தண்டனை எதற்கு?

 

அயோத்தி அரசன் ராமபிரான், மக்களின் மனநிலையை அறிய எண்ணினார். சாதாரண மனிதனின் கோலத்தில் தம்பி லட்சுமணனுடன் சென்றார். ஆற்றங்கரையில் அதுவரை பார்த்திராத துறவி ஒருவரைப் பார்த்தார். ஆச்சார சீலராகக் காட்சி தந்தார் அவர்.

ஆற்றில் மூழ்கி தனது அனுஷ்டானங்களை முடித்துக் கொண்டு, பிறகு ஜபம் செய்யத் தொடங்கினார் துறவி. சிறிது நேரத்தில், ஹோமம் செய்வதற்கான சமித்துகளை எடுத்துக் கொண்டு அமர்ந்தார். சரி இவர் வேள்விதான் செய்யப் போகிறார் என்று எண்ணி, ஓர் ஓரத்தில் அமர்ந்து அவர் செய்வதை கவனித்தார் ராமபிரான்.

தண்டனை எதற்குதுறவியோ, கையில் வைத்திருந்த துணி மூட்டையில் இருந்து, மாவு எடுத்து பாத்திரத்தில் இட்டுப் பிசைந்து, சமித்துகளில் தீ மூட்டி, ஆறு ரொட்டிகளைச் சுட்டார். இரண்டில் தேனும், இரண்டில் நெய்யும், மீதி இரண்டில் ஊறுகாயும் தடவி வைத்தார். பிறகு மீண்டும் ஜபம் செய்தார். சிறிது நேரம் சென்றது. கண்திறந்த துறவி, ரொட்டிகளை எடுத்து வைத்து, சாப்பிட அமர்ந்தார்.

அந்த நேரம், பசியால் வாடிய பெரியவர் ஒருவர் அவ்வழியே வந்தார். பார்க்க பரிதாபமாக இருக்கவே, துறவி அவரை அழைத்து, ஊறுகாய் தடவிய ரொட்டிகளைக் கொடுத்து உண்ணச் சொன்னார். மீண்டும் கண் மூடி தியானத்தில் ஆழ்ந்தார்.

திரும்பவும் கண்விழித்து எழுந்து, தேன் தடவிய இரண்டு ரொட்டிகளை எடுத்துக் கொண்டு சாப்பிட அமர்ந்தார். அந்த நேரம் வாடிய நிலையில் ஒரு சிறுமி அவ்வழியே வந்தாள். அவளைப் பார்த்து இரக்கப்பட்ட துறவி, அந்த ரொட்டியை அவளுக்குக் கொடுத்து சாப்பிடச் சொன்னார். பிறகு மீதி இருந்த நெய் தடவிய ரொட்டியை எடுத்துக் கொண்டு ஆற்றங்கரைக்குச் சென்றார். ரொட்டிகளை சிறிதுசிறிதாகப் பிய்த்து, மீன்களுக்குப் போட்டார். பிறகு திரும்பி வந்து, சமித்துகள் எரிந்த சாம்பலை எடுத்து பாத்திரத்தில் வைத்து, ஆற்று நீரை அதில் சேர்த்து, சாம்பலைக் கரைத்து குடித்துவிட்டு அமர்ந்தார்.

துறவியின் இந்த செய்கை, ராமபிரானுக்கு ஆச்சரியத்தை அளித்தது. நேரே துறவியிடம் சென்று அவர் செய்கைக்கான காரணத்தைக் கேட்டார்.

துறவி சொன்னார்: ”ஸ்நானம் செய்து முடித்து ஜபத்தில் அமர்ந்தேன். அப்போது, பையில் இருந்த மாவுதான் நினைவுக்கு வந்தது. அந்த மாவினை ரொட்டி சுட்டு, தேனும் நெய்யும் கலந்து சாப்பிட வேண்டும் என்று மனது ஆசைப்பட்டது. அந்த மனதை திருப்திப்படுத்த வேண்டும் என்பதற்காக ரொட்டி சுட்டேன்…”

”ரொட்டி சுட்டீர்கள் சரி… ஆனால் நீங்கள் ஏன் அவற்றை உண்ணவில்லை ஸ்வாமி?” – கேட்டார் ராமபிரான்.

”துறவி என்பவன் புலன்களை அடக்க வேண்டும். எவ்வளவோ முயற்சி செய்து அடக்கினேன். ஆனால், மனது மட்டும் அவ்வப்போது அடம் பிடிக்கிறது. அதன் போக்கில் விட்டு, பிறகுதான் அதற்கு தண்டனை தரவேண்டும். சாம்பலாகப் போகும் இந்த உடலுக்குள் இருந்து கொண்டு, என்னமாய்ப் படுத்துகிறது இந்த மனது?! அதனால், இந்தச் சாம்பல்தான் இன்று ஆகாரம் என்று மனதுக்குக் கட்டளையிட்டு அதையே சாப்பிட்டேன். இதுதான் அடங்க மறுக்கும் மனத்துக்கு அடியேன் அளிக்கும் தண்டனை!” என்றார் மெதுவாக!

- ஸ்ரீ.ஸ்ரீ (நவம்பர் 2009) 

தொடர்புடைய சிறுகதைகள்
தசக்ரீவன், ராவணன் ஆன கதை!
இலங்கை மன்னனாக இருந்து ராஜ போகம் உட்பட அனைத்தையும் இழந்தவன் சுமாலி, அரக்கர் குலத்தைச் சேர்ந்தவன். அவன் ஒரு முறை பாதாளத்தில் பதுங்கி வாழ்ந்தான். ‘அரக்க வீரன் ஒருவனை உருவாக்கி, அவன் மூலம் தேவர்களை வீழ்த்தி, மீண்டும் இலங்கையை ஆட்சி புரிய ...
மேலும் கதையை படிக்க...
ராமாயண கதை எல்லோருக்கும் தெரிந்த ஒரு கதை. அந்தக் காலத்தில் ராமாயண காவியத்தை தெரு கூத்தாகக் காட்டி பரப்பி வந்தார்கள். அப்புறம் ராமாயண கதையை நிறைய நாடகக் கலைஞர்கள் நாடகமாகப் போட்டு பரப்பி வந்தார்கள். கால§க்ஷப வித்வான்கள் ராமாயண கதையை,ஒரு வாரம்,பதினைத்து நாட்கள்,ஒரு மாசம், என்று ...
மேலும் கதையை படிக்க...
ஏழைக்கு இரங்குபவனே உண்மையான பக்தன்!
மூட்டை தூக்கும் தொழிலாளியான ராமதேவன், தினமும் மாலையில் நீராடி, ஸ்ரீபாண்டுரங்கனைப் பாடி பூஜித்து, பழம்- கற்கண்டுகளை பக்தர்களுக்கு வழங்கி வந்தான். சம்பாதிப்பதில் ஒரு பங்கை உண்டியலில் சேமித்து வைத்து, வருடா வருடம் பண்டரிபுரம் சென்று, விட்டலனுக்கு வஸ்திரம் சமர்ப்பிப்பது வழக்கம். உண்டியல் ...
மேலும் கதையை படிக்க...
கபிலவஸ்து நாட்டின் அருகாமையில் காட்டிலுள்ள ஒரு குடில் தன் மகன் ராஜ்யத்தின் மீது பற்று இல்லாமல் இருப்பதைக் கண்ட மன்னர் சுத்தோதனர் காட்டிலுள்ள துறவியிடம் சித்தார்த்தனை அனுப்பிவைத்தார். குருவின் முன்பு பத்மாசனத்தில் நன்றாக நிமிர்ந்து கண்களை மூடி அமர்ந்திருந்தான் சித்தார்த்தன்.எதிரில் தியானத்தில் ஆழ்ந்திருந்த ...
மேலும் கதையை படிக்க...
திருவரங்கத்தில் ராமாயண காவியத்தை அரங்கேற்ற விரும்பிய கம்பர், திருவரங்கம் சென்று அங்குள்ள பண்டிதர்களிடம் தனது விருப்பத்தை தெரிவித்தார். அவர்கள், ''முதலில் தில்லை மூவாயிரம் அந்தணர்களிடம் பாடிக் காட்டுங்கள். உங்களது காவி யத்தை அவர்கள் ஒப்புக் கொண்டால், நாங்களும் இங்கு அரங்கேற்ற சம்மதிக்கிறோம்!'' என்றனர். உடனே, ...
மேலும் கதையை படிக்க...
அரசனை உதைத்த துறவி!
கானகம் ஒன்றில் ஒரு துறவி வாழ்ந்து வந்தார். முக்காலமும் அறிந்தவர் அவர். ஒரு நாள் திருமகள் அவர் முன் தோன்றினாள். ‘‘மகனே... முற்பிறவியில் நீ செய்த புண்ணியங்களின் பலனாக, சிறிது காலம் நான் உன்னுடன் தங்கி இருக்க வேண்டியது நியதி. என் அனுக்கிரகத்தால் ...
மேலும் கதையை படிக்க...
ஆதவருக்கு அருளிய ஆறுமுகக் கடவுள்!
முருகப் பெருமானின் அருள் பெற்ற அடியார்களில் ஒருவர் ஆதவர்; ராமேஸ்வரத்தில் வாழ்ந்த மகான். முருகனை துதித்து 'திருமலை முருகன் மணங்கமழ் மாலை' எனும் நூறு பாடல் களைப் பாடியவர். இவரை வணங்கி வாழ்த்துப் பெற வருவோர், பொன்னையும் பொருளையும் இவர் காலடியில் கொட்டி ...
மேலும் கதையை படிக்க...
நித்திய​ பாராயண ஸ்லோகங்களுள் ஒன்றான அன்னபூரணி துதி மிகவும் பிரபலமான ஒன்று. அன்னபூர்ணே! சதா பூர்ணே! சங்கர பிராண வல்லபே! ஞான வைராக்ய சித்யர்த்தம் பிக்ஷாம் தேஹி ச பார்வதி இந்த நான்கு வரி ஸ்லோகத்தில் ஒரு பரிபூரணம் காணப்படுகிறது. முதல் வரி - "அன்னம் சம்பூர்ணமாக உள்ள தாயே!" இரண்டாம் ...
மேலும் கதையை படிக்க...
வாழ்க்கையின்​ ஆதாரம் நீர். நீர் தோன்றிய பின் தான் உயிர்கள் தோன்றின. உயர்ந்த நாகரீகங்கள் எல்லாம் நதிக் கரைகளில்தான் தோன்றி மலர்ந்தன. நீராடல் உத்தமச் செயல். அதிலும் நதி நீராடல் மிக உத்தமம். புஷ்கர சமயத்தில் நதி நீராடல் மிக மிக ...
மேலும் கதையை படிக்க...
பங்கஜம் மாமி: “என்னடி வீடு வாசல் எல்லாம் தொறந்து போட்டு எங்கே போனா புஷ்பா மாலதி சரளா எல்லா எங்கேடி போனிங்க பெரியாவா வீட்டிலே இருந்தா இப்படி இருக்குமா? எல்லாம் ஒன்னும் தெரியாத பெண்ணுங்க” என்று நவராத்திரிக்கு பட்சனம் வாங்க வந்த ...
மேலும் கதையை படிக்க...
தசக்ரீவன், ராவணன் ஆன கதை!
நல்ல தம்பிக்கு உதாரணம்
ஏழைக்கு இரங்குபவனே உண்மையான பக்தன்!
மாயை
சிதம்பரத்தில்… பாடல் பாடி இறங்கியது பாம்பின் விஷம்!
அரசனை உதைத்த துறவி!
ஆதவருக்கு அருளிய ஆறுமுகக் கடவுள்!
அன்னபூர்ணே! சதா பூர்ணே!
பாபம் போக்கும் கிருஷ்ணா புஷ்கரம்
நவராத்திரி கொலு

தண்டனை எதற்கு? மீது ஒரு கருத்து

  1. Akila says:

    கதை சிறுக்கதையாக இருந்தாலும் கருத்து மிக பெரியது. சிறுக்கதை எழுதியதிற்கும், அதை பகிரிந்துகொண்டதற்கும் மிக்க நன்றி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)