பூ போட்ட கவுன்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: June 18, 2015
பார்வையிட்டோர்: 11,236 
 

நாளை தன் செல்ல மகள் கோமதிக்கு 5 வது பிறந்த நாள் புது கவுன் கேட்டிருந்தால் வாங்கி வருவதாக சொல்லியிருந்தான் வேணுகோபால்

சைக்கிளில் ஐஸ் பெட்டியை வைத்து கட்டிக்கொண்டு என்றைக்கும் விட இன்று அதிகாலையிலே ஐஸ் கம்பெனிக்கு, ஐஸ் எடுக்க சென்று விட்டான் நல்ல வெயில் காலம்தான், எப்படியும் ‘முதல்’ போக கையில் நூறிலிருந்து, நூற்றி ஐம்பது வரை கிடைத்து விடும் ,இன்று தனது கையிலிருந்த அனைத்து காசையும் போட்டு கூடுதலாக ஐஸ் எடுத்து கொண்டு சைக்கிளை மிதித்து கொண்டு தனது ஊரிலிருந்து 20 கிலோ மீட்டர் தூரமுல்ல சூரங்குடியை நோக்கி ஐஸ் ஐஸ் என்று சத்தமிட்டு கொண்டே பாம் பாம் என்று ஒலி எழுப்பி கொண்டே சைக்கிளை அழுத்தி சென்றான் ,

கோமதி க்கு மஞ்ச கலர்ல பூ போட்ட கவுனு தான் வேணும்னு நேத்து ராத்திரி கேட்டுருந்தா சீக்கிரம் யாவாரத்த முடிச்சிட்டு கவுன வாங்கி மக கையில குடுத்துரனும்னு வழக்கத்த விட ஐஸ் ஐஸ் னு கத்தி பாக்குறான் அதிசயமா இருக்கு ஒரு யாவாரமும் இல்ல இன்னைக்கு இந்த ரூட்ல வந்துருக்க கூடாதொனு மனச குழப்பிகிட்டே சைக்கிள் அழுத்தி சென்றான்

வேம்பார் ,கண்ணியாரம் பக்கம் போயிருந்துருக்கலாம்னு மனசுல நினைச்சிகிட்டே ,வந்ததுல முத்துராமலிங்கபுரம் வந்துருச்சி அங்க முள்ளு வெட்டிகிட்டு நின்ன நாலஞ்சி மக்க ஓடியாந்து ஐஸ் வாங்கி தின்னதுக ,

பாம் பாம் னு ஒலி எழுப்பி கிட்ட சைக்கிள உருட்டி சென்றான் இன்னும் கொஞ்ச நேரத்துல ரீசஸ் பெல் அடிக்கிறதுக்குள்ள தரைக்குடி போயிட்டா ஸ்கூல் பயலுவ வந்தானுகன்னா பரவால்லாம, ஐஸ் வித்து விடும் என எண்ணி கொண்ட வேக வேகமாய் உன்னி உன்னி சைக்கிளை அழுத்தி கொண்டு வந்து சேர்ந்தான்

தரைக்குடி நெருங்கினதும் சோ வென மழை பிடித்து கொண்டது மழையில் நனைந்து கொண்டே வந்து சேர்ந்து பள்ளிக்கூட வாசலில் இருந்த வேப்ப மரத்தடியில் நின்றுகொண்டு பாம் பாம் என்று ஒலி எழுப்பினான் மழை விடாது பெய்ததில் ரீசஸ் பெல் அடித்தும் வெகு நேரமாகியும் சிறுவர்கள் ஒருவரும் வருவதாய் இல்லை

நேரம் போய்கொண்டிருந்ததால் மழையில் நனைந்து கொண்டே சைக்கிளை உருட்டி சென்று நாலு தெரு உள்ள தரைகுடியை வலம் வந்து யாபாரம் இன்றி சைக்கிளை அழுத்தி சென்றான் வேணுகோபால்,

மழை வெரித்திருந்தது
சுள் என்று வெயில் அடித்து கொண்டிருந்ததால் தலை முடியும் , மேல் சட்டையும் நல்லா காய்ந்திருந்தது ,சைக்கிள் தங்கமால் புரம் ஊரை நெருங்கி கொண்டிருந்தது

வழியில் கருவேல மரங்களை வெட்டி கரி மூட்டம் போட்டு கொண்டிருந்த நாலைந்து பேர் ஐஸ் வாங்கியதில் சற்று மகிழ்ச்சியுடன் பாம் பாம் ஐஸ் ஐஸ் என கூவி கொண்டே தாங்கமால்புரத்தை வளம் வந்ததில் அங்கும் பத்து இருபது ரூபாய்க்கு விற்பனை செய்திருந்தான்

அடுத்தது சூரங்குடி போவதற்குள் வழியிலுள்ள டீ கடையில் , சைக்கிளை நிறுத்தி காலை உணவாக ஒரு டீயையும் ,ரெண்டு வெங்காய போண்டாவையும் வாயில் போட்டு மென்று கொண்டு சைக்கிளை அழுத்தி சென்றான், செவல்பட்டியில் 30 ரூபாய்க்கும் சூரங்குடியில் கால் கடுக்க அலைந்து திரிந்து பாம் பாம் என ஒலி எழுப்பியதில் நூற்று பத்து ரூபாய்க்கு விற்பனை ஆகி இருந்தது.

மணி 3 இருக்கும் வெயில் மரஞ்ச மாதிரி இல்ல பசி வயித்த கில்லுனதுல வயிறு ரொம்ப தண்ணியும் , ரெண்டு ,பருப்பு வடையும் ,ஒரு டீ யும் குடிச்சதுல வயிறு நெரஞ்சி போயிருந்தது மறுபடியும் ஊர் நோக்கி சைக்கிளை வேகமாக அழுத்தி வந்தான் , தரைக்குடியில் மறுபடியும் தெரு சுத்தி வந்ததில் 40 ரூபாய்க்கு விற்பனை ஆகிருந்தது ….அடுத்து சேதுராஜா புரத்துல ஒரு 15 ரூபாய்க்கும் சாயல்குடி நெருங்குவதற்குள் அங்கங்க கொஞ்சம் கொஞ்சமா ஒரு 30 ரூபாய்க்கு விற்பனை ஆகிருந்தது

வழக்கத்தை விடவும் மிக சொற்பமான தொகையே வருமானமாய் கிடைத்ததால் என்ன செய்வதென்று தெரியாமல் ஐஸ் கம்பெனியில் மீதமிருந்த ஐஸ்களை ஒப்படைத்து விட்டு கையில் 135 ரூபாயுடன் கடைத்தெருவுக்கு சைக்கிளை அழுத்தி சென்றான்

ஒரு சிறிய துணிக்கடையில் 5 வயது குழந்தைக்கு உண்டான கவுன் வகைகளை விலை வாரியாக பார்த்து விசாரித்ததில் கோமதி கேட்ட மஞ்ச கலர் பூ போட்ட கவுன் 150 ரூபாயாம் எவ்வளவோ விலையை குறைக்க சொல்லி கேட்டும் 10 ரூபாயை விட்டு கடைகாரர் குறைக்க முன் வரவில்லை

பூ போடாத மஞ்ச கலர் கவுனை 90 ரூபாய்க்கு வாங்கி கொண்டு பசி மயக்கத்தில் இருந்ததால் கடைதெருவில் டீ ஒன்று குடித்து விட்டு செல்ல மகள் கோமதிக்கு ஆசையாய் வாங்கிய மஞ்ச கலர் கவுனுடன் சைக்கிளை வேகமாய் அழுத்தி வீட்டிற்கு சென்றான் வேணுகோபால்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *