அப்பா, நான் உள்ளே வரலாமா…

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 15, 2021
பார்வையிட்டோர்: 4,715 
 

அத்தியாயம்-21 | அத்தியாயம்-22 | அத்தியாயம்-23

“அவனுக்கு வயசு பன்னண்டு ஆறது.அவனுக்கு உபநயனம் வேறே ஆயி இருக்கு.அவனோட பொறந்த சரோஜா தினமும் நிறைய அம்பாள் ஸ்லோகங்களே சொல்றதே அவன் கேட்டுண்டு வறான். அப்படி இருந்தும் அவன் வெறுமனே ஒரு ‘மொட்டே நமஸ்காரத்தே’ பண்ணிண்டு இருந்தான்னா. அதுக்கு என்ன அர்த்தம்.அவன் சுவாமிக்கு அந்த ‘நமஸ்காரம்’ போறும்ன்னு தானே நினைச்சுண்டு இருக்கான்.ஒருந்தருக்கு சுவாமி கிட்டே பக்தி அவருக்கா வரணும்.இன்னொருத்தர் சொல்லி வறதில் லே ‘சுவாமி பக்தி’ன்றது.இது உனக்கே தெரிஞ்சு இருக்குமே,மீரா” என்று சொன்னார் ராகவன்.

மீரா அதற்கு மேலே தன் கணவரை ஒன்றும் கேட்கவில்லை.

ராகவன் வரதனைக் கூப்பிட்டு “வரதா,நாம எல்லாம் நன்னா படிச்சுட்டு ஒரு நல்ல வேலைக்குத் தான் போய் தான் முன்னுக்கு வரணும்.இந்த கிரிக்கெட் எல்லாம் நம்ம குடும்பத்துக்கு ஒத்தே வறாது.நீ மாமாவே பாரு.சரோஜாவேப் பாரு.அவா ரெண்டு பேரும் எப்படி கஷ்டப் பட்டு படிச்சுண்டு வந்து எல்லா ‘க்லாஸ்லேயும்’ ‘பஸ்ட் க்லாஸிலே’ பாஸ் பண்ணீண்டு வறான்னு.சரோஜா ‘டபுள் பிரமோஷன்’ கூட வாங்கி இருக்காடா.நீ கிரிக்கெட் ஆடறதே விட்டுட்டு கஷ்டப் பட்டு படிச்சுண்டு வாடா.இந்த கிரிக்கெட் ஆட்டத்தை ஏறக் கட்டிட்டு நன்னா படிடா.நான் உன்னே மறுபடியும் எட்டாவதிலே சேத்து படிக்க வக்கிறேண்டா.நீ ஒழுங்காப் படிச்சு ‘பாஸ்’ பண்ற வழியேப் பாரு”என்று கண்டிப்பாகச் சொன்னார்.

ராகவன் மறுபடியும் பணம் கட்டி வரதனை எட்டாவதில் இரண்டாவது முறையாகச் சேர்த்தார்.

சமையல் கார மாமி கொடுத்த ‘டிபனை’ச் சாப்பிட்டு விட்டு,அக்கா,அத்திம்பேர் ரெண்டு பேரு டைய கால்களையும் தொட்டு ஒரு ‘நமஸ்காரத்தை’ப் பண்ணி விட்டு,கூடவே ‘அபிவாதயே’யும் சொல்லி விட்டு.”அக்கா,அத்திம்பேர் நான் சட்டக் கல்லூரி ‘பிரின்ஸிபாலை’ சந்தித்து என் BA படிப்பு ‘மார்க்கை’ காட்டி, BL படிக்க ஒரு ‘சீட்’ கேக்கப் போறேன். நீங்க ரெண்டு பேரும் தெய்வமா இருந்து எனக்கு அந்த ‘பிரின்ஸிபால்’ மனசிலே பூந்து எனக்கு ஒரு ‘சீட்’ தர ஒத்துக்கணும்” என்று கண்களில் கண்ணீர் மல்கக் கேட்டான் பரமசிவம்.

உடனே இருவரும் “பரமு,உனக்கு எங்க ரெண்டு பேருடைய பூரண ஆசீர்வாதமும் நிச்சியமா இருக்கு.நீ அவரே ஒரு சீட் கேக்கற வேளை,அந்த பகவான் அவர் மனசிலே பூந்து உனக்கு ஒரு ‘சீட்’ நிச்சியமாத் தரும்படி பண்ணுவார்.நீ ¨தா¢யமா அந்த ‘பிரின்ஸிபாலை’ போய் பார்” என்று ஆசீர்வாதம் பண்ணீ அனுப்பினார்கள்.

சுந்தரம் படுத்துக் கொண்டே சாமபசிவத்துக்கு ¨தா¢யம் சொல்லி, ஆசிர்வாதம் பண்ணீ அனுப்பினார்.

பரமசிவம் சந்தோஷப் பட்டு தன் வீட்டை விட்டு கிளம்பி சட்டக் கல்லூரிக்குப் போகும் வழியி லே இருந்த ஒரு பிள்ளையார் கோவிலுக்குப் போய்,கண்ணை மூடிக் கொண்டு ‘கணேஷ பஞ்சரத்தின ஸ்லோகத்தை’ மனதில் சொல்லி விட்டு,வினாயகரை நன்றாக வேண்டிக் கொண்டு அந்த வினாயகரு க்கு பன்னிரண்டு ‘பிரக்ஷ¢ணங்களை’ப் பண்ணீனான்.

பிறகு வினாயகரைப் பார்த்து “அப்பா விநாயகா,நீ தான் அந்த பிரின்ஸிபால் மனசிலே பூந்து, அவா காலேஜ்லே எனக்கு Law படிக்க எப்படியாவது ஒரு ‘சீட்’ வாங்கித் தரணும்.நான் இந்த Lawவை நன்னா படிச்சுட்டு ஒரு பெரிய வக்கீலாக ஆகணும்ன்னு ரொம்ப ஆசைப் படறேன்” என்று தன் மனதில் சொல்லிக் கொண்டு வினாயரை நன்றாக வேண்டிக் கொண்டான்.

பரமசிவம் அந்த கல்லூரிக்கு சென்று வாசலில் இருந்த ‘பியூனிடம்’ தன் BA ‘மார்க் ஷீட்டின் ‘ஜெராக்ஸ்’ பிரதியைக் கொடுத்து விட்டு “நான் ‘பிரின்ஸிபாலை’ கொஞ்சம் பாக்கணும்.நீங்க என் ‘மார்க ஷீட்டை’ அவர் கிட்டே தயவு செஞ்சி தர முடியுமாங்க”என்று மா¢யாதையாகக் கேட்டான்.

அந்த ‘பியூன்’ பரமசிவத்தை ஏற இறங்கப் பார்த்து விட்டு “உன் பேர் என்ன” என்று கேட்டதும், “என் பேர் பரமசிவம்” என்று சொல்லி விட்டு நின்றுக் கொண்டு இருந்தான்.
அந்தப் பியூனுக்கு என்ன தோன்றியதோ தெரியவில்லை,அவர் பரமசிவத்தைப் பார்த்து “நீங்க இப்படி குந்துங்க.அவர் ‘ப்¡£யா’ இருக்காரான்னு பாக்கறேன்” என்று சொல்லி விட்டு ‘பிரின்ஸிபாலின்’ ‘ரூமு’க்குள்ளே போய் பரமசிவம் கொடுத்த ‘மார்க ஷீட்டை’அவா¢டம் கொடுத்தார்.

கொஞ்ச நேரம் ஆனதும் அந்த பியூன் பரமசிவத்தைப் பார்த்து “நீங்க உள்ளே போங்க” என்று சொன்னதும் பரமசிவம் அந்த பியூனுக்கு தாங்க்ஸ் சொல்லி விட்டு,’பிரின்ஸிபால் ரூமு’க்கு உள்ளேப் போய் பவ்யமாக “குட் மார்னிங்க் சார்” என்று சொன்னதும்,அந்த ‘பிரின்ஸிபால்’ “உன் பேர் பரமசிவமா” என்று கேட்டதும் “ஆமாம் சார்” என்று சொன்னான்.
அந்த ‘பிரின்ஸிபால்’ பரமசிவத்தின் மறுபடியும் BA ‘மார்க் ஷீட்டைப்’ பார்த்துக் கொண்டு இருந்தார்.

”சார், நான் ‘ப்ளஸ் டூவில்’ ’சென்னை மாநிலத்திலேயே முதல் மாணவனா ‘பாஸ்’ பண்ணேன். இதை கேள்விப் பட்ட ‘லயோலா’ கல்லூரி ‘பிரின்ஸிபால்’ எனக்கு BA படிக்க ஒரு ‘சீட்’ குடுத்து, இலவசமாகப் படிக்க வச்சார்.நான் BA லே ‘ஹை பஸ்ட் க்ளாஸ்லே’ பாச் பண்ணி இருக்கேன்.எனக்கு சட்டப் படிப்பு படிச்சு,ஒரு லாயராக ஆகணும்ன்னு ரொம்ப ஆசையாக இருக்கு.நீங்க எனக்கு இந்தக் கல்லூரியிலே Law படிக்க ஒரு ‘சீட்’ குடுப்பீங்களா.நான் ரொம்ப ஏழை குடும்பத்தை சேந்தவன்.என் அம்மாவுக்கு வயித்லே ஒரு கட்டி வந்து,அது ‘செப்டிக்’ ஆயி செத்துப் போயிட்டா.அப்போ எனக்கு நாலு வயசு.என் அப்பா சிதம்பரத்லே ஒரு குருக்களா இருந்து வந்தார்.என் அம்மா செத்துப் போனதும். விரக்தியாலே,அவர் காசிக்குப் போயிட்டார்.நான் என் அக்கா,அத்திம்பேர் ஆத்லே தான் வளந்து வறேன்” என்று கண்களில் கண்ணீர் தளும்பக் கேட்டான்.

அந்த ‘பிரின்ஸிபால்’ பரமசிவத்தை கொஞ்ச நேரம் ஏற இறங்கப் பார்த்தார்.

”நான் நீ BAலே வாங்கி இருக்கும் ‘மார்க் ஷீட்டை’ப் பாத்தேன்.எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு. நீ உண்மையிலேயே ஒரு ‘இண்டெலிஜெண்ட் ஸ்டூடண்ட்’ தான்.நான் உனக்கு இந்தக் கல்லூரியிலே BL படிக்க ஒரு ‘சீட்’ குடுத்து,இலவசமா படிக்க அனுமதி தறேன்.நீ ‘ஆபீஸ்’க்குப் போய் ஒரு ‘அப்லிகேஷனை’ வாங்கி, அதை பூர்த்தி செஞ்சு,உன் ‘ப்ளச் டூ’ மார்க் ஷீட்’, ‘BA மார்க் ஷீட்’ ரெண்டின் ‘ஜெராக்ஸ்’ காப்பியை வச்சு குடு.நான் இன்னும் ஒரு வாரத்தில் உன் வீட்டு விலாச த்துக்கு உனக்கு ‘அட்மிஷன்’ குடுத்து, ‘பீஸ்’ ஒன்னும் கட்டாம படிச்சு வர ‘ஆர்டரை’ அனுப்பறேன். அந்த ஆர்டர் உனக்குக் கிடைச்சதும்,நீ இந்தக் கல்லூரியிலே சேந்து,BL படிச்சு வா.இந்த BL படிப்பி லேயும்,நீ நல்லா படிச்சு ஒரு ‘ஹை பஸ்ட் க்ளாசிலே’ பாஸ் பண்ணனும்.’பெஸ்ட் ஆப் லக்’”என்று சொல்லி பரமசிவத்தின் கையைப் பிடிச்சுக் குலுக்கினார் அந்த ‘பிரின்ஸிபால்’.

உடனே பரமசிவம் எழுந்து நின்றுக் கொண்டு கண்களில் கண்ணீர் மல்க” ரொம்ப தாங்க்ஸ் சார்.நான் நிச்சியமா ரொம்ப கஷ்டப் பட்டு படிச்சு வந்து,நீங்கோ சொன்னா மாதிரி நான் நிச்சியமா ஒரு ‘ஹை பஸ்ட் க்லாஸில்’ ‘பாஸ்’ பண்ணிக் காட்டறேன்.எனக்கும் இந்த Law படிச்சுட்டு ஒரு பெரிய வக்கீலாக ஆகணும்ன்னு ரொம்ப ஆசையா இருக்கு சார்” என்று சொல்லி விட்டு அவர் ‘ரூமை’ விட்டு சந்தோஷமாக வெளீயே வந்தான்.

அந்த ‘பிரின்ஸிபால்’ சொன்னது போல ‘ஆபீஸ்’க்குப் போய், ஒரு ‘அப்ளிகேஷனை’ வாங்கி அதை பூர்த்தி செய்து,தன்னுடைய ‘ப்ளச் டூ’ மார்க் ஷீட்,’ ‘BA மார்க் ஷீட்’ ரெண்டின் ‘ஜெராக்ஸ்’ காப்பிகளை,கூட வைத்து,அந்த ‘அப்ளிகேஷனை’க் கொடுத்து விட்டு,வெளியே காத்துக் கொண்டு இருந்தான்.

ஒரு அரை மணி ஆனதும்,‘பிரின்ஸிபால்’ பரமசிவத்தை கூப்பிட்டு,அந்த சட்டக் கல்லுரியிலே BL படிக்க ஒரு ‘சீட்’ கொடுத்து,இலவசமாக படித்து வர ஒரு ‘ஆர்டரை’க் கொடுத்தார்.“பரமசிவம், நீ ‘பஸ்ட் க்லாஸிலே’ பாஸ்’ பண்ணிட்டு,சீக்கிரமா ஒரு வக்கீலா வேலே பண்ணீ வரணும்” என்று சொல்லி வாழ்த்தினார்.

பரமசிவம் அவருக்கு தன் நன்றியை சொல்லி விட்டு,அவர் கொடுத்த ‘ஆர்டரை’ வாங்கிக் கொண்டு வீட்டுக்கு வந்தான்.

அக்கா,அத்திம்பேர் ‘ஆபீஸ்’ விட்டு வீட்டுக்கு வந்ததும்,சட்டக் கல்லூரியிலே நடந்த எல்லா விஷயங்களையும் சொல்லி,அந்தக் கல்லூரி ‘பிரின்ஸிபால்’ தனக்கு BLபடிக்க ஒரு ‘சீட்’ கொடுத்து, இலவசமாக படிக்க அனுமதி கொடுத்த ‘ஆர்டரை’ காட்டிவிட்டு,”அந்த சட்ட கல்லூரி ‘பிரின்ஸிபால்’ என்னேப் பாத்து ‘பரமசிவம்,நீ ‘பஸ்ட் க்லாஸிலே’ பாஸ்’ பண்ணிட்டு,சீக்கிரமா ஒரு வக்கீலா வேலே பண்ணீ வரணும்’ன்னு சொன்னார்”என்று சந்தோஷமாகச் சொன்னான் பரமசிவம்.

”எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்குடா பரமு.நீ எப்படியாவது கஷ்டப் பட்டு,அந்தப் படிப்பை நன்னாப் படிச்சு,’பஸ்ட் க்லாஸிலே பாஸ்’ பண்ணிட்டு,சீக்கிரமா ஒரு வக்கீலா வேலே பண்ணீண்டு வரணும்” என்று சொல்லி பரமசிவத்தின் தலையை வருடி விட்டார் ராகவன்.

“பரமு,எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு.அத்திம்பேர் சொன்னா மாதிரி நீ நன்னா படிச்சு, பஸ்ட் க்லாஸிலே பாஸ்’ பண்ணிட்டு,சீக்கிரமா ஒரு பெரிய வக்கீலா வேலே பண்ணீ வரணும் நமப அப்பாவோட ஆசையை, நீ பூர்த்தி பண்ணனும்” என்று சொல்லி அவனை கட்டிக் கொண்டாள் மீரா. “நான் நிச்சியமா நன்னா படிச்சு,அப்பாவோட ஆசையே பூர்த்தி பண்ணுவேன்க்கா”என்று சொன்னான் பரமசிவம்.

பரமசிவம் தினமும் ‘பஸ்ஸில்’ சட்டக் கல்லுரிக்குப் போய் படித்து வந்தான்.

அந்த வருடமும் வரதன் எட்டாவதில் பெயில் ஆனான்.

“நான் உன் கிட்டே ‘நீ கிரிக்கெட் ஆடறதே விட்டுட்டு கஷ்டப் பட்டு படிச்சுண்டு வாடா.இந்த கிரிக்கெட் ஆட்டத்தை ஏறக் கட்டிட்டு நன்னா படிடா.நான் உன்னே மறுபடியும் எட்டாவதிலே சேத்து படிக்க வக்கிறேண்டா.நீ ஒழுங்காப் படிச்சு ‘பாஸ்’ பண்ற வழியேப் பாரு’ன்னு சொன்னேடா.ஆனா நீ கிரிகெட்டை ஆடிண்டு வந்து,உன் பாடங்களே படிக்காம,இந்த வருஷமும் ‘பெயில்’ ஆயி இருக்கியே டா.கிரிக்கெட் ஆட்டம் சாதம் போடாதுடா.படிப்பு தாண்டா சாதம் போடும்” என்று கத்தினார் ராகவன்.

மீராவும்,சரோஜாவும் வரதனுக்கு நிறைய புத்தி மதிகள் சொன்னார்கள்.

“வரதா,அப்பா சொல்றது ரொம்ப கரெக்ட்.கிரிகெட் ஆட்டத்தை மொத்தமா விட்டுட்டு,உன் பாடங்களே கவனம் செலுத்தி படிச்சு வா.நீ படிச்சாத் தான் உனக்கு ஒரு நல்ல உத்யோகம் கிடைக்கும் நான் அத்திம்பேர் கிட்டே சொல்லி உன்னே மறுபடியும் எட்டாவதிலே சேக்கச் சொல்றேன்” என்று சொன்னான் பரமசிவம்.”ஆமாம்ப்பா,வரதனே நீங்கோ மறுபடியும் எட்டாவதிலே சேருங்கோ.அவன் கஷ்டப் பட்டு இந்த வருஷம் நிச்சியமா ‘பாஸ்’ பண்ணுவான்” என்று சொன்னாள் சரோஜா.

“அத்திம்பேர்.நீங்கோ வரதனை மறுபடியும் எனக்காக இந்த தடவை எட்டாவதிலே கொஞ்சம் சேருங்கோ.அவன் நன்னா படிச்சு நிச்சியமா ‘பாஸ்’ பண்ணிடுவான்” என்று கேட்டுக் கொண்டான் பரமசிவம்.

“அவா ரெண்டு பேரும் சொல்றா.நான் மறுபடியும் பணம் கட்டி வரதனை எட்டாவதிலே சேக்க றேன்.பாக்கலாம்.இந்த தடவையாவது அவன் எட்டாவதே ‘பாஸ்’ பண்ணட்டும்”என்று சொல்லி விட்டு வரதனை மறுபடியும் எட்டாவதில் சேர்த்தார் ராகவன்.

நேரம் கிடைக்கும் போது எல்லாம் அந்த சட்டக் கல்லுரியிலே இருந்த ‘லைப்ரா¢யிலே’ சட்டப் புஸ்தங்ககளை எல்லாம் படித்து விட்டு,வீட்டுக்கு நேரம் கழித்து வந்தான்.அந்த மாதிரி வீட்டுக்கு நேரம் கழித்து வந்த நாட்களில் பரமசிவம் தன் அத்திம்பேரிடம் “அத்திம்பேர் சட்ட புஸ்தங்ககள் எல்லா ம் ரொம்ப விலை.நாம அவைகளை பணம் குடுத்து வாங்க முடியாது.அதனால் நான் எனக்கு நேரம் கிடைக்கும் போது, ‘லைப்ரா¢யிலே’ சட்டப் புஸ்தங்ககளை எல்லாம் படிச்சுண்டு வறேன்.அதான் நான் ஆத்துக்கு லேட்டா வறேன்” என்கிற காரணத்தையும் சொன்னான்.

பரமசிவம் சொன்னதைக் கேட்டு சந்தோஷப் பட்டார்கள் ராகவனும் மீராவும்.

‘லீவு’ நாட்களில் வீட்டில் பரமசிவம் வகுப்பில் சட்ட வாத்தியார் சொல்லிக் கொடுத்த விஷயங் களையும் எல்லாம் மறுபடியும் மறுபடியும் படித்து வந்து,சிலவற்றை மனப் பாடமும் பண்ணீ வந்தான். சரோஜாவுக்கும்,வரதனுக்கும் நிறைய உலக விஷயங்களை எல்லாம் சொல்லி வந்தான் பரமசிவம்.

வரதனுக்கு படிப்பில் வந்த சந்தேகங்களை சரோஜாவும்,பரமசிவமும் சொல்லி புரிய வைத்தார்கள்.

ராகவனும்,மீராவும் வாரத்தில் ஆறு நாட்கள் வேலைக்குப் போய் வந்துக் கொண்டு இருந்ததால் அவர்களுக்கு வரதன் படிப்பை கவனிக்க நேரமே இல்லை.இதைத் தவிர சுந்தரத்தின் உடம்பைப் பற்றின கவலை அதிகமாக இருந்து வந்தது.

அந்த வருடம் சரோஜா அந்த வருடம் ‘ட்வெல்த்தில்’ ‘பஸ்ட் க்லாஸில்’ ‘பாஸ்’ பண்ணி விட்டு, ஒரு நல்ல கல்லூரியிலே B.Com.படிக்க ஒரு ‘சீட்’ வாங்கினாள்.

ராகவன் பணம் கட்டி சரோஜாவை B.Com வகுப்பில் சேர்த்தார்.

வரதன் பள்ளி கூட நாட்களில் சாயங்காலத்திலும்,ஞாயிற்றுக் கிழமை முழு நாளும் கிர்க்கெட் ஆடி வந்தான்.அவனுக்கு அந்த காலத்தில் இருந்த பிரபல கிரிகெட் வீரர்களான ‘சுனில் கவாஸ்கர்’ ’ஆலன் பார்டர்’ ‘நவ் ஜோத் சிங்க் சித்து’ ‘டோனி க்ரெக்’,’மொஹிந்தர் அமர் நாத்’ போல ஒரு பெரிய ஆட்டக்காரனாக வேண்டும் என்கிற ஆசை,அவன் மனதில் கொழுந்து விட்டு ஏறிந்துக் கொண்டு இருந்தது.

அவன் பாடங்களை ஒழுக்காகப் படிக்காததால்,அந்த அந்த வருடமும் எட்டாவதில் ‘பெயிலாகி விட்டான் வரதன்.

வீட்டில் இருந்த எல்லோரும் வரதன் அந்த வருடம் எட்டாவதில் எப்படியாவது ‘பாஸ்’ பண்ணி விடுவான் என்று எதிர் பார்த்துக் கொண்டு இருந்தார்கள்

”வரதா,நான் உன்னே கஷ்டப் பட்டு படிச்சு இந்த தடவை எட்டாவதே ‘பாஸ்’ பண்ணுடான்னு சொல்லிண்டு இருந்தேன்.நீ என்னடான்னா,இந்த வருஷமும் எட்டாவதில் ‘பெயிலாயி வந்து இருக்கி யே.இனிமே உன்னே எந்தப் பள்ளீ கூடத்லே எட்டவதே சேத்துக்க மாட்டேளேடா.நீ எட்டாவது கூட ‘பாஸ்’ பண்ணாம இருக்கியே.இனிமே என்னடாப் பண்ண போறே” என்று கவலையுடன் கத்தினார் ராகவன்.

“வரதா,நீ கஷ்டப்பட்டு படிச்சுண்டு வந்து எட்டாவதே ‘பாஸ்’ பண்ணீ இருக்கக் கூடாதாடா. உனக்கு பாடத்லே வந்த சந்தேகங்களை எல்லாம் அக்காவும்,மாமாவும் சொல்லிக் குடுத்தாளேடா. அப்படியும் நீ ‘பாஸ்’ பண்ணலயேடா.எனக்கும்,அப்பாவுக்கும் வாரத்லே ஆறு நாள் ‘ஆபீஸ்’ வேலே யே சரியா இருக்கேடா.எங்க ரெண்டு பேராலும் உன் படிப்பே கவனிக்க முடியலே.இப்போ என்ன பண்ணப் போறேடா” என்று வருத்தத்துடன் கேட்டாள் மீரா..

“என்னாலே மூனு தடவை படிச்சும் எட்டாவது வகுப்பை ‘பாஸ்’ பண்ண முடியலே.எனக்கு இந்த கணக்கை எத்தனை தடவைப் போட்டு பாத்தாலும்,எனக்கு சரியாவே போட வறலே.அதுக்கு மேலே இந்த ‘சயன்ஸ்’.அந்த ‘சயன்ஸ்’ பேர்கள் எல்லாம் எனக்கு மறந்துப் போறது.நான் என்ன பண்ணட்டும் சொல்லுங்கோ.ஆனா அதே கிரிக்கெட் ஆட்டம் எனக்கு நன்னா வறது.அதனால்லே நீங்கோ என்னே ஒரு ‘கிரிக்கெட் அகாடமிலே’ பணம் கட்டி சேத்துடுங்கோ.நான் ‘கிரிக்கெட்’ ஆட்ட த்தை நன்னா ஆடி ஒரு கிரிகெட் ‘ப்லேயரா’ ஆக ரொம்ப ஆசைப் படறேன்.என்னே இனிமே எந்தப் பள்ளி கூடத்திலேயும் சேக்காதீங்கோ”என்று வரதன் சொன்னதும் மீராவுக்கும்,ராகவனுக்கும் தூக்கி வாரிப் போட்டது.

“உன்னே இனிமே எந்தப் பள்ளீக் கூடத்லேயும் சேத்துக்கவே மாடடா.நீ ஏற்கெனவே மூனு தடவை எட்டாவதிலே பெயிலாகி இருக்கே.உனக்கு கணக்கும்’ ‘சயன்ஸ¤ம்’ கஷ்டமா இருக்குன்னு சொல்லி இருந்தா,நான் உனக்கு ஒரு ‘டியூஷன்’ வாத்யாரே ஏற்பாடு பண்ணீ இருப்பேணேடா.இப்போ வந்து சொல்றயேடா” என்று சொல்லி வரதனைக் கோவித்துக் கொண்டார் ராகவன்.

“நீங்கோ என்னே ஒரு நல்ல ‘கிரிக்கெட் அகாடமிலே’ பணம் கட்டி சேத்துடுங்கோ.நான் ‘கிரிக் கெட்’ ஆட்டத்தை நன்னா ஆடி ஒரு கிரிகெட் ‘ப்லேயரா’ ஆக ரொம்ப ஆசைப் படறேன்.என்னே இனிமே எந்தப் பள்ளி கூடத்திலேயும் சேக்காதீங்கோ.எனக்கு எந்த ‘டியூஷனும்’ வக்காதீங்கோ.நான் இனிமே படிக்க மாட்டேன்.கிரிக்கெட் ஆடி நான் வாழ்க்கையிலே முன்னுக்கு வந்துக் காட்டறேன்” என்று தீர்மானமாகச் சொன்னான் வரதன்.

வரதன் சொன்னதைக் கேட்ட மீராவுக்கும் ராகவனுக்கும் என்னப் பண்ணுவது என்று தெரியவில்லை.

“வரதன் இப்படி பிடிவாதம் பிடிச்சுண்டு வந்து,’நான் ‘கிரிக்கெட்’ ஆட்டத்தை நன்னா ஆடி ஒரு கிரிகெட் ‘ப்லேயரா’ ஆக ரொம்ப ஆசைப் படறேன்.என்னே இனிமே எந்தப் பள்ளி கூடத்திலேயும் சேக்காதீங்கோ.எனக்கு எந்த ‘டியூஷனும்’ வக்காதீங்கோ.நான் இனிமே படிக்க மாட்டேன்.கிரிக்கெட் ஆடி நான் வாழ்க்கையிலே முன்னுக்கு வந்துக் காட்டறேன்’ன்னு தீர்மானமா சொல்றானே.நாம என்ன பண்ணலாம் மீரா” என்று கேட்டார் ராகவன்.

இவர்கள் மூன்று பேரும் பேசிக் கொண்டு இருந்ததைக் கவனித்த பரமசிவம் “அத்திம்பேர், நீங்கோ வரதனை ஒரு நல்ல ‘கிரிக்கெட் அகாடமிலே’ பணம் கட்டி சேத்துடுங்கோ.வரதன் ‘கிரிக்கெட்’ ஆட்டத்தை நன்னா ஆடி ஒரு கிரிகெட் ‘ப்லேயரா’ வரட்டும்,அவனே இனிமே எந்தப் பள்ளிக் கூடத் திலேயும் சேக்காதீங்கோ.எனக்கு என்னவோ வரதனுக்கு கிரிக்கெட் ஆடறதிலே ரொம்ப இஷடம் இருக்கு.ஆனா அவனுக்கு படிப்பிலே கொஞ்சம் கூட இஷ்டமே” என்று சொன்னான்.பரமசிவம் சொன்னதை நன்றாக யோஜனைப் பண்ணீனார்கள் ராகவனும்,மீராவும்.

“ஆமாப்பா.மாமா சொன்னபடியே நீங்கோ பண்ணுங்கோ.எனக்கு அது தான் சரின்னு படறது. அவன் தான் ‘எனக்கு கணக்கு சரியாவே போட வறலே.அந்த ‘சயன்ஸ்’ பேர்கள் எல்லாம் எனக்கு மறந்துப் போறது’ன்னு சொல்றான்.பாக்கலாம் அவன் அந்த ‘கிரிகெட் அகாடமிலே’ சேந்து,ஒரு நல்ல கிரிக்கெட் ‘ப்லேயராக,வரட்டுமே” என்று சொன்னாள் சரோஜா..

“என் தம்பியும்,சரோஜாவும் சொல்லிட்டா.பகவான் பேர்லே பாரத்தைப் போட்டு ட்டு,வரதனே ஒரு ‘கிரிகெட் அகாடமிலே’சேருங்கோ.அவன் ஒரு நல்ல கிரிக்கெட்’ப்லேயரா’,வரட்டுமே” என்று சொன்னாள் மீரா.

“சரி,நீங்கோ மூனு பேரும்ம் சொல்லிட்டேள்.நான் வரதனை ஒரு நல்ல ‘கிரிகெட் அகாடமிலே’ சேக்கறேன்.அவன் நன்னா ஆடி ஒரு ‘ப்லேயராக’ வரட்டும்” என்று சொன்னார் ராகவன்.

அடுத்த வாரமே ராகவன் சென்னையிலே எது நல்ல ‘கிரிக்கெட் அகாடமி’ என்று விசாரித்து. அந்த ‘கிரிக்கெட் அகாடமி’யில் வரதனை வருடத்திற்கு பதினைஞ்சுஆயிரம் ரூபாய் கட்டி சேர்த்தார் ராகவன்.

அடுத்த நாளில் இருந்து வரதன்,தன் படிப்புக்கு ஒரு முற்று புள்ளீயை வைத்து விட்டு சந்தோ ஷமாக அந்த ‘கிரிக்கெட் அகாடமி’ யில் கிரிக்கெட் ஆடிக் கொண்டு வந்தான்.
மீரா ‘காலேஜ்’க்குப் போய் B.Com. படித்துக் கொண்டு வந்து இருந்தான்.மீரா ‘காலேஜ்’ சேரும் வரையில் ‘பெண்கள் மட்டும்’ படித்து வந்த பள்ளி கூடத்திலே படித்து வந்தாள்.

‘காலேஜ்’க்கு வந்த அவளுக்கு,அங்கே படிக்க வந்த பையன்களைப் பார்த்ததும்,புது அனுபவமா ¡க இருந்தது.அவர்களைப் பார்த்த சரோஜாவுக்கு அந்த அனுபவம் ரெண்டே நாளில் அறுவருப்பைத் தர ஆரம்பித்தது.

காலேஜ்ஜுக்கு படிக்க வந்த பையன்களை துளி கூடப் பிடிக்கவில்லை.

ஒவ்வொரு பையனும், ‘I Love You Darling’,’ I am ready for you’’,Dear Babe’,’Im a Bachelor’ போன்ற வாசகங்களை ‘பிரிண்ட்’ பண்ண ‘டீ ஷர்ட்டு’களை அணிந்துக் கொண்டு,வந்து, படிக்க வந்த பெண்கள் வகுப்பில் நுழையும் வரை கிண்டல் பண்ணியும்,கண்ணை அடித்தும்,வலி வந்தவன் போல உடம்பை இப்படியும் அப்படியும் அசைத்து ஆடி,வந்து கலாட்டா பண்ணிக் கொண்டு வந்தார்கள்.

சரோஜா நல்ல கலரா,வாளிப்பாக வேறே இருந்தாள்.அவள் சல்வார்,கம்மிஸ்,துப்பட்டா தான் அணிந்து ‘காலேஜ்’ போய் வந்தாள்.

ஒரு பையன் சரோஜாவை கலாட்டா பண்ணி விட்டுப் போன பிறகு,அடுத்த ஒரு பையன் சரோஜாவை கலாட்டா பண்ண ஆரம்பிப்பான்.சரோஜா எல்லாவற்ரையும் சகித்துக் கொண்டு ‘எப்படா வகுப்பு ஆரம்பிக்கும்.இந்த பசங்க தொல்லை இல்லாம இருக்கும்’ என்று கடவுளை வேண்டிக் கொண்டு இருந்தாள்.

ஒரு பையனும் தன் முகத்தை ‘ஷேவிங்க்’ பண்ணிக் கொள்ளாமால்,தாடி மீசை வளர்த்துக் கொண்டு அந்த தாடி மீசையை ‘ட்ரிம்’ பண்ணிக் கொண்டு இருந்தார்கள்.அவர்கள் போட்டுக் கொண்டு இருந்த ‘ஜீன்ஸ் பேண்டில்’ தொடையில் ஆறு அங்குலத்துக்கு ஒரு பெரிய ஓட்டையை வைத்துக் கொண்டு இருந்தார்கள்.ஒருவன் மற்றொருவன் ‘மச்சி’ ‘மச்சி’ என்று கூப்பிட்டு வந்தது அவளுக்கு நாராசாமாக இருந்தது.’இவா புருஷப் பசங்கத் தானே.பின்னே இவா ஏன் அவா ‘ப்ரெண் ட்ஸே’ ‘மச்சான்’ன்னு கூப்பிடாம,’ மச்சி’ன்னு கூப்பிடறா’என்று யோஜனைப் பண்ணீனாள்.

போறாததுக்கு அவர்கள் சினிமா காதல் பாட்டை அவள் காது அருகே பாடி விட்டுப் போவார் கள்.சில ¨தா¢யமான பெண்கள் கோவம் வந்து தங்கள் செருப்பை கழட்ட ஆரம்பித்தால்,அவர்கள் ஒடிப் போய் விடுவார்கள்.ஒரு வகுப்பு வாத்தியார் நேரத்திற்கு வராவிட்டால்,இந்த வாலுப் பையன்கள் பெஞ்சில் மேலே ஏறிக் கொண்டு ஒரு சினிமா காதல் பாட்டுக்கு ‘டான்ஸ்’ ஆடி வருவார்கள்.

சில பையன்கள் எப்படியோ காலேஜ் படிக்க வந்த பெண்களின் பேரை தெரிந்து வைத்துக் கொண்டு,அந்த பேரை சொல்லி கூப்பிட்டு ‘கன்னா’ ‘பின்னா’ என்று ‘எதையோ’ எல்லாம் சொல்லிக் கொண்டு வந்தார்கள்.சரோஜவுக்கு இந்த பையன்கள் காலேஜுக்கு படிக்க வருகிறார்களா,இல்லை இந்த மாதிரி பெண்களை கலாட்டா பண்ண வருகிறார்களா என்றே புரியவில்லை.

சரோஜா மெல்ல எல்லாவற்ரையும் பொறுத்துக் கொண்டு தன் படிப்பிலே முழு கவனத்தை செலுத்தி படித்து வந்தாள்.வீட்டுக்கு வந்தால் மீரா யாரிடமும் தான் ‘காலேஜ்’ல் படும் கஷ்டத்தை அப்பாவிடமும் சொல்லிக் கொள்ள முடியாமல்,மாமா கிட்டேயும் சொல்லிக் கொள்ள முடியாமல் அனலில் விழுந்த் புழு போல தவித்து வந்தாள்.

‘அப்பாவும்,மாமாவும் தினம் ‘க்ளீனாக’ ‘ஷேவிங்க்’ பண்ணிக் கொண்டுப் போய் வந்துக் கொண்டு இருந்தார்கள்.வரதனிடம் சொன்னா,அவனுக்கு நாம பட்டுண்டு வற இந்த கஷ்டம் புரியாது ஏன் ஏன்றால் அவனும் அந்த பையன்கள போலவே,தலையை இங்கும் அங்குமாக கொஞ்சம் வெட்டிக் கொண்டு,அவன் தாடி மீசையை ‘டிரிம்’ பண்ணிக் கொண்டு போய்க் கொண்டு இருந்தான்.அவனும் அந்தப் பையன்களே போல வயசுப் பொண்களே கலாட்டாப் பண்ணீண்டு வறானோ என்னவோ’ என்று நினைத்தாள் சரோஜா.
ஒவ்வொரு நாளையும் மெல்ல பிடிக்காமல் தள்ளிக் கொண்டு வந்தாள் சரோஜா.

ஒரு வருஷம் ஓடி விட்டது.

பரமசிவமும்,மீராவும் வருடாந்திர ‘லீவில்’ இருந்தார்கள்.வரதன் கிரிக்கெட் ஆடப் போய் இருந்தான்.

ராகவனும்,மீராவும் ‘ஆபீஸ்’க்குப் போய் இருந்தார்கள்.பரமசிவம் வெளியே போய் இருந்தான் சரோஜா அவள் ‘ஸ்னேகிதி’ வீட்டுக்குப் போய் இருந்தாள்.

சமையல் கார மாமி வந்ததும் வராததுமாய் சுந்தரம் மாமியைக் கூப்பிட்டு “மாமி நேக்கு காத்தா லே இருந்து என் நெஞ்சே ரொம்ப வலிச்சுண்டு இருக்கு.இப்போ வலி ரொம்ப ஜாஸ்தியா இருக்கு. கொஞ்சம் ராகவனுக்கு ‘போன்’ பண்ணீ உடனே வரச் சொல்றேளா” என்று சொல்லி விட்டு தன் நெஞ்சைப் பிடித்துக் கொண்டு இருந்தார்.

உடனே அந்த மாமி “இதோ நான் உங்க பிள்ளேக்கு ‘போன்’ பண்ணி அவரே உடனே ஆத்துக்கு வரச் சொல்றேன்.நீங்கோ உங்க நெஞ்சு வலியே கொஞ்சம் பொறுத்துண்டு வாங்கோ” என்று சொல்லி விட்டு அஞ்சரை பெட்டியை எடுத்து ராகவன் நம்பரைப் எடுத்து ராகவனுக்கு நம்பருக்குப் ‘போன்’ பண்ணீனாள்.

ராகவன் ‘போன்’லே வந்ததும் மாமி” நான் சமையல் கார மாமி பேசறேன்.உங்க அப்பாவுக்கு நெஞ்சே ரொம்ப வலிக்கறதாம்.உங்களே உடனே ஆத்துக்கு வரச் சொல்றார்” என்று சொன்னாள். சமையல் கார மாமி “நான் உங்க பிள்ளேக்கு போன் பண்ணி இருக்கேன்” என்று சொன்னாள்.

அப்போது தான் வீட்டுக்கு வந்த சரோஜா,சமையல் கார மாமி அப்பாவுக்கு ‘போன்’ பண்ணி னதைக் கேட்டாள்.உடனே தாத்தா பக்கத்தில் உட்கார்ந்துக் கொண்டு அவர் நெஞ்சைத் தடவி விட்டு க் கொண்டு “ரொம்ப வலிக்கறதா தாத்தா” என்று கேட்டுக் கொண்டு இருந்தாள்.

”இதோ இன்னும் அரை மணி நேரத்லே நான் ஆத்துக்கு வறேன்னு என் அப்பா கிட்டே சொல் லுங்கோ.நீங்கோ கொஞ்சம் அவரே ஜாக்கிறதையா பாத்துண்டு இருங்கோ” என்று சொல்லி விட்டு, மீராவுக்கு ‘போன்’ பண்ணீ சமையல் கார மாமி சொன்ன விஷயத்தை சொன்னார் ராகவன்.

‘ஆபீஸை’ விட்டு வெளியே வந்து ‘ஸ்கூட்டர் ஸ்டாண்டுக்கு’ப் போய் தன் ‘ஸ்கூட்டரை’ வெளியே எடுத்து அதை ‘ஸ்டார்ட்’ பண்ணீ,வேகமாக வீட்டுக்கு வந்தார் ராகவன். ராகவனை பார்ததும் ”வா ராகவா.நேக்கு நெஞ்சே ரொம்ப வலிக்கறது.வலி தாங்கவே முடியலே. அதான் நான் மாமியே உனக்கு ‘போன்’ பண்ணி விஷயத்தே சொல்லச் சொன்னேன்”என்று சொல்லி நெஞ்சை பிடித்துக் கொண்டு இருந்தார்.

உடனே ராகவன் “அப்பா வாங்கோ.நாம ஒரு டாகடர் கிட்டே போய் காட்டிண்டு வரலாம். மொள்ள எழுந்துக் கொள்ளுங்கோ” என்று சொல்லி அப்பாவை எழுந்துக் கொள்ள சொல்லி விட்டு சமையல் கார மாமியைக் கூப்பிட்டு “மாமி வாசல்லே காலியா போற ஒரு ஆட்டோவைக் கொஞ்சம் கூப்பிடுங்கோ” என்று சொன்னார்.

“ராகவா,டாக்டர் எல்லாம் வேணாம்ப்பா.அவர் ஏற்கெனவே எனக்கு ரொம்ப ‘ஸ்ட்ராங்கான’ BP மாத்திரைகளே குடுத்து இருக்கார்.அவர் சொன்னா மாதிரி நான் சாப்பிடறதே இல்லே.எனக்கு நெஞ்சு வலி ரொம்ப ஜாஸ்தியா இருக்கு.காது ரெண்டும் அடைச்சுக் கிடக்கு.கண்ணு ரெண்டும் இருட்டிண்டு வறது.உன் கூட என்னாலே டாக்டர் கிட்டே வர அளவுக்கு உடம்லே சக்தி இல்லே.நான் ரொம்ப நேரம் உசிரோட இருப்பேன்னு நேக்குத் தோணலே.என்னே உன் மடி மேலே சித்தே விட்டுக் கோ” என்று சொன்னதும் ராகவன்,அப்பாவை மெல்ல தூக்கி,தன் மடியிலே விட்டு கொண்டு “அப்பா, மொள்ள எழுந்து வாங்கோ,நாம ஒரு டாக்டர் கிட்டே போய் காட்டிண்டு வரலாம்”என்று கெஞ்சினான்.

சமையல் மாமி கையைக் கட்டிக் கொண்டு நின்றுக் கொண்டு இருந்தாள்.சரோஜாவும்,தாத்தா பக்கத்தில் உட்கார்ந்துக் கொண்டு இருந்தாள்.ராகவன் மாமியைப் பார்த்து “மாமி,மீராவுக்கு ‘போன்’ பண்ணி,அவளே உடனே ஆத்துக்கு வரச் சொல்லுங்கோ” என்று சொன்னதும்,அந்த மாமி அஞ்சரை ப் பெட்டியைத் திறந்து மீரா ‘ஆபீஸ்’ நம்பரைப் பார்த்து ‘போன்’ பண்ணீ ”உங்களே உடனே ஆத்து க்கு வரச் சொல்றார் உங்க ஆத்துக்காரர். உங்க மாமனார் உடம்பு ரொம்ப மோசமா இருக்கு” என்று சொன்னாள்.சமையல் மாமி ‘போன்’ பண்ணீ சொன்னதைக் கேட்ட மீரா,அவள் மானேஜா¢டம் விஷயத்தை சொல்லி லீவு வாங்கிக் கொண்டு,தன் ‘ஸ்கூட்டரை’ எடுத்துக் கொண்டு,வேகமாக ஓட்டிக் கொண்டு,விட்டுக்கு வந்தாள்.

தன் கணவர் அப்பாவை தன் மடியிலே விட்டுக் கொண்டு அவர் நெஞ்சை தடவி விட்டுக் கொண்டு இருப்பதைப் பார்த்து பயந்து போய்,கணவர் பக்கத்தில் வந்து நின்றுக் கொண்டு “அப்பாவு க்கு என்ன ஆச்சு.ஏன் அவர் உங்க மடியிலே படுக்க வச்சுண்டு இருக்கேள்” என்று அலறினாள் மீரா.

“வந்துட்டயாம்மா மீரா.எங்கே உன்னே பாக்காமலே என் மூச்சு நின்னுடுமோன்னு கவலைப் பட்டுண்டு இருந்தேன்.இப்போ என் பிராணன் நிம்மதியா…..”என்று சொல்லும் போது அவர் தலை சாய்ந்து விட்டது.

“அப்பா என் மடிலே தலை வச்சுக்கணும்ன்னு காத்துண்டு இருந்தேளா.மீரா ஆத்து க்கு வற வரைக்கும் காத்துண்டு இருந்தேளா.யார் கிட்டேயும் ஒன்னும் சொல்லாம,இப்படி எங்க எல்லாரையும் தவிக்க விட்டுட்டு போயிட்டேளே” என்று தலையில் அடித்துக் கொண்டு அழுதார் ராகவன்.

“இன்னும் கொஞ்ச வருஷம் எங்களோட இருந்துண்டு வந்து இருக்க கூடாதாப்பா” என்று மீரா கதறி அழுதாள்.சரோஜா அம்மா பக்கத்திலே உட்கார்ந்துக் கொண்டு அழுதுக் கொண்டு இருந்தாள். சமையல் கார மாமியும் அழுதுக் கொண்டு இருந்தாள்.

ராகவன் அப்பாவின் ‘பூத உடலை’ தரையில் மெல்ல விட்டார்.

-தொடரும்…

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *