கதையாசிரியர் தொகுப்பு: சோலச்சி

21 கதைகள் கிடைத்துள்ளன.

குறி…

 

 “ஏம்மா.. இத்தன பேரு வேல பாத்தும் ஒரு வேல கூட முழுசா நடக்கலயே. கையிலயா எழுதுறீங்க. ம்… ஒரு மிசினா ரெண்டு மிசினா, மொத்தம் பன்னெண்டு மிசினு இருக்கு. மிசின்ல என்ன நிகழ்வுனு கொடுத்தா அது செய்யப் போகுது. இல்ல…. எதும் புரியலனா என்கிட்ட கேட்டா நா சொல்ல மாட்டேனா. அது என்னாச்சு இது என்னாச்சுனு ஒருத்தர் மாத்தி ஒருத்தர் காலையிலிருந்து போன்ல கேட்டுக்கிட்டே இருக்காங்க. நா என்னத்த சொல்லி மழுப்புறது. எனக்குனு ஒரு மரியாதை இருக்கு


ஒருபிடி சோறு – ஒரு பக்க கதை

 

 பள்ளிக்கூடத்தில் சாப்பாட்டு மணி எப்போது அடிப்பார்கள் என்று ஏக்கத்தோடு கடிகாரத்தை பார்த்துக் கொண்டிருந்தான், நான்காம் வகுப்பு படிக்கும் சேரன். அவனது சிந்தனையில், “பெரியதம்பி! நா வேலைக்கிப் போயிட்டு வர்றேன். தம்பிக்கு ஒடம்பு சரியில்ல. அவன் வூட்டுல தூங்கட்டும். நா சாயந்தரம் வரும்போது தம்பிக்கு மருந்தும் திங்கிறதுக்கு தூள் கேக்கும் வாங்கி வர்றேன். மத்தியானத்துக்கு பள்ளிக்கூடத்துல சோறு வாங்கி வந்து ரெண்டு பேரும் சாப்பிடுங்க” என்று சொல்லிக்கொண்டே சோத்துப் பானையில் இருந்த நீராரத்தை உப்பு போட்டு குடித்து விட்டு


பட்டமரம்

 

 “சின்னத்தம்பி! நாலு பொரோட்டா, ரெண்டு ஆப்பாயில்” சாணார் ஓட்டலில் வேலைபார்க்கும் சப்ளையர் இளமதியன் சத்தம் போட்டுச் சொன்னதும் “ரெடி என்றவாறு வேகமாக பொரோட்டோ மாவைப் பிசைந்து சிறு உருண்டைகளாக வைத்திருந்ததில் நாலு உருண்டைகளை சப்பாத்தி கட்டையால் உருட்டி தோசைக்கல்லில் போட்டான். ரெண்டு முட்டைகளை உடைத்து அதே தோசைக்கல்லில் ஆப்பாயில் போட்டான்.” சின்னத்தம்பி குடும்பம் சுமாரான குடும்பம் தான். அவனது அப்பா மூக்கையா வேர்க்கடலை, சோளம் இவற்றைத் தள்ளுவண்டியில் வேகவைத்து விற்பார். அப்படித்தான் அன்றொரு நாள், பக்கத்து ஊர்


ஆட்டுக்கறி

 

 மண்சுவரால் கட்டப்பட்ட கூரைவீடு, மழை பெய்தால் ஆங்காங்கே ஒழுகும், கரும்புத் தோகைகளை கத்தையாக கட்டி அந்த வீட்டின் மேல் வேயப்பட்டிருந்தது. ஓரளவு இந்த கரும்புத் தோகை ஒழுகாமல் மலைக்கொழுந்தையும் ஆரியையும் பாதுகாத்தது. ஒரு நாள், வேப்பமுத்து பொறக்கும் போது எதையோ பாத்துப்புட்டு திடுக்கிட்டு வாய்க்காலில் விழுந்தவளுக்கு இடுப்பு காலு கையினு எல்லா இடமும் பயங்கர வலி. அன்று இரவே காய்ச்சலும் தொற்றிக்கொண்டது. வயதான ஆரியால் வலிதாங்க முடியவில்லை. இராமன் பூசாரிக்கிட்ட மந்திருச்ச கயிரும் விபூதியும் வாங்கி ஆரி


எதிர்பாராத யுத்தம்

 

 காஷ்மீர் மக்கள் ஒவ்வொருவரும் மூட்டைகளை சுமந்து கொண்டு குடும்பம் குடும்பமாக வேற்றிடம் நோக்கி சென்றார்கள். போர் அபாயத்தை வானொலியும் தொலைக்காட்சியும் அறிவித்துக்கொண்டே இருந்தன. ஆயுதங்களையும் ஆட்களையும் இந்தியாவும் பாகிஸ்தான் தீவிரவாதிகளும் குவித்து வைத்திருந்தனர். பனித்தூறல்களை துடைத்துவிட்டு சூரியகதிர்கள் உலாவிக்கொண்டு இருந்தன. இந்திய ராணுவ வீரர்கள் தயார் நிலையில் இருந்தார்கள். பதுங்கு குழிகள் வெட்டி வைக்கப்பட்டிருந்தன. இடுக்குகளிலும் மலை முடுக்குகளிலும் வீரர்கள் பதுங்கி தங்களை காத்துக்கொண்டும் எதிரிகளை தாக்குவதற்கு தயாராக இருந்தனர். சில இராணுவ வீரர்கள் முதுகில் ரொட்டிகளையும்


நெஞ்சுக்குள் இருள்

 

 நல்ல காலை பொழுது. மணி எட்டு. தட்டில் சோறு சாப்பிட்டுக் கொண்டே சிந்தனையில் ஆழந்தான் சேகர். “என்னடா சாப்புட்டுக்கிட்டே ரோசனை. சும்மா சாப்புட்டுட்டு படுத்துத்தூங்கு. இல்லேனா பக்கத்து வீட்ல டீவியப் பாரு” வாசலில் குவித்து வைத்திருந்த குப்பையை அள்ளியவாறு சொன்னாள் சிகப்பி. “அதுவந்தும்மா மாமா ஊருக்குப் போயி ரொம்ப நாளாச்சு. நீ தான் அடிக்கடி சொல்லுவியல்ல. ஊருக்குப் போயி எல்லாரையும் பாத்துட்டு வாடானு அதான். ” பேச்சை இழுத்தான். “நீ முடிவெடுத்ததுக்கு அப்புறம் நா என்ன சொல்லப்


கதையல்ல

 

 வழக்கம் போல் இரவு உறங்கச் சென்றேன். உறக்கத்தில் விழித்த என் குழந்தைகள் எப்போதும் போல் ஆளுக்கொரு பக்கமாய் என்மீது கால்களை தூக்கிப் போட்டுக்கொண்டு என் முகத்தைப் பார்த்தனர். அந்தப் பார்வையின் அர்த்தம் புரியாதவனா நான். கதை கேட்காமல் ஒருநாளும் உறங்கியதில்லை என்பதை நான் அறிவேன். சில நேரங்களில் நான் உறங்க நள்ளிரவு ஆகிவிடும். கேட்காமல் விட்டுப் போன கதைகளை மறக்காமல் சேர்த்து மறுநாள் இரண்டு கதைகளாக சொல்ல வேண்டும். ஆனால் எங்களுக்குள் ஒரு ஒப்பந்தம் உண்டு. நான்


பெருசுகள்….

 

 பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்த அந்தப் பேருந்து நிலைத்தில் பதினாறாம் எண் பேருந்து வந்து நிற்பதற்குள் கூட்டம் வெள்ளமென திரண்டு ஏறினர். இறங்க வேண்டியவர்கள் இறங்குவதற்குள் ஏறுபவர்கள் இருக்கையில் இடம்பிடிக்க தன் கைகளில் இருந்தவற்றை சன்னல் வழியே இருக்கை நோக்கி வீசினர். ஒருவழியாக இறங்குபவர்கள் போக ஏறியவர்கள் இருக்கையில் அமர்ந்ததும் பலர் இடைவெளியிலும் நின்றனர். இருக்கையில் அமர்ந்தவர்கள் யாரையும் காணாதது போல் சன்னல் வழியே எதையோ பார்த்துக்கொண்டு இருந்தனர். தெரிந்தவர்கள் நின்றால் உட்கார சொல்லனுமே…. பேருந்து புறப்பட தயாரானது.


வார்த்தைகளால் ஒரு கோடு

 

 கல்யாணத்துக்குப் பிறகு படிக்க வைப்பதாகச் சொல்லித்தான் கமலாவை திருமணம் செய்து கொண்டான் சுந்தர். இருவருக்கும் ஏழு ஆண்டுகள் வித்தியாசம். தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் சுந்தருக்கு போதுமான வருமானம் கிடைத்தது. கமலா ஆசைப்படி தொழிற்கல்வி டிப்ளமோ படிப்பில் சேர்த்துவிட்டான். வயது இருபதை கடந்ய அவளுக்கு படிக்க வேண்டும் என்பதில் அதிக ஆசை இருந்தது. “” ஏய்…கமலா… கல்யாணம் பண்ணிட்டு கல்லூரிக்கு வர்றே…. தெனமும் சாய்ந்தரம் உன்ன கூட்டிப்போக வர்றாறே அவர்தானா…..” கிண்டலடித்தனர் தோழிகள். வழக்கம்போல், வேலை முடிந்து வரும்போது


பெண்மை

 

 அவன் எதிர்பார்க்கவே இல்லை. மதுப்புளியில் ஊரே கூடியிருந்தது. கைக்குழந்தையுடன் நின்றிருந்த தேவியை பார்க்க வெட்கப்பட்டு தலை குனிந்து நின்றான் மலைச்சாமி. ” ஏம்பா….எத்தன முறை சொல்லியாச்சு. திருந்தவே மாட்டியா….” கடுகடு முகத்துடன் பேசினார் தலைவர் முருகையன். ” ஏம்புள்ளய நிக்க வச்சு கேள்வி கேட்குறீங்க… எவள வச்சுருந்தா இவளுக்கு என்னவாம்…. வீட்ல புருசனா நடந்துக்கிறான்ல. ஆம்பள ஆயிரம் தப்பு பண்ணுவான். இவளுக்கு என்ன கொற வச்சான்…” சேலையை வாரி சுருட்டிக்கொண்டு பேசினாள் மீனாட்சி. ” ஏம்மா…. மீனாட்சி