Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

பீடி

 

(மீறல் வகைமையில் ஒரு சிறுகதை)

பீடி ஒரு கலாச்சாரக் குறியீடு… கலாச்சாரப் பாதுகாவலர்கள் மன்னிக்காவிட்டால் பாதகமில்லை.

சூழலியல்வாதிகள் கண்டனம் தெரிவிக்கவும், ஓஸோன் படலத்தில் பொத்தல். மனப்படலத்தில் gopi4 ஏராளமான பொத்தல்கள் . வாயில் சதா நிக்கோட்டினை நாடும் விழைவு.

புகைத்தலின் உதயம் : 16.10.68 இரவு. காரணம் அந்தரங்கமானது. என் மீது நானே அருவருப்பு கொள்ளச் சுயமாக ஏற்படுத்திக்கொண்ட களங்கம்.

புகைத்தலின் மறைவு : என் மறைவு நாள். என் பிணத்துக்கு எரியூட்டும் போது ஒரு கட்டு சந்திரிகா பீடியை என்னருகில் வையுங்கள். என் இறுதி ஆசை இது மட்டும்.

1975 தாம்பரத்தில் ஒரு ராத்தங்கலுக்கு ஒரு விடுதியில் அறை எடுத்துத் தங்கியிருந்தேன். படுக்கையில் கிடந்தவண்ணம் புகைத்துக்கொண்டிருந்தேன். யதேச்சையாகக் கூரையைப் பார்த்ததில் ‘உங்கள் சாம்பலை எங்கு அனுப்ப?’ என்ற ஆங்கில வாசகம் தென்பட்டது. இருப்பினும் அமைதியாக புகைத்தல் தொடர்ந்தது.

பீடி ஒரு குறியீடு. சாதா சிகரெட் நடுத்தர வர்க்க பொதுமைக் குறியீடு. ஃபில்டர் சிகரெட் ஒயிலின் குறியீடு. ஃபில்டர் கிங் சிகரெட் கூடுதல் ஒலியின் குறியீடு. சமூக அந்தஸ்தின் குறியீடு. மேலை நாட்டு சிகரெட் Xenophilia மோகம்.

பீடி கீழ் மத்தியதர வகுப்பினரின் ரகசிய நான்கு சுவர் நுகர்வு; வெளியில் புகைப்பதோ சாதா சிகரெட் பீடி சேரிவாழ் குடிமக்களின் அன்றாட பகிரங்க நுகர்வு.

பீடி : பெரிய நிறுவன மோட்டார் வாகன ஓட்டிகள் பணக்கார முதலாளிகள், நிர்வாகிகள் மீது நிகழ்த்தும் மறுப்புத் தெரிவித்தல் புரட்சி. என் நிறுவன வாகன ஒட்டி எஸ்.கே. நாயருடன் பீடிப் பரிமாற்றம். நிர்வாகி ஒருத்தியின் கோபாவேசப் பார்வை. ஆண்டான் அடிமை முறையைப் பீடி எஸ்.கே. நாயரின் வெற்றிச் சின்னம். எனது ஸ்தாபிதச் சின்னமும்கூட. அநேகமாக ‘மெமோ’ வரலாம். வேலை போகலாம். மயிராப் போச்சு இந்த இழவு வேலை.

புகைக்குழாய் வெளிநாடு சென்று திரும்பிய கிறித்துவத் தோழியின் நேசப் பரிசளிப்பு. மனைவி கும்பிடும் சாமிப்படத்தின் அருகே புனிதமே உருவான அக்குழாய் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கிறது. புனிதம் சாமியில் இல்லை. புகைக்குழாயில் நிறைய இருக்கிறது. மென் உணர்வில் ருக்கிறது. உண்மையான தோழமையில் இருக்கிறது. ந்தப் புகைக்குழாய் தெய்வீகத்தின் குறியீடு மனிதனின் சின்னம்.

புகைக்குழாயின் பிற அர்த்தங்கள் : அந்தஸ்து, கவனஈர்ப்பு உத்தி. தீமைக்குறைவு.

புகைக்குழாய் மார்க்கெட் ஆராய்ச்சி ‘சர்வே’யில் ஒரு பிரபல எழுத்தாளரின் பச்சையான பொய். பொய்யரின் புத்தகங்களைப் பிறகு தொடவேயில்லை.

எழுத்தின் உன்னதம் எழுதுபவரின் ஆளுமையில் பிரதிபலிக்கப்படாதபொழுது அவரது எழுத்தை நிராகரிக்க வேண்டிய நிர்ப்பந்தம். இது என் சுய சித்தாந்தம் மட்டும்.சுய கோட்பாடுகளின் என் நசிவைக் காணமுடிகிறது. என் சவக்குழியை நானே தோண்டிக்கொண்டு விட்டேன். உங்களுக்குச் சிரமம் வைப்பதில் விருப்பம் இல்லை. நசிவடைந்த நான் நிம்மதியாகத்தான் சாவேன், என் தனித்துவ நசிவின் புனிதத்தைக் கடைசிவரை காப்பாற்றிக்கொண்டு. நீங்கள் என்னிடமிருந்து வேறுபடுங்கள். உங்கள் மேன்மைபெற்ற விலகலின்மீதும் வேறுபடுதலின் மீதும் என் தோழமை பரவும். என் முகத்தில் எச்சில் துப்பினால் உங்கள் வெளிப்பாட்டுக்கு நன்றி சொல்லத் தவறமாட்டேன். தோழமை மிகமிக அவசியம்.

உங்கள் சிகரெட்டை நீங்களே உருட்டிக் கொள்ளுங்கள் Roll your own cigarette. விமரிசையான சடங்கு. சுத்தமான, பிற நச்சுப்பொருள் எதையும் யாரும் கலக்க முடியாத சுத்தமான புகையிலைத் துகள்கள் அடங்கிய நேர்த்தியான பை. சிறப்புக் காகிதம். பலபொருள் சிறப்புக் காகிதம். பலபொருள் சிறப்பு அங்காடிகளில் மட்டும் கிடைக்கும். சுத்தமான புகையிலைத் துகள்கள்தாம். கலப்பு என்ற சந்தேகம் தீர்ந்தது. சந்தேகம் அடிப்படையில் இருப்பதால் இது paranoid மனச்சிதைவு நோயின் ஒரு பூடகமான குறியீடு. Neuroticism. நீங்கள் பணக்காரர்கள். உங்கள் சிகரெட்டைத் தூய்மையுடன் சுற்றிக் கொள்ள உங்கள் மோதிர விரல் கைகளில் நேரம் ஏராளமாக கனத்துக்கிடக்கிறது. மோதிர விரல் கைகளில் நேரம் ஏராளமாக கனத்துக்கிடக்கிறது. அனுபவியுங்கள் உங்கள் நோய்க்குறியை. குறுக்கே நான் நிச்சயம் இல்லை. திணிக்கப்படும் அலுவலக நெறிமுறைகள்: சடங்குகள், அங்கப்பிரதட்சணம் சடங்கு. மீண்டும் Neuroticism.

பீடி உழைப்பாளிகளின் சின்னம். எழும்பூர் ரயில் நிலைய வெளிப்புறத்தில் ஓர் ஏழை விவசாயி பீடியைப் புகைத்த வண்ணம் கலப்பையைத் தோளில் ஏந்தி நிற்கிறார். விளம்பர உத்திதான். விவசாயியின் கோவணமும் தோலின் சுருக்கங்களும் உண்மையான பாரதச் சின்னங்கள். அவர் நிலைக்கு நானும் காரணம். குற்ற உணர்வு. ஒரு சந்திரிகாவைப் பற்றவைத்துக் கொள்கிறேன். பீடி பட்டாளிகளின் சின்னம்.

…. மடத்தில் பீடி தடுக்கப்பட்டிருக்கிறது. திருட்டுத் ‘தம்’முக்குத் தண்டனையாக ஒரு சமையலாள் மடத்தை விட்டு நீக்கம் பெறுகிறார். மடத்துக்கு எதிராக யங்கம் பீடி ஒரு மத மறுப்புச் சின்னம். அங்கு ஓ.பி. நையார் ஆனந்தமாக பகிரங்கமாக பீடி பிடிக்கிறார். இசை வெள்ளத்தில் மிதந்து கொண்டு. தென்னகம் வேறு வடஅகம் வேறு. என் முன்னாள் ஐரிஷ் நண்பரும் பீடி பிடிப்பார். அவரிடம் சர்வகால உற்சாகம். பீடியினாலா ஆளுமையினாலா இதுவரை புரியவில்லை.

வார்தா – சேவாக்கிராமில் சொந்தப் பிரச்சினைகளுக்குத் தற்காலிக விடுமுறையைப் பறைசாற்றிவிட்டு நண்பர் ஒருவரின் அறையில் தஞ்சம். ஒரு மாத நிம்மதியான பீடி பிடிப்பு. வடக்கில் பீடி சர்வசாதாரணம். அப்பொழுது பவுனாரில் வினோபாபாவேவுக்கு ஜலதோஷம். பத்திரிகைச் செய்தி 1974. சாந்தி சாந்தி சாந்தி. ஜலதோஷம் குறையவில்லை. கடவுளும் உச்சாடனங்களும் தீர்வு அல்ல. உண்மையான தீர்வு என்பது ன்னும் குழப்பமாகவே ருந்து வருகிறது. நவீன மருத்துவமும் ஒரு தற்காலிக விடுவிடுப்புதான். நிரந்தரதீர்வு அல்ல. பீடியும் தீர்வு அல்லதான்.

பழங்குடி மக்கள் : அரிசி ‘பியர்’ சாராயம், சப்பி, ஜிஞ்சர், கலக்கல்: சேரிவாழ் ஆத்துமாக்கள். விஸ்கி, ஜின் பற்றி வேறு டத்தில் பேசுவோம். ஜின்காரப் பணக்காரர்கள் நமக்குத் தேவையில்லை.

1972. லாரி ஓட்டுநர் தணிகாசலத்தின் திருமணத்துக்கு முன்னாள் மருத்துவ நண்பரும் சமூகத்தை ஏய்த்துப் பிழைத்து வந்த முன்னாள் நண்பரும் சென்றிருந்தோம். கிராமத்தில் சாராயக் காய்ச்சலில், உபயோகப்படுத்தப்பட்ட பாட்டரிகளைப் போட்டிருந்தார்கள். ஒரு ராத்தங்கல். அடுத்த நாள் நுங்கு வெட்டித் தந்தார்கள். அபரிமிதமாக முப்பது சாப்பிட்டேன். கிறக்கமாக ருந்தது. ரண்டு தினம் கழித்து விமான ஒட்டி நண்பர் எபிநெஸரின் றப்புச் செய்தி வந்தது. ஒரு கட்டு பீடி துக்கத்தை ஓரளவு தணித்தது. தொண்டையில் வலி. லாஸஞ்ஐஸ் போட்டும் பிரயோசனமில்லை. பொறுத்துக் கொண்டேன். பீடி உணர்வுகளின் சின்னம். ஒரு வடிகால். ஓர் இரங்கல் சின்னம்.

1976 லீலாவிடம் கேட்டேன். பியுஸி படித்திரக்கிறாயே? வேலை செய்யக்கூடாதா? தொழிலை விட்டுவிடேன் என்றேன். மாதம் ரண்டாயிரத்தை ஒரு பியுசி சம்பாதித்துத் தராது. நான் ப்படியே ருக்கிறேன். நீ அழகாகவே உபன்யாசம் செய்கிறாய். பக்கத்துக் கோவில் தர்மகர்த்தா என் வாடிக்கையாளர்தான். உன் உபன்யாசத்துக்கு அந்தக் கோவிலில் ஏற்பாடு செய்யட்டுமா என்று கேட்டாள். நான் மவுனமாக இருந்தேன். வேண்டுமானால் உன் போன்ற நண்பர்களுக்கு நான் இலவசம்; ஆசையானால் அனுபவித்துக்கொள் என்றாள். தலையை வருட ஆரம்பித்தாள். அப்பொழுது ளவயது. உடல் தொடு உணர்ச்சியைக் கிரகித்துக் கொள்ளுமுன் நேசக்கரம் நீட்டிக் கை குலுக்கி அன்புடன் விடைபெற்றேன். என்மீது எனக்கே பயம் வர ஆரம்பித்தது. நானும் பிறரைப் போல லீலாவிடம்… இல்லை என்னால் முடியாது. லீலா என் உற்றதோழி. தோழமையை இழிவுபடுத்த என்னால் முடியாது. நான் மனிதன். ஒருகால் கோளாறு பிடித்த மனிதன். ஆனால் நிச்சயம் மனிதன். வெளியில் வந்து பீடி ஒன்றைப் பற்றவைத்துக்கொண்டேன். பீடி உணர்வின் சின்னம். ஒரு வடிகால். உளைச்சலைத் தணிக்கும் அருமருந்து லீலாவின் வீட்டுக்குப் பிறகு நான் போகவில்லை. என்னைப்பற்றிய பயமும் லீலாவின் எண்ணமும் வந்தபோது கைவசம் பீடி இருந்தது. சென்னையம்பதி பீடி துணை. ஓம் பீடி நமஹ. சமூகக்கோளாறுக்கு லீலாவைச் சொல்லிப்பயனில்லை. Yama, the pit அல்லது yama, the Hell-hole. Kuprin, Alexander.

பீடி நெகிழ்வின் சின்னம். பீடி உடையாமலிருக்க பீடிக்கட்டை முதலில் உள்ளங்கைகளுக்கு நடுவில் வைத்து உருட்ட வேண்டும். நெகிழ்வு நிகழ்ந்த பின்னரே பீடியை உடைக்காமல் உருவ முடியும். பீடி நிச்சயம் நெகிழ்வின் சின்னம். நெகிழ்வு அன்பு. அன்பே தெய்வம். பீடியே அன்பு . பீடியே தெய்வம். பொங்கலோ பொங்கல். பீடியே பீடி… வாழ்க இந்த நெகிழ்வுச் சின்னம்.

பீடி விளம்பரம் ராகினி படம். சிறுவயது மதுரை சிடி சினிமா விளம்பர ‘ஸ்லைட்’.

வடக்கத்திய கஞ்சாப் பிரசாதம். ஓம் ந ம ச் சி வா ய.

பீடி
சேரி
விழிப்புணர்வுக் கூட்டம்
சமூகப்பணிச் சடங்கு
கட்டிக்காட்டியதில் மனத்தாங்கல்
வாழத் தெரியாதவன் என்ற முத்திரை
பீடி
புகை
மறத்தல்.

சிகார். மதிய உணவின் பிறகு புகைத்தல். பழைய தோழர்களின் நினைவு. எல்லாம் ஓய்ந்து கீழ் மத்தியதர வாழ்க்கை. சிகார் மறைந்து பீடி. வேறு வழியில்லை.

சுருட்டு
தாத்தா.
பீடி
நெஞ்சுவலி
இதய நோயா?
ல்தய அலைப்படம் சீராக ல்ருந்தது.
Electro-echograph சரியாக ருந்தது.

stress test யந்திரக கோளாறு கீழ்ப்பாக்கம் பொது மருத்துவமனையில். சரி ஆக ஒரு மாத காலம் பிடிக்கும். தயம் சரியாக சரி ஆக இருந்தது. நெஞ்சு வலி உணர்ச்சிகள் உருவாக்கிய மனநோய். தீவிர சுய-ஆலோசனை. நெஞ்சு வலியின் மறைவு மிக சமீபத்திய நிகழ்வு. 1991.

நவீன மருத்துவ வாய்க்கழுவிகள் ஒரு பசப்பல். வாயில் துர்கந்தம் சர்வகாலப் பிரச்சினை. நண்பர்கள் சற்றுத் தூர இருந்தே பேசுகிறார்கள். பீடி மரியாதையான இடைவெளியின் சின்னம்.

சுதந்திரத் தொடர்புடுத்துதல் உத்தி. சிக்மண்ட் ஃப்ராய்ட். தூண்டுதல் வார்த்தை கத்தி. பதில் வார்த்தை கொலை. ஏன் காய்கறி என்ற வார்த்தை வரவில்லை? அகிம்சை ஓர் உண்மையின்மை. வன்முறை இயல்பான ஒரு மனிதத்தன்மை. பண்பாடு வன்முறையை அமுக்கிவிடுகிறது. பீடி அடக்கி ஆளும் அப்பாவுக்கு எதிரான ஒரு புரட்சி வன்செயல். அதிகார வர்க்கத்துக்கு எதிரான ஒரு குறியீடு.

பீடி ஒரு சமூகக் குறியீடு… புகையிலையை நியாயப்படுத்தும் ஒரு மூடத்தனம்தான். ஆனாலும் வாழ்க பீடி. குறியீடு ஒழியச் சாத்தியமில்லை. 

தொடர்புடைய சிறுகதைகள்
எங்கள் அலுவலகம் அடையாறில் இருந்தது. மோபெட்டில் முக்கால் மணி நேரப் பயணம். போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டால் ஒரு மணி நேரம். நெரிசலின் கனத்தைப் பொறுத்து ஒன்றரை மணிநேரம்; இப்படி... அந்த அலுவலகத்தில் சேர்ந்து இரண்டு மாதங்கள் கழிந்திருந்தன. ஓர் ஒரு மாதத்தில் சக ...
மேலும் கதையை படிக்க...
நீங்கள் சர்க்கஸ் பார்த்திருப்பீர்கள். கரடி மோட்டார் சைக்கிள் விடுவதை, யானை ஆசையுடன் அழகியைத் தன் தும்பிக்கையால் தூக்குவதை, நாய் தீ வளையத்தினூடே தாவி வெளியேறுவதை, குதிரைகள் வட்டமாய் ஓடுவதை, புலி இரட்டைக் கயிற்றில் நடந்து சிரமப்படுவதை எல்லாம். மேலோட்டமாக பார்க்க போனால் ...
மேலும் கதையை படிக்க...
மாரிச்சாமி அந்தப் பெண் -- மருத்துவரின் அறையில் இருந்தான். அது ஒரு சிறிய பொது மருத்துவமனை. அவன் கேட்டான், 'இந்த நிக்கோடின் அடிமைத்தனத்தை நிறுத்த மனநல மாத்திரைகள் தருவீர்களா ? ' என்று. 'என்ன ? ஒரு நாளைக்கு எத்தனை ஊதுகிறீர்கள் ? ' ...
மேலும் கதையை படிக்க...
''பிரச்சனெ பெரிஸ்ஸா ஒண்ணுமில்லீங்க.'' ''பரவாயில்லெ, எதுவானாலும் சொல்லுங்க..அவங்களுக்கு என்ன பிரச்சினென்னு முழுஸ்ஸாத் தெரிஞ்சாத்தான் உதவி செய்யிறதுக்கு எங்களுக்குச் சுலபமா இருக்கும்.'' ''கொஞ்ச நாளாவே சிடுசிடுங்கறது, எங்கிட்டே எரிஞ்சு விழுறது, கொழந்தைகங்களெப் போட்டு மொத்தறது இப்பிடியாயிருக்குதுங்க. சமாதானப்படுத்துனாகூட கோபம் தணியிறதில்லெ..'' ''வீட்டுலெ ஏதாச்சும் சிக்கலாச்சா?'' ''சிக்கலுன்னு என்னெத்தெங்க சொல்றது? ...
மேலும் கதையை படிக்க...
மாநிலக் கல்லூரியில் இளங்கலை உளவியல் பிரிவில் என் முதலாம் ஆண்டு ஆரம்பித்தது. நாங்கள் பத்து மாணவர்கள் ஒன்பது மாணவிகள். மதுரையில் என் பாட்டியின் கண்டிப்பான வளர்ப்பும், வீட்டிலுள்ள கோவிலில் தினப் பூஜையும், அவர் நடத்திய பஜனை மண்டபத்திற்கு வரும் பெண்களை அக்கா, ...
மேலும் கதையை படிக்க...
ஒரு ரூபாய்க்கு ஒரு கதை
மகான்கள்
இழந்த யோகம்
மொழி அதிர்ச்சி
உரிமை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)