மகிமை!

 

கட்டாயம் ஹெல்மெட் போட வேண்டும் என்று நீதிமன்ற உத்திரவு வந்து, அதை காவல் துறை தீவிரமாக அமுல் படுத்தத் தொடங்கியதில் நந்த குமாருக்கு ரொம்ப சந்தோஷம்!

வீட்டில் எல்லோருக்கும் டூவீலர் இருக்கிறது! காலையில் அக்கா சித்ரா ஆபிஸுக்குப் போக ஸ்கூட்டியை எடுக்கும் பொழுது, “கஷ்டப்பட்டு தலை வாரினேன்!…அத்தனையும் கலையப்போகிறது!” என்று முணு முணுத்துக் கொண்டே ஹெல்மெட்டை எடுத்து தலையில் வேண்டா வெறுப்பாக அணிவாள்!

அண்ணன் வாசு ஹெல்மெட்டை எடுத்து மாட்டும் பொழுது, “இந்த சனியனை வேறு தினசரி சுமக்க வேண்டியிருக்கு!…காதும் கேட்க மாட்டேன்கிறது…விசில் சத்தம் வேறு!…சைடில் எவனாவது வந்தாக் கூடத் தெரிவதில்லை!..” என்று ஓங்கி ஒரு குத்து குத்தி விட்டு ஹெல்மெட்டை எடுத்து மாட்டுவான்!

அப்பா தன் டி.வி.எஸ் 50 க்குப் பின் இளநீரைக் கட்டித் தொங்க விடுவது போல் ஹெல்மெட்டைக் கட்டி சைக்கிள் பூட்டு போட்டு பூட்டி விட்டு வண்டியை எடுப்பார்

அதற்குள் அம்மா “எதற்கு இப்படி கட்டிச் தொங்க விடறீங்க!….நல்லாவா இருக்கு?…”என்பாள்.

“ திருட்டு போகாம இருக்க ஜாக்கிரதை தான்!, போலீஸ்காரன் எங்கே நின்று பிடிப்பான் என்று எனக்குத் தெரியும்!….அந்த இடத்திற்கு சற்று முன்பே நின்று எடுத்து மாட்டிக் கொள்வேன்….கொஞ்சதூரம் போய் தலை மறைந்ததும் எடுத்து பத்திரப் படுத்தி விடுவேன்!…காவல் துறைக்கு ஒரு மரியாதை கொடுத்த மாதிரி இருக்கும்!….” என்பார் அப்பா!

நந்த குமார் மட்டும் விதி விலக்கு ஹெல்மெட்டும் கையுமாகவே திரிவான், இந்த வருடம் தான் கல்லூரியில் பி.யூ.சி. யில் சேர்ந்திருக்கிறான். தினசரி கல்லூரிக்கு போகும் முன் ஹெல்மெட் அணிந்து கொண்டு ரேஸில் போவது போல் பறந்து செல்வான்.

ஒரு முறை நண்பன் கேட்டான் “ஏண்டா!….நந்து முன்பெல்லாம் பைக்கை எடுத்துக் கொண்டு எங்க வீட்டிற்கு கூட வர மாட்டாய்!..இப்ப எங்க போனாலும் பைக்கில் தானே போகிறாய்?…”

“ எல்லாம் இந்த ஹெல்மெட் மகிமை தான்!…எனக்கு பதினேழு வயசு தான் ஆகிறது!…லைசன்சு வாங்க இன்னும் ஒரு வருஷம் காத்திருக் வேண்டியிருந்தது!..இப்ப இந்த ஹெல்மெட்டால் முகத்தை முழுவதையும் மூடிக் கொள்வேன்! புத்தம் புதிய பைக்..நல்ல டிரஸ்.. இப்ப இந்த ஐயாவை வழியில் போலீஸ் நிறுத்த மாட்டாங்க!..” என்றான் தெம்பாக!ஸ

- ஆகஸ்ட் 2016 பொதிகைச் சாரல் 

தொடர்புடைய சிறுகதைகள்
“ஏய்! ……வாட்ச்மேன்!...உள்ளேபோய்உங்கமுதலாளியைஉடனேவெளியே வரச்சொல்!....” “ எதற்குசார்?...” “ சொன்னதைச்செய்!...இல்லாவிட்டால்உனக்கு உதை கிடைக்கும்!...ஜாக்கிரதை!..” என்றுகைகளைஓங்கிக்கொண்டுஅந்தகோடவுன்வாசலில்வந்துசத்தம் போட்டான் முரளி. அந்தவயசானவாட்ச்மேன்பயந்துபோய்விட்டான். உள்ளேஓடிப்போய்முதலாளியிடம், “சார்!...யாரோஒருஆள்வாசலிலில்உங்களைக்கூப்பிடச்சொல்லிஅடிக்கவருகிறார்!” ஆடி தள்ளுபடி விற்பனைக்காகஒருபெரியகோடவுனைவாடகைக்குப்பிடித்துதற்காலிகமாக ஜவுளிவிற்பனைக்கடையைப்போட்டிருந்தார் அருமைநாயகம். வடநாட்டுமில்களிலிருந்துஏகப்பட்டஜவுளிகளைக்கொண்டுவந்துகுவித்திருந்தார்! நிறையவிளம்பரம்செய்திருந்தார். அதனால்ஏகப்பட்டகூட்டம்! அருமைநாயகம்ஒருஅமைதியானமனுஷன்! வாட்ச்மேன்சொன்னதைக்கேட்டுஎன்னவோஏதோஎன்றுவெளியேஓடிவந்தார். அவரைப்பார்த்தவுடன் “நீங்கஎன்னநெனைச்சிட்டிருங்கீங்க?....ரோட்டைஎல்லாம்விலைக்குவாங்கிட்டநெனப்பா?...கொஞ்சமாவதுஅறிவுவேண்டாம்?..” “ தம்பி!....என்னவிஷயம்என்றுசொல்லு!...தப்பாஇருந்தாசரிசெய்திடலாம்!...” “ உங்களுக்குகண்ணாஇல்லை?....அங்கேநீங்களேபாருங்க!...” முரளிசுட்டிக்காட்டியபகுதியில்காம்பௌண்ட்சுவர்ஓரம்நிறையவாடிக்கையாளர்கள்தாங்கள்கொண்டுவந்தடூவீலர்களைவரிசையாகநிறுத்தியிருந்தார்கள். யாரோஒருவர்அந்தவரிசைக்குப்பின்னால்ரோட்டில் தன்டூவீலரைநிறுத்தியிருந்தார். “யாரோஅவசரத்தில்நிறுத்திவிட்டுப்போயிருக்காங்க…தம்பி! வேண்டுமானால்வாட்ச்மேனைவிட்டுத்தள்ளிவைக்கச்சொல்கிறேன்…நீங்கடூவீலரில்தானேவந்தீங்க..அப்படியேகொஞ்சம்தள்ளிஒதுங்கிப்போயிருக்கலாமே?..” “ என்னசார்!.. நீங்கரோட்டைஅடைச்சுஉங்கவண்டியைநிறுத்துவீங்க!...நான்ஒதுங்கிப்போகவேண்டுமா?…. இப்படிஅறிவுகெட்டத்தனமாபேசறீங்க?...நான்அந்தவண்டிமேலஎன்வண்டியைஏற்றி அதைடேமேஜ்செய்திடுவேன்!..அல்லது ...
மேலும் கதையை படிக்க...
மாநிலத்திலேயே அந்தக் கல்லூரிக்குத் தான் மிக நல்ல பெயர். அந்தக் கல்லூரிக்கு மாநில அரசு, மத்திய அரசு எங்கும் நிறைய செல்வாக்கு உண்டு. ஒரு மாணவனுக்கு அந்தக் கல்லூரியில் இடம் கிடைத்து விட்டால் அவன் எதிர் காலத்தைப் பற்றிய கவலையை பெற்றோர் ...
மேலும் கதையை படிக்க...
“கல்யாண வீட்டில் முதல் பத்தியில் உட்கார்ந்து சாப்பிடற மாதிரி…சாப்பாடு ஆனதும் இவ முதலிலேயே உட்கார்ந்து ஒரு பிடி பிடிச்சிடறா….முட்டையைக் கூட விட்டு வைக்கிறதில்லே!....எனக்குப் பார்க்க அசிங்கமா இருக்குதடி!......” அந்தப் பள்ளிக் கூடத்தில் வேலை செய்யும் பெண்கள், சத்துணவைக் கவனிக்கும் தன் தோழி மாலதியைப் ...
மேலும் கதையை படிக்க...
அந்தக் காலத்தில் வயசானவங்கதான் திண்ணையில் உட்கார்ந்து கொண்டு, வெற்றிலையை மென்று கொண்டே அரட்டை அடித்துக் கொண்டிருப்பார்கள் என்று கேள்விப் பட்டிருக்கிறோம்! இந்தக் காலத்துப் பசங்க சில சினிமாக்களைப் பார்த்து விட்டு மதில் மேல் உட்கார்ந்து கொண்டு அரட்டை அடிக்க ஆரம்பித்து விட்டாங்க! அன்று மாலை ...
மேலும் கதையை படிக்க...
நிலா குழந்தையிலேயே நல்ல அழகு. வீதியில் போவோர் வருவோர் எல்லாம் கொஞ்சிக் கொண்டு போவார்கள். பனிரண்டு வயசில் வயசுக்கு வந்து விட்டாள். பூத்துக் குலுங்கும் அந்த அழகை வர்ணிக்க வார்த்தைகள் இல்லை. நிலாவின் அம்மா அன்னத்திற்கொரு ஆசை! அதற்கு ஒரு விழா எடுத்து அதில் ...
மேலும் கதையை படிக்க...
ஆடித் தள்ளுபடி!
பணயம்!
முதல் பந்தி – ஒரு பக்க கதை
தொப்பை!
பருவம் வந்ததும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)