கதையாசிரியர் தொகுப்பு: நெய்வேலி ராமன்ஜி

4 கதைகள் கிடைத்துள்ளன.

அன்புள்ள காதலிக்கு!

 

 காலை 9 மணி 22 நிமிடம். நாள்: 15.11.1999. ‘லவ் லட்டர்!’- ஐ கொடுக்க, அந்தச்சிறுவன் சென்று, இந்த நிமிடத்துடன், பன்னிரெண்டு நிமிடமும் முடிந்து விட்டது! அவன் வயதுக்கு ஒரே ஓட்டமாக ஓடிப்போய், ஓடிவந்தால், ஐந்தாறு நிமிடங்களே கூட தேவைப்படாது! அப்படியிருக்க, அவன் இன்னும் வந்து சேரவில்லை! நான் மிகுந்த பரபரப்புடன், பஸ்டாப்பில் காத்துக் கொண்டிருந்தேன். அவசரத்தில், அந்தப் பொடியனின் பெயரைக்கூட கேட்டுக்கொள்ளாமல், அவன் அணிந்திருந்த பச்சை நிற சட்டையை அடையாளம் வைத்துக்கொண்டு, அசட்டுத்தனமாக லட்டரை கொடுத்து


அவள், அது, நான்!

 

 அலுவலகம் முடிந்து நான் வீட்டிற்குள் வந்தவுடனேயே, எனது பார்வையில் உடனடியாக பட்டுவிடும் வகையில், என்னுடைய மேஜையின் மீது தயாராக வைக்கப்பட்டிருந்த, ‘சவாலை’ சுமந்த இந்த தபாலை பரபரப்பாக வாசித்தேன். ‘எனது அண்ணன் பெரிய கதாசிரியர்! தெரியுமா?’ என்று என்னிடம், அடிக்கடி அலட்டிக்கொண்டேயிருக்கும், எனது ஆருயிர் தோழி அமுதாவின், அண்ணனும்… கலகலப்பு, உற்சாகம், சுறுசுறுப்பு, ஆசை! இவைகளை, ‘வீசை என்ன விலை?’ எனறு கேட்டுக் கொண்டிருப்பவரும்… விளக்கெண்ணெய் குடித்ததுப் போலவே, எப்பொழுதும் தனது முகத்தை வைத்துக் கொண்டிருப்பவரும்… உங்களது


தாரா மை டியர்!

 

 ‘றெக்க கட்டிப் பறக்குதடி அய்யாவோட ரிக் ஷா! ஆசையோட, எறிக்கடி அய்யாகூட சவாரி!-ன்னு, ‘தலைவர்’ பாணியிலே பாடி கிட்டே, ரொம்ப நாளைக்கப்புறம் ரிக் ஷாவ சுத்தமா கழுவித் தொடச்சேன்! இன்னிலேர்ந்து ஒரு வாரத்துக்கு, ‘தாரா’-வுக்கு, நம்ம ‘ஜெட்’டுல சவாரி! எப்பேர்ப்பட்ட சான்ஸ்? மொதப் பிரைஸ் விழுந்த மாதிரி! மப்பும் மந்தாரமுமா, கொப்பும் கொலையுமா தாரா, ஸ்டாண்ட் வழியா போய் வரும்போதெல்லாம், அதுங்கழுத்து செயின்ல தொங்கற டாலரையே உத்து உத்துப் பார்த்துகிட்டிருப்பேன்! தாரா பேரு, அவுங்கப்பன் நேத்து சொன்னப்பறம்


கலைந்த மேகம்!

 

 வானத்தில், வெகு அபூர்வமாக, அந்த அற்புதக்காட்சி தென்பட்டது. பரபரப்பாக போய் கொண்டிருந்த நான் நின்று ரசித்தேன். மேக முயல்கள்! குவியல் குவியல்களாக பாறைகள் போலவும், மற்றும் ஒழுங்கற்ற வடிவங்களாகவும், காணப்பட்ட மேகக் கூட்டங்களிலிருந்து சற்று விலகி இவைகள் காணப்பட்டன. மேகச்சிதைவினால் இயற்கையாக தோன்றியிருந்த. இரண்டு முயல் வடிவங்கள்! ஒன்று – நான்! மற்றொன்று – அவள்! இப்படி கற்பனை செய்து கொண்டதில், உண்டான மகிழ்ச்சி நிலைக்கவில்லை. எது ஒன்றுக்கும், விரைந்து செயல் வடிவம் கொடுக்காமல், கற்பனையிலேயே காலம்