படிக்க...
குளிரூட்டப்பட்ட அந்த அரங்கத்தில் உள் புறத்தில் உட்கார்ந்திருப்பவர்கள் அமைதியாக திரையை பார்த்துக்கொண்டிருந்தார்கள்.திரையை ஒட்டி அமைக்கப்பட்டிருந்த மேடையில் “மைக்” அருகில் நின்று கொண்டு ஒரு இளைஞன் அந்த திரையில் நடமாடிக்கொண்டிருந்த “என்னை” பற்றி விளக்கி கொண்டிருந்தான். இந்த திரையில் காண்பிக்கப்படும் நபர் நடுத்தர மக்களை சேர்ந்த ...
மேலும் கதையை படிக்க...
பாலக்காட்டிலிருந்து ஒரு கார் வால்பாறையை நோக்கி வந்து கொண்டிருந்தது, சிறிது நேரம் ஓய்வு எடுக்க அட்டகட்டி என்னும் இடத்தில் வண்டி நின்றது, வண்டியில் இருந்து ஒரு அறுபது வயதுக்கு மேல் மதிக்கத்தகுந்த ஒரு பெரியவர் இறங்கினார், நல்ல க்ருத்த உருவம், பார்த்த ...
மேலும் கதையை படிக்க...
குளிரூட்டப்பட்ட ஒரு அறையில் அரை நிரவாணமாய் படுத்துறங்கிய கதிர் சட்டென சத்தம் கேட்டு கண் விழித்தவன், எதிரில் நாகரிகமாய் உடையணிந்து ஒருவன் நின்று கொண்டிருப்பதை கண்டவுடன் சட்டென எழுந்து தன் அரை குறை ஆடைகளை சரியாக அணிந்து கொண்டு, “ஏய் ஹூ ...
மேலும் கதையை படிக்க...
உள்ளூர் அரசியல் வாதியான குமாரலிங்கத்தின் வீட்டில் அன்று அவர் மனைவி மகள்கள், அவர்களின் குடும்பம், அனைவரும் ரிஷிகேசம் செல்வதற்காக கிளம்பி விட்டனர். இங்கிருந்து டெல்லி வரை இரயிலில் போய் அங்கு இருந்து வண்டி ஏற்பாடு செய்து கொள்வதாக ஏற்பாடு.இவரும் கிளம்பி இருப்பார், மூன்று ...
மேலும் கதையை படிக்க...
தலையை சிலுப்பிக்கொண்டேன், கொஞ்சம் எண்ணெய் எடுத்து இரு கைகளிலும் தேய்த்து தலை முடிக்குள் விரலை நுழைத்து மெல்ல தலையை நீவி விடும்போது கண்கள் மெல்ல சொக்கியது. கண்ணாடி முன்னால் நின்று பார்த்தேன்.நாற்பது வயதாகியது போல தோன்றவில்லை, ஒரிரு நரை முடிகள் மட்டும் ...
மேலும் கதையை படிக்க...
பேரூர் வந்து, பேருந்தை விட்டு மெல்ல இறங்கிய மீனாட்சி கோயில் வாசலில் கண்ட கூட்டத்தை கண்டு மிரண்டாள். எப்படி வாகன நெரிசலை கடந்து கோயில் வாசலை அடைவது என்று திகைத்தவள் பக்கத்தில் ஒரு குடும்பம் இவளைப்போல் பாதையை கடக்க முயற்சித்துக்கொண்டிருந்தது. அதில் ...
மேலும் கதையை படிக்க...
"கை ரேகை சொல்கிறது" அதை நான் உங்களிடம் சொல்கிறேன் என்றார் ஜோசியக்காரர். தனபாலுக்கு அப்படி ஒன்றும் ஜோசியத்தில் நம்பிக்கையில்லை, நண்பன் பாலுவின் வற்புறுத்தலுக்காக வந்துள்ளான். வந்த இடத்தில் பாலுவின் கையை மட்டும் பார்த்துவிட்டு கிளம்பியிருந்தால் பரவாயில்லை! பாலுதான் இவர் கையையும் பார்த்து சொல்லுங்கள் ...
மேலும் கதையை படிக்க...
ராமுவின் துப்பறியும் மூளை
புரிந்துகொண்டவன் பிழை
அப்பாவின் கோபம்
கடைவாய் பல்
முனியனும் அவனுக்கு மனைவியான மலைசாதிப்பெண்ணும் சந்தித்த கதை
கி.பி.3000 ம் வருடத்தின் ஒரு சில நாள்
அரசியல்
பொங்கி அடங்கிய சலனம்
பிராப்தம்
முடிவல்ல ஆரம்பம்

குட்டி யானை கணேசனுக்கு பிறந்த நாள் மீது ஒரு கருத்து

  1. Sankari says:

    அடுத்தவர்களுக்கு உதவும் மனப்பான்மை அனைவருக்கும் வேண்டும்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)