கதையாசிரியர் தொகுப்பு: தமிழொளிப்புதல்வன்

2 கதைகள் கிடைத்துள்ளன.

நிழல்களின் நினைவுகள்

 

 நமது இறந்தகாலத்தின் குற்றங்கள் நீள நிழல்களாக நம்மைத் தொடர்கின்றன. அக்குற்றங்களுக்காக நாம் மனம் வருந்தினாலும், அவ்வருத்தம் அந்நிழல்களை அகற்றப் போதுமானதாயிருப்பதில்லை. அப்பா சொன்னதில் எனக்கு நம்பிக்கையில்லை. செத்தவர்கள் எப்படி உயிருடன் வர முடியும்? எல்லாம் சுத்த பைத்தியக்காரத்தனம். சித்தப்பா ஏதோ குற்றவுணர்வால் அப்படி புலம்பியிருக்காரென்றால், அப்பா ஏன் அதை சீரியசாக எடுத்துக் கொண்டு நம்பிக் கொண்டிருக்கிறார்? அன்றைக்குக் காலையில் தான் சித்தப்பாவின் டைரியைப் படித்திருந்தேன். சித்தப்பாவை நேற்று தான் தூக்கிலிட்டார்கள், மனித உரிமை அமைப்புகளின் வழக்கமான கோஷங்களுக்கிடையே.


சிறையிலிருந்து சில கிறுக்கல்கள்

 

 “நாம் அனைவரும் கொலையெண்ணம் கொண்டவர்களே; சமூகத்தின் மீதும், சட்டத்தின மீதும் நமக்கு இருக்கும் பயமே அவ்வெண்ணத்தை நிறைவேற்ற விடாமல் நம்மைத் தடுக்கிறது”. நான் கம்பிகளுக்குப் பின்னால் உட்கார்ந்திருந்தேன். கையில் லேப்டாப்பும், காதில் ஹெட்செட்டுமாக வாழ்ந்து பழக்கப்பட்டுப் போன எனக்கு அவ்வாழ்க்கை அலுத்துப் போனது. சீக்கிரமே எனக்கு விடுதலை அளித்து விடுவார்கள். இன்னும் ஒரு வாரம் தான். கம்பிகளுக்குப் பின்னால் இருந்து அல்ல. இந்த உலகத்திலிருந்தே என்னை விடுவித்து விடுவார்கள். அந்தப் கிழவர் அப்படித் தான் சொன்னார். “பிரதிவாதி