கதையாசிரியர் தொகுப்பு: கிரேஸி மோகன்

17 கதைகள் கிடைத்துள்ளன.

அனிமல்ஸ் ஒன்லி

 

 ‘ஆதிபராசக்தி’ படம் பார்க்கப் போவதாக வீட்டில் அண்டப்புளுகு புளுகிவிட்டு ‘அனிமல்ஸ் அண்ட் செக்ஸ் லைஃப்’ – விலங்குகளின் விரகதாப வாழ்க்கையை விவரிக்கும் சினிமாவை நைட் ஷோ பார்த்து விட்டு நண்பர்களுடன் ராஜகுமாரி தியேட்டரைவிட்டு வெளியே வந்தேன். தங்களது அந்தரங்க வாழ்க்கையை அம்பலமாக்கிய சினிமாவை ரசித்துவிட்டு வந்த எங்களைப் பார்த்து தியேட்டர் வாசலில் இருந்த ஓரிரு நாய்கள் நாணத்தால் முகம் சிவந்து நாலாபுறமும் ஓடின. அந்த வாரம் முழுவதும் ஆடு, மாடு, நாய் போன்ற நாலு கால் பிராணிகளைப்


அன்புள்ள முதலமைச்சருக்கு…

 

 அன்புள்ள மாண்புமிகு முதலமைச்சருக்கு … அன்றாட வாழ்க்கையில் அல்லல்படும், அவதிப்படும்….ஏன், சுத்தமாகச் சொல்லப்போனால் லோல்படும் ஆயிரக்கணக்கான மத்யவர்க்க மக்கள் (ஆலோசகர்கள் வைத்துக்கொண்டு வரி ஏய்ப்பதற்கு வசதி இல்லாத ஓரளவு வருமானம் வாங்குபவர்கள் ….) சார்பாக அடியேனின் தெண்டம் சமர்ப்பித்த விஞ்ஞாபனம். நலம். நலமறிய அவா – என்று வழக்கம் போல பொய்யாக ஆரம்பித்துக் கடிதத்தை ஆரம்பிக்க ஆசையாகத்தான் இருக்கிறது. மன்னிக்கவும். பொய் சொன்ன வாய்க்கு போஜனம் (சத்துணவு இல்லை…. சாதா உணவு) கிடையாது என்று பெரியவர்கள் கூறுவார்கள்.


ஊட்டி வரை உளவு!

 

 ‘காயமே இது பொய்யடா’ என்ற சித்தர் வாக்குக்கு ஒரு சிறு மாற்றம் தேவை. ‘காயமே இது பச்சோந்தியடா!’ நீங்க பாட்டுக்கு, காயம் என்றவுடன் படை, சொறி, சிரங்கு , பர்னால், ஜெர்மெக்ஸ் என்று போய்விடாதீர்கள். நான் கூறுவது செந்தமிழ் காயம். அதாவது, உடம்பு! விஷயத்துக்கு வருவோம்… ஏதோ போனால் போகிறது. எங்கு போனாலும் நன்றி விசுவாசத்தோடு நம் கூடவே வருகிறதே என்று பச்சாத்தாபப்பட்டு…. பாவம்! மதறாஸ் வெப்பத்துக்குப் பயந்து சதா வியர்வைக் கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கும் இந்தக்


பாலிடிக்ஸ் ப்ளஸ் டூ!

 

 ஆந்திர குருட்சேத்திரத்தில் தெலுங்குதேச மன்னர் கலியுகக் கிருஷ்ண பரமாத்மா என்.டி.ராமா ராவ் அவர்கள் தெலுங்குதேச ஊழியர்களுக்காக அரசியல் கல்லூரி ஒன்று ஆரம்பிக்கவேண்டும்’ என்று திருவாய் மலர்ந்தருளியிருப்பதாகச் செய்திகள் வந்திருக்கின்றன. ராமராவ்காருவின் மேற்கூறிய ஆசை அகில இந்திய ரீதியில் செயலாக்கப்படவேண்டிய விஷயம் என்று தோன்றுகிறது. இதைக் கல்லூரியோடு மட்டும் நிறுத்தக் கூடாது. அரசியல் திண்ணைப் பள்ளிக்கூடங்களில் ஆரம்பித்து அரசியல் ‘கிண்டர் – கார்டன்கள்’ அரசியல் ‘ப்ளஸ்-டூக்கள்’, அரசியல் ஆராய்ச்சி நிறுவனங்கள் என்று தோன்ற வேண்டும். அட ராமாராவே! (அட


மாமியார், மருமகள் உலகமகா யுத்தம்!

 

 கி.மு….கி.பி. – அதாவது கிறிஸ்துவுக்கு முன் கிறிஸ்துவுக்குப் பின் என்று காலத்தைக் கணக்கிடச் சரித்திர ஆராய்ச்சியாளர்கள் அளவுகோல் வைத்திருக்கிறார்கள். அதேபோல, உலகில் மாமியார் – மருமகள் சண்டையே இல்லாத காலத்தையும், சண்டை இருந்த காலத்தையும் பாகுபடுத்திக் கூறவேண்டுமானால் அளவுகோலாக ஆ.ஏ.மு. – ஆ.ஏ.பி. என்ற வாசகங்களைத்தான் பயன்படுத்த வேண்டும். …. அதாவது, சண்டையே இல்லாத காலத்தை ஆதாம் ஏவாளுக்கு முன் என்றும், சண்டை இருந்த – இருக்கும் – நிச்சயமாக இருக்கப் போகும் காலத்தை – ஆதாம்


காதல் சைகாலஜி

 

 ‘காதல் ஒலிம்பிக்ஸ்’ – அன்று ஈடன் தோட்டத்தில் கைவசம் இளையராஜா இல்லாததால் டூயட் எதுவும் பாடாமல் ஆதாம் ஏவாளால் மௌனமாகத் துவக்கி வைக்கப்பட்ட காதல் ஒலிம்பிக்ஸ் இன்றுவரை ஜனரஞ்சகமாக விளையாடப்பட்டு வருவது உங்களுக்கெல்லாம் தெரிந்ததே! காதல் ஒலிம்பிக்ஸில் தலைதெறிக்க ஓடி எப்படியாவது கல்யாண மெடலை வாங்கிவிட ஒரு ‘ட்ராக்’கில் ஓடும் சம்பந்தப்பட்ட ஜோடியை ஒரு கட்சி என்று வைத்துக்கொண்டால், இவர்களை எப்படியாவது தடுத்து நிறுத்திப் பிரித்துவிட வேண்டும் என்று கச்சம் கட்டிக்கொண்டு குறுக்கே ஒரு ட்ராக்’ போட்டு


மேனரிஸம்

 

 ஊதல், உறிஞ்சுதல், உமிழ்தல் என்று மூன்று வகையாகக் கெட்டப் பழக்கங்களை நமது முன்னோர்கள் வகுத்திருக்கிறார்கள். ஊதல் – அதாவது புகைப் பிடித்தல். இழுக்கயிழுக்க இன்பம் இறுதிவரை பாலிஸியில் சிகரெட்டின் ஃபில்டர் பகுதி வரும் வரை இழுத்து…. இதற்கு மேலும் இழுத்தால் புகைக்குப் பதிலாக வெறும் விசில் சத்தம்தான் வரும் என்ற நிலைவரும் அளவுக்கு அலுப்பில்லாமல் கர்ம சிரத்தையாக சிகரெட் பிடிப்பவர்களைப் பார்த்திருக்கலாம். வேலை மும்முரத்திலோ அல்லது மனம் ஒடிந்துபோன சோகக் கட்டங்களிலோ (கெட்டப் பழக்கம் உள்ளவர்களுக்கு இது


சௌக்கிய மன்னன் பட்டப்பா!

 

 “என்ன சார் சௌக்கியமா?” – அவசர காரியமாகச் சென்று கொண்டிருக்கும் பொழுது எதேச்சையாக எதிரில் வரும் அறுவைகளிடமிருந்து தப்புவதற்காகவும், அதே சமயத்தில் நம்மோடு இயல்பாக ஊறிய இந்து – சமவெளி நாகரிகத்தை’ வெளிப்படுத்துவதற்காகவும் நாம் சகஜமாகக் கேட்கும் ஒரு சாதாரண கேள்வி இது. மனைவியின் தலைவலிக்கு (நமது தலை வலிக்கும் சில சமயங்களில் தலைவலி வருகிறதே!) தைலம் வாங்கச் செல்லும் நாம், அறியாமையில் அசிரத்தையாகக் கேட்கும் இந்தக் கேள்வி வேலியில் செல்லும் ஓணானை வேட்டியின் மீது அசட்டுத்தனமாக


க்யூவில் வந்தவர்கள்

 

 சர்வாதிகாரி ஹிட்லர் எழுதியதாகச் சொல்லப்பட்ட உலகெங்கும் பரபரப்பு உண்டாக்கிய – ரகசிய டயரிகள் கடைசியில் போலி என்று நிரூபிக்கப்பட்டது உங்களுக்குத் தெரிந்ததே… ஆதாரம்: சர்வதேச செய்திப் பத்திரிகைகள். இதிகாச, புராண, சரித்திர பிரபலஸ்தர்களின் பர்சனல் டயரிகளை நான் படித்துப் பார்த்தது உங்களுக்குத் தெரியாததோ! ஆதாரம்: விடியற்காலையில் நான் கண்ட கனவு. “மடையா! மாற்றான் தோட்டத்து டயரிகளைப் படிப்பது மானம் கெட்ட செயல்” என்னைத் தூற்றாதீர்கள். இதிகாச புராண சரித்திரப் புள்ளிகள் எனது அதிகாலை சொப்பனத்தில், வரிசையாக க்யூவில்


ஐயோ…பேய்!

 

 சர்வ சாதாரணமாக ‘நீ எப்பவாவது குற்றாலத்துல குளித்ததுண்டோ?’ என்று கேட்பது போல் ‘நீ எப்பவாவது பேயைப் பார்த்ததுண்டோ?’ என்று எனது நெருங்கிய நண்பனின் தாயாதி ஒரு முறை என்னைப் பார்த்து ஒரு கேள்வியைக் கேட்டார். “அதான் இப்ப என் எதிரிலேயே பார்த்துக் கொண்டே இருக்கிறேனே…” என்று கூறி அவர் மனதைப் புண்படுத்த விரும்பாததால், “நான் பேயைப் பார்த்தது இல்லை” என்ற பாவத்தில் தலையாட்டினேன். நிற்க… எனது நண்பனின் தாயாதியை உங்களுக்குச் சிறிது அறிமுகம் செய்து வைக்கிறேன். பேய்,