கதையாசிரியர் தொகுப்பு: கி.ராஜநாராயணன்

44 கதைகள் கிடைத்துள்ளன.

கொத்தைப் பருத்தி

 

 (1982ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) கோனேரி செங்க்கன்னாவின் குடும்பத்தைப்பற்றி விசாரிக் கவா வேண்டும்: பெயரைச் சொன்னாலே சுத்துப்பட்டிகளில் ‘அடேயப்பா அவுகளுக்கென்ன?’ என்று சொல்லும் வாய்கள். பெயருக்கு இப்பவும் குறைச்சல் இல்லைதான். ‘பெயர் இருந்து நாக்கு வழிக்கவா; ஒரு பயலும் பொண்ணு தர மாட்டேங்கானே என் பேரனுக்கு’ என்று நினைத்துத் தவுதாயப் பட்டார் கோனேரி, இருநாறு ஏக்கர் கரிசல். அதுவும் தெய்க்கரிசல் நிலம்; நினைச்சுப் பார்க்கமுடியுமா யாராலும்? அந்த வட்டாரத்திலேயே


ஜீவன்‌

 

 கிராமத்திலுள்ள குமரிப்பெண்டுகளுக்கு அங்குப்பிள்ளையைக்‌ கண்டுவிட்டாலே ஒருவித குஷி வந்துவிடும்‌. ஜாடை செய்து – ஒவ்வொரு வார்த்தைக்குமே ஜாடை செய்து – ‘னைக்கு (அங்குப்பிள்ளையைக்‌ காட்டி) கலியாணம்‌ (தாலி கட்டுவதைப்போல கழுத்துப்பக்கம்‌ கைகளைக்‌ கொண்டுபோய்‌) எப்போ? (விரல்களை முஷ்டி மடக்கிக்‌ குலுக்கவேண்டும்‌.) இந்த ‘அபிநய முத்திரை’களோடு முகபாவமும்‌ சேர்ந்துகொள்ளும்‌. ஊமைகளோடு ‘பேசுவது’ என்பது எல்லோருக்கும்‌ அவ்வளவு லேசு இல்லை. வேத்துமொழி தெரிந்தவன்தான்‌ அதைப்‌ பேசமுடியும்‌ என்பதுபோல ‘ஊமை பாஷை’ தெரிந்தவன்தான்‌ அவர்களோடு சரளமாசப்‌ பேசமுடியும்‌. ‘பெண்‌’ என்று சொல்லவேண்டுமானால்‌


கறிவேப்பிலைகள்‌

 

 அந்த வங்கிழடு தம்பதியருடைய சொந்தப்‌ பெயர்களை மறந்தே போய்விட்டது கிராமம்‌. பப்பு தாத்தா தம்பதியர்‌ என்று சொன்னால்தான்‌ தெரியும்‌. தனித்தனியாகச்‌ சொல்வதென்றால்‌, அந்தத்‌ தொண்டுக்கிழவரைப்‌ பப்பு தாத்தா என்றும்‌, அந்தத்‌ தொண்டு கிழவியைப்‌ பப்புப்‌ பாட்டி என்றும்‌ வயசானவர்களிலிருந்து குழந்தைகள்‌ வரை அழைத்தார்கள்‌. அவர்களைப்‌ பார்க்கும்போது உலர்ந்த பழங்களின்‌ ஞாபகம்‌ வரும்‌. பேர்ச்சம்பழ நிறத்திலுள்ள அவர்களுடைய உடம்பின்‌ தோல்களில்‌ கணக்கில்லாத மச்சங்கள்‌; கருப்பு, சிகப்பு நிறத்திலும்‌ கருநீல நிறத்திலும்‌ உடம்பின்‌ சில பகுதிகளில்‌ வறண்ட பாலுண்ணிகள்‌ நிறைந்திருந்தன.


சாவு

 

 தட் தட் தட் “யாரது?” தட் தட் தட் “யாரது?” ஜக்குவும் ராமானுஜநாயக்கரும் எழுந்து அவசர அவசரமாக “கால்” கழுவிக்கொள்கிறார்கள். கிளக்……… கிறீச்ச் ‘ஒருத்தரையும் காணமே’ இப்பொத்தானே மழை பெய்து வெரித்திருந்தது; யாரும் வந்த சுவடே காணமே ‘மாட்டுக் குளம்பின் காலடிதான் தரையில் பதிந்திருக்கிறது; எவ்வளவு பெரிய காலடி! ‘தட்டியது யாராக இருக்கலாம்? ம்……..யாரோ’ திடீரென்று கோழிகள் பட படவென்று இறக்கைகளைத் தட்டிக்கொண்டு கலைந்து கொக்கரிக்கின்றன. தாய்க் கோழிகளின் இறக்கைகளுக்குள் குஞ்சுகள் பாய்ந்து ஓடி பயத்தால் ஒளிந்து


மாயமான்‌

 

 அப்பாவு செட்டியார்‌ சைக்கிளில்‌ வந்து ‘ஜம்‌’ என்று இறங்கினார்‌ அவர்‌ வருகைக்காக காத்துக்‌ கொண்டிருந்த கிராமத்து இளைஞர்கள்‌ சைக்கிளின்‌ பக்கம்‌ நெருங்கி, ‘ஹேன்ட்பாரில்‌’ சொருகி இருந்த தினப்‌ பத்திரிகையை உரிமையோடு எடுத்து, உலக விஷயங்களில்‌ மூழ்க ஆரம்பித்தார்கள்‌. செட்டியார்‌, சைக்கிளை ‘ஸ்டாண்டு’ போட்டு நிறுத்திவிட்டு இந்தப்‌ பக்கம்‌ திரும்பினார்‌. அவருடைய தர்மபத்தினி உலகம்மாள்‌ தண்ணீரும்‌ செம்புமாய்‌ தயாராக நின்றுகொண்டிருந்தாள்‌. செம்பைக்‌ ையில்‌ வாங்கி முகம்‌ கைகால்‌ சுத்தி செய்தார்‌. இதற்குள்‌ அவருடைய மகன்‌ சிவக்கொழுந்து கடையில்‌ இருந்து


பேதை

 

 (1966ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) பேச்சி, ஒரு இன்பமான கனவு கண்டாள். இரட்டைக் கதவு போட்ட ஒரு வாசல், ஒரு கதவு மட்டும் திறத் திருந்தது. ஒரு கதவு மூடியிருக்கிறது. மூடியிருக்கும் அந்தக் கதவைப் பிடித்திருக்கும் பிஞ்சு விரல்கள் மட்டும் தெரிகிறது. ஒரு குழந்தையின் தலை மெதுவாக எட்டிப்பார்க்கிறது. திரும்பவும் மெள்ள எட்டிப் பார்க்கியது. பார்த்தவுடன் சிரித்துக்கொண்டே அது சரக்கென்று தலையை இழுத்துக்கொள்கிறது. திரும்பவும் மெள்ள… பார்வதி அம்மன்


ஒரு காதல் கதை

 

 (1966ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) காதலித்துக் கல்யாணம் செய்யக் கொடுத்துவைக்கவில்லை எனக்கு என் நண்பன் ராகவனுக்குத்தான் கிடைத்தது அந்தப்பாக்கியம். சின்ன வயசிலேயே எனக்கு கல்யாணம் செய்து வைத்துவிட்டார் கள். அப்பொழுது என் மனைவிக்கு அறியாப்பருவம். அவள் என் தாய் மாமன் மகள். பிறந்த உடனேயே எங்கள் தாய்தந்தையர்கள் எங்களுக் குக் கல்யாண நிச்சயதார்த்தம் செய்துவிட்டார்கள். எங்களுடைய கல்யாண வைபவங்கள் கூட எனக்கு ஞாபகம் இல்லை. ஒன்றே ஒன்று தான்


சீதாவின் கல்யாணம்

 

 நடுச்சாமத்தில் வசந்தியின் கல்யாணம் நடந்து முடிந்தது. கல்யாண விமரிசையைப் பற்றியோ நடந்த கடம்பரத்தைப் பற்றியோ சொல்ல வேண்டியதில்லை. அவ்வளவுக்குத் தடபுடல். மாப்பிள்ளை பொறியியல் வல்லுனர். அவருடைய அப்பா பெரிய்ய பணக்காரர். அவரை சம்மத்தி ஆக்கிக்கொள்ள நீ நான் என்று போட்டி இருந்தது. ஆனால் அவரோ வசந்தியைத்தான் தனது மருமகளாகத் தேர்ந்தெடுத்தார். அப்படியான ஒரு கல்யாணத்தில் செலவுகளுக்கும் கொண்டாட்டங் களுக்கும் கேட்கவா வேண்டும். இந்த வசந்தியின் கல்யாணத்துக்கும். நம்முடைய கதைக்கும் அதிகத் தொடர்பு இல்லை. இன்னும் சொல்லப் போனால்,


உண்மை

 

 தலைமாட்டுலே யாரோ வந்து நிக்கதுபோலத் தெரிஞ்சது. சிரமத்தோட தலையைத் திருப்பிப் பார்த்தப்பொ அம்மா காணீர் வடிய நின்றுக்கிட்டிருந்தா, பார்த்ததும் பலமா சத்தம் வராம அமுதா, எலும்பாக மெலுஞ்ச உடம்பு தடுமாடுனது. கையினாலே சைகைகாட்டி உட்காரச் சொன்னான். வெள்ளைச் சீலையிலே கண்ணைத் தொடைச்சி மூக்கைச் சித்தி வீசிட்டு உட்கார்ந்தா. என்ன விசயம்ங்கிறமாதிரிப் பார்த்தான். சொல்ல முடியலை; உதடு நடுங்குனது. சரி; ஏதோ நடந்திருக்கு, திரும்பவும் அதான் இருக்கும். பாகவஸ்தி ஆனப்பொ, அப்பாவைப் பெத்த பாட்டி முத்தவனோடன்னும், அம்மா சின்னவளோடன்னும்


அசல்

 

 ரமா தன் கதைகளுக்குப் படம் போடுகிறதை விரும்புவதில்லை என்னத்துக்குப் படம்; கண்ணால் படித்துக்கொண்டு போகும்போதே எல்லாம் வந்து நிக்குமே எதிரே. பத்திரிகைகளிடம் வேண்டாம் என்றே சொன்னாள். என்ன சொல்லி என்ன; அது ஒரு நோய்ப்பழக்கம் ஆகிவிட்டது அதுகளுக்கு. தான் சிருஷ்டிக்கும் பாத்திரங்களின் முகஜாடை அவளுக்குத்தான் தெரியும். அந்த தகரப் பத்திரிகைகளில் வேலைபார்க்கும் சித்திரக்காரர் களுக்கு அது தெரியக் காரணமில்லை . தன் கதைகளுக்குப் போடப்பட்டு வெளியாகும் படங்கனை பார்க்கும் போது தொந்துபோவாள். ஒருவகையில் இது சிருஷ்டிய அகவுரப்படுத்தும்