வேலைக்கு ஆள் தேவை – அறிவிப்பைப் பார்த்து உள்ளே நுழையத்
தீர்மானித்தான் சிவா.
கேட்டுக்கு அருகில் புல் செதுக்கியவரிடம் வேலையைப் பற்றி விசாரித்தான்.
‘’இந்த முதலாளி ஒரு மாதிரி, ரொம்பக் கோபக்காரரு’’
‘’அதனாலென்ன, கோபமிருக்கிற எடத்தில குணமிருக்கும்’ சிவா பதில் சொல்ல…
‘முதலாளியம்மா இருக்கே? அது முதலாளி மாதிரி பத்து மடங்கு’’
‘’இருக்கட்டுங்க., அப்பத்தானே நிர்வாகமும் பண்ண முடியும். அம்மாவை இப்பப் பார்க்க முடியுமா?’’ தயங்கியவாறு சிவா கேட்க, ‘’பாரக்க முடியுமாவா? நீ பாத்துக்கிட்டு இருக்கியே அவர்தான் உன் முதலாளி’ தன்னைச் சுட்டிக் காட்டினார், தோட்டக்கார முதலாளியாய் அவதாரமெடுத்திருந்தார்.
‘’உனக்கு சம்பளம் மூவாயிரம். நாளையிலிருந்து வேலையிலே சேர்ந்திரு. நீ எல்லாவற்றிற்கும் எவ்வளவு பணிவான பதில் சொன்னே. தோட்டக்காரன்ட்டேயே இவ்வளவு பணிவா பேசினா, முதலாளியிடம் எப்படி நடப்ப…!! ஆனால் போன வாரம் ரகுன்னு ஒருத்தன் வந்தான். சே…வெறுத்துப் போச்சு’’
..வெளியே வந்து செல்போனில் ரகுவிடம் பேசினான்….’தாங்க்ஸ்டா மச்சி! நீ ரூட் தந்திருக்காட்டா வேலை கிடைச்சிருக்காது!’’
- கே.பாரதிமீனா (2-1-2008)
தொடர்புடைய சிறுகதைகள்
‘‘ஐயா-மலையை வலப்புறமா சுத்தணுமா-இடப்புறமாவா.’’
‘‘எப்படி வேண்டுமானாலும் சுத்து - மலையைப் பாக்கணும் - அதுதான் முக்கியம்.’’
அந்த இடத்திற்கு விசேட நாளன்று அவன் சென்றிருக்கக் கூடாது. விசேடங்கள் இட விசேடத்தை மங்கச் செய்யும். பெரிய அரண்மனை போன்ற கோவிலின் வெளிப் பிரகாரத்தில் ஒரு மூலையில் ...
மேலும் கதையை படிக்க...
அதிகாலை. வழக்கம் போல தேசிய நெடுஞ்சாலை 45 ஒரம் என் நடைப்பயிற்சி.
இருசக்கர வாகனத்தில் சென்ற ஒருவன் ஒதுங்கி செல்ல....நடு ரோட்டில் கிடந்தது இளநீர்.
தூரத்து பேருந்து நிறுத்தம், மூன்று ரோடு முக்கம் உள்ள டீக்கடை, பால் விற்பனை நிலையம் அருகில் தினம் சைக்கிளில் ...
மேலும் கதையை படிக்க...
ஆண்டவனின் படைப்பில் சில நேரங்களில் சில முடிவுகள்
ஈஸ்வரன் கோயில் மணி அடித்து ஒய்ந்தது மணி சத்தத்தை கேட்டு விழித்துக்கொண்டான் ஜெயராமன். தன்னை சுற்றி நோக்கியவன் வேட்டியை சரி செய்தவாரே டீ கடையில் நுழைந்து ஒரு டீ என்றான். டீக்கடைக்காரன் ...
மேலும் கதையை படிக்க...
இந்த அழகான நகரம் எப்பொழுதும் பல வகையான ஓசைகளை எழுப்பி கொண்டே தான் இருக்கும், அந்த ஓசை அனைத்தும் இணைந்து இசையாய் ஒரு கானத்தை காலை முதலே இந்த நகர் எங்கும் காற்றோடு வருடிவிடும். ஆனால் இன்று இந்த நகரத்தால் ஒரு ...
மேலும் கதையை படிக்க...
“படுத்துக்க மட்டும் வசதி. பெத்துக்க வசதியில்லையா?” ரமா மெளனமானாள்.
ரமா- வித்யா, நெருங்கிய நண்பிகள். ரமா, காதல் திருமணமானவள்.
டாக்டரான வித்யாவிடமே, ரமா போய் நின்றாள். கன்சல்ட் செய்ய அல்ல..? அபார்ஷனுக்காக..!
ஒரு குழந்தைக்காக தவமா தவமிருக்காங்கடி..? முதல் பிள்ளையையே கலைக்கறேங்கற…?
”வேற டாக்டரையாவது ரெகமண்ட் செய் ...
மேலும் கதையை படிக்க...
மாடர்ன் தியேட்டர் அருகில்
பாசமா? தப்பா..! – ஒரு பக்க கதை