சந்திரன் புறப்பட்டுச் சென்ற அடுத்த விநாடி அடுப்படியில் இருந்த அம்மாவிடம் சென்றான் அருண்.
தோசை சுடுவதை நிறுத்தி, ”என்னடா ? ” பார்த்தாள்.
”அப்பா சரியான கிறுக்கா ? ”
”ஏன் ?!”
”பணக்காரன் வீட்டுத் திருமணம், விசேசங்களை முடிந்த அளவுக்கு ஒதுக்கி, முடியாததுக்கு ஆர்வமில்லாம புறப்பட்;டு மொய் வைக்காம திரும்பற அப்பா நம்மைவிட வசதி கம்மியான ஏழைங்க வீட்டு திருமணம் விசேசங்களுக்கு தங்கள் வீட்:டுத் திருமணம் போல சுறுசுறுப்பாய்க் கிளம்பி மறக்காம மொய் வைச்சுட்டுத் திரும்பறார். ஏன்….இங்கே மரியாதை அதிகம் கிடைக்கும்ன்னா ? ” கேட்டான்.
”அப்படி இல்லே. பணக்காரன் தன் பகட்டைக் காட்டுறதுக்காக ஆடம்பரமாய் செலவு செய்து, நிறைய பத்திரிக்கை அடிச்சு, நிறைய அழைப்பு விடுத்து, தன் மதிப்பைக் கூட்ட கூட்டத்தைக் கூட்டுவான். கூட்டம் கூடும். அங்கே மொய் வைக்கலைன்னாலும் பரவாயில்லே. பணத்துக்கு மரியாதை இல்லே.. ஆனா…. ஏழை அப்படி இல்லே. பத்திரிக்கையைக் கூட தன் பணத்துக்குத் தகுந்தாப்போல சிக்கனமாய் அடிச்சி கூட்டம் கூட்டனும் என்கிற கட்டாயத்துக்காக அதையும் வரவு உள்ள இடமாய் வைச்சு தேவை, திருமணம், விசேசங்களை நடத்துவான். அங்கே பணம் மொய் வைச்சா அவனுக்கு அது உதவி. அதனாலதான் அப்பா இப்படி போறார். எதுவும் தேவைபடுற இடத்துக்குப் போனாத்தான் அதுக்கு மதிப்பு.” சொல்லி தோசையைத் திருப்பிப் போட்டாள்.
அருணுக்கு அப்பா புரிந்தார். உயர்ந்தார்.
தொடர்புடைய சிறுகதைகள்
காலை மணி 10. கோடை சூரியனின் கொடூர வெயில். எதிர்ரெதிரே மருத்துவமனை, காவல் நிலையம். காவல் நிலைய ஓரம் .பிரதானசாலையிலிருந்து கிராமத்திற்குப் பிரிந்து செல்லும் அந்த சாலை சந்திப்பின் முகப்பில் அந்தப் பாட்டி தனியாக நின்றாள்.
தோலெல்லாம் சுருங்கி, முகம் சுருக்கம் விழுந்து, ...
மேலும் கதையை படிக்க...
அண்டை வீட்டுக்காரன் அடியோடு அழிந்தாலும் பாதகமில்லை. தனக்குப் பாதகம்,பாதிப்பு கூடாது. இருப்பதைக்கூட பகிர்ந்து கொடுத்துதவக்கூடாது என்கிற சகமனித பாசநேசம் கொஞ்சமும் இல்லாமல் கர்நாடகம் காவிரியை அடைத்து தமிழகத்திற்குத் தண்ணீர் கொடுக்காமல் அழிச்சாட்டியம் செய்தாலும் அதைப்பற்றி துளியும் கவலைப்படாமல் பூமித்தாய் வயிற்றிலிருந்து வாரி ...
மேலும் கதையை படிக்க...
1
இரவு மணி 10.00. கட்டிலில் நீண்டு மல்லாந்து படுத்திருந்த நிர்மல் வயது 45. இப்போதுதான் ஒரு தெளிவு, தீர்க்கமான முடிவிற்கு வந்து அருகில் படுத்திருந்த மனைவி நித்யாவைப் பார்த்தான்.
அவள் கருமமே கண்ணாய்ப் புத்தகத்தில் மூழ்கி இருந்தாள். எலுமிச்சை நிறம். அழகான வட்ட ...
மேலும் கதையை படிக்க...
இவர்கள்..!
(கரு 1 கதை 3)
1
மாலை. கடைசியாய் எடுத்த பன்னிரண்டாம் வகுப்பு விடைத்தாளின் முதல் பக்கத்திலேயே தாமோதரனுக்கு அதிர்ச்சி, ஆனந்தம்.
'கண்ணா ! லட்டுத் தின்ன ஆசையா !? ' சட்டென்று மூளைக்குள் மின்சார பல்பு பிரகாசமாக எறிய..... மீண்டும் படித்தான்.
'ஐயா! நான் நிர்மலா. ...
மேலும் கதையை படிக்க...
'அட்டையாய் ஒட்டி படுத்தி எடுக்கிற மனைவி அஞ்சு நிமிசம் பிரிஞ்சாலே அமிர்தம் ! அதுவே அஞ்சு நாள்ன்னா.....?!!' எனக்குத் தலைகால் புரியவில்லை.
மாட்டாதவரை நானும் என் பொஞ்சாதியும்...ரெண்டு புள்ளைங்க பெத்தும் ரொம்ப அன்னியோன்யம். எசகுபிசகாய் ஒருநாள் வீட்ல அடுத்தத் தெரு நிர்மலாவோட இருக்கும்போது ...
மேலும் கதையை படிக்க...