விண்கல்

 

பௌதிகத் துறை பேராசிரியர் ராஜன் அஸ்டிரோ பிசிக்சில் (Astro Physics) எனப்படும் வான்யியற்பியலில் முனைவர் பட்டம் பெற்றவர். விண்கல் தோற்றமும் அதனால் பூமியின் பாதிப்பு பற்றி அவர் ஆராச்சி செய்து முனைவர் பட்டம் பெற்றவர். வானியற் சம்பந்தப்பட்ட பல கட்டுரைகளை விஞ்ஞானி என்ற சஞ்சிகைக்கு எழுதிவருபவர். வாண் சாஸ்திர வல்லுனர்கள் பலரின் வரலாறு பற்றி அறிந்து வைத்திருந்தார். அவ்வல்லுனர்களில் அவரை முக்கியமாக கவர்ந்தவர்கள் அல்பேர்ட் அயின்ஸ்டைனும், ஸ்டீபன் ஹோகின்சுமேயாகும். உலகம் போற்றும் அல்பேர்ட் அயின்ஸ்டைனின் நினைவாகத் தன் மகனுக்கு அல்பேரட் எனப் பெயர் சூட்டினார் ராஜன்.

அல்பேர்ட் தன்னைப்போலவே வான்யியற்பியலில் படித்து பட்டம் பெற்று உலகம் போற்றும் அல்பேர்ட் அயின்ஸ்டைனைப் போன்று விஞ்ஞானி ஆகவேண்டும் என்பதே அவர் ஆசை. மகனை ஊக்குவிப்பதற்காக 500 டொலர்கள் கொடுத்து வானில் நடக்கும் காட்சிகளைத் தெளிவாகப் பார்கக்;கூடிய திறமை வாய்ந்த ஓரியன் டெலெஸ்கோப் ஒன்றை பிறந்த நாள் பரிசாக மகனுக்கு புரொபசர் ராஜன் வாங்கிக் கொடுத்தார். அல்பேர்ட் வான்யியற்பியல் சம்பந்தப்பட்ட கட்டுரைகளை வாசிப்பதில் அதிக ஆர்வம் காட்டிவந்தான். வானில் நடக்கும் விசித்திரங்களைப் பற்றி அறிவது அவனது பொழுது போக்கு. ஆத்தர் சி கிளார்க் (Arthur C Clerk) , அசிமோவ் (Asimov). ஏச் ஜி வெல்ஸ் (H G Wells) ;போன்ற எழுத்தாளர்கள் எழுதிய அறிவியல் நாவல்ளை வாசித்து தானும் அவர்களைப் போன்று அறிவியல் கதைகள் எழுதும் எழுத்தாளனாக வரவேண்டும் என்பது அவன் ஆவல்;.

தினமும் தனது ஓரியன் டெலஸ்கோப்பினூடாக வானத்தைப் பார்த்து ஆராச்சி செய்தபடியே அல்பேபர்ட் தினமும் இருப்பான். டெலஸ்கோப் இல்லாமல் நேரடியாகப் பார்க்க முடியாத பல கிரகங்களை அவனால் பார்க்கக்கூடியதாக இருந்தது,

ஓரியன் டெலஸ்கோப்பின் முக்கிய கண்ணாடியின் விட்டம் பெரிதாக இருப்பதால் வானில் காட்சிகள் தெளிவாகத் தெரிந்தன.

சூரிய குடும்பத்தில் பெரிய கிரகம் வியாழன். அதன் மேகப் பட்டைகளையும் கலியியோ கண்டுபிடித்த நான்கு பெரிய சந்திரன்களையும் அல்பர்ட்டால் பார்க்கமுடிந்தது. பூமியை விட விட்டத்தில் பதினொரு மடங்கு பெரிதான வியாழன் கிரகத்தில் பெரிய விண்கற்கள் அடிக்கடி தாக்குதலை கண்டு அதிசயத்தான். 67 சந்திரன்களை கொண்ட வியாழனானது எல்லா சந்திரன்களையும் தன் டெலஸ்கோப்பில் அல்பர்ட்டால் பார்க்க முடியவில்லை என்பது கவலை.

சனி கிரகத்த சுற்றி உள்ள வளையங்கள் அத்குப் பெருமையைத் தேடி கொடுத்தது. வியாழனுக்கு அடுத்தாக அதிக எண்ணிக்கை உள்ள சந்திரன்களை இக்கிரகம் கொண்டது. பூமியைப் போல் எல்லாக் கிரகங்களுக்கும் சந்திரன்கள் உண்டு என்பதையும் வெகு தூரத்தில் உள்ள நெப்டியூனுக்கு 14 சந்திரன்களும்? யுரேனசுக்கு 27 சந்திரன்களும் இருப்பதை அறிந்தாலும் அச்சந்திரன்களை தன் டெலஸ்கோப்பினூடாகப் பார்க்கக் கூடியதாக இல்லை என்பது அவனுக்குப் பெரும் ஏமாற்றம்,

வின்கற்கள் கிரகங்களை தாக்குவது கண்கொளாக் காட்சியாக இருந்தது. தன் தந்தைiயிடம் தான் டெலஸ்கோப்பினூடாக கண்ட காட்சியின் சந்தேகத்தைக் கேட்டான்.

“அப்பா, விண்ற்கள் எரி மழை போல் பொலிகின்றனவே அது ஏன். அவை எங்கிருந்து தோன்றியுள்ளன?”.

“வளிமண்டலத்தினூடாக வேகத்துடன் வின்கற்கல் பயணம் செய்வதினால் உராய்வு ஏற்பட்டு, வெப்ப நிலை அதிகரித்து, எரியத் தொடங்குகிறது அதனால் விண்கல்லை எரிகல் என்றும் அழைப்பாரகள். கிரகங்கள் எப்படி பெரும் வெடிப்பின் போது தோன்றினவோ அதே போன்று தோன்றியவைதான் அவை. அதனுடைய பருமனை வைத்து பெரிதாயின் விண்கோள் (Asteroids) எனவும் . சிறுதாயின் விண்கல் (Metyeriods); எனப் பெயரிட்டுள்ளார்கள். இதில் விண்கற்கள் சிறுது என்பதால் பூமியை வந்து தாக்கும் சந்தர்ப்பங்கள் அதிகம் உண்டு.”

“தாக்கினால் என்ன நடக்கும் அப்பா”?

“பலர் விண்கல் தாக்குதலினால் பூமி அழிந்துவிடும் என்;று பீதியை அடிக்கடி உருவாக்குறார்கள். விண்கல் பூமியை வந்து தாக்கும் வாயப்பு கல்லின் பருமன் கூடும் போது, குறைந்து கொண்டு போகும்.. உதாரணத்துக்கு 4 மீட்டர் விட்டம் உள்ள விண்கற்கள் அடிக்கடி பூமியைத் தாக்கக் கூடியவை. 100 கிமீ விட்டம் உள்ள விண்கல் சுமார்; 5000 ஆண்டுகளுக்கு ஒரு தடவைதான் பூமியைத் தாக்கும். 1000 கி.மீ விட்டம் உள்ள விண்கல் கிட்டத்தட்ட 450இ000 ஆண்டுகளுக்கு ஒரு தடவை தான் தாக்கும் என ஆராச்சியாளர்கள் கணித்துள்ளார்கள்.

“பெரிய விண்கல் வந்து பூமியைத் தாக்கினால் பாதிப்பு பெரிதாக இருக்குமே அப்பா”?

“ஆமாம். 66 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த டயனோசோர்ஸ் என்ற மாபெரும் உயரினம் திடீரேன ஒரு நாள் மறைவதற்கு விண்கல் தாக்குதலே காரணம் என்கிறார்கள் விஞ்ஞானிகள். அதுமட்டுமல்ல பல நாடுகளில் திடீரேன தோன்றிய பள்ளங்கள் இப்பள்ளங்களில் 300 கி.மீ நீளமுள்ள மிகப்பெரிய பள்ளம் தென்ஆபிக்காவின் ப்ரீ ஸ்டேட் (Free State) மாகாணத்தில் உள்ளது. இப் பள்ளம் விண்கல் தாக்குதலினால ஏற்பட்டது. இது போன்றே உலகில் இரண்டாவது பெரிய பள்ளம,; கனடாவில் ஒன்றாரியோ மாகாணத்தில் உள்ள சட்பெரி நகரத்தில் விண்கல் தாக்குதலால் இரண்டு பில்லியன் வருடங்களுக்கு முன் உருவாகியது . 1908 இல் சைபீரிய பாலைவனத்தில் தோன்றிய பள்ளம் சுமார் 10 கிமீ விட்டம் உள்ள விண்கல் லின் தாக்குதலினால் தோன்றியிருக்கலாம் என்பது ஆராச்சியாளர்கள் கணிப்பு”

“ அப்போ அப்பா பூமியை தாக்கும் விண்கல் மக்கள் வாழும் நிலப்பகுதியைத் தாக்காமல் கடலில் வந்து விழுந்தால் என்ன நடக்கும்”?

“2004ஆம் ஆண்டு டிசம்பரில் கடலுக்குக் கீழ் நடந்த பூகம்பத்தால் தோன்றிய சுனாமி போல் பல அடிகள் உரமான பேரைலகள் தோன்றி கரையொரப் பகுதிகளையும், தீவுகளையும் அழித்துவிடும். கடலுக்கடியில் ஏற்படும் பூகம்பம் மட்டும் தான் சுனாமியை ஏற்படுத்தும் என்பதில்லை. ஜாவா, சுமத்திர தீவுகளுக்கு இடையேயுள்ள கரகோட்டா என்ற எரிமலை 1883 ஆம் ஆண்டில் வெடித்ததாலும், பங்களா தேசத்தையும் தனுஷ்கோடியை தாக்கிய புயலாலும் பேரலைகள் தோன்றலாம் அல்பர்ட்”.

“கேட்கப் பயங்கரமாக இருக்கிறது அப்பா”

“ஆங்கிலத்தில் டீப் இம்பக்ட (Deep Impact) என்ற ஆழமான தாக்கம் என்ற பெயரில் பிரபல அறிவியற் படங்களை தயாரித்த ஸ்டீபன் ஸ்பில்பேர்க்கின் (Stephen Spillberg) படத்தின் வீடியோ கஸட் எனது லைப்ரரியில் இருக்கிறது. நீ அதை அவசியம்; போட்டுப் பார் அப்போது விண்கல் தாக்குதலால் ஏற்படும் அழிவைப் பார்ப்பாய்.

“நன்றி அப்பா. அவசியம் பார்க்கிறேன்”

. அல்பர்ட் தந்தையோடு கதைத்த பின் விண்கல் பூமியைத் தாக்கினால் என்ன விளைவு பற்றிய ஸ்டீபன் ஸ்பில்பேர்க்கின் டீப் இம்பக்ட் படத்தின் வீடியோ கஸட்டை எடுத்துக் கொண்டு தன் அறைக்குள் சென்றான்

*******

டீப் இம்பெக்ட் படத்தை பார்த்து முடித்துவிட்டு பல வித சிந்தனைகளோடு தன் கட்டிலுக்கு அல்பேர்ட் நித்திரைக்குப் போன போது அவன் மனதில் அடிக்கடி தோன்றியது டெலஸ்கோப்பில் தான் அவதானித்த ஒரு பெரும் விண்கல்லின் தோற்றம். அக்கல் பூமியை நோக்கி வருவதாக அவனது கணிப்புக்கு பட்டது. முதலில் அது ஒரு வால்நடசத்திரமாக இருக்குமோ என நினைத்த அவன,; பின் அதன் தோறத்தையும் செல்லும் பாதையையும் கணித்து நிட்சமாக அது பெரிய விண்கல்லாகத் தான் இருக்கும் என்பது அவன் முடிவு. அதற்குப் தன் கற்பனையில் “அல்பா: என பெயர் வைத்தான். டீப் இம்பெக்ட் படத்தின் கதைப் படி முதலில் விண்கல்லை தனது டெலஸ்கோப்பில் கண்டது ஒரு வாண்சாஸ்திரி. நான் கண்ட அல்பா விண்கல்லைப் பற்றி அப்பாவிடம் நான் சொல்லவில்லையே. சொல்லி யிருந்தால் நான் பார்த்த விண்கல் பூமியைத் தாக்கும் சாத்தியக்கூறு இருக்குதா என்று கணித்துச் சொல்லியருப்பார். அமெரிக்காவில் நிட்சயம் நாசா (NASA) விஞ்ஞானிகள் அந்த விண்கல்லை அவதானித்திருப்பார்கள். கட்டாயம் நாசா தக்க நடவடிக்கை எடுக்கும். என்ற நம்பிக்கையோடு அல்பேர்ட் தூக்கத்தில் ஆழ்ந்தான். அவன் கனவில் டீப் இம்பக்ட் படத்தில் வந்த காட்சிகள் அடிக்கடி வந்து போயிற்று. அடேயப்பா என்ன கற்பனை திறமைவாயந்த டைரக்டர் ஸ்பில்பேரக்;. இடி (ET) என்ற வெளிக்கிரகவாசி பற்றிய பிரபல்யமான படத்தை உருவாக்கியவர் ஆயிற்றே. அது போல் அவரது ஜெரசிக் பார்க் டயனோசோரஸ் பற்றிய படம். எவ்வளவு தத்ரூபமான படம்.; அப்பா சொன்ன மாதிரி அந்த ஜவராசிகள் திடிரென அழிந்ததற்கு விண்கல் தாக்குதலா காரணம்? நம்பமுடியவில்லையே. இதுபோன்ற கனவுகளைக் கண்டவாரே அல்பேர்ட் தூக்கத்தில் ஆழ்ந்தான்.

*******

காலை ஒன்பது மணியாகியும் அல்பேர்ட் தூக்கத்தைவிட்டு எழும்பவில்லை.

“அல்பேர்ட் கெதியலை எழும்பிப் போய் டிவி நியூசைப் பார்” என்று மகனைத் தட்டி எழுப்பினார் பேராசிரியர் ராஜன்.

“என்னப்பா அப்படி முக்கியமான நியூஸ் போகுது”?

“நேற்று நாங்கள் இருவரும் பேசிய விசயத்தோடு சம்பந்தமுள்ள நியூஸ்தான்” பேராசிரியர் பதில் சொன்னார்.

தன் கட்டிலுக்கு முன்னால் இருந்த டிவையை ரிமோட் கொண்டுரோல் மூலம் இயக்கி நியூஸ் சனலை அல்பேர்ட் பார்த்தான்.

“200 மீ விட்டமுள்ள விண்கல் பூமியை ஜ. எம்.டி (GMT) நேரம் இரண்டு மணிக்கு வட துருவத்தை தாக்கியுள்ளது. நல்ல வேலை தாக்கிய பகுதியில் பனி மலைகளைத் தவிர மக்கள் குடியிருப்புக்கள் இல்லை. இந்த தாக்குதல் பூமியின் வடதுருவத்தில் இருந்து கிரீன்லாண்ட் தீவு இருக்கும் திசையில் 200 கீ மீ தூரத்தில் இடம்பெற்றுள்ளது. விண்கல் தாக்குதலின் போது வெப்பசக்தியால் பல பனி மலைகள் பாதிக்கப்பட்டு உருகத் தொட்ங்கிவிட்டன. இதனால் கடல் மட்டம் உயரலாம் என நாசா கருதுகிறது. ஆகவே வடதுருவத்துக்கு அருகே உள்ள நாடுகளான கனடா, கிரீன்லாண்ட். ருஷ்யா, நோர்வே ஆகிய நாடுகளின்; வடக்கு கரையோரப் பகுதிகள் சுனாமி தாக்குதலுக்கு உற்படலாம்” எனச் செய்தி வாசித்தவர் சொன்னார்.

“அப்பா நான் டெலஸ்கோப்பில் கண்ட அல்பா விண்கல் பூமியை நான் நினைத்த மாதிரி தாக்கிவிட்டது. உங்களுக் நான் கண்ட அல்பாவைப் பற்றி சொல்லாதாதற்கு மன்னிக்கவும். கடவுள் புண்ணியத்தில் அது தாக்கிய பகுதி ஆர்டிக் பகுதியான வட துருவம்”, என்றான் அல்பேர்ட்.

(யாவும் கற்பனையே) 

தொடர்புடைய சிறுகதைகள்
யாழ்ப்பாணக் குடாநாட்டில், வலிகாமம் வடக்கில், பாக்கு நீரணையைத் தழுவி உள்ள கடலோரக் கிராமம் மயிலிட்டி. ஒரு நெய்தல் நிலக் கிராமம் அக் கிராமம் தமிழ் நாட்டில் உள்ள கோடியக்கரையில் இருந்து தெற்கே 22 மைல் தூரத்தில், பாக்கு நீரணையின் இலங்கைக் கரை ...
மேலும் கதையை படிக்க...
இறைவனால் படைத்த மனித உடலில் ஒவ்வொரு உறுப்பும் விலை மதிக்க முடியாதது. கனடா ஒன்றரியோ மாகாணத்தில் மிசிசாகா நகரில் வாழும் ஜோன் தம்பதிகளுக்கு ஒரே மகன் பீட்டர் . ஜோன் ப்ளூ ஜெய்ஸ் (Blue Jays) பேஸ் பந்து விளையாட்டு அணியில் ...
மேலும் கதையை படிக்க...
ஓய்வுபெற்ற போஸ்ட்மாஸ்டர் பொன்னையா, அன்று பின்னேரம் ஒரு சேர்ச் ஹோலில் நடக்க விருக்கும் அவர் அங்கத்தினராக உள்ள போஸ்ட்மாஸ்டர் சங்கத்தின் புது வறருட இரவு போசன விருந்துக்கு புறப்படத் தயாராகிக் கொண்டிருந்தார். அந்த நிகழ்ச்சியை அவர் ஒவ்வொரு வருடமும் தவறவிடுவதில்லை. அந்த ...
மேலும் கதையை படிக்க...
நத்தார் தாத்தாவுக்கு மரியாவிடம் இருந்து ஒர் கடிதம். வருடா வருடம் நான் தூங்கும் போது என் கட்டிலில் எனக்குத் தெரியாமல் பரிசுகளை வைத்துவிட்டு போகும் என் அருமை நத்தார் தாத்தாவுக்கு மரியா எழுதுவது நான் என் தாத்தாவை மூன்று வயதுக்கு பின் காணவில்லை ...
மேலும் கதையை படிக்க...
மிக நீண்ட காலத்திற்கு முன்பு பூமியில் விசித்திரமான மற்றும் மந்திர உயிரினங்கள் மட்டுமே வாழ்ந்தன – மேகங்களில் பயணம் செய்து அதை நிர்வகிக்கும் அளவுக்கு உயரமாகக் குதிக்க வேண்டும் என்று கனவு கண்ட மூன்று சிறிய மேகனன் . வின்னன், மலையன் ...
மேலும் கதையை படிக்க...
கொழும்பில் இருந்து தேற்கே, 100 கிமீ தூரத்தில் களுகங்கையைத் தழுவிச் செல்லும் நகர் இரத்தினபுரி. சிங்கள, தமிழ், முஸ்லீம் இனத்தவர்கள் வாழும் நகர். கடும் மழையின் போது அடிக்கடி வெள்ளத்தில் அந்த நகர் மூழ்கும். அந்நகரை சுற்றியுள்ள கிராம மண்ணில் இரத்தினக்கற்கள் ...
மேலும் கதையை படிக்க...
முன்னுரை சம்மரிக்கும் செம்மறி ஆட்டுக்கும் ஒரு தொடர்பும் இல்லை . சம்மரி என்ற ஆங்கில சொல்லின் அர்த்தம் அரசிலோ அல்லது தனியார் நிறுவனங்களிலோ வேலை செய்யும் நண்பர்கள் வதியும் இடம் என்பதாகும். பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் இராணுவ வீரர்கள் தங்கிய இடத்தை சம்மரி ...
மேலும் கதையை படிக்க...
முன்னுரை கிராமத்துக் காலுக்கும் நகரத்துக் காதலுக்கும் அதிக வித்தியாசங்கள். நகரத்தில் காதல் வளர தொழில் நுட்ப வசதிகளும் சமூக ஊடகங்களும், கடலோரம், பார்க், சினிமா தியேயட்டர், உணவகங்கள் போன்றவை துணை போகிறது. அந்த காதல்களில் சில முகம் பாராது அலை பேசியிலும் மின் ...
மேலும் கதையை படிக்க...
அன்று பகல் பெய்யத் தொடங்கிய மழை விட்டப்பாடக இல்லை. மருத்துவமனையில் தனியார் அறையில்உள்ள ஜன்னல கண்ணாடியில் இருந்த மூடுபனியை நான் என் கைகுட்டையால் துடைத்து வெளியே பார்த்தேன். இலையுதிர் காலம் என்ற படியால் மேப்பல், செர்ரி மரங்களின் இலைகள் நிறம் மாறி ...
மேலும் கதையை படிக்க...
இலங்கையில் யால , வில்பத்து, மதுறு ஓயா, உடவளவ, சிங்கராஜ, போன்ற பல தேசீய வனங்கள் உண்டு , அவைற்றை கவனிக்க வன இலாக்கா உண்டு. அவ் வனங்களில் உள்ள வனவிலங்கள் தாவரங்கள். நதிகள் . குன்றுகள் . குளங்கள் நாட்டின் ...
மேலும் கதையை படிக்க...
கண்ணம்மா
உறுப்புத் தானம்
போஸ்ட்மாஸ்டர் பொன்னையா
தாத்தாவுக்குக ஒர் கடிதம்
மூன்று குட்டிச்சாத்தான்கள்
கிரகணம்
சண்முகம் சம்மரி
ஒரு கிராமத்துக் காதல்
ஆத்மனின் ஆன்மா
சேருவில சிறுத்தைகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)