புட்டுக்கலவை

 

தன்னைத்தானே செதுக்கிக் கொண்டு உருப்படுபராக ராமு சித்தப்பா.

கால ஓட்டத்தில் முகம் மறந்து போன உருவினராயும், என்னிலிருந்து துடைத்து எறியப்பட்டமனிதராயும் ஆகிப்போன ராமு சித்தப்பா நேற்று முன் தினம் மாலை 6 மணியை கடந்த பொழுதில் என்னில் உருக்கொள்கிறார் திடீரென எதிர்பாராத பொழுதில் எதிர்பாராத நேரத்தில் திடீரென என் நினைவலைகளில் நீந்திக்கொண்டு என் முன் நிற்பவராய் கை, கால், முகம், உடல் என அனைத்தும் வெளிப்பட தன்னைத் தானே செதுக்கிக் கொண்டு முழு உரு வெளிப்பட நிற்கிறார் ராமு சித்தப்பா.

அது ஒரு அடைமழை நாளின் இரவுப்பொழுது.தோட்டத்தில் இருந்ததால் அது முன்னிரவா,பின்னிரவாஎனசரியாகத்தெரியவில்லை.

ஒன்னறை ஏக்கர் நிலத்தில் (முக்கால் குறுக்கம்) பிடுங்கிப்போட்ட கடலைச்செடியிலிருந்து பிரித்தெடுத்த கடலைகளை தோட்டத்தின் நடுவில் மண் குவித்த மேட்டில் மூடை போட்டு அடுக்கி வைத்திருந்தோம்.

படர்ந்து,கிளைபரப்பி நின்ற வேப்பமரத்தின் அடியில் சுற்றிலுமாய் உள்ள மண்ணை ஒரு சாண் உயரத்திற்கு சதுரமாய் மேடிட்டு அதில்தான் மூடைகளை குடியமர்த்தினோம்.

பச்சைகடலை.ஒட்டியிருக்கிற மண்ணோடும்,அதன் ஈரத்தோடும்,வாசத்தோடும் செடியிலிருந்து பிடுங்கிய மனிதக்கரங்களின் உழைப்போடுமாய் சாக்கு மூட்டையில் போட்டு தைத்து அடுக்கியிருந்தோம்.

ஒன்றின் மீது ஒன்றாக பத்து மூட்டைகள்.இரண்டு வரிசையாக/அதன் மீது போர்த்தப்பட்டிருந்ததார்ப்பாய்.அதனுள்ளே காவலுக்கு படுத்திருந்த நாங்கள்.நாங்கள் என்றால் நான் மற்றும் ராமு சித்தப்பா.

சித்தப்பா என்றால் அவரும் நானும் உறவினர்கள் இல்லை.வேற்று ஜாதிகளுக்குள் முறைவைத்து அழைத்துக்கொள்கிற பழக்கத்தை இன்னும் முடியிட்டும்,அணையாத தீபமாகவும் பாதுகாத்து வைத்திருக்கிற கிராமங்களில் எங்களதும் ஒன்றாக/
மாமா, மச்சான், சித்தி, சித்தப்பா, அத்தை, அண்ணன்,,,,,,,,என பழகி விடுகிற
உயிரோட்டங்களில் ஒன்றாக முளை விட்டு நின்று தெரிந்தது.

அந்த வகையில் ராமு எனக்கு சித்தப்பா ஆகிறார்.ஆடு மேய்த்து பிழைப்பை நடத்துகிறசாதாரணஅன்றாடங்காய்ச்சிஅவர்.5 உருப்படிகளை சொந்தமாகவும், இன்னும் அதனுடன் சேர்த்து 5 உருபடிகளை வாரத்துக்கும்(பிறரது ஆடுகளையும் சேர்த்து பாதுகாப்பது.ஆடுகளின் முதலாளிகள் வேறு,வேறு நபராகவும் பராமரிப்பவர் இவராகவும் இருப்பார்.அதற்கு ஒரு கூலி என்கிற ஏற்பாடு மேய்ப்பார்.

காலை எழுந்தவுடன் மொழு,மொழுகடை சாயாவில் துவங்குகிற அவரது ஓட்டம் இரவு படுக்கப் போகிறவரை நிற்காது.எதனை சாக்கிட்டாவது எங்காவது போய்க்
கொண்டிருப்பவராகவும்,வந்து கொண்டிருப்பவராகவும் தென்படுகிறார்.

மனைவி இல்லை,இவர்,ஆணொன்றும், பெண் ஒன்றுமாய் இரண்டு பிள்ளைகள் அடங்கிய குடும்பம் என்கிற சிறு சக்கரமே அவரது சுழற்சி அதையும் ஆடு,குட்டி அவற்றின் மேனி வாசனை,கோமியம்,ஆட்டுப்புழுக்கை, அவை உதிர்க்கிற ரோமம்,மேய்தல்,காடு,கரை கூடவே வீட்டின் சாப்பாடு என அவரது நிர்வாகஸ்த வேலைகளுக்கு உட்படுகிற இவைகளில் அவரது சமையல் மட்டும் அவரது பிள்ளகளுக்குக்கூட பிடிப்பதில்லை.

கரைத்தபுளியைஅதன்வாசனை கூட மாறாமல் அப்படியே சூடுபண்ணிக்கொடுப்பார். ரசம் என/இப்படித்தான் எல்லாவற்றிலும் ஆகிப்போகும்.

முக்கால்வாசி நாட்களில் பிள்ளைகளுக்கு தண்ணீர் சோறுதான்/சுளித்த முகத்தோடும் வெறுத்த மனத்தோடும் சாப்பிடும் பிள்ளைகளிடம்,,,,,,,, “இப்படி கை மொன்னையாகிப்போன அப்பங்கிட்ட இத விட என்ன பெரிசா என்ன எதிர்பாக்குறீங்க, பாவம் நல்லாதிங்குற வயசு,நாந்தான் செஞ்சு போட முடியாத பாவியாகிப்போனேன் என்கிற சுய பச்சாதாப வார்த்தைகள் அவரில் எழுகிற கணங்களில் நான் அவரின் முன் போய் நின்று விடுகிற அப்பாவித்தனம் நிகழ்ந்து விடுவதுண்டு பெரும்பாலான நாட்களில்

“வாப்பா.வந்துட்டயா,நீயும் கொஞ்சம் சாப்புடு,இந்த கொடுமக்காரன் செஞ்ச சாப்பாட்ட” என சிறிது நேரம் வேறு வேறாக பேசுகிற பேச்சின் நீட்சி பிள்ளைகள் வீட்டை விட்டு கிளம்பிய பின் அழுக்கையில் போய் முடியும் அல்லது வந்து நிற்கும்.

“மகராசி ஏங்பொண்டாடி போயி சேந்துட்டா,நான் கெடந்து சீப்படுரேன் இதுகளோட,நல்லா வளந்து நிக்குற பிராயம்,அதுகளுக்கு செம்மையா செஞ்சுகூட போட முடியாத படுபாவியாகிப்போனேன் என தலையில் அடித்துக்கொண்டவராய் மௌனமாகி விடுவார்.

அந்த கனம் மிகுந்த நேரத்தில் மௌனம் வியாபித்துக்கிடக்கிற சுற்று வெளியின் அதுவானத்தில் நாங்கள் இருவர் மட்டுமே தனித்த் விடப்பட்டவர்களாகவும்,பேச ஏதும் பேச்சற்றவர்களாகவும் அனேகமாக ஊரில் யாரும் நெருங்க பயப்படுகிற அவரிடம் நானும் எனது குடும்பத்தாரும் நன்றாகவும்,நிறையவுமே பழகினோம்.

அப்படி மற்றவர்கள் அவரை ஒதுக்கி வைக்க நோயுற்ற அவரது உடலே காரணமாக சொல்லப்பட்டது.

கைகால்களில் விரல்களற்ற,மேனியெங்கும் தடிப்பு,தடிப்பாய் வீங்கித்தெரிகின்ற கண்கள் பஞ்சடைந்தும், தலைமுடி செம்பட்டை பாய்ந்தும் உடல் குறுகியும் போய் இருக்கிற அவரைத்தான் நான்சித்தப்பா என்றேன்.

அப்படியான சித்தப்பாவும் நானும்தான் பிடுங்கிப் போட்ட கடலை மூடைகளுக்கு
அன்று காவலுக்குப்போயிருந்தோம்.

இறுகப்பற்றி இழுத்து மூடப்பட்ட தார்ப்பாயின் ஒவ்வொரு முனையிலும் கல்லை வைத்திருந்த வேப்பமரத்தின் அடியில்தான் நாங்கள் படுத்திருந்தோம்.

பரந்து விரிந்து கிளை பரப்பி ஆகுருதி காட்டிய மரம் தனது வயதை இருபது வருடங்களுக்கும் குறையாமல் சொன்னது.

வீட்டிலேயே இரவு சாப்பாடு முடித்து விட்டு தோட்டத்திற்கு போன சிறிது நேரத்திலெல்லாம் மழை தன் கரங்களை விரித்து பூமிக்கும்,வானத்திற்குமாய் நெசவிட ஆரம்பித்தது.

கேட்டால் “இது என் காலம்,அடைமழை நேரம் அப்படித்தான் பெய்வேன்” என்றது அடமாக,அது பார்த்து சொல்லும் போது என்னதான் செய்வது?,,,,,,,,

அதை ராமு சித்தப்பாவிடம்சொன்னபோது “அதெல்லாம்சரியப்பா,இந்த மழையிலயும்,
பேய்க்காத்துலயும்இப்பிடிபழுத்தமரத்துக்கடியிலதார்பாயிக்குள்ளபடுத்துக்கெடக்குறம
ஏதாவதுஅசம்பாவிதமாஆயிப்போச்சுன்னாஎன்னபண்றதுப்பா”,என பேசியவாறும்,
புலம்பியவாறும் அன்று இரவுப்பொழுதை மழையினூடாகவும் மழை நின்ற பின்புமாக கழித்த ராமு சித்தப்பா,,,,,அந்தக்கடலை மூடைகளையும், கடலை மூடைகளுக்கு எங்களுடன் சேர்த்து காவல் நின்ற வேப்பமரத்தையும் விலைக்கு விற்று பணமாக்கி செலவழித்து முடிந்து போன பின் நாட்களின் ஓர் அடர்த்தியான இரவுப்பொழுதில் இறந்து போனார்.

அவரை புதைத்த இடம் இன்று புல் மண்டிப்போயிருக்கலாம். நானும்,வேலை,பிழைப்பு நிமித்தம்கிராமத்திலிருந்து வெளியேறி ஒரு மத்தியதர வர்க்கத்தினனாய் உருமாறிப்போன பொழுதுகளில் என்னில் நெசவிட்ட ராமு சித்தப்பாதன்னைதானே செதுக்கிக் கொண்டு வெளிப்படுபராகவும்,உருப்படுபட்டு தெரிபவராகவும். 

தொடர்புடைய சிறுகதைகள்
சாவி வாங்க வேண்டி வந்ததினால் அங்கு வந்தேன்.இல்லையெனில் வந்திருக்க மாட்டேன். ஒரு டீ நாவின் சுவையறும்புகள் மீது படர்ந்து தொண்டைக் குழி வழியாக இறங்கி சுவை கொடுக்கிறதாக அல்லது திருப்தியோ, மன நிம்மதியோ கொள்ளச் செய்வதாக காளியம்மா வீடு, பெருமாள் சாமி டீக்கடை,சிந்திக்கிடந்த ...
மேலும் கதையை படிக்க...
கருத்து நீண்டு கிடக்கிறது சாலை,எட்டிப்பிடிக்கநினைத்தயாரோ முடியாமல் போனதனால் அப்படியே விட்டுவிட்டதைப்போல/ கண்ணுக் கெட்டிய தூரம் வரையாய் நீண்டுவளைந்து நெளிந்திரு ந்த கறுப்பு பார்ப்பதற்குஅழகாகவே இருந்தது.ஒருமுனையை பிடித்துத்தூக்கினால் மறு முனை எழுந்து நிற்கும் போலானதொரு தோற்றம். எதுநன்றாக இருக்கிறதோ அது நன்றாகவே இருக்கட்டும்,எது நன்றாக இல்லையோ ...
மேலும் கதையை படிக்க...
முன் இரவு வரும் நேரம் மறைந்த சூரியன் ஒவ்வொன்றாய் காட்சிப்படுத்துகிறான் சைக்கிளில் விரைந்து கொண்டிருந்தவனின் முன்னே. காட்சிகள் வீதிகளாக,கடைகளாக,அலுவகங்களாக கோயில்களாக,டீக்கடை களாக,ஹோட்டல்களாக நகர்ந்து, நகர்ந்து கொண்டு வந்து சேர்த்தஇடம் டுடோரியல் கல்லூரியாய் இருந்தது. இடதுபுறம்நூலகம்,வலதுபுறம் அலுவலகம் உறவினர்கள், தோழர்கள், நண்பர்கள் என நெசவோடியிருந்த ...
மேலும் கதையை படிக்க...
இருப்பதைக்கொடுங்கள் போதும் எனச்சொல்லுகிற மனது வாய்க்கப் பெறுவது மிகப்பெரும் வரப்பிரசாதமாயும், பாக்கியாகவுமே. காலை ஒன்பது மணிக் கெல்லாம் கிளம்பி மதுரைவரை போய்விட்டு வந்து விடலாம் என்கிற நினைவு தாங்கி நேற்று இரவு தூங்கிப்போனது தான். ஆனால் காலையில் எழும்போது வழக்கமான சோம்பலும் மிதமிஞ்சிப்போன ...
மேலும் கதையை படிக்க...
நண்பன் போன் பண்ணிய வேளை இவன் வீட்டில் இல்லை.டீக்கடைக்குப் போயிருந்தான்,எங்கு போனாலும் செல்போனை பிள்ளை போல் தூக்கிக் கொண்டு செல்வான்,அருகில் உள்ள கடைதானே என எடுத்துச் செல்லவில்லை, டீக் கடைக்காரருக்கு இவனது செல்போன் மேல் ஒரு கண்,கடைக்குப்போகும் போதெல்லாம் செல்போனை வாங்கி அதன் ...
மேலும் கதையை படிக்க...
குழல் விளக்கு
ஐஸ்க்குச்சி…
விதைப்பு உழவு
இன்வாய்ஸ்
அருகிலிருந்த டீக்கடை நோக்கி…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)