கதையாசிரியர் தொகுப்பு: எஸ்.அகஸ்தியர்

21 கதைகள் கிடைத்துள்ளன.

சீத்துவக்கேடு

 

 இத்துடன் எனது அன்புத் தந்தை அகஸ்தியரின் நினைவு தினத்தை (29.08.1926 – 08. 12.1995) முன்னிறுத்தி அவரின் ‘சீத்துவக்கேடு’ என்ற சிறுகதையை அனுப்பி வைக்கின்றேன். மிக்க நன்றி – நவஜோதி உவ அஞ்சாறு பெட்டையள அடுக்கடுக்காப் பெத்துப்போட்டாவாக்கும் அதுதான் ‘வெப்பியா’ரத்தில பெருமையடிக்கிறா. அந்தக் காலத்திலேயே ‘அஞ்சு பிள்ளையளைப் பெத்தா அரசனும் ஆண்டியாவா’னென்டு இன்னும் மொருதன் பாடியிருக்கிறான். இந்தக் காலத்தில் எப்படியிருக்கும். *** ‘சீவன் போக முன்னம் பிள்ளையள் வந்து தாயின்ர கண்ணில் முழிக்குங்களென்டு நான் நம்பேல’ இவள்பாவி


பொறி

 

 எனது தந்தை எஸ். அகஸ்தியரின் பிறந்த தினத்தை நினைவிருத்தி (29.08.1926 – 08.12.1995) ‘பொறி’ என்ற (1975தாமரை) பிரசுரம் கண்ட அவரது சிறுகதையை இத்துடன் அனுப்புகின்றேன். மிக்க நன்றியோடு, நவஜோதி *** ……. கண்ணுக்கெட்டாத தூரத்திலே தம்பிமுத்துச் சம்மாட்டியின் ஏழு எட்டு இயந்திரப் படகுகள். கடல் உறுமிபோல் இரைந்தெழுந்த வண்ணம், சமுத்திர அலைகளையும் கிழித்துக்கொண்டு வரிசையாகக் கரைநாடி வந்துகொண்டிருந்தன…. *** தம்பிமுத்துச் சம்மாட்டியின் இயந்திரப் படகுகள் ஆழ்கடலில் ஓடத் தொடங்கியபின் களங்களில் விரிக்கப்பட்ட தங்கள் படுப்பு வலைகளில்


புலம்பல்

 

 சந்திரனுக்குப் பயணம் வைத்த பூலோக மனிதனைக் கண்ட அண்ட கோளங்கள், ஒரு கணம் மண்டைகள் நொறுங்க அந்தகாரித்து நடு நடுங்கின. இவனுக்குத்தான் பூலோகத்தில் எத்தனையோ சோலிகளிருக்கின்றனவே. எல்லாவற்றையும் விட்டு விட்டு, இந்த மூளை கெட்ட வேலையில் இவன் ஏன் இறங்கினான்?’ என்று சலிப் போடு கேட்டது சூரியகாந்தி. இந்த மனிதனால் நாங்கள் எவ்வளவு பக்தியோடு பூஜிக்கப் பட்டோம். அந்த ‘அந்தஸ்தை’க் கூட இவன் கெடுத்து விட்டானே’ பாவி இதற்கெல்லாம் காரணம் அந்த டார்வீன் தான். அவன் தலையிலே


மகாகனம் பொருந்திய…

 

 (1987 வெளியான குறுநாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) எமது நாட்டு மக்களோடு நான் கொண்ட நிபந்தனை யற்ற உறவு என் படைப்புகளில் ஆத்மார்த்த சுருதியாக வெளிப்படுவதை என்போலவே எனது வாசகர்களும் அறிந்து வைத்திருக்கிறார்கள். எனது வாசகர்களுக்கும் எனக்கும் உள்ள நெடுங்காலப் பந்தமும், அவர்களுடன் எனக்குண்டான உரிமையும் எனது இலக்கியச் சுருதியில் விளைந்தவை. எனது படைப்புகளைப் படிக்காமலே என்னை விமர்சிக்கும் விபரீத வாசகர்களும், நாவலின் ஆரம்ப அத்தியாயம் ஒன்றையே பார்த்துவிட்டு முழுவிவரணத் திற்கும்


கொக்கும் தவம்

 

 “ஐயா, உங்க இருக்கிறியளோ?” குரல் கொடுத்துக் கொண்டு விறாந்தைக்கு வெளியே நின்று கொண்டிருந்தான் சின்னத்துரை. “என்னடாப்பா?” என்று கேட்டவாறு வெளியே வந்தார். ‘சக்கடத்தார்’ குருசுமுத்தர். “அவே, உங்களைத் தான் கூட்டியரட்டாம்” “ஆற்ராப்பா?” “மரியானண்ணையும் பாக்கியமப்பாவும்” மதியூகமில்லாதவன் தனது பலவீனத்தைக் காட்டிக் கொள்ளும் போது, அதில் கணை தொடுப்பது எளிது என்பதை அவர் அறிவார். சின்னத்துரையின் பேச்சிலிருந்து அவர்களை முற்றாகப் புரிந்து கொண்ட குருசுமுத்தர் அதை வாறாகப் பயன்படுத்திக்கொண்டார். ‘மொக்குக் கழுதை’ என்று பெயரெடுத்த சின்னத்துரையின் ‘திறமை’ யையும்


எவளுக்கும் தாயாக…

 

 நக நுனி சாடை, பிறை நிலா, ஒரு வெண் கீறு பாவி, மேக வெளி நாடி மின்வரி போட, செக்கல் கருகி இருள் அடர்ந்து கவிகிறது. பூமி முற்றாக மயான கோலம். அதிர் வேட்டுக்கள் வானமடங்க வெடித்து, நிலமதிரச் சிதறி, அவன் மனக்கண்ணுள் மின்னித் தெரிகின்றன. கைம்பெண் போல் தன்னை அவள் காட்டிக் கொள்வதில்லை. புருஷன் சம்பளம் பென்சனாக வருகிறது. ஒரே ஆண்பிள்ளை. இரண்டு இளங் குமர்கள். பிள்ளைகள் மூவரும் சதா படிப்பில் மூழ்கியபடி. பிள்ளைகளுக்கான படிப்புச்


கோபுரங்கள் சரிகின்றன..

 

 (1968 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) “தொரே. வாங்க ஒக்காருங்க… என்னா, இடியப்பமா சோறுங்களா?” “சோறு.” “அ, தொரைக்கு இங்கிட்டுச்சாப்பாட்டு எல ஒண்ணு போடு”. “சரி, போடறேன். ” “தண்ணி கொண்ணாந்து வையி.. ” “ஆச்சு.” “என்ன தொரே, சைவமா மிலிட்டரீங்களா?”. “மில்ட்ரி” “ஆ, இங்கிட்டு ஒரு கோழி?” “சரி, கோழி வருது.” “பொரியல் ஒண்ணு?” “ரையீட்டு.” “அங்கிட்டு மேசைக்கு ஒரு மீன் கொழம்பு,” “சரி, மீன் போவுது.” “இங்கிட்டு


கவரிமான்

 

 (1960ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அன்று சனிக்கிழமை. அது, ராயப்பு அம்மானின் முழுக்கு நாள்.. அம்மான் முழுகப்போகிறாரென்றால், வீடு, ‘அமர்க்களப்படப்போகிறது’ என்று அர்த்தம். இந்த முழுக்கு நாளில் தான் சவுந்தரியின் நினைவும் அலைமோதி எழும். இன்றும் அப்படி. அவளை நினைக்க நெஞ்சு நீவிப் பெருமூச்சு எகிறிக் குதிக்கிறது. கண்களில் ஒரு காந்த மயக்கம். உத்தம வேதக்காரராதலால், அது பக்தி மயக்கமாகவுமிருக்கலாம். ஒரு வாரத்துக்கு முன்புதான் அந்தச் சம்பவம் நிகழ்ந்தது.


சுயம்

 

 (1991ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) ‘இந்தா ரண்டரையாகுது.’ சுரேஷ் மனசுள் லேசான ஒரு கீத சுகம் நீ விற்று. சோர்ந்த உடல் சாரித்து, சடுதி உற்சாகம் கொண்டது. இடது கை விளிம்புச் சட்டை கிளப்பி வார்ச்’ பார்க்க முகத்தில் மையல் பம்மிய ஆனந்த பரவசம் ‘இன்னும் அஞ்சு நிமிஷம் இருக்கு’ கெக்கலிப்பு. ‘சேவையர் சூட்’ அவன் கையில் அவசர கோலமாகியது. ‘ஹங்கரில் கொழுவினான். பாத்றூம் பேஷன் பைப் திறந்து


கடல் சிரித்தது

 

 மூன்று நாட்களுக்கு முன் அந்தக் கடற்கரையில் முத்து பிணமாகக் கிடந்தான். அந்தச் சடலத்தின் சதைப் பிண்டங்கள் பிய்ந்து போய்க்கிடந்தன. மீன்களின் மாமிச வெறிவேட்டைக்கும், கடல் அலைகளின் முரட்டு மோதல்களுக்கும் ஆளாகி அழுகி நெக்கு விட்டுப்போன அந்தப் பிரேதம் கரையில் சதா மோதிக்கொண்டிருந்தது. காகங்கள் அதன் கண்களைத் திறந்து தின்று தீர்த்துவிட்டன. இன்னும் அதன் நாற்றம் ‘வெடில்’ அந்த ஊரை உசுப்பிவிட்டுக் கொண்டுதானிருந்தது. ‘பாவம்! நாலு வருடங்களுக்குமுன், அடைக்கலமாதா கோயிலில் அவனைத் தன் நாயகனாகச் சத்தியப்பிரமாணம் செய்து ஏற்றுக்கொண்ட