கதையாசிரியர் தொகுப்பு: மூதறிஞர் ராஜாஜி

13 கதைகள் கிடைத்துள்ளன.

தீபாவளியில் தேவ தரிசனம்

 

 (1944 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) சுந்தரஞ் செட்டியார் ஒரு துணி வியாபாரி . சிறுமுதலைக்கொண்டு ஆரம்பித்து, தம்முடைய நான் யத்தினாலும், விவேகத்தினாலும் நல்ல ஆஸ்தி சம்பாதித்தார். அவர் மனைவி மீனாட்சியம்மாள் தீவிர தெய்வபக்தி கொண்டவள். பழைய ஆசார ஒழுக்கங்களை ஏகாதசி விரதம் உள்பட மிக்க கண்டிப்பாய் நடத்தி வந்தாள். மத்தியானத்தில் சாப்பிடுமுன் வீட் டுக்கு வெளியே சென்று, காக்கை, குருவிகளுக்காக அரிசி இறைத்துவிட்டுத்தான் சாப்பிட உட்காருவாள் செட்டியாரும் தம்


சாந்தி

 

 (1944 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) ஒரே ஒரு ஊரில் ஒரே ஒரு மாமியார். அந்த மாமியாருக்கு ஒரு மருமகள். மருமகளுக்குப் பதினான்கு வயது. புக்ககத்திற்கு வந்து ஐந்து நாளாயிற்று. “லக்ஷ்மீ , நான் நாலு குடம் இழுத்துப் போட்டிருக்கிறேன். நீ இன்னும் நாலு குடம் இழுத்து அண்டாவை ரொப்பி விடு. நான் அடுப்பங்கரைக்குப் போகிறேன்” என்று மாமியார் மருமகளைக் கூப்பிட்டுச் சொன்னாள். மருமகள் குடத்தைக் கிணற்றில் விட்டுக் கைநீட்


ராயப்பன்

 

 (1944 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) ராயப்பன் எங்கள் விற்பனைப் பையன்களுள் ஒருவன். கிறிஸ்தவப் பையன். ஆனால் அவன் வழக்கம். இரவில் எங்கேயாவது ஒரு விநாயகரைத் தொழுது விட்டு அங்கேயே விநாயகருக்குப் பின் படுத்துத் தூங்கிவிடுவான். வேறு நல்ல இடம் சொன்னாலும் அங்கே படுக்கமாட்டான். “ஏன் இவ்வாறு செய்கிறாய்?’ என்று கேட்டால் சும்மா சிரிப்பான். ரொம்ப வற்புறுத்தினால், ‘அது தான் எனக்கு மனம் நிம்மதி’ என்பான். “உங்கள் அப்பா கிறிஸ்தவராயிருந்தாரா,


ஒரு எலெக்ஷன் கதை

 

 (1944 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) கோட்டூர் ஜில்லாவுக்குத் தலைநகரமாகிய கோட்டூரில் முன்பு காட்டாஞ்சேரி என்று சொல்லி வந்து இப் போது சில வருஷமாய் ஜேம்ஸ்பேட்டை என்று புதுப் பெயர் கொண்ட ஆதித்திராவிடத் தெருவில், ஸபளையர் சீரங்கன் என்பவன் அங்கே குடியிருந்த முப்பது ஹரி ஜனக் குடும்பங்களுக்குள் கொஞ்சம் நல்ல ஸ்திதியி லிருந்தான். அனேகமாய் ஜேம்ஸ் பேட்டையில் குடி யிருந்தோர் அனைவருமே சோனைமலையில் கூலி வேலை செய்து வாழ்க்கை நடத்தி


சோதிடம் பொய்யாகுமா?

 

 (1944 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) திருவிடைமருதூர்ச் சாமிநாதையர் தொண்டை மண்டலம் உயர்தரப் பள்ளிக்கூடத்தில் பன்னிரண்டு வருஷங்களாகத் தலைமை உபாத்தியாயர் . அவர் மனைவி அகிலாண்டம்மாளும் அவரும் மிகவும் சந்தோஷமாகக் குடும்ப வாழ்வு நடத்தி வந்தார்கள். ஆனால் மனைவிக்கு ஒரு பெருங்குறை. குழந்தையில்லாதது! “அதனாலென்ன, அகிலம் ! (இப்படித்தான் சாமி நாதையர் தன் மனைவியை அழைப்பது) பள்ளிக்கூடத் தில் இருநூறு குழந்தைகள் இருக்கிறார்கள். அத்தனைப் பேரும் எனக்குக் குழந்தைகள் தான்”


கூனி சுந்தரி

 

 (1944 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) “அவர் எக்கேடு கெட்டால் நமக்கென்ன? இந்த மாதிரியான வேலைகளில் இறங்குவது அபாயம். கமலம். வேண்டாம். நான் சொல்வதைக் கேள்.” “ஒரு அபாயமும் இல்லை. காமு. நம் கையெழுத்து அவருக்குத் தெரியுமா? தெரிந்தாலுமென்ன? பார்க்க லாமே ஒரு வேடிக்கை!’ “சரி, நீயே எழுது கமலம். என் பேனா ஓட வில்லை .” “கொடு இங்கே . நான் எழுதுகிறேன். இதில் என்ன கஷ்டம்”. இவ்வாறு


திக்கற்ற பார்வதி

 

 (1944 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) ‘ஆய்வராத’ வண்டி கறுப்பனை வேறே வைத்தார்கள். வேறே வைப்பது என்றால், குடியானவர்களுக்குள் ஒருவ னுக்கு விவாகம் செய்து மனைவி வீட்டுக்கு வந்ததும் அவனும் அவன் மனைவியும் வாசிக்க ஒரு தனிக் குடிசை போட்டுக் கொடுத்து விடுவார்கள். புருஷனும் மனைவி யும் பாடுபட்டு உழைத்துச் சீவனம் செய்யவேண்டும். இது ஒரு நல்ல வழக்கமாகும். உடலுழைப்பு அறியாத உயர் – வகுப்பாரில் இன்னும் இருந்து வரும்


அன்னையும் பிதாவும்

 

 (1969ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) சேலம் ஜில்லா கோக்கலையைச் சேர்ந்த அர்த்தநாரி என்ற ஹரிஜன வாலிபன், ஸ்ரீயுத மல்கானியுடன் டில்லிக்குப்போனான். ஸ்ரீயுத மல்கானி அகில இந்திய ஹரிஜன சேவா சங்கத்தின் காரியதரிசி. தென்னாட்டில் சுற்றுப் பிரயாணத்திற்காக வந்தவர், சேலத்தில் இப் பையனைக் கண்டு வெகு சந்தோஷப்பட்டுத் தம் கூடவே டில்லிக்குக் கூட்டிக்கொண்டு போய்விட்டார். அங்கே அவனைப் பள்ளிக்கூடத்தில் சேர்த்து, ஆறு வருஷம் தம் வீட்டி லேயே வைத்துக்கொண்டு அவனை


கர்நாடக விஜயம்

 

 (1943ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) சப் கலெக்டர் சீதாராமனுக்குச் சம்பளம் ஆயிரத்து இருநூறு ரூபாய். ஆனாலும் குடும்ப வாழ்க்கை மிகவும் சிக்கனமாக நடந்து வந்தது. ‘சிக்கனம் ஏன்? திராபை’ என்றே ஊரிலுள்ள மற்ற உத்தியோகஸ்தர் முதலியவர்கள் தங்களுக்குள் பேசிக்கொண்டு ஏளனம் செய்வார்கள். புருஷனும் பெண்டாட்டியும் அத்தியந்த அன்புடன் வாழ்க்கை நடத்தினார்கள். ஆனால் ஒரு விஷயம் ரகசியமாகவே இருந்தது. மாதம் தவறாமல் சம்பளம் வாங்கினவுடன் எஜமானர் சீமைக்கு ரூ.900 அனுப்பி


யாருக்கு வேண்டும் வரம்?

 

 (1957ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) ஓர் ஏழைக் குடியானவள் கண்ண பிராளை மிக பக்தியுடன் பூஜை செய்து வந்தாள். கண்ணன் அவனுக்கு இரங்கி, ”உனக்கு என்ன வேண்டும்? கேள், தருவேன். ஆனால் ஒன்று, உனக்குத் தருவதை நான் எல்லோருக்கும் தருவேன். எதையும் உனக்கு மட்டும் என்று தருவதற்கு முடியாது” என்றான். “கோபாலா! எனக்கு வேண்டியதை நீ தந்தால் போதும். அதை நீ எல்லோருக்கும் தந்தாயானால் எனக்கு என்ன ஆட்சேபணை?