கதையாசிரியர் தொகுப்பு: பொ.கருணாகரமூர்த்தி

52 கதைகள் கிடைத்துள்ளன.

கவிதைகளைச் சுமந்து திரிபவள்

 

 பெர்லினில் பத்துக்குமேற்பட்ட தரை அங்காடிகள் உள்ளன. அநேகமாக அவை வாரவிடுமுறைகளிலேயே கூடும், அவற்றின் சிறப்பு என்னவென்றால் ஜெர்மனியர்கள் சிறிதுகாலமே தாம்பாவித்த மிதியுந்து, தையலியந்திரம், விசிறி, கிறைன்டர்/மிக்ஸிபோன்ற வீட்டுமின்சார உபகரணங்களையும், சி.டி பிளேயர்கள், கணினிகளையும். கொண்டுவந்து அங்கே விற்பார்கள். சிலவேளைகளில் மிகமலிவாக அவற்றை வாங்கிக்கொண்டுவிடலாம். சில விலையுயர்ந்த வெண்கலம், Porceline இல் செய்யப்பட்ட கலைப்பொருட்கள் ஓவியங்களையும், கிராமபோன், நிறைவைப்பதால் இயங்கும் புராதன சுவர்க்கடிகாரங்கள்போன்ற Antique பொருட்களையும், கமராக்கள், தொலைநோக்கிகள், நிலைக்கண்ணாடிகள், வெள்ளியாபரணங்களையும், குளிராடைகளையும், பயணப்பொதியுறைகள் (Suitcases), இறகுவைத்த தொப்பிகளையுங்கூட


கார்த்திகை மாசத்து நாய்

 

 ‘Blazer’ எங்கள் வீட்டுக்கு வந்தது நேற்றுப்போல இருக்கிறது, நாலு வருஷங்களாகிவிட்டன. அப்பாதான் சொல்லிவைத்தாராம். சாரத்தை மடித்துச் சண்டியாகக் கட்டிக்கொண்டு மீன்வியாபாரி போலத் தெரிந்த அந்த உயரமான மனிதன் மிதியுந்தின் காவியில் (Carrier) வைத்துக்கட்டிய சன்லைட் சவர்க்காரப்பெட்டிக்குள் சாக்குமடிப்பொன்றில்வைத்து கழுநீரின் நிறத்தில் உடம்பும், அடிவயிறு வெள்ளையாகவும் இருந்த . அந்த நாய்க்குட்டியைப் பக்குவமாகக் கொண்டுவந்தான். ஐம்பது ரூபாயாக இருக்கவேணும், அப்பா பணத்தைக்கொடுத்ததும் இரண்டாந்தடவையும் எண்ணிப்பார்த்துவிட்டு “கள்ளுக்கொண்டும் இல்லையோவும்” என்று இளித்துக்கொண்டு நிற்கையில் அப்பா மேலுமொரு பத்து ரூபாவைக்கொடுக்கவும் முழு


ஒரு வீட்டுக்கு இரண்டு கிழவிகள் அதிகம்

 

 அன்று Herzogin-Luisehaus என்கிற அம் முதியவர்கள் இல்லத்துக்குப் போயிருந்தேன். அவர்களோடு நட்பாகப்பேசி, அவர்களின் குறைகளைக்கேட்டு அவற்றுக்கு ஆவன செய்யவேண்டியதுதான் என் ஊழியம். அவர்களின் பிரச்சனை என் இயலுமைக்கும் மேற்பட்டதென்றால் மேலிடத்துக்குத் தெரிவிக்கவேண்டும். அன்றைய நாளில் நான் கவனிக்க வேண்டியிருந்தவர் எனக்குப் புதியவரல்ல. 72 வயது,. மிகவும் வசதியான அப்பெண்மணியின் பெயர் Monika Ahlemann (விலாங்கு என்று பொருள்) அவர் பாவித்த Mercedes C – Class Luxury Coupe ரக சீருந்து இன்னும் அவர் வீட்டுத்தொழுவத்தில் நிற்கிறதாம்.


வாதனைகள் சில சோதனைகள்

 

 ஹலோ வணக்கம்/வணக்கம்…நலமாயிருக்கீங்களா இந்த மாதிரி ஒரு இயல்பான உரையாடலாகத்தான் முகநூலில் எமது நட்பு ஆரம்பித்தது. பின்னர் ஒரு நாள், “என்னை உங்களுக்குத்தெரியாது,…ஆனால் உங்களை எனக்குத்தெரியும்” என்றாள், எனக்குத் ‘திக்’ கென்றது. “உங்களின்ர ‘பச்சைத்தேவதையின் கொலுசு’ படித்தனான். அதில் உங்கள் அனுபவப் பகிர்வுகளைப்பார்க்க அந்தக்கதை வெறும் புனைவாய் மட்டும் எனக்குத் தெரியேல்லை.” “அப்படியா…அதொரு இலக்கியப்பத்திரிகையில் வந்த கதையாச்சே…எப்படி உங்களுக்கு வாசிக்கக்கிடைச்சுது” “அப்ப நாங்கள் இலக்கியப்பத்திரிகைகள் படிக்கப்படாது எங்கிறியளோ.” “நான் அந்த அர்த்தத்தில சொல்லேல்லம்மா, அவை லேசில எல்லா இடத்திலயும்


கண் தூங்காமல் நாம் காணும் சொப்பனம்

 

 பிறரது சோகத்தில் சிரிக்கக்கூடாதுதான், ஆனாலும் இதில் சிரிப்பு வருவதைத் தடுக்கமுடியவில்லை. எம் மூத்தமகள் ருதுவாகி இருந்தவேளையில்த்தான் எமக்கு நாலாவது குழந்தையும் பிறந்திருந்தாள். நேரில் போனில் விசாரித்தவர்களின் குரலில் இருந்த சோகத்தைக் கேட்கத்தான் எமக்குச் சிரிப்புச்சிரிப்பாக வந்தது. “ இந்தமுறையாவது ஒப்பிறேசனைச்செய்துவிடுங்கோ ” “அவளைப்பார்க்கிறதோ, இவளைப்பார்க்கிறதோ நல்லாய்க் கஷ்டப்படப்போறியள் ” ‘அப்படி என்ன பார்வை, என்ன கஷ்டம் சனம் எதுக்கு மூக்கால் அழுகுது ’ எமக்குப் புரியவேயில்லை. ஏழாவது தேறாததுகளே எமக்குக் குடும்பக்கட்டுப்பாடுபற்றி உபதேசிக்கலாயினர். அத்தை மாத்திரம் மகளிடம்


தேவதைகளின் நல்கை

 

 அவள் குடித்திருக்கிறாள் என்பதை வண்டிக்குள் ஏறிக்கொண்ட கணத்திலேயே உணர்ந்துகொண்டேன். அவளிலிருந்து Baccardia + Caramel லின் கூட்டுக்கந்தம் விட்டுவிட்டுக் கமழ்ந்தது. குடிக்காதவர்களை மட்டுந்தான் ஏற்றிக்கொள்வது என்கிற கோட்பாட்டை டாக்ஸிக்காரர்கள் வைத்துக்கொண்டால் எம்தொழில்முறையில் அது வேலைக்காகாது. அதுவும் வாரவிடுமுறை/விடுமுறை தினங்களில் வரும் வாடிக்கையாளர்களில் செவ்விகிதத்தினர் குடித்துவிட்டே தம் பயணங்களைத் தொடர்வர். குடித்ததனாலேயே டாக்ஸியை நாடுபவர்களுமுண்டாம். சில உற்பாதங்களைச் சகித்தே தீரவேண்டும். அதொரு கோடைகாலம், அவளுக்கு முப்பது வயதிருக்கும், நல்ல மொழு மொழுவென்று தசைப்பிடிப்பான தேகம். அதை ஒப்புவிக்கும் கட்டையான


என் இனமே…என் சனமே..!

 

 பச்சை நெல் வயல்கள், தென்னந்தோப்பு , தேயிலைத் தோட்டங்கள், கடலின் அலையடிப்பு இவைகளனைத்தையும் இதுநாள் வரையில என் பிள்ளைகளுக்குப் புத்தகங்களிலும் டிவியிலும் சினிமாவிலுந்தான் காட்டிக்கொண்டிருந்தேன். “மத்திய மலைப்பகுதியில் ஜெர்மனியின் வசந்தத்தையும் , கரையோரமாக ஸ்பெயின் கனறித்தீவின் வெண்மணல் புரளும் கோடைகாலத்துக் கடற்கரைகளையும் ஒருசேரக்கொண்ட அழகிய தீவு இலங்கையென்று எங்கள் டீச்சர் சொல்லியிருக்கிறார்.” என்று தன் கனவுகளை மகள் கனிமொழி விரிக்க “எங்கள்(?) பயேர்ண் மாநிலத்தை விடவும் சிறிய குட்டித்தீவாமே இலங்கை? ” என்று தன் ஆச்சர்யத்தை எல்லாளன்


வடிவான கண்ணுள்ள பெண்

 

 இலக்கியச்சந்திப்பொன்றில் ஒருமுறை ஒரு பெண் எழுத்தாளர் (பெண்ணியவாதி) “பொதுவாக இந்த ஆண் எழுத்தாளப் பிசாசுகள் பெண்களை வர்ணித்து மாயிறதிலேயே தங்கள் சக்தியிலே பாதியை விரயம் பண்றாங்கள். நீங்களே பாருங்கள் நாங்கள் ஆண்களையோ இல்லை பெண்களையோ வர்ணித்து எழுதிக்கொண்டா இருக்கிறோம்” என்று எகிறிக்குதித்தார். சபையில் ஆண்கள் பக்கமிருந்து எதிர்க்குரல்கள் வந்தன. “நிஜத்தில் பெண்கள் அப்பிடியில்லை என்கிற ஆதங்கத்திலதான் ஆண்கள் அப்பிடி மாய்ந்து மாய்ந்து பன்னுறாங்களோ………. அவ்வகைப் புனைவுகளை நீங்கள் ஏனொரு வகைப்பட்ட மஜிகல்-ரியலிசமாகக் கொள்ளப்படாது.” “ஒட்டுமொத்தமாக அப்படிச்சொல்லமுடியாது அனுராதா


அந்தவரம் வேண்டாம் ஜெகதீஸ்வரி

 

 கேசவனுக்கு உடம்பை வசைச்சு வேலை செய்வதென்றால் ஆகாத காரியம். அறவே இஷ்டமில்லை. ஒரு துரும்பைத்தான் தூக்கிப்போடுகிலும் வலு அலுப்புப்படுவான். ஆனால் ஆசை மட்டும் பத்துப்பேருக்கு இருக்கவேண்டியது அவனுக்குத்தனியே என்பது சக-அறையோர் அபிப்பிராயம். இவன் தனக்கான நாள்களும் கோள்களும் ஒன்று கூடிப் பிரமாதமான ஒரு அதிஷ்ட ஓரையொன்றைச் சமைத்து எவருக்கும் எட்டாதவொரு உயரத்தில் தன்னைக் கொண்டுபோய் வைத்து இந்த பூமிப் பந்தின் ஒரு பகுதிக்கு ஒருநாள் சக்கரவர்த்தி ஆக்கிவிடுமென்று நம்புகின்றான். அதனால் சமீபகாலமாக இந்தியாவிலிருந்து பல சோதிட நூல்களை


தாயுமானவள்

 

 இதமான இலையுதிர்காலத்தின் ஆரம்பம். வெய்யோன் விட்டுவிட்டுத்தன் வெள்ளித்தாரைகளை முகில்களுக்கிடையால் ஒழுக்கிக்கொண்டிருந்தான். அன்று எனக்கு பெர்லினின் Kreuzberg பகுதியிலுள்ள Herzogin- Luise Haus எனும் முதுமக்கள் பராமரிப்பகத்தில் பணி. அதன் பொறுப்பாளர்கள், Lenz என்கிற அந்த இளைஞரை எனக்கு அறிமுகப்படுத்தி ‘அவருக்கு வயது 50’ என்றார்கள், நம்பமுடியவில்லை. 8 மிமீ இருக்கக்கூடிய சிறிய தாடி கறுப்பு நிறத்தில் வைத்திருந்தார். கட்டங்களிட்ட துணியில் பிஜாமாவும் டி- ஷேர்ட்டும் அணிந்து, முகத்தில் சுருக்கங்கள் இல்லாமல் இளமையாக அழகனாக இருந்தார். இன்னும் வெள்ளத்துக்கு