நட்பு – ஒரு பக்க கதை

 

சென்னையிலுள்ள தலைமை அலுவலகத்தில் அனைத்துக் கிளை மேலாளர் கூட்டத்தை எம்.டி கூட்டியிருந்தார். அப்போதுதான் நவநீதனும் மகாலிங்கமும் தவிர்க்க முடியாமல் சந்திக்க வேண்டியதாகிவிட்டது. இருவரும் சில வருடங்களுக்கு முன்பு ஓசூர் கிளையில் ஒன்றாகப் பணிபுரிந்தவர்கள். பதவி உயர்வு பெற்றபோது, வெவ்வேறு ஊர்களுக்கு மாற்றப்பட்டார்கள். இருப்பினும் தொடர்ந்து போன் மூலம் நட்பைத் தொடர்ந்தார்கள்.

ஆறு மாதங்களுக்கு முன்பு நவநீதனின் மகளுக்குத் திருமணம் நடந்தது. ‘அவசியம் குடும்பத்துடன் வர வேண்டும்’ என்று வற்புறுத்திச் சொல்லி, திருமண அழைப்பிதழையும் மகாலிங்கத்துக்கு அனுப்பியிருந்தார் நவநீதன். மகாலிங்கமும் ‘‘நிச்சயம் வருவேன்’’ என்று சொல்லியிருந்தார். ஆனால், வரவில்லை!

அந்தக் கோபத்தில் மகாலிங்கத்திடம் அதன்பிறகு பேசவே நவநீதனுக்குப் பிடிக்கவில்லை. இப்போதும் மகாலிங்கத்தைப் பார்க்க விரும்பாமல், முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொண்டார் நவநீதன்.

மகாலிங்கம்தான் அவரை நெருங்கினார். ‘‘நவநீதா! உன் கோபம் எனக்குப் புரியுது… ஆனா, உன் பொண்ணு கல்யாணத்துக்கு முதல் நாள் என் அம்மா தவறிட்டாங்க. எப்படி என்னால வர முடியும்? நல்ல காரியம் நடக்கறப்ப இந்த விஷயத்தைச் சொல்லி, உன் சந்தோஷத்தைக் கெடுக்கவும் நான் விரும்பல’’ என்றார். இதைப் புரிந்து கொள்ளாமல் இத்தனை காலம் ஒரு நல்ல நட்பை இழந்ததை எண்ணிக் கலங்கினார் நவநீதன்.

- 09 Apr 2012 

தொடர்புடைய சிறுகதைகள்
“டிங் டாங்.... டிங் டாங்...” படித்துக்கொண்டிருந்த நாளிதழை மேசை மீது வைத்துவிட்டு, வேஷ்டியை சரிசெய்துகொண்டு கதவை திறப்பதற்குள் மூன்றாவது முறை அழைப்பு மணி அடித்துவிட்டது... கதவை திறந்தேன்... கையில் கோப்புகள் சிலவற்றுடன், மூடியின்றி திறந்த பேனாவை விரல்களுக்கு நடுவில் சொருகியபடி நின்றிருந்தாள் ஒரு ...
மேலும் கதையை படிக்க...
எனது வைத்தியக் கல்லூரிப் படிப்பை முடித்துக் கொண்டு மலைநாட்டிலுள்ள நாகஸ்தனைத் தேயிலைத் தோட்டத்தில் வைத்தியனாகப் பதவியேற்று ஒரு வருடத்திற்கு மேலாகிறது. இந்தக் கால ஓட்டத்தில் எனக்கு எவ்வளவோ விசித்திரமான அனுபவங்கள் கிடைத்த வண்ணம் இருக்கின்றன. கல்லூரியிலே கற்ற தொழில் முறைகளெல்லாம் இங்கு வேலை ...
மேலும் கதையை படிக்க...
முத்தையாவுக்கு உடம்பு சுட்டது. ஆனால் காய்ச்சல் கொஞ்சம் கூட இல்லை. மனைவி சகுந்தலா பசார் சாமான் வாங்கவும், பலசரக்கு வாங்கவும், போன கையோடு,அப்படியே கொஞ்சம் அவள் பருத்த உடம்புக்கு பொருத்தமான நைட்டி கிடைத்தால்,அப்படியே அதையும் சைஸ் பார்த்து வாங்கவும், என பல ...
மேலும் கதையை படிக்க...
மாரிச்சாமி அந்தப் பெண் -- மருத்துவரின் அறையில் இருந்தான். அது ஒரு சிறிய பொது மருத்துவமனை. அவன் கேட்டான், 'இந்த நிக்கோடின் அடிமைத்தனத்தை நிறுத்த மனநல மாத்திரைகள் தருவீர்களா ? ' என்று. 'என்ன ? ஒரு நாளைக்கு எத்தனை ஊதுகிறீர்கள் ? ' ...
மேலும் கதையை படிக்க...
அப்பாவின் உடல்நிலை கவலைக்கிடமாகி விட்டது.. "இதோ பாரப்பா ரவி, அப்பா நிலைமை நாளுக்கு நாள் மோசமாயிண்டு போறதைப் பார்த்தா, அவர் முடிவு எந்த நிமிஷமும் வரலாம்னு தோணுது. அதனாலே நீ மேற் கொண்டு நடக்க வேண்டியதற்கு எப்பவும் தயாரா இருக்கிறது தான் உசிதம்" என்று சொல்லி டாக்டர் ...
மேலும் கதையை படிக்க...
என் மகனும் மாப்பிள்ளையும்…!
இப்படியும் ஓர் உறவு
நண்டு
இழந்த யோகம்
அழைப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)