காலம் காலம்

 

உழவர் சந்தை நிறுத்தத்தில் நகரப் பேருந்து வந்து சல் என்று நின்றது. பேகொண்ட கூட்டம். தாத்தா முண்டியடித்து படிக்கட்டில் கால் வைத்ததுதான் தெரியும்… அப்படியே அத்தாசமாக உள்ளே தள்ளி, சருகைக் காற்று கொண்டுபோவதைப் போல நடூ இடத்தில் கொண்டுபோய் நிறுத்திவைத்துவிட்டது. சுவர் வைத்தது போலக் கூட்டம்.

நிறைந்த தீப்பெட்டியில் நடுக் குச்சியாக நிற்கிறார் தாத்தா. அவ ருக்கு முன்னால் ஒரு இளவட்டம். கல்லூரி மாணவனாக இருக்கலாம்; தோற்றம் அப்படி. அவனுக்கு முன் னால் குட்டையான ஒரு பெண்மணி. பச்சக் குழந்தையைத் தோள்மீது சாத்தி நின்றுகொண்டு அல்லல் பட்டுக்கொண்டு இருந்தாள்.

வண்டி வேகம் எடுக்கிறது. திடீர் திடீர் என்று பிரேக் போடப்படு கிறது; வளைந்து வளைந்து செல் கிறது; காற்று ஒலிப்பானில் வைத்த கையை எடுக்க மனசில்லை ஓட்டுநருக்கு.

அடுத்த நிறுத்தம் வருகிறதுபோல. அந்தப் பிள்ளைத்தாய் பக்கத்தில் ஒரு ஆள் இறங்க, நின்று ஆயத்தமான அதே வேகத்தில், அந்த இளவட்டம் சக்கென்று உட்கார்ந்துவிட்டான்.

தாத்தா, ‘அட பாவீ’ என்று தனக்குள் சொல்லிக்கொண்டார்.

பேருந்து வேகம் எடுத்தது. வளைந்து வளைந்து செல்லும்போது மக்களும் காற்றடிக்கும்போது சாய்ந்து கொடுக்கும் பயிர்களைப் போலச் சாய்கிறார்கள். நிறுத்தம்தோறும் சக்கையை உமிழ்வதுபோல மக்களை உமிழ்ந்துகொண்டே போகிறது பேருந்து.

தாத்தாவை யாரோ சுரண்டுவது போலத் தெரிந்ததும் திரும்பிப் பார்க்க, ஒரு கல்லூரி மாணவி! ‘‘தாத்தா! இங்கே வந்திருங்க. நா இறங்கப் போறேன்’’ என்று தெரிவித்தாள். ‘நிக்கட்டும்’ என்பது போல் தலை அசைத்தார் தாத்தா. நிறுத்தம் வருகிறது போல. அந்த பிள்ளைத்தாய் எங்கே நிற்கிறாள் என்று தாத்தா கண் களால் தேடினார்; அந்த இடத்தை இவர் அடைவதற்குள் இன்னொரு தடியாள் அதில் உட்கார்ந்து கொண் டான். ‘அட பாவி!’ என்று தனக்குள் சொல்லிக்கொண்டார் தாத்தா!

வேகம் வேகம்… காலம் காலம்!

- 24th ஜனவரி 2007 

தொடர்புடைய சிறுகதைகள்
கதை ஆசிரியர்: கி.ரா. 'மைலாப்பூர், மைலாப்பூர்,' – 'அடையார், மைலாப்பூர்!' 'மைலாப்பூர் நாசமாகப் போக!' என்றார் ஸ்ரீமான் பவானந்தர், கோபத்துடன். எவ்வளவு நேரம்தான் காத்துக்கொண்டிருக்கிறார் அவரும். ஓர் அமிஞ்சக்கரை பஸ்ஸூம் வரவில்லை. அதற்குள் இருபது மைலாப்பூர் பஸ்களும், முப்பது திருவல்லிக்கேணி பஸ்களும் வந்து போயிருக்கும். ஓர் அமிஞ்சிக்கரைகூடக் கிடையாது! ' ...
மேலும் கதையை படிக்க...
யாரும் வர்றதுக்குள்ளெ சாப்பிட்டு முடிச்சிறணுமேண்ணு தான் மீனம்மா தினோமும் நினைக்கிறது. அது யாரவது ஒர்த்தர் வராம இருக்க மாட்டாங்க. நேரமும் வந்ஹ்டு அப்பிடி அமைஞ்சி போகுதே. அடையிற நேரத்துக்குத் தான் காட்லெயிருந்து வர முடியுது. பின்னெ வந்து.. நாலும் பாத்து காச்சி முடிக்கணும். ‘ம்; வாங்கெ ...
மேலும் கதையை படிக்க...
கோமதிசெட்டியாருக்கு வயசு முப்பது. அவனது பெற்றோர்கள் அவனுக்கு பெண்குழந்தை என்று நினைத்துத்தான் கோமதி என்று பெயர் வைத்தார்கள். அவனுக்குமுன் பிறந்த ஏழும் அசல் பெண்கள். இவனுக்கு சிறு பிராயத்திலிருந்தே ஜடைபோட்டு பூ வைத்துக் கொள்வதிலும், வளை அணிந்து கொள்வதிலும் கொள்ளை ஆசை. உருவம் ஆணாக ...
மேலும் கதையை படிக்க...
கதை ஆசிரியர்: கி.ரா. கதை சொல்லணுமாக்கும். சரி சொல்றேன். எங்க ஊர்லே எல்லாம், ஒரு கதை சொல்லுண்ணு கேட்டா, ‘நா வாழ்ந்த கதையைச் சொல்லவா; நா தாழ்ந்த கதையைச் சொல்லவா ‘ண்ணு கேக்கிறதுண்டு. நாம ரெண்டுலெ எதையாவது கேட்டு வைக்கணும். ஆனா அவங்க வாழ்ந்த ...
மேலும் கதையை படிக்க...
அவளைப் பார்த்தான் அவன். சூரிய ஒளி தாக்கிய பனி நீரைப் போல அவனுள் இருந்த எல்லாமே காணாமல் போய், அந்த வெற்றிடத் தில் அவள் புகுந்து சக்கென்று அமர்ந்து கொண்டாள். அப்படியே அவளைச் சுமந்து வந்தான், கிடைக்காத புதைய லாய்! தலையணையில் அவன் சாயும் ...
மேலும் கதையை படிக்க...
புன்சிரிப்பு
தாச்சண்யம்
கோமதி
ஒரு வாய்மொழிக் கதை
ஒரு தலை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)