கதையாசிரியர் தொகுப்பு: ச.ஜெகன்

4 கதைகள் கிடைத்துள்ளன.

வேட்டை

 

 காத்து வலுவா வீச ,பேரிரைச்சலோடு பேயாட்டம்ஆடிக்கொண்டிருந்தது பனைமரங்கள் பனங்காட்டின் மணற்பரப்பில் கால் புதைத்து எட்டி நடை போட முடியாமல் மண்ணில் புதைதிருந்த பதினி கழையத்தின் உடைந்த சிறு சிறு ஓட்டாங்கனி துண்டுகளை கையில் பொருக்கிகொண்டே தனக்கு முன்பாக செல்லும் வேட்டைக்கார நண்பர்களின் நடைக்கு ஈடு கொடுக்க முடியாமல் பின்தங்கியே நடந்து வந்து கொண்டிருந்தான் ராஜன். பனங்காட்டின் இரைச்சலை கிழித்து கொண்டு அவனை நோக்கி விசில் அடித்தான் மாடசாமி ஏல மயிராண்டி வேகமா வால ,அங்கஎன்னல புடுங்கவா செய்யிர,வா,


பூ போட்ட கவுன்

 

 நாளை தன் செல்ல மகள் கோமதிக்கு 5 வது பிறந்த நாள் புது கவுன் கேட்டிருந்தால் வாங்கி வருவதாக சொல்லியிருந்தான் வேணுகோபால் சைக்கிளில் ஐஸ் பெட்டியை வைத்து கட்டிக்கொண்டு என்றைக்கும் விட இன்று அதிகாலையிலே ஐஸ் கம்பெனிக்கு, ஐஸ் எடுக்க சென்று விட்டான் நல்ல வெயில் காலம்தான், எப்படியும் ‘முதல்’ போக கையில் நூறிலிருந்து, நூற்றி ஐம்பது வரை கிடைத்து விடும் ,இன்று தனது கையிலிருந்த அனைத்து காசையும் போட்டு கூடுதலாக ஐஸ் எடுத்து கொண்டு சைக்கிளை


ஒப்பாரி

 

 பெரியசாமி எப்போ வந்து கடைய தொறப்பான்னு நாலஞ்சி சம்சாரிக விடிய காத்தாலயே காத்து கெடந்தாக. .அதுலயும் அந்தூரு முக்கியஸ்தரு ராமு தேவருதான் சீக்கிரமா மொகத்த வழிச்சிட்டு வேம்பாத்து பக்கத்துல உள்ள தன்னோட சினேகிதன் வீட்டு கல்யானத்துக்கு போகனும்னு காலுல சுடுதன்னிய ஊத்துன மாதிரி நின்னாரு . வழக்கம் போல ஏழு மணிக்கு சூரங்குடியில இருந்து அருப்புக்கோட்டை போற ஜெயவிலாச எதிர் பார்த்துகிட்டு தலை முடிய வெட்டுரதுக்கும் தாடிய வழிக்கிறதுக்கும் பெரியசாமியோட வாடிக்கைகாரங்க காத்துகிட்டுருந்தாக பெரியசாமி என்ன இந்த


கோயில் பொம்மைக்கு ஒரு மொழம் பூ

 

 வைப்பாரறும் கிருஷ்ணாறும் ஒண்ணா சேர்ந்து ஓடுற ஆத்துக்கு நடுவுல உள்ளது தான் இருக்கன்குடி மாரியம்மன் கோவில். மேற்க மேற்கு தொடர்ச்ச்சி மலைப் பக்கம் நல்ல மழை பெஞ்சா மட்டும் தான் இங்க ஆத்துல கொஞ்சமாவது தண்ணிய பாக்கலாம்.இப்போ ஆத்துல துளியும் தண்ணி இல்ல ஆத்துல அங்கங்க உள்ள ஆள்துழ கிணத்துல வர்ற பம்புசெட்டு தண்ணியிலதான் அந்த ஊர் சனமும் கோவிலுக்கு வர்றவங்கலும் குத்தால அருவியில குளிக்கிறது போல குளிச்சிக்கிட்டு வர்றாங்க. கோவிலோட பரப்பளவு ரொம்ப விரிஞ்சி கெடக்கும்.