கிருத்திகா! இன்னிக்கி ஊருக்கு புறப்படுறதுக்கு என் உடைகளையெல்லாம் சூட்கேசுல வச்சுக்கிட்டேன், என்று சொன்னாள் மனோகரி. சரியாகவே நீங்க வைக்கல
அண்ணி. நான் வைக்கிறேன் பாருங்க என்றவாறே மனோகரியின் உடைகளை அனைத்தையும் மடிப்பு கலையாமல் வெளியில் எடுத்து, ஒவ்வொன்றாக நீவி,
இரண்டு தட்டு தட்டி, பின்னர் சூட்கேசில் அடுக்க ஆரம்பித்தாள் கிருத்திகா.
மாலையானதும் கணவனுடன் மனோகரியை பஸ்சில் ஏற்றிவிடப் போனாள். அடுத்த வீட்டு மிருணாளினிக்கு குழப்பமாயிருந்தது.
மனோகரி விருந்தாளியாக வந்ததுவே பிடிக்காத கிருத்திகா அவளுக்கு எடுபிடி வேலை எல்லாம் இப்படி புன்னகைத்தவாறே எப்படி செய்கிறாள்?
சிரித்தாள் கிருத்திகா. அண்ணி உடைகளை எதுக்காக சூட்கேசில் அடுக்கினேன்னா அண்ணியோட, அயர்ன் பண்ணியிருக்குற டிரஸ்க்குள்ளே எனக்கு தெரியாம ரூபா நோட்டுகளை என் கணவர் மறைச்சு வச்சுக் குடுத்திருப்பாரோங்குற சந்தேகம் தான். பஸ்சுல ஏத்திவிட கூடவே நான் போனதுக்கு காரணம் பஸ் புறப்படுறப்பா
அண்ணியோட கையில பெரிய தொகை ஏதாவது குடுத்துடக்கூடாதுங்கிறக்காக புரியுதா?
மலைத்து நின்றாள் மிருணாளினி.
- அன்பிற்கினியன்
தொடர்புடைய சிறுகதைகள்
செவ்வாய்க்கிழமை விடிந்துவிட்டாலே கற்பகத்திற்கு ஏனோ உள்ளூர ஒரு பயம் தோன்றி விடும். ஏதாவது ஒரு சிறுவிபத்தோ அல்லது சோக நிகழ்ச்சியோ தவறாமல் நடந்தே தீருவது வழக்கமாகப் போய்விட்டது.
விடியற்காலையில் தினசரிக் காலண்டரில் தேதியைக் கிழித்தபோது அவள் ராசிக்கு 'சோகம்' என்று பலன் சொல்லியிருந்தது ...
மேலும் கதையை படிக்க...
“முதலாளி நம்ம ஓட்டல் ஒரு சின்ன ஓட்டல், இதுக்கு எதுக்கு முதலாளி ரெண்டு ரிசப்ஷனிஸ்ட். பெண் ரிசப்ஷனிஸ்ட் ஒருத்தரே போதும். தேவை இல்லாம் எதுக்கு இன்னொரு ஆண் ரிசப்ஷனிஸ்ட்?’
ரூம் பாய் சந்திரன் ஓட்டல் முதலாளி கண்ணபிரானைக் கேட்டான்.
கண்ணபிரான் பதில் சொன்னார்; ...
மேலும் கதையை படிக்க...
மாலை. இருள் கவியத் தொடங்கியது. அறுத்த புல்லைக் கட்டி, தலைமீது சுமையாக ஏற்றிய சாலாச்சி விறுவிறுவென வரப்பில் ஏறி நடையைக் கட்டினாள். நாலு எட்டுப் போட்டால் தாமிரவரணி வடிகால் வந்துவிடும். சுமை கனத்தது. வேர்க்க விறுவிறுக்க நடந்தாள். இருபுறமும் நாற்று நெகுநெகுவென ...
மேலும் கதையை படிக்க...
என் அம்மா ரொம்ப நன்றாக சமைப்பாள் . அம்மா செய்த ரவா தோசை , அடை மாதிரி நான் எங்கேயும் எப்போதும் சாப்பிட்டது இல்லை என்று சொன்னால் பொய்யோ என்று கூட உங்களுக்குத் தோன்றும்.
ஆனால் அது எங்களின்அபிப்ராயம் மட்டும் இல்லை, எங்கள் ...
மேலும் கதையை படிக்க...
மாலையும், ஊதுபத்தி மணமும் சென்ட்டின் வாசமும் அந்த இடத்தின் நிகழ்வை தெருமுனையிலேயே கட்டியம் கூறிக் கொண்டிருந்தன.
வசந்தன் பிணமாக கிடத்தி வைக்கப்பட்டிருந்தான். அவன் மனைவி லதா ஓர் ஓரமாக வெறித்த பார்வையோடு இறுகி போய் உட்கார்ந்திருந்தாள் அருகில் மகன் சுரேஷ{ம், மகள் சுபாவும் ...
மேலும் கதையை படிக்க...
ரிசப்ஷனிஸ்ட் – ஒரு பக்க கதை