கதையாசிரியர் தொகுப்பு: முனிஸ்வரன் குமார்

15 கதைகள் கிடைத்துள்ளன.

அங்கையற்கன்னியின் திருமணமும் ஐந்தாண்டு திட்டங்களும்

 

 23 வயது முதல் 28 வயது வரை அங்கயற்கன்னிதான் குடும்பத்தில் மூத்தப் பெண். வயது இருபத்து மூன்றாகிவிட்டது. இருபத்தைந்து வயதில்தான் அவளுக்குத் திருமணம் செய்து வைப்பதென பழனிவேலும் மண்டோதரியும் திட்டமிட்டிருந்தார்கள். அங்கயற்கன்னிக்கு அடுத்து வரிசையில் நிற்பவள் பூங்குழலி. ஆனால் அவளுக்கு இப்போதுதான் பத்தொன்பது. அவசரமேதும் இல்லை என்ற சாவகாசத்தில் காலாட்டிக்கொண்டு அங்கையற்கன்னிக்கு மாப்பிள்ளை தேடினார்கள் இருவரும். ஆனால், சில நிபந்தனைகள். எந்த மாப்பிளையாக இருந்தாலும் சரி. நிர்ணயிக்கப்பட்ட தகுதிகளுக்கு உடையவனாயிருந்தாலொழிய அங்கையற்கன்னி அவனுக்கு எட்டாக்கனி. பழனிவேலுக்கும் மண்டோதரிக்கும்


நேற்றைக்கு ராதா

 

 ஆசுவாசமாய் நிறம்பி கொண்டிருக்கும் மேகங்களைப் பார்க்கும்போது அதன் அழகை ரசிக்கும் மனோபக்குவம் பலருக்கு வருவதில்லைதான். அது அழைத்துவர இருக்கிற மழையைச் சமாளிக்க, முடிந்தவரை முடக்கிவிட, அது முடியாமல் போக வரும் கோபத்தை யார் மேலாவது அல்லது எதன் மேலாவது காட்டுவது, சொல்லப்போனால் எல்லாருடைய வழக்கம்தானே. அதில் அதிகம் பாதிக்கப்படுவது என்னவோ விவரங்கெட்டுக் கிழிந்த மழையாடைகளும் உடைந்த குடைகளும்தான். அதிகப்பட்ச மக்களின் கவனம் சங்கமிக்கும் இடங்களையெல்லாம் கருத்தில் கொள்ளாமல் யாருடைய மனமும் லயிக்காதச் சமாதிகளையே எப்போதும் விரும்பித் தொலைவது


எழுத்தாளர் கதை

 

 1 அலை அலையாய் திரளாவிட்டாலும் ஏதோ தெரிந்தவர்கள் தூரத்து உறவினர்கள் வருகை வரை எட்டியிருந்தது அன்றைய கூட்டம். தமிழ்ப்பிரியன் எழுத்துக்கும் அசைக்க முடியாத வாசகர் கூட்டம் உண்டென சிறு சிறு குழுக்கள் நிரூபித்துக்கொண்டிருந்தனர். நல்ல வேலை, இந்த ஞாயிற்றுக்கிழமை அவர்களுக்கு வேலையேதும் இல்லை. தமிழ்ப்பிரியனின் நாற்பத்து ஒன்பதாவது நூல்வெளியீட்டு விழாவுக்கு வந்து சேர்ந்திருப்போர் அல்லது இழுத்துவரப்பட்டிருப்போர் இருபது பேரோ இருநூறு பேரோ; சட்டப்படியும் தருமப்படியும் அன்று அவர்தான் விழாநாயகன். அந்த மெலிந்த வற்றலான தேகத்துக்குள்ளும் பழுத்த காய்ந்த


நான் பாடிய பாட்டு

 

 “முடியவே முடியாது” என்று கறாராகச் சொல்லிவிட்டேன். விடவே விடமாட்டோம் என்று கெஞ்சிக்கொண்டிருந்தார்கள். இந்தப் பிள்ளைகளைப் பார்த்தாலும் பரிதாபமாகத்தான் இருக்கிறது. போனால் போகிறது என்று அவர்கள் போக்குக்கு ஒத்துப்போகலாம் என்றுதான் தோன்றிற்று என்பது என்னவோ உண்மைதான். ஆனாலும் எனக்கென்று ஒரு ‘இது’ இருக்கிறது அல்லவா? அதை என்னால் விட்டுக் கொடுக்க முடியாது. “சொன்னா கேளுங்க தம்பி. மொதல்ல நீங்க என்னத்தச் சொல்லிக் கூட்டிக்கிட்டு வந்தீங்களோ, அதுக்கு ஒத்துக்குட்டாப்போல என் வேலயச் செஞ்சி முடிச்சிட்டேன். அவ்வளவுதான் என்னால முடியும்!” “இது


சிவப்புப் புள்ளிகள்

 

 அவளுக்கு அன்றுதான் முதல்நாள் வேலை. மிகவும் உற்சாகமாக இதுநாள்வரை தனக்காகவும் தொழிலுக்காகவும் கற்றதெல்லாம் பயன்படப்போகிறது என்பதை நினைத்துத் தனக்குத் தானே ‘ஷபாஷ்’ சொல்லி தட்டிக் கொடுத்துக் கொண்டாள் கலைமதி. தலைமையாசிரியர் அவளைத் தன் அறைக்கு அழைத்து, “பாரம்மா, அட்டவணையெல்லாம் பார்த்தாச்சா? நீ சொல்லிக் கொடுக்க வேண்டியது ஐந்தாம் வகுப்புக்கும் ஆறாம் வகுப்புக்கும் கணிதமும் அறிவியலும். புரிஞ்சதா?” என்று ஆகக் கடைசியாகத் திட்டவட்டமாகக் கூறினார். “ஆம், விளங்கிருச்சு சார். இப்போது என்னுடைய பாடம்தான். ஐந்தாம் வகுப்புக்குக் கணிதப் பாடம்,”


ஆண்மகன்

 

 அறிவியல் பாடத்தில் அன்றுதான் போதித்தார்கள் அது எதனால் என்று. ஒரு எக்ஸ் ஒரு ஓய் குரோமோசோம் ஆணின் மரபணுவாகவும் இரு எக்ஸ் குரோமோசோம்கள் பெண்ணுக்குரிய மரபணுவாகவும் இருக்கும். ஆனால் ஆணுக்கு ஒரு ஒய் குரோமோசோமோடு இரு எக்ஸ் குரோமோசோம் அமைந்து விட்டால் அந்த ஆண் மிகுந்த பெண் தன்மை கொண்டவராக இருப்பார். அதே வேளையில் ஒரு எக்ஸ்சோடு இரு ஒய் குரோமோசம்கள் இருப்பின் அவரிடம் அதிகமான முரட்டு ஆண்குணம் காணப்படும். இதுதான் அன்று கற்பிக்கப் பட்டது. தியாகு


யார் அந்த சண்முகம்?

 

 1 திருமணமாகி மூன்றாண்டுகள் ஒய்யாரமாய் ஓடிவிட்டன. என் மருமகள் செண்பகத்தின் வயிற்றில்தான் இன்னும் எந்த மாறுதலும் இல்லை. திருமணத்திற்கு முன்பு இருந்த அதே தட்டை வடிவில்தான் இருக்கிறது. அது கொஞ்சம் உப்பினால்தான் என்னவாம்? பேரனையோ பேத்தியையோ பார்க்க எனக்கு மட்டும் ஆசை இருக்காதா? என்னைவிட ஐந்து ஆண்டு இளைய கிழடுகள் எல்லாம் தாத்தா பட்டத்தைத் தலைமேல் சுமந்து கொண்டாடி மகிழுகிற வேளையில் நான் மட்டும் இதோ அதோ என்று மனசுக்கு ஆறுதல் சொல்லிக்கொள்கிறேன். செண்பகம் இருக்கிறாளே, அவள்


உடைந்த மூக்கில் இன்னொரு அரசியல்

 

 “இன்னைக்கு நான் ரெண்டுல ஒன்னு கேக்குறதே சரி!” கடுப்பின் உச்சத்தில் இருந்த எனக்கு, கற்று வைத்திருந்த யோகப் பயிற்சியும் வேலை செய்யவில்லை; ப்ளட் ப்ரஷர் மாத்திரையும் வேலை செய்யவில்லை. பொட்டில் நரப்புப் பொட்டலங்களில் சுண்டக் காய்ச்சின ரத்தம் அழுத்ததைக் கொடுக்க அதைத் தாங்க முடியாத பட்சத்தில் அது வெடித்திருந்திருக்கும் இந்த முறையும் அவன் போனை எடுக்காமல் இருந்திருந்தால். “ஹலோ, சோரி சார்… ரொம்ப சோரி. ரொம்ப இக்கட்டான நெலம. அதனாலதான் போன எடுக்க முடியல. இன்னும் பத்தே


இன்னும் அரைமணிநேரத்தில்…

 

 மாறனுக்குக் கண்ணத்தில் அறை வாங்கியதுபோல் இருந்தது. அவமானமும் ஆத்திரமும் ஜிவுஜிவுயென தலைக்குமேல் ஏறி உச்சந்தலையில் ஆணியடித்துப் பொறிகிளப்பின. ஒன்றும் செய்யமுடியாத வக்கற்ற நிலை அவனை ஏளனம் செய்து உட்கார வைத்துவிட்டது. பக்கத்து நாற்காலியில் எதிர்த்த வரிசையில் என்று எல்லாரும் தன்னைப் பற்றித்தான் குசுகுசுக்கிறார்கள் என்பது காதார விளங்கிற்று. “அப்படி என்னத்தச் செஞ்சிட்டோம் இப்படி மட்டமா நடந்துக்குறாரு தலைவரு?” புருவத்தைச் சுறுக்கி முகத்தில் ஒரு கடுகடுப்பை இழையோடச் செய்தபடி அமர்ந்துகொண்டான் மீண்டும் இருக்கையில். இனியும் அங்கிருக்க அவனுக்குப் பிடிக்கவில்லைதான்


அவள் போகட்டும்

 

 அதோ, அவள் போகிறாள். போகட்டும்….. இனி நானிருந்த இடத்தை நிம்மதிக்கு விட்டுக் கொடுக்கிறேன். நிம்மதியே! எனக்கு பதில் நீ அவளோடு இரு. அவள் வாழ்க்கையில் இனி நான் குறுக்கிட மாட்டேன். கண்களைத் தாண்டிச் செல்லும் பிரியாவை போ என்று புத்தி சொன்னாலும், போகாதே என்றல்லவா பாழாய்ப் போன மனசு சொல்கிறது. இந்த புத்திக்கும் மனசுக்கும் இடையில் நடக்கிற போருக்கு பலியானது கண்கள் தானா? என் கண்களில் இருந்து அருவியை ஒத்த கண்ணீர் பெருகுகிறதே! கொஞ்ச நேரம் கழித்து,