கதையாசிரியர் தொகுப்பு: நளாயினி தாமரைச்செல்வன்

4 கதைகள் கிடைத்துள்ளன.

இராஐதந்திரம்

 

 வரவேற்பறையில் வானொலியில் காலைச்செய்தி போய்க்கொண்டிருந்தது. ரஐனியால் அழமுடியவில்லை. மனதுள் மட்டும் குமுறிக்கொண்டிருந்தாள். நேரம் மதியம் பன்னிரண்டைக்காட்டியது. படுக்கையில் புரண்டு புரண்டு படுக்கத்தான் முடிந்தது. கண்கள் எரிவதாய் தெரிந்தது. பசி வயிற்றை மெல்லிதாக கிள்ளிப்பார்ப்பதை உணர்தவளாய் படுக்கையை விட்டு எழுந்தாள். காலை ஐந்து மணிக்கு வேலைக்குச்சென்ற கோபிக்கு சான்விச்சும் கோப்பியும் போட்டுக்கொடுத்து வழியனுப்பிவிட்டு மறுபடியும் படுக்கைக்கு சென்றவள் இப்போது தான் எழுந்திருக்கிறாள். யாழ்ப்பாணத்தில் இருந்து பொதி பொதியாக கனவுகளுடனும் பலத்த எதிர்பார்ப்புக்களுடனும் விமானித்தவளுக்கு எல்லாமே கானல் நீராய் போனது


பொம்மைகள்

 

 அந்தக் கூடத்தில் யாரும் எதிர்பார்க்கவில்லைத்தான். சுமதிகுமாரின் சேட் கொலறை கொத்தாய்ப் பிடித்தவளாய் பளார், பளார் என கன்னங்களில் அடித்து விட்டு சீ நீ எல்லாம் ஒரு ஆம்பிளை போதாக்குறைக்கு என்ரை தம்பி வேறை. என கத்தியவளாய் வெறுப்பாய் அவனை பின்பக்கமாய் தள்ளி விட்டு சேட்கொலறில் இருந்து கையை விடுவித்துக் கொண்டாள். கூடம் சலனமற்று இருந்தது. குண்டூசி விழும் சத்தம் கேட்குமளவுக்கு, சுமதியின் பிள்ளைகள் இருவரும் தாயின் இந்த திடீர் தாக்குதலால் பயந்தவர்களாய் செற்றி மூலைக்குள் ஒருவரை ஒருவர்


நிழல்கள்

 

 நன்றாக இருட்டிவிட்டது. வீதியில் வாகனங்கள் நன்றாக குறைந்துவிட்டது ஒரு சிலர் மட்டும் வீதியின் கரையில் அமைக்கப்பட்ட கட்டில் நடந்து போவது தெரிந்தது. இரவின் நிசப்தத்தை இடைக்கிடை கிழிப்பதாய் கார்களின் வேகம். மனசைக்கூட ஒருவழிப்படுத்த முடியாமல் திணறினேன். தூரத்தில் இரண்டு காதல் ஜோடிகள் கைகோர்த்தபடி மிகவும் அருகருகே அணைத்தபடி போவது தெரிந்தது. சற்று உற்றுப்பார்க்கிறேன். இந்த காட்சி என்னை மேலும் திணறடிக்க தவறவில்லை. பார்ப்பது அழகில்லை என மனசு சொன்னாலும் கண்கள் விடுவதாய் இல்லை. சரி பாவம் கண்கள்


அந்த சில நிமிடத்துளிகள்.

 

 சுகுணாவிற்கு எல்லாமே கனவு போல் இருந்தது. தன் மகனை அடிக்கடி தடவிப்பார்ப்பதும் இறுக அரவணைத்துப் படுப்பதுமாய் இருந்தாள். கண்களை நித்திரை தழுவமறந்தது.ஒரு கிழமை ஆகியும் அவள் மனசு இயல்பு நிலைக்கு திரும்பவில்லை. குழந்தைகளுக்கு பாடசாலை விடுமுறையாதலால் அன்றும் வழமைபோல குழந்தைகளை காப்பகத்தில் விட்டு விட்டு சுகுணா வேலைக்குச்சென்றாள். வேலை முடிந்து மாலை குழந்தைகளை காப்பகத்தில் இருந்து அழைத்து வந்தாள். மகள் அன்று வழமைக்கு மாறாக தாயை நச்சரிக்கத் தொடங்கினாள். அம்மாக்கும், அப்பாக்கும் நெடுகலும் வேலை, வேலை. என்ரை