கதையாசிரியர் தொகுப்பு: காஞ்சனா ஜெயதிலகர்

2 கதைகள் கிடைத்துள்ளன.

வேடிக்கை மனிதர்கள்!

 

 கைக்கடங்கா நரைக்கூந்தலைக் காற்றாட விட்டது போல நுரைத்துப் புரண்டது காவிரி. முதலில் மரங்களின் கருநிழலில் கண்ணாடியாய் பதுங்கிக் கிடந்த நீரும், அதில் தளும்பலாய் மிதந்த பரிசல்களும்தான் தெரிந்தன. போகப் போகத்தான் ஆர்ப்பாட்டம்! முதலில் மிரட்டியது நீரின் இரைச்சல்தான்.. ‘நான் சாதாரணமானவளில்லை’ என்ற அதன் எச்சரிப்பை உள்வாங்கியபடி தொடர்ந்து நடக்க, கிடைத்த காட்சி அசாதாரணமானதுதான். போன மாதம் வினு குளியலறையில் அப்படி கேட்ட போதுகூட இப்படி ஒகேனக்கல் வந்து நிற்போம் என்று விமலாவும் அவள் கணவனும் எண்ணவில்லை.. ‘‘நீர்வீழ்ச்சின்னா


போதி குளம்

 

 ‘த்ரில்’ என்ற வார்த்தை பரிச்சயமானது என்றாலும், அவள் அதை அனுபவித்தது ஒரு வாரமாகத்தான்! இடதுபுற கண்ணாடி தடுப்பின் பின்னே கை நீட்டி அள்ளிவிடலாம் போல பஞ்சாக மேக மெத்தை. கன மேகங்களை ஊடுருவி விமானம் பறக்க, நேர்ந்த அதிர்வும்கூட ஒரு த்ரில்தான். அவளது வலதுபுறம், கோவா நகரின் மேப்பை ஆராய்ந்தபடி அமர்ந்திருந்த ஆறடி ஆண் & அவள் கணவன் & நான்கே நாட்களுக்கு முன்பு அவளுக்குத் தாலி கட்டியவன்! பவித்ரன் & அவன் பேரை நினைத்ததுமே இனித்தது.