கதையாசிரியர் தொகுப்பு: திருதாரை தமிழ்மதி

1 கதை கிடைத்துள்ளன.

உயிரின் உறவே

 

 கதவைத் திறந்த அம்மாவின் முகத்தில் புன்னகை அது இன்ப அதிர்ச்சியா, ஆச்சரியமா என முருகேசனால் அனுமானிக்க முடியவில்லை. அவள் கண்கள் அவனுக்குப் பின்னால் யாரையோ தேடின. “வாப்பா…! நல்லாயிருக்கியா…? வசந்தியையும் நந்தினியையும் அழைச்சிட்டு வரலியா?” “இல்லம்மா!” ஒற்றை வார்த்தையோடு முடித்துக் கொண்டு உள்ளே நுழைந்தான். உள்கூடத்தில் காலடிபட்டதும் மனம் ஒருவித அமைதியாகிவிட்டதைப்போல உணர்ந்தான். இருபத்தைந்து ஆண்டு காலம் அவன் தவழ்ந்து, நடந்து, ஓடி, விளையாடி வளர்ந்த வீடு. ஆங்காங்கே உதிர்ந்த காரை சுவடுகள். ஓரத்தில் கயிற்றுக் கட்டில்.