ஓடிப்போன “ஹஸ்பெண்ட்’

 

“”டேய்! தம்பு! முழங்கால், முதுகு, விலா இப்படி எல்லா இடத்திலேயும் வலி தாங்க முடியல்லைடா! நடக்கவே முடியலை!…” என்று அழமாட்டாக் குறையாகப் புலம்பினார், சென்னையில் பிரபல “காட்டரிங் ஸர்வீஸ்’ நடத்தி பிரசித்தமான கோதண்டராமன்.

“”டோண்ட் வொரி! அண்ணா! “சிட்டி’லே, அடையார்லே, தன் சொந்த பங்களாவிலேயே இப்பல்லாம் வைத்தியம் பார்க்கறார், உங்களுக்கு தெரிஞ்ச, அந்த “ஃபேமஸ்’ டாக்டர் நீலமேகம். அவர்ட்ட போகலாம். எல்லாம் சரியாயிடும்” என்றான் அவருடைய “அஸிஸ்டென்ட்’ தம்பு.

ஓடிப்போன

நேரே, டாக்டர் நீலமேகத்தின் “க்ளினிக்’குக்குச் சென்ற கோதண்டராமனுக்கு, தன் திகைப்பை அடக்க முடியவில்லை.

“”டாக்டர் ஸார்! எவ்வளவு “பிஸி’யானவர் நீங்க! உங்க ஹாஸ்பிடலுக்குப் போனா, மணிக்கணக்கிலே காத்திருக்கணும், உங்களைப் பார்க்க! எப்படி ஸார்! இந்த மாதிரி இவ்வளவு சுலபமா உங்களைப் பார்க்க முடியறது?”

“”வாங்க!” என்று ஒரு தீர்க்கப் பார்வையுடன் சொன்ன டாக்டர், நெளிந்துகொண்டு, நடக்க முடியாமல், கோதண்டராமன் தவிப்பதைப் பார்த்த மாத்திரத்திலேயே, “கிட்னி பிராப்ளம்’ என்று புரிந்துகொண்டு விட்டார்.

“”மெல்ல, இந்த “பெட்’லே படுத்துக்கோங்க. எனக்கு இப்பல்லாம் நிறைய “டைம்’ இருக்கு. “ஹாஸ்பிடலுக்கு ஏதானும் சிக்கலான “கேஸ்’ வந்தாதான் போவேன். எல்லாம் அவங்ககிட்டேயே விட்டுட்டேன்…”

மேலும் தொடர்ந்த டாக்டர், “”இதோ இந்த “ஃப்ரீ’ கிளினிக்கிலே கூட, சாதாரண கேஸ் எல்லாம் என் “அஸிஸ்டென்ட்’ டாக்டர் பாத்துப்பாரு”.

டாக்டரை ஒரு புது வியப்புடன் பார்த்த கோதண்டராமன், “”கேக்கறதுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு, ஸார்! எப்படி ஸார், இப்படி மாறினீங்க? கைலே, ஒரு அம்பது இல்லாமே, உங்க ஹாஸ்பிடல்லே நுழையக்கூட முடியாதே! இப்ப ஜனங்க உங்களை மனசார வாழ்த்துவாங்க!” என்றார் உண்மையான உணர்ச்சியுடன்.

“”உங்க கிட்டே சொல்றதிலே, ஒரு தப்பும் இல்லே. எங்க வீட்டு “ஃபேமிலி’ ஃபங்ஷனுக்கு எல்லாம் நீங்கதான் வந்திருக்கீங்களே… இதோ இருக்கே மாலை போட்ட போட்டோ! என் பையனோடது. ரொம்ப “சர்வீஸ் மைன்டட்’. போன வருஷம், யாருக்கோ, “ப்ளட்’ கொடுத்துட்டு “பைக்’கிலே வந்திண்டு இருந்தான். ஒரு லாரி வந்து மோதினதிலே, “ஸ்பாட்’லேயே போயிட்டான். அவன் ஞாபகர்த்தமாத்தான் இந்த “ஃப்ரீ’ “கிளினிக்’. சம்பாதிச்சது போதும்! இதைத் தவிர, திருச்சியிலே, ஒரு “சாரிடபிள்’ அனாதை ஆசிரமத்துக்குப் போகிறேன்” என்று கலங்கிய கண்களுடன் சொன்னார்.

கோதண்டராமனின் கண்களிலும் நீர் பனித்தது.

சட்டென்று பேச்சை மாற்றினார் டாக்டர்.

“”கோதண்டராமன்! உங்களைப் பத்தி கொஞ்சம் விஸ்தாரமா சொல்லுங்க. எத்தனை நாளா இப்படி இருக்கீங்க? உங்க பேமிலிலே எப்படி இவ்வளவு மோசமா போகிற வரை, விட்டாங்க?”

“”டாக்டர்! அது பெரிய கதை!”

“”பரவாயில்லை. எனக்கு உங்க “பாக் க்ரௌண்ட்’ தெரிஞ்சா, உங்க கேûஸ சரியா “ட்ரீட்’ பண்ண முடியும். எனக்கு நிறைய “டைம்’ இருக்கு. சொல்லுங்க.”

இந்தச் சமயத்தில் டாக்டரின் “அஸிஸ்டென்ட்’ உள்ளே வந்தான்.

“”டாக்டர்! திருச்சியிலேருந்து ஸரஸ்வதி ஹோம், மானேஜர் பாக்கியத்தம்மாள் வந்திருக்காங்க, உங்களைப் பார்க்க” என்றார்.

“”அவுங்களை, அந்த “ஆன்ட்டி ரூமிலே’ உட்கார வை. இந்த “கேûஸ’ப் பார்த்துட்டு அவுங்ககூட பேசறேன்”.

அப்போது உள்ளே வந்த பாக்கியத்தம்மாள், கோதண்டராமனைப் பார்த்து, ஒரு நிமிஷம் திடுக்கிட்டாள். டாக்டருக்கு வணக்கம் சொல்லிவிட்டு, அவர்களைக் கடந்து “ஆன்ட்டி ரூமில்’ போய் உட்கார்ந்து கொண்டாள்.

கண்களை மூடிக்கொண்டிருந்த கோதண்டராமன், பழைய நினைவுகளை, மனதில் வரவழைத்துக்கொண்டு பேசலானார், அவ்வப்போது நிறுத்தி, நிறுத்திக்கொண்டே.

“”டாக்டர்! சின்ன வயசிலேயே அனாதையாய்ப் போன என்னை “ஸ்கூல்’ படிப்பை நிறுத்தி, என் மாமன் வீட்டில் கொண்டு விட்டார்கள் ஊர்ப் பெரியவர்கள். என்னை எல்லோரும் “கோண்டு’ன்னுதான் கூப்பிடுவாங்க… என் மாமிக்கு வீட்டில் ஒரு அதிகப்படி வயிறுக்கு வழி சொல்ல முடியவில்லை; நான் அவளுக்கு கிச்சனில் எவ்வளவு உதவினாலும்…”

“”இதோ பாருங்க! இவனை இங்கே வச்சிக்கிட்டு படிக்க வைக்க முடியாது. இவனுக்கு “கிச்சன்’ வேலைலே நல்ல

ஈடுபாடு இருக்கு. பேசாம, ஒரு ஹோட்டல்லே, “ஸர்வரா’ சேர்த்து விட்டுருங்கோ” என்றாள்.

டாக்டர்! நான் வேலை செய்த ஹோட்டலில் என் படிப்பைப் பத்தி யாருமே கவலைப்படவில்லை; வாசலில் “ஸ்கூல்’ போற பசங்களைப் பார்த்து பெருமூச்சுத்தான் விட முடிந்தது…

ஹோட்டல்லே ஒருநாள் “கஸ்டமர்’ விட்டுட்டுப் போயிருந்த “நியூஸ் பேப்பரை’ எடுத்துக் கொண்டு, முதலாளி பார்க்க முடியாத ஒரு மூலைலே உக்காந்துண்டு, படிச்சுக்கிட்டு இருந்தேன்…

இங்கே யாருமே இல்லியான்னு”, ஒரு “கஸ்டமரோட’ பெரிய கூச்சலைக் கேட்ட முதலாளி, என்னை நோக்கி ஓடி வந்தார்…

ஒரே ஒரு அறை; நான் கதி கலங்கிப் போனேன்…

முதலாளி! எனக்குப் படிக்கறதுக்கு ரொம்ப ஆசை! ஹோட்டல்லேயும் வேலை செய்றேன்’ கூடவே ஸ்கூலுக்கும் போறேன். கொஞ்சம் தயவு பண்ணுங்கன்னு, அழுதேன்…

முதலாளி தயவில் ஸ்கூலில் சேர்ந்தேன். இப்படித்தான் சமையலறை படிப்பு, ஹோட்டலில் மத்த வேலைன்னு எல்லாம் செஞ்சேன்… முதலாளிக்கு என்னை ரொம்பப் பிடிச்சுப் போச்சு; கடையும் நல்லாவே போயிக்கிட்டு இருந்தது…

அப்புறம் என்ன? ஸ்கூல் படிப்பு முடிஞ்சப்புறம் முதலாளி வீட்டிலேயே இருந்துகிட்டு, ஹோட்டல் வேலையை, முழுக்க முழுக்க பார்க்க ஆரம்பிச்சேன். முதலாளிப் பட்டம் எனக்குத் தானாக வந்து சேர்ந்தது…

இங்கேதான் “பிராப்ளம்’ ஆரம்பம். முதலாளிக்கு ஒரு பொண்ணு. பேர் பேபி. புத்தி சுவாதீனமில்லாத பொண்ணு. நான் அது வழிக்கே போக மாட்டேன். வேலைக்காரி பாக்கியம்தான் பாத்துக்குவாள்.

காலப்போக்கில், அது பெரியவளாயிடுச்சு. அதுக்கு வயசுதான் ஏறிக்கிட்டே போயிட்டு இருந்தது. பைத்தியத்தை எவன் கட்டிக்குவான்?

முதலாளி யோசிச்சாரு. என் தலைலே கட்டிட்டாரு!

இந்த இடத்திலே பேச்சை நிறுத்தி, கோதண்டராமன் கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக்கொண்டு கொஞ்சம் தண்ணீர் வாங்கிக் குடித்தார்.

“”அப்புறம் என்ன ஆச்சு, கோதண்டராமன்? மேலே சொல்லுங்க” என்றார் டாக்டர் ஒரு புதிய ஆவலுடன்.

“”ஆரம்பத்திலே மணவாழ்க்கை நல்லாத்தான் போயிக்கிட்டு இருந்தது. பேபி கூட நல்ல நெருக்கத்தை ஏற்படுத்திக்கிட்ட என்னை மெதுவா இன்னொரு பயமும் ஆட்டி வைக்க ஆரம்பிச்சுது…

அது என்னன்னா, அப்பப்போ, புத்தி சுவாதீன

மில்லாம போகும்போது, யாருக்கும் தெரியாம, பேபி தன்னை ஏதேனும் பண்ணிக்கிடுவாளோங்கிற பயம்தான்…

ஹோட்டல்லே நாள் முழுக்க உழைத்துவிட்டு, ராத்திரி முழுக்க, பேபியை கண்குத்திப் பாம்பு மாதிரி பாத்துக்கிறதுதான் வேலையாப் போச்சு!

எனக்கு பைத்தியமே புடிச்சுடும்போல ஆயிருச்சு. ஒருநாள் ராத்திரி பேபிக்கு தூக்க மருந்து கொடுத்துட்டு, ஒரு லெட்டர் எழுதி வச்சிட்டு, பைக்கிலேயே காஞ்சிபுரத்திலேருந்து சென்னைக்கு வந்துட்டேன். அந்த “லெட்டர்’லே “எனக்கு வாழ்க்கையே வெறுத்துப் போச்சு; எங்கியோ போறேன்; என்னைத் தேட வேண்டாம்னு’ எழுதியிருந்தேன்…

நேரே ரிஷிகேஷ் போனேன்; இன்னும் எங்கெல்லாமோ சுத்தினேன். கையிலிருந்த பணமெல்லாம் கரைஞ்சு போச்சு. அங்கேயே கொஞ்ச நாள் வேலையும் செஞ்சேன். “நார்த்’ அலுத்துப் போச்சு. கடைசிலே சென்னைக்குத் திரும்ப வந்து சேர்ந்தேன்…

காஞ்சிபுரம் போனேன்; முதலாளி, குடும்பத்தோட, திருச்சிக்கு குடிபெயர்ந்து விட்டார்னு சொன்னாங்க. நான் அவங்களைத் தேடிக் கொண்டு போக இஷ்டப்படவில்லை…

என்னோட பழைய “ஃப்ரண்ட்ஸ்’ சில பேர் கிடைச்சாங்க. எனக்குத் தெரிஞ்ச ஒரே வேலை சமையல்தான். காலப்போக்கிலே “கோதண்டராமன் காட்டரிங் ஸர்வீஸ்’ பிரசித்தமாச்சு. வீடு, வண்டின்னு எல்லாம் வந்து சேந்தது…

ஆனா, நான் கட்டின மனைவியை உதறிவிட்டு வந்த பாவம் என்னை ஆட்டுவிக்க ஆரம்பிச்சுடுத்துன்னு நினைக்கிறேன். அதான் என்னை இப்படி முடக்கிப்போட்டு வச்சிடுத்துன்னு தோணுது”. கோதண்டராமன் ஒரு நீண்ட பெருமூச்சுடன் பேச்சை நிறுத்திக் கொண்டார்.

“”டோண்ட் வொரி! கோதண்டராமன்! உங்க “ப்ளட்’ ஸாம்பிள் எடுத்துக்கிட்டோம். சில டெஸ்ட்கள் எடுக்கணும். அதை எடுத்துகிட்டு வாங்க. இப்போதைக்கு உங்க கிட்னிக்கு இந்த இன்ஜெக்ஷன், மருந்துங்க போதும்”

கோதண்டராமன் அங்கிருந்து கிளம்புவதற்குள், “ஆன்ட்டி ரூமில்’ இத்தனை நேரம் உட்கார்ந்திருந்து, எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டிருந்தவள், உள்ளே நுழைந்தாள். தன்னையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்த அவளைப் பார்த்து குழம்பினார். பிறகு சமாளித்துக்கொண்டு, “”நான் வரேன் டாக்டர்! நீங்க கேட்ட டெஸ்டெல்லாம் பண்ணின்டு” என்று சொல்லிக்கொண்டே கிளம்பினார்.

பாக்கியத்தைப் பார்த்து ஒருமுறை முறைத்தார் டாக்டர். “”என்ன பாக்கியம்! நான் இன்னும் அடுத்த “பேஷண்டை’க் கூப்பிடல்லியே! உள்ளே ஓடி வந்துட்டே! ரொம்ப அவசரமோ?

“”ஆமா! டாக்டர்! எங்க ஹோம் மெம்பர், ரோஸ் மேரி இங்கே சென்னையிலே வேலை பாக்கிறான்னு உங்களுக்குத் தெரியும். ஒரு “ஆக்ஸிடென்ட்’லே பயங்கரமா அடிபட்டு, உங்க ஆஸ்பத்திரிலேதான் கிடக்கிறா. அவளைப் பாத்துக்கிறதுக்காக, “மேடம்’ என்னை உடனே, “ஃப்ளைட்லே’ அனுப்பி வச்சிருக்காங்க.”

“”அடேடே! அப்படியா! நான் உடனே ஹாஸ்பிடலுக்குப் போறேன். டோண்ட் வொரி! என்ன கண்டீஷன்னு தெரிஞ்சுண்டு உங்க மேடத்துக்கு போன் பண்றேன்” என்றார் டாக்டர்.

இரண்டு நாள்கள் கழித்து டாக்டர் நீலமேகம் திருச்சிக்கு, ஸரஸ்வதி மேடத்துக்கு போன் பண்ணினார்.

“”ஸாரி மேடம்! எங்களாலே ரோஸ்மேரியை “úஸவ்’ பண்ண முடியல்லை. அவள் இப்போ “பிரெயின் டெட்”.

“”எஸ் டாக்டர்! பாக்கியம் அங்கேயேதானே இருக்காள், அவளைப் பாத்துக்கிட்டு. அவளும் சொன்னாள். ரோஸ் மேரியை எங்கள் எல்லாருக்கும் ரொம்ப பிடிக்கும். இங்கு ஹோமில் நாங்கள் எல்லோரும் அவள் ஆத்மா சாந்தி அடைய பிரார்த்திக்கிறோம்”.

“”மேடம்! ரோஸ் மேரி “அட்மிட்’ ஆகும்போதே முழு சுய நினைவிலே, அவுங்க “ஆர்கன் டொனேஷன் ஃபாரத்தை ஃபில் பண்ணிக் கொடுத்திருக்காங்க. பாக்கியமும் சொன்னாள், அவுங்க ஏற்கெனவே திருச்சியிலே இதுக்காக “ரிஜிஸ்ட்ரேஷன்’ பண்ணியிருக்காளாம்”.

“”ஆமாம்! டாக்டர்! இங்கே எங்க “ஹோம் மெம்பர்ஸ்’ எல்லாரும் “ஆர்கன் டொனேஷனு’க்கு “ரெஜிஸ்டர்’ பண்ணியிருக்கோம். ஆமா டாக்டர்! ரோஸ்மேரி யாருக்காவது, “ஸ்பெஷிஃபிக்’கா “ஆர்கன்’ கொடுக்கணும்னு எழுதியிருக்காளா?”

“”அப்படி ஒண்ணும் எழுதலை. நீங்க சொல்றபடி கொடுக்கணும்னு எழுதியிருக்காங்க”

“”அப்படியா, சந்தோஷம்! ஒரு கிட்னியை அங்கே உங்க “ட்ரீட்மென்ட்’லே இருக்கும் கோதண்டராமன் என்கிற “பேஷண்ட்டு’க்கு கொடுங்க. பாக்கி “ஆர்கன்’களை ஏழைகளுக்கு “ஃப்ரீயா’ கொடுங்க. பணக்காரங்களுக்குக் கொடுத்தா அவுங்க கொடுக்கிற பணத்தை, எங்க ஹோமுக்கு “க்ரெடிட்’ பண்ணுங்க”.

“”நல்லது! மேடம்! “ஃப்ரீ பப்ளிக் ஸர்வீஸ்’னு நான் ஆரம்பிச்சிருக்கும் பணியிலே, இது ஒரு புது முயற்சி! “தாங்க் யூ”

“”பாக்கியத்துகிட்டே சொல்லிடுங்க. ஏதாவது “ஃபார்மலிடீஸ்’னா அவள் செய்துடுவாள்”

“”மேடம்! “ஜஸ்ட் ஃபார் ஆன்ஸரிங் டு அவர் கமிட்டி’, எப்படி, நீங்க ஒரே ஒரு ஆர்கனை மட்டும், “ஸ்பெஷிஃபிக்கா’ ஒரு நபருக்கு கொடுக்கச் சொல்றீங்க?”

“”ஏன்னா, அவர்தான் என் ஓடிப்போன என் ஹஸ்பெண்ட்!”

“”க்ரேட்! மேடம். இன்னிக்கு கோதண்டராமன் டெஸ்ட் “ரிஸல்ட்’ எல்லாம் வந்துடும். ரோஸ்மேரியோட “ஆர்கனோ’ட “மாச்’ ஆச்சுன்னா செஞ்சுடலாம். ஐ வில் கீப் இன் டச் வித் யூ”.

கோதண்டராமனுக்கு வெற்றிகரமாக கிட்னி மாற்றப்பட்டது.

விரைவிலேயே குணமாகி, பழைய ஆரோக்கியத்தை கொஞ்சம் கொஞ்சமாக அடைய ஆரம்பித்தார்.

கிட்னிக்கான செலவைப் பற்றி ஆஸ்பத்திரியில் கேட்டபோது அவர்கள் திருச்சி ஸரஸ்வதி ஹோமின் விலாசத்தைக் கொடுத்தனர்.

நேரே அந்த ஹோமுக்குப் போனவர், அங்கே பாக்கியத்தம்மாளைத்தான் பார்த்தார், முதலில் “”வாங்க! கோண்டு ஐயா! வாங்க! இப்ப உடம்பு தேவலாமா?”

ஆச்சரியத்தில் மூழ்கினார், கோதண்டராமன்.

“”இப்போ பரவாயில்லை, அம்மா. மெல்ல மெல்ல பழைய உடம்பு திரும்பிக்கிட்டு இருக்குன்னு தோணுது. ஆமா! உங்களை டாக்டர் வீட்டிலே பார்த்தபோதே, நினைச்சேன் ஏதோ தெரிஞ்ச முகமா இருக்கேன்னு. என் பால்ய வயசு பெயர் உங்களுக்கு எப்படித் தெரியும்?”

“”சொல்றேன்! இப்ப இங்கே எதுக்கு வந்தீங்க?”

“”எனக்கு கிட்னி கொடுத்தவங்க, இந்த “ஹோமை’ச் சேர்ந்தவங்களாம். அதனாலே, “ஹோமு’க்கு ரெண்டு லட்சம் ரூபாய் டொனேஷன் கொடுக்கலாம்னு வந்தேன்”.

“”ரொம்ப நல்லது. முன்னாடி எங்க “கான்டீன்’லே ஏதாவது சாப்பிட்டுட்டு பேசுவோம். அதுக்குள்ளே சரஸ்வதி மேடம் வந்துடுவாங்க”.

கோதண்டராமனுக்கு நல்ல பசிதான். ஆனால் அந்த “கான்டீன்’லே எதுவுமே பிடிக்கவில்லை. சமையலில் ஊறிப் போனவருக்கு இது பெரிய ஏமாற்றம். பாக்கியத்தம்மாளே சொன்னாள், “”இங்கே எல்லாம் கொஞ்சம் சுமாராத்தான் இருக்கும்” என்று.

“”இதோ மேடம் வந்துட்டாங்க, வாங்க!” என்று சொன்ன பாக்கியத்தம்மாள், “ஸரஸ்வதி செக்ரடரீ’ என்று வெளியில் எழுதியிருந்த அறைக்கு அவரை அழைத்துச் சென்றாள்.

வணக்கம்! அம்மா! என்று கையை கூப்பிய கோதண்டராமன் திடுக்கிட்டார்.

“”பேபீ! நீயா?”

“”ஆமாம், நானேதான்!”

“”நீங்க என்னை விட்டுட்டு ஓடிப்போனபோது, நான் ஆறு மாத கர்ப்பிணி! உங்களைச் சென்னையில் தேடினோம். ரிஷிகேஷ் பக்கம் போய்விட்டதாகச் சொன்னாங்க. அப்பா ஒடிஞ்சி போனார். நாங்க காஞ்சிபுரத்திலே இருக்கப் புடிக்காம, திருச்சிக்கு வந்துட்டோம்”.

வாயைப் பிளந்துகொண்டு, அவளைப் பார்த்துக்கொண்டே இருந்தார் கோதண்டராமன்.

“”ஆமா! நீ எப்படி இவ்வளவு தெளிவா பேசறே?”

“”எனக்குக் குழந்தை பிறந்த உடனேயே, மனசு மெதுவா தெளிய ஆரம்பிச்சுடுத்து. அப்பாவுக்கு ரொம்ப சந்தோசம். ஆனா, அதுக்கு மேலே பேரப்புள்ளையைப் பாத்தப்புறம், ரெட்டை சந்தோசம். குழந்தையை இந்த பாக்கியம்தான் வளர்த்தாள். அப்பா என்னை “நர்ஸிங்’ படிக்க வச்சார். மனசுக்கு ரொம்ப ஆறுதலா இருந்தது”.

“”அப்ப நீ க்வாலிஃபைட் நர்ஸா?”

“”ஆமா! ஆனா, அப்பா என்னை வேலைக்கு ஒண்ணும் அனுப்பலை. பிஸினஸ் நல்லா போயிக்கிட்டு இருந்தது. மறுபடி என் மனசு அலை பாய ஆரம்பிச்சுது. என் மனசைத் திருப்ப, அப்பா இந்த “ஹோமை’ ஸ்டார்ட் பண்ணிட்டார். இப்போ “ஹோம்’ என் பிள்ளைன்னு நிம்மதியா இருக்கேன். ஆனா, அப்பாதான் போயிச் சேர்ந்துட்டார் என்று சொல்லிக்கொண்டே அழ ஆரம்பித்து விட்டாள்.

“சட்’டென்று பேச்சைத் திருப்பினாள், பாக்கியம்.

“”அம்மா, இந்தாங்க, உங்க பையன்! ஸ்கூல்லேருந்து இப்பத்தான் வந்தான். புடிங்க”

உடனே ஸரஸ்வதியின் கவனம் திரும்பியது, தன் பிள்ளையிடம்.

தன் மகனை வைத்த கண் வாங்காமல் பார்த்தார் கோதண்டராமன்.

மறுபடி பாக்கியம்தான் குறுக்கிட்டாள்.

“”கோண்டு ஐயா! இப்ப நீங்க என்ன பண்ணப் போறீங்க? உங்க பொண்சாதியைப் பாத்துட்டீங்க; உங்க புள்ளையைப் பாத்துட்டீங்க! மேல்கொண்டு?”

“”இதோ பார்! பாக்கியம்! உங்க பேபி அம்மா “சரி’ன்னா இந்த ஹோம்லேயே நான் “ஸர்வீஸ்’ பண்ணத் தயார்”.

“”என்ன, ஸர்வீஸ்?” என்றாள் சரஸ்வதிங்கிற பேபி.

“”இனிமேல் நான்தான் இங்கே “கிச்சன் இன்சார்ஜ்’ வெளியிலேருந்து ஜனங்க இங்கே வந்து சாப்பிட வைக்கிறேன், பார்!”

“”சரி! இருக்கை?” என்று வினவினாள், பேபி.

“”அதான் பொண்டாட்டி இருக்கா, பிள்ளை இருக்கான். பேபி அம்மா “எஸ்’ சொன்னா, அங்கே வரேன், இங்கே என் வேலையை முடிச்சுட்டு.”

எல்லோரும் வாய்விட்டுச் சிரித்தனர்.

தூரத்தில், “ஹோமி’ன் கோயிலில் யாரோ மணி அடித்தனர்.

- ரா.இராமமூர்த்தி (அக்டோபர் 2014) 

தொடர்புடைய சிறுகதைகள்
பாண்டியின் சடலத்தை ஆம்புலன்ஸிலிருந்து இறக்கி வீட்டுக்குள் கிடத்தினார்கள். தலையிலிருந்து பாதம் வரையிலும் வெண்ணிற பாப்லின் துணி மொடமொடப்புடன் சுற்றி கட்டப்பட்டிருக்க பாண்டியின் முகம் வீக்கம் கண்டிருந்தது. பத்துக்கு பத்து அளவில் இருந்த அந்த இடத்தில் ஆளாளுக்கு இடித்துக் கொண்டே எட்டி எட்டி ...
மேலும் கதையை படிக்க...
காதுகளை உறுத்தும் பேரோசை சுயம்புவின் கவனத்தை ஈர்த்தது. அவன் பார்வை தானாகவே வெளியே பாய்ந்தது. ரோடில் பயங்கர வேகத்தில் ஒடியது ஒரு மோட்டார் பைக். உல்லாசியான இளைஞன் ஒருவன். அவன் பின்னால் அவனை ஒட்டியவாறு ஒரு இளம் பெண். அவள் சிரித்துச் சிரித்து ...
மேலும் கதையை படிக்க...
தலைகளை எண்ணிப் பார்த்தேன். மொத்தம் பன்னிரண்டு தென்பட்டன. இதில் எனது குடும்ப ஆட்களே ஏழு பேர். அப்படியென்றால் ஐந்து பேர் மட்டுமே படம் பார்க்க வந்திருக்கிறார்கள். அந்த ஏழில் ஐந்து, மனைவி பக்கம். புது மனைவி. இசையமைப்பாளர் கணவனின் முதல் ...
மேலும் கதையை படிக்க...
இராமபிரானின் மனைவி சீதாபிராட்டியின் கற்பு நிலை மாறாத தெய்வீக சரித்திரம் படித்தே அதில் ஊறிப் போன கனவுகளுடன் வாழும் காலத்தை வரமாகப் பெற வேண்டுமென்ற மன வைராக்கியம் ஒரு காலத்தில் மதுராவுக்கு இருந்ததென்னவோ உண்மை தான் ஓர் ஆணோடு கல்யாணமாகிக் கழுத்தில் ...
மேலும் கதையை படிக்க...
நிழல் யுத்தம்!
கையை மடித்துத் தலையணையாக வைத்துக்கொண்டு கொல்லைப்புறத் திண்ணையில் ஓய்வாகப் படுத்திருந்தாள் விசாலாட்சி. பின்மதியத்தின் மங்கிய வெய்யில் காற்றில் அசைந்து கொண்டிருந்த தென்னையோலைகளின் கைங்கர்யத்தால் தாழ்வாரத்தைத் தொட்டுத்தொட்டு விளையாடிக்கொண்டிருந்தது. தென்னையோலைகளின் மேல் ஓடுவதும் பின் அங்கிருந்து மதில் சுவரின் மேல் பாய்வதுமாக இரண்டு ...
மேலும் கதையை படிக்க...
பூக்கத் தொடங்கியது பூவரசு. ஆள்களில்லாமல் வெறிச்சோடியிருந்த நிலத்தில் விருப்பமில்லாமலே பூத்துப் பூத்துச் சொரிந்து, சருகுகளுக்கு ஆறுதல் சொல்வதுபோல் நின்று கொண்டிருக்கிறது. இப்படி எத்தினை தடவை பூத்தது அது. மஞ்சள், மஞ்சளாய், குமிழி குமிழியாய் இதழ்களை மலர்த்திச் சிரித்து, வசந்தகாலப் பண்ணோடு பறந்து ...
மேலும் கதையை படிக்க...
பூந்தமல்லி வரதர் கோயில் தாயார் சந்நிதி பின்னால், ‘பிள்ளையார் பந்து’ ஆட்டத்தின் சுண்டல் இடைவேளையின்போது தான் ரங்கன் அந்த எக்குத்தப்பான கேள்வியைக் கேட்டான்... ‘‘டேய் சீனு, கொழந்தைங்க எப்பிடிடா பொறக்குது?’’ எல்லாம் தெரிந்தவன்போல், சீனு சட்டென்று பதில் சொன்னான்... ‘‘இது தெரியாதா? ஆகாசத்திலேர்ந்து தொப்புனு ...
மேலும் கதையை படிக்க...
மறுபடி ஒரு தரம் பையைத் தொட்டுப் பார்த்துக் கொண்டான். மாணிக்கவாசகம். பத்திரமாக இருந்தது. மொறமொறவென்று சலவை நோட்டாய் பத்து நூறு ரூபாய், நேற்றைக்கு பேங்க்கில் வாங்கி மடித்துப் பையில் சொருகியது. வாங்கியபோது, புதுசுக்கு உண்டான சுத்தமும் மொட மொடப்பும் தொடத் தொடச் ...
மேலும் கதையை படிக்க...
‘’ஷிவானி, இந்த ரோஸ் கலர் சட்டை உன்னிடம் இருக்கிறது. மறுபடியும் எதற்கு அதே கலர் சட்டை?’’ வேறு கலர் எடுத்துக்கொள்’’ என்றாள் சுஜாதா. ‘’மாட்டேன். எனக்கு இதே கலர்தான் வேணும்’’ அடம் பிடித்தாள் ஷிவானி. ‘’சனியனே சொன்னால் கேட்கமாட்டாயா?’’ திட்டினாள். தலையில் குட்டினாள். பிறகு, ...
மேலும் கதையை படிக்க...
கணவன்-மனைவி
அழைப்பு மணியின் ஓசையை கேட்டு கதவை திறந்தவர் திகைத்தார். ""வசந்த் வா...வா... என்ன இது... வரேன்னு போனில் கூட சொல்லாமல்... நந்தினி வரலையா?'' ""இல்லப்பா... புறப்பட்டு வரணும்ன்னு தோணிச்சு. ஒரு வாரம் ஆபிசுக்கு லீவு போட்டுட்டு கிளம்பி வந்துட்டேன்.'' அவன் முகத்தில் தெரிந்த சோகம், கவலை. ...
மேலும் கதையை படிக்க...
தருணம்
சுயம்பு
கல்யாணமாம் கல்யாணம்!
கற்பு யுகத்தின் கானல் சுவடுகள்
நிழல் யுத்தம்!
ஒரு பூவரசு , ஒரு கடிகாரம் , ஒரு கிழவி
குவா… குவா!
கற்றதனால் ஆன பயன்
சட்டை – ஒரு பக்க கதை
கணவன்-மனைவி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)