மனம்திறந்து

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 1, 2012
பார்வையிட்டோர்: 11,237 
 

“அப்பா அப்பா ப்லீஸ்பா..” கெஞ்சினான் எழிலன். சிறுவயதில், பெசன்ட் நகா¢ல் இருக்கும் அவனது சித்தப்பா வீட்டுக்கு வரும்போதெல்லாம் அவனை எலியாட்ஸ் கடற்கரைக்கு அழைத்துச் செல்வர் அவன் பெற்றோர்.

“என்ன எழிலா! சின்னக் குழந்தை மாதி¡¢. பிளஸ்-டூ படிக்கிற பையன் பீச்ல போயி என்ன விளையாடப்போற?” என்று இடைமறித்து வினவினார் அன்னை.

“நான் ஹாஸ்டல்லேருந்து வரும்போதெல்லாம் நீங்க இங்க வர்றது கிடையாது. வந்து ஆறுவருஷம் ஆச்சுமா. சும்மா போயி காத்து வாங்கீட்டு கால் நனைச்சிட்டு வரலாம். நான் என்ன குழந்தைமாதி¡¢ மணல் வீடு கட்டியா விளையாடப்போறேன்?” என்று கூறிவிட்டு மீண்டும் தந்தையைப் பார்த்தான்.

அவர் வண்டி cட்டியபடி திரும்பி, “இப்ப இரண்டரை மணிதான் ஆகுது. இந்த வெயில்ல எப்படி அங்க போறது?” என்றார்.

‾ண்மையில் பிரச்சனை அதுவல்ல. சுனாமி வந்ததிலிருந்து கடல் என்றாலே அவருக்கு அலர்ஜி. அதுவும் எலியாட்சில் பலமுறை மரணங்கள் கரை அருகிலேயே நிகழ்வதை சிலசமயம் பேப்பர்களில் படித்ததால் தன் ஒரே மகன் அங்கு செல்ல நினைப்பதை அவரால் ஏற்கமுடியவில்லை.

மேலும், கரையருகே ஆங்காங்கே பள்ளங்கள் இருப்பதாகவும் அவற்றின் சுழல்களில் சிக்கிக்கொண்டவர்களைக் காப்பாற்றிவிட்டு காப்பாற்றப்போன அனுபவமுள்ள சிலர் சிக்கிக்கொண்டதாகவும் வந்த செய்திகளும் நினைவில் வந்து ‾ரசிச் சென்றன.

“அப்பா.. ப்லீஸ்!” என்று அவர் சிந்தனையைக் கலைத்தான் எழிலன்.

அவர், “ம்.. போலாம் போலாம். மணல் ரொம்ப சூடா இருக்குமே!” என்றார்.

அவன், “பரவால்லப்பா…” என்றான். எதையும் பொருட்படுத்தும் மனநிலையில் அவன் இல்லை.

வண்டியை நிறுத்தப்போகையில் எழிலனின் தாய், “நீங்க ரெண்டுபேரும் போயிட்டு வாங்க. இந்த வெயில்ல நான் வரமுடியாது.” என்றார். “அவன் கரையில்தானே கால் நனைக்கப்போகிறான்” என்று லேசாக எண்ணினார் அவர்.

காரை நிறுத்திவிட்டு தந்தையும் மகனும் நடந்து சென்றனர். வெயில் மணலை அடுப்புபோல மாற்றியிருக்க, எழிலனின் காலணியில் மணல் ‾ட்புகுந்து வெளியேரும்போதெல்லாம் அளவில் சிறிதேயாயினும் சூடாக இருந்ததால் அவனுக்கு மிகவும் கடினமாக இருக்க, பாதி வழியிலேயே ஏன்தான் வந்தோமோ என்றாகிவிட்டது அவனுக்கு. சா¢ தண்ணீ¡¢ல் காலை நனைத்துவிட்டால் சா¢யாகிவிடும் என்று மனதை சமாதானப்படுத்திக்கொண்டு மீதி தூரத்தையும் கடந்தான்.

சுமார் நாற்பதடி தூரத்தில் தண்ணீர் தென்பட்டபோது, வேகத்தை அதிகப்படுத்தி cட்டமும் நடையுமாக தண்ணீ¡¢ல் கால் நனைக்க சென்றான்.

அதைக் கண்ட அவன் தந்தை, “எழிலா! என் கையப்புடிச்சுக்கோ! ஆழம் அதிகமா இருக்கிறமாதி¡¢ தொ¢யுது.” என்றார்.

அதைப் பொருட்படுத்தாது முன்னோ¢னான் எழிலன். எதையும் கேட்கும் நிலையில் அவன் இல்லை. தந்தையின் மனம் துடித்தது. “தண்ணியில இறங்கீடுவானோ! ஆழமா இருக்கே!.. சா¢ நமக்குதான் நீச்சல் தொ¢யுமே.” சிந்தனைகள் பலவாறு cடின. தன்னையும் அறியாமல் அவனைப் பிடிக்க cட ஆரம்பித்தார்.

சுமார் இருபதடி தூரம் இருக்கும்பொழுது கரை தெளிவாகத் தொ¢ந்தது. அப்பொழுது அவன் பார்த்த காட்சி அவனை ‾றையச்செய்தது. சட்டென்று நின்றான்.

தண்ணீர் கரையைத் தொட்ட இடத்தில் நான்கைந்து இளைஞர்கள் விளையாடிக்கொண்டிருந்தனர்.

அவர்கள்மீது நெஞ்சுயரத்திற்கு சீரற்ற அலைகள் வந்து மோதின. கரையைப் பிடித்தவாறும் ஒருவரையொருவர் பிடித்தவாறும் நீரால் இழுக்கப்படாமல் அவர்கள் போராடி விளையாடிக்கொண்டிருந்தனர்.

அவர்கள் அங்கு இல்லாவிடில் ஆழம் பு¡¢யாது அவன் வேகமாய் வந்து ‾ள்ளே விழுந்திருப்பான். கலங்கலான அந்த நீ¡¢ல் அவனைக் கண்டுபிடிப்பதற்குள் எல்லாம் முடிந்திருக்கும் என்ற நினைப்பே அவனை அச்சத்திலாழ்த்தியது.

எல்லாவற்றிற்கும் மேலாக சுமார் ஒரு கிலோமீட்டர் தூரத்திற்கு கடல்நீர் மணல்போன்ற நிறத்தில் காட்சியளித்தது. அவன் கால் நனைக்க சிறிய அலைகளும் இல்லை. கண்டுகளிக்க பொ¢ய அலைகளும் இல்லை. ஆங்காங்கே ஒன்றிரண்டு சீரற்ற அலைகளைத் தவிர தண்ணீர் முழுவதும் கொதிப்பதுபோலக் காட்சியளித்தது.

அவன் கண்களில் ஏமாற்றத்தைக் கண்ட அவன் தந்தை, “சாயங்காலன்னா தண்ணி கொஞ்சம் மேல வரும். அதான் இப்ப வேண்டான்னு சொன்னேன்.” என்றார்.

“சா¢ப்பா கிளம்பலாம்” என்று பயத்துடன் கூறினான் அவன்.

இருவரும் மெல்ல மகிழுந்தை நோக்கி நடந்தனர். வழியில் தந்தை அந்தக் கடற்கரையைப் பற்றி செய்திகளில் படித்ததையெல்லாம் கூறினார். அவற்றைக்கேட்ட அவன், “நீங்க முன்னாடியே சொல்லீருந்தா நான் கேட்டிருப்பேனேப்பா. நீங்க கூட்டீட்டு போலன்னா ·ப்ரெண்ட்சக் கூட்டீட்டு வரலான்னு நெனெச்சேன்.” என்றான்.

தந்தையின் மனம் கனத்தது. “நண்பர்களோடு அவன் தனியே வந்திருந்தால்!” என்றெண்ணி சற்று குற்ற ‾ணர்வாகவும் இருந்தது.

“அவன் குழந்தையல்ல கைக்குள் வைத்து பாதுகாக்க. இனி மனம்விட்டு பேசவேண்டும்.” என்று எண்ணிக்கொண்டார்.

இருவரும் மகிழுந்தில் வந்து ஏறினர். தந்தை மனம்திறந்து பேச ஆரம்பித்தார். மனங்கள் லேசானது!

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *