கடன்

 

மருதண்ணே என்ன பலத்த யோசனையில் இருக்கீங்க நான் கூப்பிடுவது உங்கள் காதில் விழவில்லையா?

ஒண்ணுமில்லை வேலு நம்ம சுரேஷ் மனைவி இரண்டாயிரம் ரூபாய் கடனாக வாங்கினாள், சம்பளம் வந்ததும் கொடுத்துவிடுகிறேன் என்றாள்.

சரி மருதண்ணே இப்படி யோசிக்கிற அளவுக்கு இப்போ என்ன ஆச்சு உங்களுக்கு?

அதில்லை வேலு அவள் வாங்கிட்டு போய் மூன்று மாதம் ஆச்சு அதற்கு பிறகு அவள் வரவே இல்லை நானும் அவளை பார்க்கவேயில்லை அதான் எப்படி கேட்க என்று யோசித்தேன்.

அட என்ன அண்ணே நீங்க பகல்ல வீட்டில் சித்தப்பு சித்தி இரண்டு பேருதான் இருப்பாங்க சாயங்காலாம்தான் வேலைக்கு போன எல்லோரும் வந்திடுவாங்களே வீட்டில் போய் கேட்க வேண்டியதுதானே.

வேலு வீட்டில் போய் கேட்டா அவங்களை கஷ்டப்படுத்தற மாதிரி இருக்குமில்லே அதான் யோசிக்கேன்.

அண்ணே கடன் வாங்கினவளுக்கே அதை திருப்பிக் கொடுக்கனும் என்று நினைக்கல கடன் கொடுத்த நீ ஏன் கவலைப் படறே? அவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே சுரேஷ் மகன் பாலு சென்றான்.

ஏய் பாலு கொஞ்சம் இங்க வா உன்னிடம் ஒன்னு கேட்கனும், வேலைக்கு போய்ட்டு வரீயா?

என்ன வேலு மாமா இதைக் கேட்கவா கூப்பிட்டே நீ, ஆமா வேலைக்குதான் போய்ட்டு வரேன்.

மருதண்ணன்கிட்ட உன் அம்மா இரண்டாயிரம் ரூபாய் வாங்கினாளாம் மூன்று மாதம் ஆச்சு இன்னும் கொடுக்கல போல அண்ணனுக்கு ஏதோ அவசரம் பணம் தேவைப்படுது நீ கொடு அண்ணனுக்கு என்றான்.

மருது மாமா அம்மா வாங்கிய கடன் எல்லாத்தையும் அம்மாவிடமே கேட்டுக்கோ என்னிடம் வராதே நான் ஒரு பைசா கூட தரமாட்டேன்.

என்ன மருதண்ணே மாதம் இருபதாயிரம் சம்பளம் வாங்குறான் தன் அம்மாவுக்காக ஒரு இரண்டாயிரம் கொடுக்கமாட்டானா இவன் எல்லாம் என்ன பிள்ளை. அண்ணே செல்வி போறா இவளிடம் கேட்போம் இவள் கொடுத்துவிடுவாள். செல்வி எங்கே போய்ட்டு வர இங்கே வாயேன் என்றான் வேலு.

ஒண்ணுமில்லே செல்வி மருதண்ணே………. என்று பாலுவிடம் சொன்னதை அப்படியே சொன்னான்.

இங்கபாரு மருது மாமா நீ அம்மாவுக்குதானே கொடுத்தே எனக்கா கொடுத்தே என்னிடம் ஏன் கேட்கிறே? அவளிடமே வாங்கிக் கொள் என்று சொல்லிவிட்டு சென்றாள்.

அய்யோ என்ன மருதண்ணே இவளும் இப்படியே சொல்லிட்டு போறா இதுகெல்லாம் என்ன பிள்ளைகள் தாய்க்காக இதைக் கூட கொடுக்க மாட்டாங்காளா? சுரேஷ் அண்ணணே வந்திட்டார் அவரிடமே கேட்கலாம் என்றான்.

இரண்டு பேரும் என்ன பேசிட்டு இருக்கீங்க என் பேர் அடிபடுது என்றான் சுரேஷ்.

அது ஒண்ணுமில்லை சுரேஷ் அண்ணே என்று பாலு செல்விகிட்ட சொன்னதையே சொன்னான்.

மருது அன்னைக்கே உன்னிடம் சொல்லிட்டேன் நீ என்னிடம் கேட்டா கொடுத்தே இல்லைதானே அப்போ அவளிடமே கேட்டு வாங்கிக் கொள் என்னிடம் ஏன் கேட்கிறே என்று சொல்லிவிட்டு அவனும் சென்றான்.

நல்ல குடும்பம் மருதண்ணே மனைவிக்காக கணவனும் கொடுக்க மாட்டேங்கிறான், தாய்க்காக பிள்ளைகளும் கொடுக்க மாட்டேங்குது, கடன் வாங்கினவளும் என்ன ஆனால் என்று தெரியலே!

மருது கலகலவென சிரித்துக் கொண்டே வேலு நான் ஏற்கனவே இவர்களிடம் கேட்டுவிட்டேன் அதான் என்ன பண்ண என்று அவ்வளவு யோசனையில் இருந்தேன்.

என்ன மருதண்ணே விளையாடறீங்களா இதை முதல்லயே சொல்லியிருக்கலாமில்ல.

நீ எங்கே என்னை சொல்லவிட்டே, நீயே அவங்களை கூப்பிட்டு எல்லாம் பேசினே என்று சிரித்தான்.

சரி மருதண்ணே இப்போ என்ன பண்ண போறே பணத்தை எப்படி வாங்குவே. அண்ணே சித்தப்பும் சித்தியும் போறாங்க அவங்களிடம் கேட்போம் ஓய்வுதியம் வாங்கறாங்களே மருமகளுக்காக கொடுக்கமாட்டாங்களா என்ன.

வேண்டாம் வேலு சம்பாதிக்குறவங்களே கொடுக்கல வயதானவங்க அவங்களிடம் எப்படி கேட்க முடியும் அவங்க என்ன பண்ணுவாங்க.

அண்ணே கேட்டுதான் பார்ப்போம் என்ன சொல்றாங்க என்று அவர்களை கூப்பிட்டான் வேலு.

சித்தப்பு வயதான காலத்தில் வீட்டில் இருக்காமல் இரண்டு பேரும் வெளியில் சுற்றிகிட்டு இருக்கீங்க.

வீட்டுக்குள்ளே அடைந்து கிடக்கோம்ல அதான் வெளியில் வந்தால் கொஞ்சம் நல்லாயிருக்கு ஆமா நீ எதுக்கு கூப்பிட்டே.

உங்கள் மருமகள் மருதண்ணன்கிட்ட இரண்டாயிரம் ரூபாய் வாங்கினாளாம் மூன்று மாதம் ஆச்சு இன்னும் கொடுக்கல போல அண்ணனுக்கு ஏதோ அவசரம் பணம் தேவைப்படுது அதான் அவளும் ஆளையே காணும் என்று இழுத்தான்……

மருமகள் வேலைக்கும் போகிறாள் வீட்டுக்கு வந்து எல்லா வேலையும் பார்க்கிறாள் அதான் மறந்து போயிருப்பாள் நீ என்னிடம் கேட்டிருக்கலாமில்ல என்று உடனே தன் பையிலிருந்து பணத்தை எடுத்துக் கொடுத்தார்.

மருதுவும் வேலுவும் ஆச்சரியத்துடன் அவரையே பார்க்க என்ன இரண்டு பேரும் அப்படி பார்க்கிங்க என்றார்.

சித்தப்பு அதுவந்து என்று நடந்தது எல்லாவற்றையும் சொன்னான் ஏன் இப்படி இருக்காங்க என்றான்.

அவர் சிரித்துக் கொண்டே காலையில் வெளியில் போறவங்க சாயங்காலம்தான் வராங்க அவங்க வரும் வரை நாங்க இரண்டு பேரும் தனியாகதான் இருப்போம். அவங்க வந்ததும் நம் மகன் நம்ம கூட உட்கார்ந்து பேசமாட்டானா, பேரப்பிள்ளைகள் நம்ம கூட விளையாடுவாங்களா பேசுவாங்களா என்று அவங்களையே பார்த்துக் கொண்டு இருப்போம். ஆனால் அவங்க எங்களை திரும்பி கூட பார்க்க மாட்டாங்க. அவங்க பார்வை எல்லாம் கையில் இருக்கும் கைபேசியில் மட்டுமே இருக்கும்.

மருமகள் வந்ததும் காபி கொடுப்பாள் அதோடு அவளும் வீட்டு வேலை என்று தொடங்கிவிடுவாள் அவள் வேலை முடித்து வர மணி ஒன்பதாகும் எல்லோரும் சாப்பிட்டு தூங்க வேண்டியதுதான். சாப்பிடும் போது கூட அவங்க கையில் கைபேசிதான் இருக்கும் சாப்பாட்டின் ருசி கூட உணர்ந்து சாப்பிடுவாங்களா என்று தெரியல.

அப்போதெல்லாம் உறவுகளுக்குள் ஒவ்வொருவரும் பேசிக் கொள்வோம் யாருக்கு என்ன தேவை என்று ஒவ்வொருத்தருக்கும் தெரியும். ஏதாவது உதவி என்றால் உடனே அவங்களுக்காக உறவுகள் அனைவரும் வருவார்கள்.

இப்போது ஒவ்வொருத்தர் முகம் பார்த்து பேசுவதே அதிசயமா இருக்கு ஒரே வீட்டில் இருப்பவர்களே பார்த்துக் கொள்வது பேசிக் கொள்வதே கஷ்டமாக இருக்கு மற்ற உறவுகள் பற்றி இவங்களுக்கு எப்படி தெரியும். ஏன் இப்படி இருக்கீங்க என்று கேட்டால் இது நவீன காலம் நாங்க அப்படிதான் இருப்போம் அதை எல்லாம் கேட்க கூடாது என்பாங்க. இதையெல்லாம் பார்க்க பிடிக்காமதான் இப்படி வெளியில் வந்து ஆறுதல் அடைகிறோம் என்று புலம்பிக் கொண்டே சென்றார்.

மருதுவும் வேலுவும் அவர் சொல்வதைக் கேட்டு என்ன பேசுவது என்று புரியாமல் அவர்கள் செல்வதையே பார்த்துக் கொண்டிருந்தனர். 

தொடர்புடைய சிறுகதைகள்
நாகராஜன் வழக்கம் போல் செல்லும் ஆசிரமத்துக்கு, காலையில் வருபவர் அன்று மதியம் வந்திருந்தார். மாதம் தவறாமல் ஆசிரமத்திற்கு வந்து கொடுக்கும் பணம் பத்தாயிரத்தையும், ஆசிரம நிர்வாகியிடம் கொடுத்தார். அவர் கொடுத்துவிட்டு, எப்போதும் ஆசிரமத்திலுள்ள குழந்தைகளிடமும், முதியோர்களிடம் உரையாடி விட்டுதான் செல்வார். அன்றும் ...
மேலும் கதையை படிக்க...
சென்னை கிளைக்கு அஜய்யை மாற்றல் செய்திருந்தார்கள். இன்னும் பத்து வருடங்கள் சென்னை கிளையில்தான் வேலை பார்க்க வேண்டும். அதனால் குடும்பத்தை அழைத்து வருவதற்கு முன் வீடு பார்த்துவிட்டால், அவர்கள் வந்து குடியேறுவதற்கு வசதியாக இருக்கும் என்று வீடு பார்க்கத் தொடங்கினார். அஜய் வேலை ...
மேலும் கதையை படிக்க...
“பரமு உன் பொஞ்சாதி நிறை மாசமா இருக்கா, அதனால் எங்கேயும் போகாத, தங்கச்சி கூடவே இரு, இந்த நேரத்துல நீ பக்கத்திலதான் இருக்கனும்” “நான் எங்கேயும் போகமாட்டேன் தேவா, ஆனால் வேலை வந்துட்டா என்ன பண்ண” “ஆமா பரமு நீ கலெக்டர் உத்தியோகம் பார்க்க, ...
மேலும் கதையை படிக்க...
அசோக் தன் மனைவி அன்பரசியோடு சென்னை வந்து சேர்ந்தான். இருவருக்கும் திருமணம் முடிந்து ஒரு வருடமே ஆகியிருந்தது, அன்பரசி ஆறு மாதம் கர்பிணியாக வேறு இருந்தாள், தனக்கு சொந்தமாக கடை இருக்கிறது, என் பெயரில் சொத்துக்கள் நிறைய இருக்கிறதென்று சொல்லி அன்பரசியை ...
மேலும் கதையை படிக்க...
நரேன் கைபேசியில் பேசிக் கொண்டிருந்தான், அவன் மனைவி மாலதி அருகில் வந்து, “என்னங்க” என்றாள். நரேன் சைகையிலே அமைதியாக இருக்கும்படி கூறினான். அவன் சொல்வதை புரிந்து கொண்ட மாலதி அமைதியாக நின்று அவன் பேசுவதையே கவனித்துக் கொண்டிருந்தாள். நரேன் பேசி முடித்ததும், “மாலதி அப்பாதான் ...
மேலும் கதையை படிக்க...
உதவி
வாடகை வீடு
விலை மதிப்பு
ஆடம்பரம்
வார்த்தைகளின் வலி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)