Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

படிக்கட்டு…

 

இவன் சென்ற பஸ்ஸின் கண்டக்டராய் அவர்.அவர் சிரிப்புக் கண்டக்டரும் இல்லை அதே வேளையில் சீரியஸ் கண்டக்டரும் இல்லை அவர். ஆனால் கண்டக்டர், கண்டக்டர் அய்யா, கண்டக்டர் சார், கண்டக்டர் அண்ணே என்கிற அழைப்பொழிகளிலும் அதன் இயக்கத்திலுமாய் அன்றாடம் முனைப்புக்காட்டி இயங்கிக் கொண்டிருக்கிற அவரின் வயது 50 இருக்கலாம்.

தொலை தூர பஸ்களில் ஓடுகிற கண்டக்டரைப்போல இல்லாமல் கொஞ்சம் கறார் கம்மியாகவும் போட்டிருக்கிற சீருடையில் அங்கங் கேநூல்பிரிந்து தொங்கியும் தொள தொளப்பாய் தெரிகிறவருமாய், எப்பொழுது துணி எடுத்து என்ன அளவு கொடுத்து எந்தடெய்ல ரிடம் போய் தைத்திருப்பார் என்பது அறிய வழியற்ற வகையாகவே, சட்டைக்கல்ரின் வெளுப்பும் பேண்ட்டின் நைந்த தன்மையும் அவரின் முழு அடையாளம் சொல்லிச்சென்றதாக.

தஞ்சாவூர் பணியாற்றிய நாட்களில் அலுவலகத்தில் மதியம் சாப்பி ட்டு பஸ்ஸேறும் பொழுது மணி மூன்றாகிப் போகும். சமயத்தில் கூடஅரைமணிஆகிப்போகும்.பழையபஸ்டாண்ட்டிலிருந்து பஸ்ஸே றி புதுபஸ்டாண்ட் வரவே கால் மணிக்கும் மேலாகிப்போகும்.அது ஒரு கலிகாலம்.உள்லம் கலி கொண்ட காலமாது.விருதுநகரிலிருந்து தஞ்சாவூருக்கு பணிமாறுதல் ஆன தினங்களில் தஞ்சாவூர் எந்த திசை,அங்கு பயணிக்க எவ்வளவு நேரமாகும், எப்படிச் செல்வது, புகைவண்டியிலா, பேருந்திலா, தனியாகவா அல்லது, என யோசித்துக் கொண்டிருந்த கணங்களில் இத்தனாம் தேதிக்குள்ளாய் போய் பணியை ஒப்புக்கொள்ளவேண்டும் என்கிற உத்தரவு தாங்கி மூத்த ம்மகனுடன் ஏழுமணி நேரம் பயணித்து தஞ்சாவூரில் காலடி எடுத்து வைத்த நாளிலிருந்து அங்கிருந்து பணி மாறுதலாகி வருகிற ஒரு வருட காலம் வரை நாய் பாடு பட்ட கதையாகித்தான் போனது .தங்குவதற்கு ஓரளவு வசதியான அறை இருந்தது. சாப்பிடுவதற்கும் சுமாரானது முதல் ஓரளவு பெரியது வரைக்கு மான ஹோட்டல்கள் இருந்தது, எண்ணிச்செலவழிக்க கையில் ஓரளவிற்கு பணம் இருந்தது.துணையாய் இத்தனை இருந்தும் ஏதோ தனித்து விடப்பட்ட அனாதை மனோநிலைக்கு ஆளான வனா யும் திருமணமான பிரமச்சாரியாகவுமே காட்சிப்பட்டான்.

சமயத்தில் சக்கரபாணியண்ணன் கொண்டு வந்து விடுவார். அவரு டைய இரு சக்கரவாகனத்தில்.சக்கரபாணியண்ணன் அலுவலகத் தில் உடன் வேலை பார்ப் பவர்.யார் ஒட்டுதலும் அற்று தனியாக ஒற்றைக்காட்டு மனம் படைத்தவராய் அலுவலகத்தில்அடையாளம் சுமந்து இருந்தவரைஇவன் போய் பணிக்குச் சேர்ந்த சில,பல தினங்களில் மடைமாற்றம் செய்துவிட்ட சாதனை படைத்த நாளிலிருந்து இவனுடன் மிகவும் ஒட்டிப்போனவராய் தெரிந்தார்.

அவருக்கு பக்கத்து வீட்டுக்காராய்த்தான் இருந்தார் இவன் ஏறிய பஸ்ஸின் கண்டக்டர்.சக்கரபாணி வந்து பஸ்ஸேற்றி விடவருகிற நாட்களில் அவரைப் பார்த்து சொல்லிவிட்டுப்போவார்.நம்ம சார் தான் இவர் என என்னதான் சொன்ன போது கூட சிரிப்பை கழட்டி வைத்த கண்டக்டராய் காணப்படுவார்அவர். நாகபட்டிணத்திலிருந்து வருகிற பஸ்ஸது, மதியம் மூனறை மணிக்குப்போனால் ஏறிக் கொள்ள லாம்.தஞ்சாவூ ரிலிருந்து மூனறை மணி நேரம் தான் மதுரைக்கு வந்துவிடலாம். என்ன சார் இது இப்பிடி பேசுறீங்களே, பேச்சுக்கு அஞ்சி எல்லாரும் எறங்கீட்டாங்கன்னா வெறும் பஸ்ஸவா ஓட்டிக் கிட்டு போவீங்க என இவன் கண்டக்டர் கறாராக பேசிய ஒரு தினத்தில் கேட்ட போது சிரித்துக் கொண்டார் அவர்.

இப்படி இக்கட்டு ஏதும் ஏற்பட்டால் மட்டுமே பேசுகிற, சிரிக்கிற கண்டக்ராக இல்லாமல் இவர் இருந்தது சற்று ஆறுதலாய் இருந்தது.

பஸ்டாப்பில் பையுடன் வந்து நின்றால் போதும் ,கைபிடித்து எட்டி இழுத்துப் போட்டு விடுவார்.அவ்வளவு ஒட்டுதல் அல்லது அவ்வளவு பற்றுதல் எனச் சொல்லலாம்.எல்லோரிடமும் அப்படி நடந்து கொள்ள மாட்டார்.அவருக்கு தெரிந்திருந்தது,யார் யாரிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என அவரது அனுபவமும் வயது அதை அவருக்கு க்கற்றுக்கொடுத்திருந்தது.

ஓடித்தெரிகிற பேருந்துசாலையில்விரைவுகாட்டுகிற வேளையில் மனம் முளைக்கிற எண்ணங்களிலும்,வெளித்தெரிகிற காட்சிகளி லுமா ய் அவர் முகம் பட்டுத் தெரிய நடமிடுகிற வேளையாய் இருக்கிற பொழுதுகளில் சாலையோரங்களில் ஓடுகிற பருத்துத் தெரிகிற மரங்கள் சாலையில் பயணி க்கிற பாதசாரிகள், இரு சக்கரவாகனங்கள், பேருந்துகள்.லாரிகள் மற் றும் மற்றுமான சாலையின் இயக்கம் பேருந்தினுள் இருக்கும் இயக்கத்தினூடாக கண்டக்டரையும் அவரது பேச்சையும், நடத்தையையும் வெளிக் காட்டுவதாக அதுவே அவரை நிலை நிறுத்துவதாக அங்கே அவரைப்பார்க்கிற போதெல்லாம் எங்கோ பார்த்ததாய் ஞாபகம்,ஒரு சினேக பாவமும்,ஒரு வாஞ்சையும் ஒட்டித் தெரிகிற பார்வையும், ஒட்டுதலும் நெருங்கிய உறவினர் போலவும் நெஞ்சம் தொட்டு நெசவிடுபவர் போலவும் மிகவும் வாஞ்சை காட்டி பிரியம் சொல்கிற மனிதர் போலவுமாய் காட்சிப்படுகிற அவரை வாரத்தில் இரண்டு அல்லது மூன்று தினங்களில் அவர் டூட்டி பார்க்கிற பஸ்ஸில் பார்க்க நேரிட்டு விடுகிறதுண்டு,கூடவே அவரிட்டம் டிக்கெட் வாங்கி பயணிக்கவுமாய் ஒன்று இங்கிருந்து செல்வான் பணியிடம் நோக்கி,அல்லது அங்கிருந்து வருவான்.

இன்றுகாலை 8.45 மணி பஸ்ஸை எட்டிப்பிடித்து விடலாம் என்கிற ஆசை நிரம்பி வழிய வந்தும் கூட ஒரு நம்பரில் தவறவிட்ட கதை யாகிப் போனது. பிறகெ ன்ன காத்திருந்தான் அடுத்த பஸ் வர, அடுத்த பஸ்வரும் வரைசும்மா காத்திருப்பது இவன் போன்ற ஆணுக்கு எப்படி அழகாகும்?இருக்கவே இருக்கிறது வருசையாய் முளைத்து நிற்கிற டீக்கடைகள்.ஆதில் ஏதாவது ஒன்றில் தஞ்சம் காட்டி டீக்கிளாஸீடன் நின்றா ல் துவர்ப்பு தாங்கிய ப்ரவுன் கலர் திரவம் நாவின் மென் சுவையறும்புகள் தொட்டு உள்ளின் உள்ளில் பயணிக்கிற சுகம் அனுபவிக்கிற நாள்வரை கடைமுன்னால் காட்சிப்பட்டு விட்டு நேரம் வந்ததுமாய் பஸ்ஸேற நகன்று விடலாம் அவ்விடத்தை விட்டு என்கிற எண்ணம் படர பஸ்ஸிற்காய் காத்து நிற்கிற வேளையில் மென் தென்றாய் தென் படுவாள் யுவதி ஒருத்தி .கண்ணுக்கு உறுத்தாத கலரில் புடவையும் அதற்கு மேட்சாய் சட்டையும் அணிந்து வருகிற அவள் பார்க்கப்பாந்தமாய் இவன் பஸ்டாப்பிற்கு போகிற வேளையில் அவள் வருகிறாளா அல்லது அவள் பஸ்டாப்பிற்கு வருகிற வேளை பார்த்து இவன் போகிறானா தெரியவில்லை.

அந்தகாலை வேளையில் பரபரப்பாய் இயங்கிக்கொண்டிருக்கிற பஸ்டாப்பில்அவசரமற்ற அவளது நிதானம்தான் அவளைகவனிக்கச் செய்திருக்கிறது இது நாள்வரை இதெல்லாம் ஒரு பொருட்டே இல்லை இளநீர் கடைக் காரருக்கு.

அவருக்கு அவரதுகடையும், கடைக்குஅவரதுபேச்சுமே மூலதனமாய்” அதுன்னா நாலுரோடு சந்திக்கிற முக்கு நல்ல பார்வ உள்ள யெடம்,என்ன இருந்தாலும் இது ஒரு மொடங்கதான, என்கிறார்.

இப்பொழுது பஸ்டாப் இருக்கிற இடத்தில்தான் முன்பு இளநீர் கடை போட் டிருந்தார்,அருப்புக்கோட்டை பஸ் வந்துருச்சி,பரளச்சி கமுதி புதுப்பட்டி எல் லாம் ஏறுறவங்க,இருந்தா தயாரா இருந்துக்க ங்க என்பார்,பஸ் வரும் நேரம், எந்த பஸ் எந்நேரம் எந்த ஊருக்குச் செல்லும் என சரியாகச் சொல்லுவார்.

என்னசார் முன்னபோலஇல்லயேவாரம்,பாருங்க ஸ்டிக்கர் ஒட்டி வருதுஎழனி, இதுக்குன்னு ஒரு தனி ரேட்டு,செவ்வெழனி வேற, நாங்க யெறக்குற லோடுல தரம் பாத்து பிரிச்சி மொதலக்காப்பாத்தி லாபம் பாத்துப்போகணும் வீட்டுக்கு/ இதுல வர்ரவுங்க போறவுங்களுக்கு குடுக்குறது தனி.காசு கேக்க முடியாது, எனச் சொல்கிற எளனிக்கடைக்காரருக்கு வலது கால் கட்டைக் காலாய் ஒருநாளின் அதிகாலையில் நடந்த லாரி விபத்தில்இழந்து காலுக்கு கட்டை கால்தான் பரிகாரமாய் இருக்கிறது என்கிறார்.

அவரிடம்பேசிக்கொண்டிருந்தஒரு மென் பொழுதில் பஸ்ஸிற்கு வந்து நின்றவள் யாராக இருக்கக் கூடும் எனத் தெரியவில்லை. வயதான தோற்றம் தந்த மூதாட்டி யாய் பெண்கள் சீக்கிரம் மூப்பெய்திப்போவது ஆச்சரியமாகவே  பார்த்தால் பாலமேட்டில்பஸ்ஸிற்காய் நிற்கிற போது கையேந்தி வருகிற மூதாட்டியின் சாயலில் தெரிகிறாள். இவன் தான் அன்று அவளை பஸ்ஸேற்றி விட்டான், சாயங்கால நேரம் பாத்துப்போங்க என ஆச்சரியம் இவன் மூதாட்டியை ஏற்றிய பஸ்ஸில் அன்றாடம் செல்லும் அதேபஸ்ஸின் கண்டக்டர். அவரிடம் சொல்லிய போது கவலப்படாதீங்க,ஏங் அம்மாவ யெறக்கிவிட்டதப் போல அவுங்கள யெறக்கி விட்டுர்றேன் என்றார்.

இவன் மனைவி இவனிடம் சொல்லாத நாட்கள் இல்லை.ஏங் பஸ்ஸேறுற யெடத்துக்குப் பக்கத்துலதான் எளனிக்கடை இருக்கு, அப்பிடியே ஊடமாட ஒரு எளனி வாங்கி குடிச்சிக்கிற வேண்டியது தான என அவளது சொல்லி இருக்கிற ஞாயமும் அக்கறையும் இவனுக்கு சரி என்று பட்டபோதும் அங்கு போய் நிற்கிற மறுமணம் இவன் மனம் நாடுவது டீயையே அப்படியெல்லாம் மனம் நாடி டீக்குடிக்கிற வேளைகளில் மனம் ராமசுப்பு சித்தப்பாவை நினைத்துக் கொள்ளாமல் இல்லை,15 பைசாவிற்கு சக்கரை டீ போட்டு தனது வாழ்க்கையின் ஆரம்பசுருதியை டீக்கடையிலிருந்து முடிபோட்டவர். டீன்னா சுருக்குன்னு இருக்கணும்டா பெரியவனே என்பார்.

மாரியப்பன் அண்ணன் அந்த பஸ்ஸில் தான் வருவதுண்டு பெரும்பாலுமாய் அவர் இவன் வேலை பார்க்கிற நிறுவனத்தில் வேறொரு கிளையில் கிளார்க்காக இருப்பவர்.நல்ல மனிதர்,அவரை முதன் முதலாக பஸ்சில் பார்த்த அன்று இவனில் சரியாக அவர் முகம் பதிந்து தெரியவில்லை.

இவன் பஸ்ஸின் பின்ப்படிக்கட்டு ஓரம் பரவாயில்லாத கூட்டத்திற்குளாய் புதைந்து நின்றவனாய் இருந்தான்.அவர் முன் படிக்கட்டு ஓரமாய் நின்று கொண்டு இவனை உற்றுப்பார்த்தவராய் காணப்படுகிறார்.

வெளிர் ஊதாவில் பட்டைபட்டையாய்கோடு போட்டசட்டை,கறுப்புக் கலர் பேண்ட்,கறுப்புக் கலரில்செருப்பு அணிந்திருந்தார்.வார் வைத்திருந்தது, பின்னால் இழுத்து மாட்டியிருந்தார்.ஏதோ ஒரு முண்ணனி கம்பெனியின் தயாரிப்பாக இருக்க வேண்டும்.

ஊரெல்லாம் இப்பொழுது இந்தச்செருப்புதான்,கடந்த ஒரு மாதமாய் செருப்பு வாங்க வேண்டும் என்கிற இவனது நினைப்பில் அவ்வப் பொழுது வந்து படுவது இது போன்றவைகள்தான்.பார்க்கும் பொழுதும் பார்த்த நாள் முழுவதுமாய் கூட அந்த பாதிப்பிலிருந்து மீளமுடியாமல் போவதுண்டு சமயாசமயங்களில் ரெடிமேடா அல்லது எடுத்துத் தைத்ததா தெரியவில்லை. அவ்வளவு பிட்டாக இருந்தது. இவனுடன் வேலை பார்க்கிற குருசாமி பெரும்பாலுமாய் ரெடிமெட் தான் போடுவார். நன்றாக இருக்கும். நன்றாக இருக்கிறதோ இல்லையோஅவரின் தேர்வு அதுவாகத்தான் இருந்திருக்கிறது இதுநாள் வரை  கேட்டால் பட்ஜெட் என்பார். வீட்டில் முடியாமல் இருக்கிற மனைவியின் மருத்துவச் செலவுக்கு மாதச் சம்பளத்தில் பாதி போய் விடுவதாய்க் கூறுகிறார். இருக்கட்டும் என்ற போதிலும் கூட அதற்காக இப்படியா என்றால் ஆமாம் என்ன செய்ய, எனச்சிரிப்பார்.

பெரும்பாலான நாட்களில் அணிந்து வருகிற ஜீன்ஸ் டீசர்ட் தவிர்த்து இன்று கறுப்புப்பேண்டும் வெள்ளைச்சட்டையுமாய் அணிந்து வந்திருந்தான். கறுப்பு வெள்ளை அதுவும் நன்றாகவே இருக்கிறது.இவனுக்குநினைவு தெரிந்து 20 வயதிலிருந்து இப்படித் தான் இவன் காஸ்ட்யூம் இருந்திருக்கிறது. கறுப்பு என்றால் தீவிரகறுப்பும் இல்லை,வெள்ளை என்றால் தீவிர வெள்ளையும் இல்லை. இவனுக்கு இப்படி உடுத்துவதுதான் பிடித்தும் போய் இருக்கிறது, என்ன இப்பொழுது அதனால் என்கிற மனோ நிலை யில் இல்லாமல் இவனுக்குப் பிடித்து இப்படித்தான் ஆகிப்போய் இருக்கிறது பெரும்பாலுமாய் PNR கடையில்தான் எடுத்தான் ரெடிமேடாக/இருக்கட்டும் மாமா விலைக் கொஞ்சம் கூடுதல்தான் என்ன இப்ப அதுனால,ஒரு நூறு ரூபாய்க்காக இப்பிடியோசிச் சிங்கின்னா நாங்கெல்லாம் பெழைக்கி றது எப்பிடி என்பார். அந்தக் கடையில் வேலை பார்க்கிற காசிம் பாய்.

“இல்ல பாய் புள்ளைகளுக்கு எடுக்குற வயசுல நாம எடுத்துப் போட்டுட்டுத் திரிஞ்சா எப்பிடி பாய் என்றால் இருக்கட்டும் மாமா அதுக்காக நாம என்ன சும்மாவா அலையுறது” என வாதிடுவார் .”எனக்கும்தான் வீட்ல ரெண்டு புள் ளைங்க இருக்கு,ஆனா பாருங்க என்னைய,” எனவுமாய் வார்த்தைகளை நூர்த்துச் சேர்ப்பார்.

”ஒங்க மனசு வேற பாய்,ஏங் மனசு வேற பாய்.ஒங்க கிட்ட துணி எடுக்குற ஒவ்வொருதடவையும் பொண்டாட்டி புள்ளைங்க ஞாபகம் வராம இருக்காது. என்கிற போதுசிரிப்பார்.

குல்லூர்ச்சந்தையிலிருந்துஇங்குகடைக்குவேலைக்குவருகிறஅவர்அன்றாங்களில்பெரும்பாலானதினங்களில்சைக்கிளில்தான்வருவார்.

அவரிடம்தான்சொன்னான். ”சின்னவன் போன மாசமே பெர்மு டாஸ் கேட்டான், பெரியவ ஒருசுடிதாரு வேணுமுன்னா, சின்னவனுக்கு ஸ்கூல் யூனிபார்மும் கிழியிற மாதிரி இருக்கு, என”, அநேகமாய் இவன் சொன்ன நிலையில்அல்லது அதற்குசற்று ஏதாவது முன் பின்னாய்த்தான் இருந்திருக்கிறது கண்டக்டரது வீட்டிலும், மாரியப்பன் அண்ணனது வீட்டிலுமாய்.

ஜீன்ஸ் பேண்ட் போட்டிருந்தவர்தான்இன்று சைக்கிள்ஸ்டாண்டில் இருந் தார். காலை ஒன்பது மணிக்குள்ளாய் போகிற வேளைகளில் அவரைப் பார்க்கலாம்,இரவுப்பணி முடித்து விட்டு காலை கிளம் புவதற்கு ரெடியாகி நிற்பார்.சட்டை போடாத வெற்று மேனியில் அவர் அணிந்த ஜீன்ஸ் பேண்ட்டும், கேன்வாஸ் சூவுமாய் அவரை தனித்தவராக்கிக்காட்டும் அந்த இடத்தில்.அது மட்டுமில் லை. சைக்கிள் மற்றும் இருசக்கரவாகனம் வைக்க வருகிறவர் களிடம் அவர் போடும் சப்தம் ஒரு தனி தினுசாயும் சற்றே மிகைப் பட்டுமாய் அவரு அந்தானிக்கி எங்கிட்டாவது திரிவாரு,வீட்டவிட்டு ஏழு மணிக்கெல்லாம் வந்துரும், பஸ்டாப்பு, டீக்கடைன்னு திரியும், ஏன் அங்க திரியிற நேரத்துல இங்க வர வேண்டியதுதான. பெரிய இது மாதிரிதான் அங்குட்டு சுத்திக்கிட்டு என்பார். அவரை மாற்றிவிட பகல் ஷிப்ட்டுக்கு வேலைக்கு வருகிற பெரியவரைப் பற்றி அவரைப் பார்க்க கிட்டத் தட்ட மனோநிலை பாதிப்புக்குள்ளானவர் மாதிரித் தெரியும்.

இவன் சைக்கிள் வைக்கப்போகிற காலை வேளை பெரும்பாலுமாய் கையைக்காலைஆட்டிக் கொண்டு எக்ஸர்சைஸ் பண்ணிக்கொண்டி ருப்பார். இடது பக்கமாய்பாதிப்புக்குள்ளாகிசெயலிழந்து போன கையையும்காலையும்ஆட்டிஆட்டி ஏதாவது எக்ஸர்சைஸ் பண்ணிக் கொண்டிருப்பார்.கேட்டதில் இரண்டு வருடம் முன்பாய் வந்த பக்க வாதம் என்றார்.நல்ல வேளை நிச்சயமான திருமணம் நடப்பதற்கு பத்து நாட்கள் முன்பாகவே பக்கவாதம் வந்ததால் ஒரு பெண்ணின் வாழ்க்கை தப்பித்தது என்றார்,படாதபாடு இல்லை,ஏற்படாத மனச்சங்கடம் இல்லை. எல்லாம் கடந்து மருந்து மாத்திரை, ஆஸ்பத்திரி, வைத்தியம், ஊர் உறவுகளின் பேச்சு, எல்லாம் கடந்து வேலைக்கென இங்கு வந்து விட்ட பிறகுதான்கொஞ்சம் ரிலாக்ஸா னேன் என்கிறார்.

வைத்தியம் தர்ற தைரியத்த விடவும் இந்த மாதிரி எக்ஸர்சைஸ் ஒடம்புக்கும் மனசுக்கும் ஒரு தெம்பா இருக்குது என்பார்.அவர் போட்டிருக்கிற டீசர்ட்டும் ஜீன்ஸ் பேண்ட்டும் பார்க்க நன்றாகவும் சில சமயம் பொருத்தமற்றும் தெரியும், இதில் அவர் அணிந்தி ருக்கிற கேன்வாஸ் சூ கண் பறிக்கிற வெள்ளையாகவே என்கிற நினைப்புடன் இருந்த பொழுது மாரியபண்ணன் பஸ்ஸின்முன் பகுதியிலிருந்து வருகிறார், மென் சிரிப்புடன். 

தொடர்புடைய சிறுகதைகள்
அவனும் என்னதான் செய்வான் பாவம்.தினசரிகளில் இரவு பணிரெண்டுமணி வரைக்கும் படிக்கிறான். பாடங்கள் கொஞ்சம் கூடுதலாக இருந்தால் ஒரு மணியைக்கூட எட்டித்தொட்டு விடுகிறது. கொட்டாவி விடுதலுடனும்,உடல் முறுக்கிய தூக்கக் கலக்கத்துடனுமாய் படிக்கிறான் படிக்கிறான், உடல் அலுக்கும் வரை படிக்கிறான், எழுதுகிறான் கை வலிக்கும் வரை ...
மேலும் கதையை படிக்க...
கடித்த கடிக்கும்,இழுத்த இழுவைக்கும் கொடுத்த பணம் போதுமா அல்லது நேர் படு மா என்கிற ஐயப்பாட்டுடனேயே இவன் கை நிறைய வைத்திருந்த பணம் கரைந்து போகிறசமயங்களிலும் கூட இவன் இப்படி வருத்தப்பட வேண்டியதில்லை. மணிகண்டனின் கடை இருக்க பயமேன் என்கிற சொல்லாக்கம் ...
மேலும் கதையை படிக்க...
அந்த மெல்லியகம்பு அவளது உடல் எடையை தாங்குமா இல்லையா என்பதல்ல தாங்குகிறது. அவள் அதை நிலையூன்றி வேர்கொண்டு வருகிறாள் என்பதே கண் கூடு. மாதவன் டீக்கடை வாசல்அது. இவன் தெற்குப்பார்த்து நிற்கிறான். மேற்குப் பார்த்து கடையின் நடை. அப்படியா னால்கடையின் டீப்பட்டரையும் அப்படித்தானே இருக்க ...
மேலும் கதையை படிக்க...
உடைத்தெறியபட்ட கற்கள் சதுரங்களாயும்,செவ்வகங்களாயும் முக்கோண வடிவிலும் அருங்கோணமாயுமாய் இன்னமும் இன்னமுமான வடிவம் காட்டியுமாய் காட்சி தருகிறது.கூடவேகொஞ்சம் சிமெண்ட் மற்றும் செங்கல் காரையும் தூசியுடனுமாய் ஏதாவதுஒரு வீட்டின் தரைத்தளம், மற்றும் அடுப்படி மேடை சிங்க தொட்டியை உடைத்தெடுத்திருக்கவேண்டும்.நல்லதல்லாததைஉடைத்துவிட்டு நல்லதை வைத்திருக்க நடந்த ...
மேலும் கதையை படிக்க...
கருப்பும்,வெளுப்பும்,சிவப்பும்,பிங்குமாய் கரைந்தோடுகிற சிந்தனையுடன் சாலை கடக்கிற இருசக்கர வாகனமும் அதன் மீது அமர்ந்து வருகிற இவனுமாய் எட்டித் தொட வேண்டிய இலக்காய் இருக்கிற தூரம் எவ்வளவாய் இருக்கும்? இருந்துவிட்டுதான்போகட்டுமே, தூரம் எவ்வளவாக வேண்டுமானாலும்? கடப்பதும் எட்டித்தொடுவதும் மட்டுமே உளகிடக்கையாய் இருக்கிற போது,,,,,,? பாலமேடு டூ ...
மேலும் கதையை படிக்க...
கொட்டாவி,,,
புரோட்டா சால்னா…
நாணல்புல்
மாவுக்கல்லும் தூசியும்…
தந்திக்கம்பி…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)