நாங்கள் நெல்லைச் சீமை தாமிரபரணி கரையில் பிறந்தவர்கள்! என் மனைவி ஊருக்கும் என் ஊருக்கும் பத்து மைல்கள் தான்இருக்கும்.
ஒரு முறை வண்ணார் பேட்டையிலுள்ள என் தாத்தாபாட்டி, பெரியப்பா சித்தப்பா காண சென்றோம். நெல்லை டவுனில் என் பெரிய மாமனார் வீட்டில் அவளை விட்டு வேண்டிய பொருள் வாங்க என்னை கடைக்கு அனுப்பினாள். வழியில் என் நண்பனைப் பார்த்தேன்.
புதிய சோனி காசெட் பிளேயர் ஒன்று விற்கப் போகிறேன், பார்க்க வருகிறாயா என்றான்.
நான் வந்த வேலை மறந்து பாட்டுகளிலும் அந்த பாட்டுப்பெட்டியிலும் ஒன்றி விட்டேன், பாட்டி தாத்தா பார்க்கப் போகவில்லை. மறு நாள்தான் போனோம்.
அந்த நாட்களில் காசெட் பிளேயர் அதிசயம் ! தெரிந்தவர் மாட்டு வண்டியில் போனோம்!
நெல்லை ஜங்க்ஷன், ஆற்றுப் பாலம் “பிள்ளை போட்டுப் பலாப்பழம் எடுத்த ஓடை “பாலத்தில்வண்டி சென்று கொண்டிருந்தது .
அப்பொழுது என் மனைவி சரஸ்வதி “இது என்ன தெரியுமா?”என்றாள்.
தெரியும் என்றேன்.
பிறகு அவள் சொன்னது. ஓடும் தண்ணீரில் பலாப்பழம் எடுக்கப் போன ஒருவள் கையிலருந்த குழந்தையை ஆற்றில் தவற விட்டாள்.பலாப்பழத்தின் ஆசையில் குழந்தை பறிபோனது. அது போலத்தான் நீங்களும்!
ஒரு பாட்டுப் பெட்டிக்காக பெரியவர்களை பார்க்க போகவில்லை நம்மை எதிர் பார்த்து எவ்வளவு வேதனைபட்டிருப்பார்கள். பெரியவர்களை காட்டிலும் ஒரு பெட்டி பெரிதாகிவிட்டது.
அப்படி என்ன ஆசை! உறவுகளை விட ஒரு பொருளில் ஆசை! அளவுடன் ஆசை வையுங்கள்! மிஞ்சினால் அது உங்களையும் என்னையும் அழித்துவிடும்!
பொன்னான வார்தைகள்!
அவள் உறுதியும் தீர்மனமும்தான் மிகச் சாதாரண நிலையில் இருந்த என்னை சமூக அந்தஸ்து பெறச் செய்தது, பிறகு எத்தனையோ நல்ல பொருள்கள் வாங்க வைத்தாள்.
என்ன ஆனாலும் எதை வாங்கினாலும் அந்த முதல் வேகம் இல்லை எனக்கு!அந்த நாளை நான் மறக்கவேயில்லை !
சொன்னவள் இல்லை! ஆனால்அந்த வார்த்தைகள் என்னுள்ளேயே அடங்கி விட்டன, அவள் நினைவைப்போல்!
தொடர்புடைய சிறுகதைகள்
கண்ணாடி முன் நின்று என்னையே நான் பார்த்துக் கொண்டிருந்தேன். எப்பொழுதும் வெளியில் போகும்பொழுது பார்த்துக் கொள்ளுவேனே !இன்னைக்கி என்ன இது புதுசான்னு தெரியலே!
தனிமை உணர்வு என்னையே மறு முறை பார்க்கத் தூண்டியது!.
தனிமையின் மிருதுவான உறுத்தல்களும் ,அதனுடைய உணர்வுகளும் ஏற்படுத்தும் இனிய அசைவுகள் ...
மேலும் கதையை படிக்க...
(இது முந்தய கதையின் தொடர் )
அன்று சென்னை விமான நிலையத்தில் பார்வையாளர் வழி அனுப்பும் இடத்தில் நிறையப் பேர் !
செல்வியும் மாதவனும் சுங்கச் சோதனை போகுமுன் விடை பெற குடும்பத்தினரிடம் வந்தனர் .
பார்வையாளர் பகுதியில் சில கல்லூரிப் பெண்களும் இருந்தார்கள் .
'அதோ ...
மேலும் கதையை படிக்க...
கடற்கரையில் காற்று வாங்கி ,மனது குளிர்ந்து செயல்படும் அருமையான மாலை நேரம்.
இந்த சென்னை பீச்சில் எவ்வளவு பேர் இருந்தாலும் ,அவரவர்களுக்கு உலவுவதற்கும் ஓடுவதற்கும் ,உட்கார்ந்து ரசிப்பதற்கும் தனிமை உண்டு.மாலையின் குளிர்ந்த அந்தப் பொழுதில் சாலை விளக்கொளிகள் சூரியன் மறைவதைப் பொறுத்து மிளிர ...
மேலும் கதையை படிக்க...
உள்ளம் உணர்ந்து உணர்வுகளும் உறைந்து விட்டன.அந்த நினைவுகளுக்கு எதிர் தோற்றங்கள் அளிக்க அவனால் முடிய வில்லை
அவனும் மனிதன்தானே என்று சொல்லிவிட முடியும் .
நினைவுகளின் பரிமாணங்கள் அளந்து சொல்ல முடியாத ஒன்று !
எழுதலாம் .
கடலுக்குள் ஆழமிருக்கிறது! ஆகாயத்தில் தூரமிருக்கிறது !
ஆனால் அவன் மனத்தின் ...
மேலும் கதையை படிக்க...
நியூ யார்க் ஏர் போர்ட் . டெர்மினசில் அரவிந்த் உட்கார்ந்த்ருந்தார்
பக்கத்தில் உள்ளவர் கேட்டார்.
'எங்கே போறீங்க !'
'சென்னைக்கு'
'வந்துட்டுப் போறீங்களா !'
'இல்லை .இங்கேதான் இருக்கேன் .ஊர் ஞாபகம் வந்தது.போகிறேன் .'
அதற்குள் அவர் மனைவி வந்து விட்டாள்.;யார் கிட்டே பேசறீங்க '!
'நம்ம ஊர்காரர்தான் .சென்னை போகிறார்'.
இந்த ...
மேலும் கதையை படிக்க...
அனுவும், அவள் விரும்பிய அவனும்
பேச நினைத்தேன் பேசுகிறேன்
அன்பு மலர்களும் அரவிந்தனும்
உண்மை தான் உறவுகளை விட எந்த ஒரு பொருளும் உயர்வானதல்லவே .. அருமையான கருத்து தோழரே.. வாழ்த்துக்கள் ..
தங்கள் கருத்துக்களுக்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி . .
நல்ல கருதது . நினைவில் இருக்க வேண்டிய சொற்கள் .
சங்கரநாராயணன் அ