தொழிற்சாலை – ஒரு பக்க கதை

 

‘இந்த வேலைக்குத் தகுதியானவர் இல்லை’ என்று டெபுடி மேனேஜர் சுந்தரம் கொடுத்த கடிதத்தோடு எதிரே வந்து நின்ற கணபதியைப் பார்த்தார் எம்.டி.சுரேஷ். கடிதத்தைப் படித்தார்.

நீங்க …பாண்டியன்கிட்டே போய் வேலை பாருங்க….என்று கூறி கணபதியை பாண்டியனிடம் அனுப்பி வைத்தார் எம்.டி.

பத்து நாட்கள் ஓடிவிட்டன. போனில் தொடர்பு கொண்டார் எம்.டி.சுரேஷ்.

‘’கணபதி பியூன் வேலைக்குத் தகுதியானவர் இல்லை சார்….ஆனால் அலுவலகப் பராமரிப்பு நன்றாகப் பார்க்கிறார். அவரை அதற்குப் பயன்படுத்திக் கொண்டேன் சார்…’’ பாண்டியன் பதிலளித்தார்.

எம்.டி.சுரேஷின் அறை….எதிரே டெபுடி மேனேஜர்களான சுந்தரமும், பாண்டியனும்.

‘’தனக்குக் கீழே வேலை பார்க்கிறவங்க அந்த வேலைக்கு லாயக்கு இல்லைன்னு சொல்லி அனுப்பறது மேலதிகாரியோட பணி இல்லை. ஒரே கல்வித்தகுதி, சர்வீஸ் இருந்த உங்க இரண்டு பேர்ல யாருக்கு ஜி.எம்.பதவி கொடுக்கிறதுன்னு ஒரு சந்தேகம். அதுக்கான டெஸ்ட்தான் இது. பாண்டியன் ப்ளஸ் மார்க் வாங்கிவிட்டார். அடுத்த ஜி.எம். பாண்டியன்….

ஸாரி மிஸ்டர் சுந்தரம்….’’ என்றார் எம்.டி.சுரேஷ்.

- குன்றக்குடி சிங்கார வடிவேல் (23-7-08) 

தொடர்புடைய சிறுகதைகள்
 ‘கிளுகிளு’ ‘காதல் அரிச்சுவடி’ என்கிற டைட்டிலைப் பதிவு செய்திருந்த டைரக்டர் ரொமான்ஸ்ராஜா, பொருத்தமான கதையைத் தேடிக் கொண்டு இருந்தார். ‘‘கிளுகிளுப்பான காதல் கதை சொல்லுய்யா!’’ ‘‘சொல்றேண்ணே! நம்ம ஹீரோ யூ.கே.ஜி. ஹீரோயின் எல்.கே.ஜி...’’ டே... டே..! மொட்டை மாடியை அண்ணாந்து பார்த்த பார்வதி திடுக்கிட்டாள். ‘‘என்னங்க, நம்ம பையன் ...
மேலும் கதையை படிக்க...
‘என்னதான் செய்றது?’ சமுத்திரம் திசை தொலைத்தவனாக திக்குமுக்காடிப் போய்க்கிடக்கிறான். எந்த வேலையும் பார்க்காமல் உடம்பே துருப்பிடித்த மாதிரி இறுகிக் கிடக்கிறது. ஏதாச்சும் செய்தாகணுமே என்று உந்துகிற லௌகீக வாழ்க்கை. பஸ் வந்து திரும்புகிற ஊர் மைதானம். வரிசையாக வேப்ப மரங்கள். இடையிடையே கட்சிக் கொடிக் ...
மேலும் கதையை படிக்க...
தலைவருக்கு வயது தொண்ணூறு. தளதளவென்று பரங்கிப் பழம்போல் முகம். இட்ட அடி நோக இருவர் தாங்கி பிடித்துக் கொள்ள, மெல்ல நடந்து வந்தார். திண்டில் மடங்கிச் சாந்தார். பேட்டிக்கு நோட்டைப் பிரித்துக் கொண்டேன். “ வாழ்த்துக்கள் ! உங்களுக்குத் தொண்ணூறு வயது இன்று. ” ...
மேலும் கதையை படிக்க...
ஏறத்தாழ எட்டாவது முறையாக மீண்டும் அந்தக் கேள்வியை சிவராமன் கேட்டபோது சோட்டே லால் என்னும் அந்தக் கான்ஸ்டபிளுக்குக் கோபத்துக்குப் பதில் சிரிப்புத்தான் வந்தது. சிரிப்பை அடக்கிக் கொண்டு அப்பாவியாக முகத்தை வைத்துக்கொண்டு பதில் அளிப்பது அவனுக்கு மிகவும் சிரமமாக இருந்தது. இந்த மதராஸிகளிடம் ...
மேலும் கதையை படிக்க...
"பாலகுமார் சார், இந்த சனிக்கிழமை என் வீட்டுக்கு லஞ்சுக்கு கண்டிப்பா நீங்க வர்ரீங்க... என் பெரியம்மா மகள் கோயமுத்தூர்லர்ந்து வந்திருக்கு, உங்கள பார்த்து பேசனும்னு ஒத்த கால்ல நிக்குது.." "சரி ஏகாம்பரம், ஆனா அவங்க எதுக்கு என்ன பாக்கணும், பேசணும்? எனக்கு அவங்களோட ...
மேலும் கதையை படிக்க...
பஸ் டிக்கெட் கதைகள்!
காலமாற்றம்
பொய்க்கால் கழுதைகள்
முறையீடு
ஐ.டி நடப்புகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)