அந்த நகைச்சுவை பற்றி ஆழமான விசாரணை நடத்தியே ஆக வேண்டும். அவள் இப்படி கூறியிருந்தாள்.
‘சாவதாய் இருந்தால் நான் தான் முதலில், எனக்குப்பின் தான் நீ”
1
சாவதாய் இருந்தால் நான் தான் முதலில்
என்னை பரிதாபமாக கெஞ்சவிட்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான் என் நண்பன். அவன் கொடுக்கமாட்டான் என்று தெரிந்துதான் அவனிடம் இதை நான் கேட்டுக் கொண்டிருந்தேன். அவன் சிரித்துக் கொண்டே மறுத்துக் கொண்டிருந்தான். அது எனக்குப் பிடிக்கவில்லை. அவனிடம் எனது குரலை கடுமையாக்கிக் கொண்டு கேட்க ஆரம்பித்தேன். அவன் அப்பொழுதும் மறுத்தான். எனக்கு உண்மையிலேயே கோபம் வந்துவிட்டது. உண்மையில் சட்டையை பிடிக்காத குறை. அவனிடம் மிகக் கடுமையாக நடந்து கொண்டேன். அவன் சற்று மனம் வெதும்பி போனான். அதன் பின் விளைவுகளைப் பறறி உனக்குத் தெரியுமா என்று வினவினான். எனக்கு அவன் பேச்சை வளர்த்துக் கொண்டே போவது சற்றும் பிடிக்கவில்லை. கோபத்தில் எனக்கு மூச்சு வாங்கியது. பின் என் இருப்பை அவன் புரிந்து கொண்டானோ என்னவோ கொடுத்து விட்டான். நான் எதிர்பார்த்த அளவிற்கு இல்லை. அவனிடம் இருந்தது அவ்வளவுதானாம்.
அவன் கொடுத்தது – 6 தூக்க மாத்திரைகள்
அவன் பெயர் – சரவணன்
தொழில் – மெடிக்கல் ரெப்
இன்னும் 30 மாத்திரைகளுக்கு என்ன செய்வது என்றுதான் அப்பொழுது புரியவில்லை.
2
அவ்வளவு தெளிவாக கேட்கவில்லையென்றாலும் என் சுயநினைவு தப்புவதற்கு சில கணங்களுக்கு முன் கேட்ட சில வார்த்தைகளை கோர்வைப்படுத்தி கூறிவிடுகிறேன்.
கடவுளே அதை நான் எப்படிக் கூறுவேன், அவர்……… அவர் என் தந்தை, அவர் சென்டிமென்டாக என்னிடம் பேசிக் கொண்டிருந்தார். அது ஒரு நல்ல காமெடி, சுயநினைவு தப்புவதற்கு முன் என்னை சிரிக்க வைத்து விட்டார். அது….. அந்த வார்த்தைகள், ‘சாவதாய் இருந்தால் எல்லோருக்கும் தூக்க மாத்திரைகளை வாங்கிக் கொடு, எல்லோரும் சேர்ந்து சாகலாம்”
நான் என்ன செய்வது சிரிப்பதைத் தவிர. அவர் அப்படி பேசி நான் கேட்டதே இல்லை. 30 மாத்திரைகளை சேர்ப்பதற்குத்தான் நான் எவ்வளவு கஷ்டப்பட்டேன், ஒவ்வொரு மெடிக்கல் ஷாப்பிலும் 2 மாத்திரைகளுக்கு மேல் கேட்டால் சந்தேகமாகப் பார்க்கிறார்கள்.
அந்த டாக்டர் என் வயிற்றிலிருந்து மாத்திரைகளை எடுக்கும் முயற்சியில் நான் இன்னொரு முறை செத்துப் போனோன்.
ஐ.சி.யு. வில் இருந்த 3 நாட்களும் இந்த வார்த்தைகள் தான் திரும்ப திரும்ப ஞாபகம் வந்து கொண்டிருந்தது.
‘சாவதாய் இருந்தால் நான் தான் முதலில், எனக்குப் பின்தான் நீ”
நான் மருத்துவமனையில் நிர்வாணமாய் இருந்த சமயத்தில், அவள் இன்னொருவனுடன் முதலிரவில் நிர்வாணமாய் இருந்திருக்கிறாள். என் மனம் விரும்பவதெல்லாம் இக்கதையின் தலைப்பை அவளுடைய கண்ணோட்டத்தில் நிஜமாக்க வேண்டும் என்பது தான்.
தொடர்புடைய சிறுகதைகள்
எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை. ஒருவேளை இருந்திருப்பின் (இப்படி ஒருவேளை என்று சிந்திப்பதில் நான் பழக்கப்பட்டுவிட்டேன்) நான் இதைத்தான் வேண்டியிருப்பேன்.
கடவுளே அந்த காமன் மேன் ஊருக்குள் குண்டு வைத்துவிட்டு போன் செய்வதற்கு என்னை தேர்ந்தெடுக்கக் கூடாது. ஒருவேளை என்னை தேர்ந்தெடுத்திருந்தால், கடவுளே ...
மேலும் கதையை படிக்க...
மிரட்டலான பார்வையுடன் அவர் இப்படிக் கூறியிருந்தார்.
"வடை சுடுவதற்கு சட்டியில் எண்ணெய்யை ஊற்றினால் அது காய்வதற்கு முன்னதாக என் பொண்ணு என் வீட்டில் இருக்கணும், அப்படி ஒரு மாப்பிள்ளைதான் எனக்கு வேண்டும்"
பெற்ற பெண்ணின் மீது மானாவாரியாக பாசம் வைத்திருக்கும் தந்தையை நினைக்கையில் பெருமிதமாகத்தான் ...
மேலும் கதையை படிக்க...
அவன் : மனதில் எழும் எண்ணங்களை மேகம் முகிழ்ந்து செல்வது போல இயல்பாக அலையவிட்டு இரு மேகங்கள் முட்டி மோதி முகிழ்த்து, புணர்ந்து, உயிர்ச்சாரை பொழியும் தருணத்தில் அதில் நனைந்து, தன்னை மறந்து 'தான்' ஐத் தொலைத்து, இவ்வண்டப் பிரபஞ்சத்தில் எங்கு ...
மேலும் கதையை படிக்க...
எல்லாவற்றிற்கும் என் நண்பன் தான் காரணம். நண்பன் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும். மற்ற நண்பரக்ள் எல்லாம் இவனைப் பார்த்துக் கற்றுக் கொள்ள வேண்டும். நான் கேட்டவுடன் எனக்கு ரயிலில் டிக்கெட் புக் செய்து கொடுக்க அவனால் எப்படி முடிந்தது என்று ...
மேலும் கதையை படிக்க...
கூலிக்கு ஆட்களை கொலை செய்யும் இரண்டு நண்பர்கள் ஒருவனை கொலை செய்வதற்காக. பல மாடிகட்டிடத்தின் உச்சியில் படுத்திருந்தார்கள். இருவரும் ஒருவரையொருவர் வெகு சில தடவைகள் மட்டுமே சந்தித்து கொண்டனர். இப்படி என்றாவது ஒரு நாள் சந்தித்துக் கொண்டால் தான் உண்டு. அதிகாலையிலேயே ...
மேலும் கதையை படிக்க...
தொலைக்காட்சியில் அந்த பழைய சினிமா ஓடிக்கொண்டிருந்தது. கடைசியாக இந்த ஒரு சினிமாவை மட்டும் பார்த்துவிட்டு ஆரம்பித்துவிட வேண்டியதுதான். இருந்தாலும் ஏதேனும் ஒரு புது சினிமா போட்டிருக்கலாம். திருவிளையாடலில் பிள்ளையார் முருகனை ஏமாற்றிக் கொண்டிருப்பதை எத்தனை முறைதான் பார்ப்பது. இருந்தாலும் என்னவொரு ஜுனியஸ் ...
மேலும் கதையை படிக்க...
எங்கள் வீட்டு பிரதான அறையில் அழகாக நிறுத்தப்பட்டிருக்கும் பூவேலைப்பாடுகள் மிக்க மரப்பலகையில் வைக்கப்பட்டிருந்த அந்த தலையாட்டி பொம்மையைப் பார்த்து அன்று ஒரு நாள் தெரியாத்தனமாக இவ்வாறு கூறிவிட்டேன்.
அப்பா சின்னம்மா சாப்பிட கூப்பிடுறாங்க வாங்கப்பா
ஆனால் வீட்டின் பின்புறம் அமைக்கப்பட்டிருந்த தோட்டத்தில் சின்னம்மா சொல்லியிருந்தார் ...
மேலும் கதையை படிக்க...
‘ஹலோ”
‘ஹலோ”
‘என்ன பண்ணிகிட்டு இருக்க”
‘தூங்கிகிட்டு இருக்கேன்”
‘காலை 10 மணிக்கு என்ன தூக்கம் வேண்டி கிடக்கு”
‘நைட் ட்யூட்டி பாத்துட்டு வந்தேன் அதான்”
‘ஓ நைட் ட்யூட்டி பாத்தா, காலைல தூங்கணுமா... உனக்கு வெக்கமா இல்ல”
‘இல்ல”
‘என்னை உன்னால சமாளிக்க முடியல்ல”
‘சரியா புரிஞ்சுகிட்ட, வெரிகுட்”
‘உன்னை இப்படித்தான் கல்யாணத்துக்குப் ...
மேலும் கதையை படிக்க...
இன்று
அவர் கூறினார்.
"சார்.... இளையராஜா ஐயா மாதிரியான இசை மேதைகள் இசையை உருவாக்குறாங்களே அதுல சந்தோஷம் அதிகமாக.... இல்லை அதை உருகி உருகி என்னை மாதிரி ஆட்கள் ரசிச்சு கேட்கிறாங்களே அதுல சந்தோஷம் அதிகமா??...
எனக்கு பகீர் என்றது.
"உங்களுக்கு ஏழரை சனி பார்த்து நடந்து ...
மேலும் கதையை படிக்க...
காசுபணம் இல்லாதவர்கள் வாழ்க்கையில், ஆண்-பெண் உறவில் இன்பம் என்பது எந்த அளவுக்கு அர்த்தப்பூர்வமாக இருக்கிறது என்கிற தாழ்வு மனப்பான்மை ஒவ்வொரு முறை உச்சநிலையை நெருங்குகிற போதும் அவனுக்குத் தோன்ற அப்படியே அடங்கிப் போகிறான். அவன் மனைவியின் முகத்தில் ஏமாற்றத்தைப் பார்ப்பது இது ...
மேலும் கதையை படிக்க...
குறுக்குப் புத்தி பிள்ளையார் ஒழிக
99 அல்ல 100 சதவீத முழுத்தோல்வி
இளையராஜா vs ஏ.ஆர். ரஹ்மான்